OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

YAATHIRAI PATHU

ganesheit February 28, 2019

45. யாத்திரைப் பத்து – அனுபவ அதீதம் உரைத்தல்

YAATHIRAI PATHU

பிறவியை விட்டுத் திருவடி சேரும் காலம் வந்தது என்று எல்லோரையும் அழைத்துக்கொண்டு யாத்திரை போவதைக் குறிப்பது இப்பத்து பாடல்கள் இறைவனோடு இரண்டறக் கலப்பதை இது உணர்த்துகிறது.

தம்போல் உள்ளம் உருகும் அடியார்கள் பலரையும் அழைத்து, இப்பொய் மாயப் பிறவியை விட்டு, திருவடியைச் சேரும் காலம் வந்துவிட்டது, வாருங்கள் என்று அழைக்கும் முறையில் இதனை அருளிச் செய்திருக்கின்றார்.

          யாத்திரைபயணம்.

          சிவன் அனுபவம் தன் அளவினது அன்றித் தன்னைச் சார்ந்தார்களுக்கும் வாரி வழங்கும் தரத்தை உடையதாய், இறைவனால் அழைக்கப்பட்ட தம் அடியார்கள், அனைவரையும் அழைத்துக் கொண்டு திருவடிக்கு யாத்திரை (மோட்சம்) செல்லுதலை அறிவிப்பது என்பது ஆகும்.

          இந்த யாத்திரைப் பத்தால் சிவன் அனுபவத்துள் தோய்ந்து அதீத நிலையை அடைந்த வாதவூர் அடிகள், அன்பாய் ஆட்பட்டீர், அடியார் ஆனீர், பேரானந்தத்துடன் பிரியாதிருக்கப் பெற்றீர்காள், காலம் வந்தது, வந்து ஒருப்படுமின், கழல்கள் நினைமின் , குறிப்பே குறிக்கொண்டு போமாறு அமைமின், அடியார் கூட்டத்தோடு போவதற்கே விருப்பப் படுங்கள், புகழுங்கள், தொழுங்கள்,பூக்களைத் தொடுப்பீர், சிவன் கழற்கே போரப் புரிமின், தெளிவடைவீர்கள் ஆயின் இது செய்ம்மின் என அடியார்களை ஊக்கப் படுத்தி, உண்மை உணர்த்தி இறைவன் தாளைச் சார்ந்தவர்கள் என்றும் தளர்ச்சி அடையார், அவனே நமக்குச் சுற்றமும் மற்றும் பற்றுமாவான். சிவலோகத்தே நம்மை வைப்பான்.

          சிவபுரத்தில் கதவு அடைப்பதற்கு முன்னரே செல்வோம், பக்கம் நின்று போற்றுவோம், அடியார் முன் சென்று நெஞ்சம் உருகி நிற்போம்;, யாம் பெறாவிட்டால் அவன் அருளைப் பெறுவார் வேறு யார் என்று பயணப் படுவதைக் காண்க.

We are at the end of this life. We are going to mix in to the god’s feet .That time has come now.We call all our true devotees and asked them to go with Manikavasager to heaven. The following ten poems describes the same

Lard Siva bliss is not confined to one self but also it can be given to others.So call all the devotees to go pilgrimage to lard Siva’s feet  

(தில்லையில் அருளியது – அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) 

பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை

POOVAR SENNI MANAN EM PUYANGAP PERUMAN SIRIYOMAI

Lord siva is prayed with hand filled flowers which is showered under his feet. He is my king.He adorned snakes all over the body,but we are very very small persons 

பூக்கள் நிறைந்த திருமுடியை உடைய மன்னனும் பாம்பை அணிந்த எம்பெருமானும் ஆகிய சிவபெருமான் சிறியோமாகிய எம்மை


ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் 

OVAATHU YULLAM KALANTHU YUNARVAAI YURUKKUM VELLA KARUNAIYINAAL

He has continuously mingle with my mind and melted my body with flooded form bliss and grace

இடைவிடாது எம் உள்ளத்தில் கலந்து உணர்வாகி எம்மை உருக்கும் வெள்ளம் போன்ற கருணையினால்


ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்

AAVAA ENAPATU ANBAI AAATPATTRI VANTHU ORUPPADUMIN

Oh Oh in that mentality we are being called as love form, so that we are slave under lard siva’s feet(true deciples) 

ஆஆ என்று அவரால் அழைக்கப்பட்டு அன்புடையவர்கள் ஆகி சிலருக்கு ஆட்பட்ட தொண்டர்களே


போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே. 605 

POVOOM KAALAM VANTHATHU KAAN POIVITU YUDAIYAAN KALALPUGAVEEA

 The appropriate time has come to enter under lard Siva’s feet. We may leave from this mayaa world and then enter in to mukthi world

எம்மை உடைய பரமசிவன் திருவடிகள் புகக் காலம் வந்தது உலக வாழ்க்கையை விட்டு வந்து ஒன்று சேருங்கள் என்றவாறு

புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள் 

PUGAVEEA VENDAA PULANKALILNEER PUYANGAP PERUMAAN POONG KALALKAL

So we do not run after under-five sense argonscommands. Lard Siva who has adorned snakes as ornaments only we may thinking under his  feet to settled down

அதலால் நீர் ஐம்பொறிகளும் ஆறத்துய்க்கும் புலன்களில் புகவே வேண்டா பாம்பு அணிந்து பரமனுடைய பொலிவாகிய திருவடிகளையே


மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள் 

MIGAVEAA NINNAIMIN MIKKA ELLAM VENDAA POGA VIDUMINKAL

Only thinks over under lard siva’s feet,all the sins on our part is not likable one and then allow it to go away from us

மிக நினையுங்கள் குற்றங்கள் அனைத்தும் உங்களால் விரும்பத்தக்கன அல்ல  அவற்றைப் போக விடுங்கள் என்றவாறு


நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட

NAGAVEA GAALATHU YUL PUGUNTHU NAAYEA ANAIYA NAMMAI AANDA

All the world peaple are laughted at ,but  lard siva entered in to this world and then teaken us under his command and his contorle,even thouh we are low graded persons

நம்மை எல்லாரும் நகைக்க இம் மண்ணுலகில் தாமே புகுந்து நாயை ஒத்த இழி குணம் படைத்த நம்மை ஆண்ட


தகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே. 606

THAKAVEEYUDAIYAAN THANAISAARATHA THALARATHU IRUPPAAR THAAMTHAAMEEA

We have to approach lard Siva,all the world people are stick in their own position of conviction

தகுதி உடையவனாகிய பெருமானை அணுக  அவர்கள் தாம் தாமாக நிலையில் தளராது இருப்பார்கள்.


தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும் 

THAAMEE THAMAKU SUTRAMUM THAAMEA THAMAKU VITH VAGAIYUM 

To true disciple, lard Siva alone his relative, he alone is our guide

மெய் அடியார்களே இறைவன் திருவடி தாமே நமக்குத் சுற்றம் அத்திருவடிகளே நமக்கு விதிக்கும் உபாயங்கள்


யாமார் எமதார் பாசமார் என்னமாயம் இவைபோகக் 

YAAMAAR EMATHAR PASAMAR ENNA MAAYAM EAVAI POOGA

So who am I and what are the bonds tied me .What is this magic world, all are going away from us

அங்ஙனம் இருக்க யாம் யார் எம்மைப் பிணித்து நிற்கும் பாசங்கள் யார் இவை என்ன மாயம் இவை அனைத்தும் உம்மை விட்டு விலக


கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு 

KOMAAN PANDAI THONDARODUM AVANTHAN KURIPEA KURIKKONDU

The kings and disciples who are lard Siva’sdevotes .Who are going according to his inner thinking(without saying anything we understand lard Siva’s will)

தலைவனாகிய சிவபெருமான் உடைய அடியார்கள் உடனும் சிவபெருமானுடைய உள்ளக் குறிப்பையே


போமா றமைமின் பொய்நீக்கப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 607 

POMAARU AMAIMIN POINEEKI PUYANGAN AALVAN PONN ADIKEEA

We devoid of this fake life and go ones with lard Siva’s feet. He will ruled us who has adorned snake as ornaments. We surrender under his feet

குறிப்பாகக் கொண்டு இப் பொய் வாழ்கையை விட்டுப் போகுமாறு ஒருப்படுமின் என்ற வாறு  நம்மை ஆள்பவன்  ஆகிய பாம்பு அணிந்த பரமனது அழகிய திருவடிகள்

அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக்

ADIYAAR AANEER ELLIRUM AKALA VIDUMIN VILAYAATAI

So you are converted lard siva’s deciple,so that you should giveup your unnesarary play in this world

ஆதலால் அடியார்கள் ஆகிய நீங்கள் அனைவரும் விளையாட்டைத் தூரவிடுங்கள்  


கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்

KADISER ADIYEEA VANTHU ADAINTHU KADAIKONDU IRUMIN THIRUKKURIPAI 

We will go pro as per his cue of mind of mind and then lard Siva’s feet will guard us

நம் எல்லோருக்கும் பாதுகாவலாக உடைய திருவடிகளைச் சார்ந்து அவன் திருக்குறிப்பைக் கடைப்பிடித்திருங்கள் என்ற வாறு 


செடிசேருடலைச் செலநீக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான் 

SEDISER YUDALAI SELANEEKKI SIVALOGATHEA NAMAI VAIPPAAN

Our body is always be stinking. He will eradicate it and then place us in Sivalogam

நம்முடைய முடை நாற்றம் வீசும் இந்த உடலை நீக்கி நம்மைச் சிவலோகத்தே வைப்பான்.


பொடிசேர் மேனிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே. 608 

PODISEER MEEANI PUYANGAN THAN POOVAR KALRKEA PUGAVIDUMEEA

LARD SIVA who has adorned sacred ashes all over the body and snakes, he will guide us to go under his flowery feet

திருநீற்றை அணிந்த திருமேனியை உடைய புயங்கப் பெருமான் தமது பூவை ஒத்த திருவடிகண் செலுத்துவான்

விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை 

VIDUMIN VEGULI VEETKAI NOOI MIGA VOOR KAALAM ENI ILLAI

True devotes please giveup your angry, lustfeelings and aversions .This time is ripped one to reach god. Just like this time,it will not come once again

மெய் அடியார்களே கோபம் விருப்பு வெறுப்பு இவைகளை விடுங்கள் இனி இதனில் மிக ஓர் காலம் வரப்போவது இல்லை


உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப் படுமின் 

UDAIYAAN ADIKKEEL PERUM SAATHTHOODU YUDAN POOVATHARKEEA ORUPPADUMIN

 LARD SIVA LIKES US TO TAKE UNDER HIS FEET .You must accept his permission to go with all other disciples

நம்மை ஆளாக உடைய சிவபெருமான் திருவடியின் கீழ் பெரிய அடியார் கூட்டதோடு  செல்வதற்கு ஓன்று பட்டு


அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே 

ADAIVOOM NAAM POOI SIVAPURATHTHUL AANI YAAR KATHAVU ATHU ADAIYAAMEA

Lard Siva’s land named sacred kayilaayam,we will enter it before the doors are shut out

சிவபுரம் ஆகிய திருக்கயிலாயத்து அழகு அமைந்த கதவு அடையாமல்


புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கன் ஆள்வான் புகழ்களையே. 609 

PUDAIPATU YURUKIP POTRUVOOM PUYANGAN AALVAN PUGALKALAIYEEA

We stand beside lard Siva and then praise his glory by songs with melted heart in that ever permanent abode

பக்கங்களில் நின்று எம்மைப் பெருமான் புகழ்களை மனம் உருகிப் போற்றுவோம் என்றவாறு


புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தாளே புந்திவைத்திட்டு 

PUGALMIN THOLUMIN POOPUNAIMIN PUYANGAN THAALEA PUNTHI VAITHTHITTU

You must keep the feat of lard Siva into your mind,heart and meditation and pray him and then place the flowers under his feet

புயங்கப் பெருமானுடைய திருவடிகளை மனத்துள் வைத்துத் தியானித்துப் புகழுங்கள் வணங்குங்கள் மலர்களைச் சாத்துங்கள் புயங்கன் திருவடிகளை மனத்துள் வைத்து


இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே 

IGALMIN ELLAA ALLALAIYUM INI OOR IDAIYUURU ADAIYAAMEEA

All the miseries are to be cursed by you and then keep it away from you. NO other sorrows are come and occupy you

இனி ஒரு துன்பமும் உங்களைச் சாராத வண்ணம் எல்லாத் துன்பங்களையும் இகழ்ந்து ஒதுக்குங்கள்  இனி ஒரு துன்பம் உங்களைச் சாராது


திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம்

THIKALUM SEERAAR SIVAPURATHUCH SENTRU SIVANTHAAL VANNGI NAAM

We are going in the ever active place of Sivaburam where we pray under lard Siva’s feet

நாம் விளங்குகின்ற சிறப்பு பொருந்திய  சிவபுரத்தைச்   சென்று சிவபெருமான் திருவடிகளை வணங்கி  


நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே. 610 

NIGALUM ADIYAAR MUN SENRU NENJAM YURUKI NIRPOMEEA

We go with the fellow disciples with the melted heart and then stand beside lard Siva

அங்கு இருக்கின்ற அடியார்கள் முன்பு சென்று மனம் கசிந்து உருகி நிற்போம் என்றவாறு


நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே 

NIRPAAR NIRKA NILLAAYULLAKIL NILLOOM INI NAAM SELVOOMEA

Those who want to stay in this nonpermanent world,they may live here,and we cannot live here anymore

நிலைபேறு இல்லாத இந்த உலகில் நிற்பார்கள் நிற்க நாம் இனி நிற்கமாட்டோம்


பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே

PORPAAL OPPAAM THIRUMEENI PUYANGAN AALVAAN PON ADIKE

Lord Siva is equivalent to himself because of his handsome appearance .He also ruled us so that we want to surrender under his feet

அழகால் தனக்குத் தானே ஒப்பாகிய திருமேனியை உடைய புயங்கன் என்னை ஆள்பவனும் ஆகிய பெருமானுடைய பொன் போன்ற திருவடியின் கண் செல்வோம்  


நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் 

NIRPEER ELLAAM THAALAATHEEA NIRKUM PARISEEA ORUPPADUMIN

Those who are standing with me that all you are devotes, if you want to stand and live forever.You do not waste time come and wait with us

எம்முடன் நிற்கும் அடியார்கள் ஆகிய நீவிர் அனைவரும் என்றும் நிலைபெற்று நிற்கும் தன்மையில் காலம் தாழ்த்தாது ஓன்று படுங்கள்


பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. 611

PIRPAL NINRU PEEAL KANITH THAAL PERUTHAR KU ARIYAN PERUMAANEEA 

If you waste any more time then our lard Siva is a rare person to approach,please keep it in mind

வீணாக நின்று காலத் தாழ்த்துவீர்காளாயின் பின் எங்கள் பெருமான் பெறுவதற்கு அரியவன் என்ற வாறு


பெருமான் பேரானந்ததுப் பிரியா திருக்கப் பெற்றீர்காள் 

PERUMAAN PEER AANATHATHU PIRIYAATHU IRUKKAP PETREE KAAL

Lard is blessed you and keep you in Sivalogam happiness. You will not be separated from him. You are true devotes

பெருமான் அருளுகின்ற பெரிய சிவா ஆனந்தத்துள்  பிரியாது என்றும் இருக்கும் பேறு பெற்ற அடியார்களே.


அருமா லுற்றிப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே 

ARUMAAL YUTRU PINNAI NEER AMMA ALUNGI ARATRAATHEEA

After wards you are unable to leave the clutches of fainting and be without murmuring

பின்பு நீங்கள் நீங்குதற்கு அரிதாகிய மயக்கத்தையும் பொருந்தி அம்மா என்று வருந்திப் புலம்பாமல்


திருமா மணிசேர் திருக்கதவங் திறந்தபோதே சிவபுரத்துச் 

THIRUMAA MANISEER THIRUKKATHAVAM THIRANTHA POTHEEA SIVAPURATHTHU

In Siva buram doors are adorned with big bells and then while it is opened form

சிவபுரத்தில் அழகிய பெரிய மணிகள் கட்டப்பட்டு உள்ள திருக்கதவுகள்  திறந்து இருக்கின்ற   பொழுதே  சிவபுரத்து


திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே. 612 

THIRUMAL ARIYATHA THIRUPPUYANGAN THIRUTHTHAL SENTRU SEERVOMEEA

The sub lard Thirumal who is unable to see lard Siva’s feet,as a disciple we will go  and attained it

திருமாலும் அறியாத அழகிய திருப்புயங்கப் பெருமானுடைய திருவடிகளைப் போய் அடையலாம் என்றவாறு


சேரக் கருதிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின்

SEERA KARUTHI SINTHANAIYAI THIRUNTHA VAITHU SINTHI MIN

To go and mingle with lard siva’s feet ,your mind must be kept in good thinking form and get decended your heart and mind in meditation form

சிவபெருமான் திருவடியை சேர எண்ணிச் சிந்தனையைத் திருத்தம் செய்து  அதில் இறைவனை எழுந்தருளப் பண்ணித் தியானியுங்கள்


போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம் 

PORIL POLIYUM VEERKANNAL PANGAN PUYANGAN ARULAMUTHAM

 In the battle field where lardess Yuma Devi’s eyes are in dynamic form that Yuma devi is kept by lard Siva in his left part of his body that lard Siva adorned snakes all over the body who has blessed us an gave us his nectar as grace form

போரில் பொலிவு பெற்று விளங்கும் வேலை ஒத்த கண்களை உடைய உமாதேவியாரை ஒரு பாகம் உடையவனாகிய புயங்கப் பெருமான் அருளுகின்ற திரு அருள் ஆகிய அமுதத்தை


ஆரப் பருகி ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர்

AARAP PARUKI AARATHA AARVAM KUURA ALUNTHUVEER

You have drunk a large amount of amutham (nectar),but your desire is not satisfied one. You have sub merged in to it that type of disciples you are

 நிரம்பக் குடித்த போதும் என்றும் அடங்காத ஆசை மிக அந்த ஆசைகளுடன் ஆழுந்தும் அடியார்களே


போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே. 613

POORAP PURIMIN SIVANKALARKEEA POIYIL KIDANTHU PURALAA THEEA

You should not bogged down in this fake world you must achieve ever permanent and happiness filled lard Siva’s feet only

பொய்யான இம் மண்ணுலக வாழ்வில் கிடந்து புரளாமால் நீங்கள் எய்த வேண்டியது உலகவியல் இன்பம் இல்லை திருவடி இன்பமே    

புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தாள் ஆகாதீர் 

PURALVAAR THOLUVAAR PUGALVAAR AAI INDREEA VANTHU AAL AAKAATHEER

You have in your mind all types of happiness so that fallen down on land and rolled down again and again and then pray god and praise him in this way you have gone under the control of lard Siva

பரவசப்பட்டுக் கிழே விழுந்து புரளுவாரும் வணங்குவாரும் ஆகிய இன்றைக்கே வந்து  இறைவனுக்கு ஆட்படாதவர்களே


மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர் 

MARULVEER PINNAI MATHIPPAAR AAR MATHIYUT KALNGI MAYANGUVEER

You are in fainting form then who will honor you, in your mind knowledge is in confused form and be in mesmerized form

மயங்குகின்றவர்களே பின்பு உங்களை மதிப்பார்கள் யார் மனதில் அறிவு அறியக் கலங்கி  மயங்குகின்றவர்களே


தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன் 

THERULVEER AAKIL ITHU SEIMMIN SIVALOGA KON THIRUPPUYANGAN

If you want to get clear picture,you must with lard Siva’s feet, lard Siva who is king of Sivalogam

நீங்கள் தெளிவு பெருவிர்களாயின் திருவடிச் சேர்தலாகிய இதனைச் செய்யுங்கள் சிவலோகத்திற்கு அரசனாகிய   திருப்புயங்கப்   பெருமானுடைய


அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே. 614 

ARULAAR PERUVAAR AKAL IDATHEEA ANTHO ANTHO ANTHOVEEA

In this broad world who has got his grace and blessings and bliss . O ALAS IT IS FOR DEEP THINKING ONLY

 IF RIVER WATER FLOWS IT MUST BE USED BY US WITH IT HELP  WE MUST GROW  PLANTS AND  THEN ULTIMATLY GOT HORVEST FROM IT. If we do not use it, it will mingle in to the sea

 If it go waste we will feel sorry for it ALAS,ALAS ALAS  JUST LIKE OUR LIFE WILL BE IN SORROW FORM OF REPEATED BIRTH AND DEATH.
திருஅருளை இந்த அகண்ட பூமியில் பெறுவதற்கு உரியவர் யார்அந்தோ அந்தோ அந்தோவே(இது சிந்தனைக்கு உரிய விஷயம் ஆகும் )


திருச்சிற்றம்பலம் 

February 28, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: