OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

SENNIPATHU

ganesheit February 28, 2019

42. சென்னிப்பத்து – சிவவிளைவு 

SENNIPATHU

(திருப்பெருந்துறையில்அருளியது – ஆசிரியவிருத்தம்)

Manikkavasager adorned lard Siva’s feet on his head and it is still there. This poem sings this state of his mind. The lotus feet of god and its effects are explained here

Lard Siva once descended as teacher form in this world and put his feet on Manikkavasager head. This divine happiness is still there and in this state of mind he sang the following songs

Guru adorned his feet on his disciple and that happiness is seen with astonishment and from that state of mind the following sons are come out from his mind 
சிவபெருமான் திருவடிகளைத் தன் தலைமேல் சூடி அவன் என்றும் அகலாது அங்கேயே இருப்பதைப் பாடுவது திருவடிப்பேறே சிவப்பேறு எனவே இது சிவம் சென்னியில் விளைந்த சிவா விளைவு ஆகும்

குருநாதர் திருவடி சூட்டியதால் தாம் பெற்ற இன்பத்தைவியந்து கூறுவதுசென்னிப் பத்தாகும். அவைஎன்றும் அகலாதுஅங்கேயே இருப்பதைப் பாடுவது (தலையில்) சேவடிமலராமைக்குக் காரணம் பாசம் உங்களைவிடாமையே. அதனைஒழித்தால் திருவடிசென்னியில் நிலைபெற்றுத் திகழும். பாசத்தைஅகற்றஒரேஉபாயம் உண்டு. அது இறைவனைவணங்குதல் ஒன்றே. ஆதலால் பணியுங்கள். என்; தலையில் பொலிவதுபோலநும் தலையிலும் சேவடிதிகழும் என்றுஉபதேசிக்கின்றார்.

        இறைவன் திருவடி தூய மாமலர் போல்வது,வட்டமானது,பொங்குமாமலர் போன்றது,சிவந்தது,முக்தியைத் தருவது,உலகங்களுக்குஎல்லாம் அப்புறத்தில் எம்மைவைப்பது,மெய்ம்மைபெருக்கும் ஆற்றல் வாய்ந்தது,பொன் தாமரைபோன்றது,பாசம் தீர்ப்பதுஎனஅதன் இயல்பைவிளக்கி,அத்தகையதிருவடிநம் சென்னிமேல் விளங்கும். பத்தர்காள்,நங்கையீர் வாருங்கள்,பணியுங்கள் எனச் ஜீவனுக்குஉறுதியைஉபதேசிப்பதுசென்னிப்பத்தாகும்.

தேவதேவன்மெய்ச்சேவகன்தென்பெருந்துறைநாயகன் 

DEVA DEVAN MEI SEVAKAN THEN PERUNTHURAI NAYAKAN

 He is supreme lard to allother lards and true fighter and hero of Perunthurai place

தேவர்கள் அனைவருக்கும் தேவனும் உண்மை வீரனும் அழகிய பெருந்துறைத் தலைவனும்.


மூவ ராலும் அறியொணாமுத லாய ஆனந்த மூர்த்தியான்

MUVARAALUM ARIYONA MUTHAL AAYA AANANTHA MOORTHIYAAN

BharamaThirumal an Ruthra of that three sub lards by whom he is unable to understand and in that way he is prime and supreme got and happy deity who is lard Siva

பிரம்மன் திருமால் உருத்திரன் என்ற முவாராலும் அறிய முடியாத மூவர்க்கும் முதலாகிய மூர்த்தியும் முதல் ஆனந்த மூர்த்தியான்


யாவராயினும்அன்பரன்றிஅறியொணாமலர்ச்சோதியான் 

YAVARAYINUM ANBAR ANDRI ARIONA MALAR JOOTHIYAAN

 Those who are intimate disciples alone is seen him and no one else that fireglow form he is appearing

அன்பர்கள் அன்றி வேறுயாராலும் அறிய ஒண்ணாத மலரின் சோதி போல்பவனும்


தூயமாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிச் சுடருமே. 579 
THUUYA MAAMALAR SEVADIKKAN NAM SENNI MANNI SUDARUMEA

The pure form of lard Siva’s twin feet are put on my head and which will guide me for ever

தூயதாகிய சிவபெருமானுடைய திருவடி இரண்டும் என் தலை மீது நிலைபெற்று விளங்கும் என்றவாறு


அட்டமூர்த்தி அழகன்இன்னமு தாய ஆனந்த வெள்ளத்தான் 

ATTAMOORTHI ALAGAN INNAMUTHU AYA AANANTHA VELLATHTHAAN

 God isin the form of eight ways of appearances such as LAND WATER FIRE WIND SPACE SUN MOON AND EAYAMANAN and that handsome appearance and lovely nectar form and all other form he is existing in this world

மண்,புனல்,அனல்,காற்று,ஆகாயம்,சூரியம்,சந்திரன் இயமானன் என்ற எட்டு வடிவானவனும் அழகன் இனிய அமுதம் போன்ற எல்லாமானவரும்


சிட்டன் மேயச்சிவ லோகநாயகன் தென்பெ ருந்துறைச் சேவகன் 

SITTAN MEEYA SIVALOGA NAYAGAN THEN PERUNTHURAI SEVAGAN

He is elder person and he is leader to Siva logam who has also descended in Thiruperumthurai as deity form

பெரியவனும் அழியாத சிவலோகத்துத் தலைவனும் தெற்கில் உள்ளதாகிய திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ளவீரனும்


மட்டு வார்குழல் மங்கை யாளையோர் பாகம் வைத்த அழகன்தன் 

MATUVAAR KULAL MANGAIYAALAI OOR PAAKAM VAITHA ALAGANTHAN

 The honey shedding flowers are adorned on the long hair lardessyumadeviwho is given left part of lard Siva’s body and that lard Sivais appearing in handsome form andthen whose

தேன் ஒழுகுகின்ற கூந்தலை உடைய உமாதேவியை இடதுபாகத்து வைத்த அழகனுமாகிய சிவபெருமான் உடைய


வட்ட மாமலர்ச் சேவடிக் கண்நம் சென்னி மன்னி மலருமே. 580 
VATTA MAAMALAR SEVADIKKAN NAM SENNI MANNI MALARUMEEA

 In that round form of lotus is bloomed on my head forever

வட்டமான பெரிய மலர் போன்ற சேவடிக்கண் நான் சென்னியில் நிலை பெற்று விளங்கும் என்றவாறு


நங்கை மீரெனை நோக்குமின் நங்கள் நாதன் நம்பணி கொண்டவன் 

NAGAIYEEIR ENNAI NOKKUMIN NANGAL NADHAN NAMPANI KONDAVAN

  My dear ladies you may see lard Siva who is leader to all and whose ornaments are only fighting instruments

பெண்களே என்னைப் பாருங்கள் நம் எல்லோருக்கும் தலைவனும் படைக்கலன்களை அணியாகக் கொண்டவனும்


தெங்கு சோலைகள் சூழ்பெருந் துறை மேய சேவகன் நாயகன் 

THENGU SOOLAIKAL SOOL PERUNTHURAI MEYA SEVAKAN NAYAKAN

 He is descended in Thiruperunthurai temple place which is surrounded coconut trees and who is in the form fighting hero

தென்னஞ்சோலைகள் சூழ்ந்த பெருந்துறையில் எழுந்தருளி உள்ள குதிரைவீரனும் தலைவனும்


மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம் உயிருங் கொண்டெம் பணிகொள்வான் 

MANGAIMAAR KAYIL VALAIYUM KONDUEM YUYIRUM KONDU EMPANI KOLVAAN

 We are ladies and our bangles are cornered by lard Siva and our souls are also plundered and then took us as his servant

நம் போன்ற பெண்களின் கையில் வளையல்களைப் பறித்துக் கொண்டு எம் உயிரையும் கொள்ளை கொண்டு எம்மைப் பணி கொள்பவனாகிய சிவபெருமான்


பொங்கு மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிப் பொலியுமே. 581 
PONGU MAMALAR SEVADIKKAN NAM SENNI MANNI POLIYUMEEA

 The honey bubbling like red color lotus color feet are placed on the head of true devotee’s permantly

தேன் பொங்குகின்ற செந்தாமரை போலும் திருவடிக் கூட்டம் சென்னிமன்னிப் பொழியும் என்றவாறு


பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்துபார்ப் பானெனச் 

PATHTHAR SULAP PARAPARAN PARIL VANTHU PAARPAAN ENA

The prime lard Siva who is covered form by his devotee’s andin thIs world as Bharamin guru teacher form

பராபரன் ஆகிய சிவன் அடியார்கள் புடைசூழக் கூந்தலை உடைய அந்தணவடிவுடன் ஆரியனாகப் பூமியில் வந்து


சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடஞ்செய்வான்

SITHAR SUULA SIVAPIRAAN THILLAI MUTHOOR NADAJ SEIVAAN

 Lard Siva who is descended in Chithambaram as dancing form and who is surrounded by the sitha’s cluster

சித்தர் கணம் புடைசூழத் தில்லையாகிய பழைய ஊரின் கண்ணுள்ள மற்றும் ஆனந்த நடனம் செய்யும்

 
எத்தனாகிவந் தில்புகுந்தெமை ஆளுங் கொண்டெம் பணிகொள்வான் 

ETHTHAN AAKIVANTHU ILPUGUNTHU EMMAI ALUNG KONDU EMPANI KOLVAAN

Just like thief he has entered in to my house and taken me as his wife and then commanded me to do menial service to him

எத்தன் ஆகி எழுந்தருளி வந்து என் வீட்டில் புகுந்து எம்மை இல்லாளாக ஏற்றுக் கொண்டு எம்மைப் பணி கொள்வாரும் ஆகிய சிவபெருமான்


வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 582 

VAITHA MAMALAR SEVADIKKAN NAM SENNI MANNI MALARUMEEA

 The lotus flower like feet is placed on my head and other dispels permanently

கட்டிய திருவடித் தாமரை மலரின் கூட்டம் என் சென்னிமன்னி மலரும் என்றவாறு


மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி மதித்திடா வகை நல்கியான் 

MAAYA VALKAIYAI MEIENTRU ENNI MATHITHIDAA VAKAI NALKI YAAN

This world is not permanent one and I do not consider it long lasting one. Lard Siva gave me that type of knowledge to think over it in ganna knowledge form

பொய்யான உலக வாழ்க்கையை மெய் என்று நம்பி அதனைப் பாராட்டாத வண்ணம் எமக்கு ஞானத்தை நல்கியவன்


வேய தோளுமை பங்கன் எங்கள் திருப்பெ ருந்துறை மேவினான்

VEYA THOOL YUMAIPANGAN ENGAL THIRUPERUNTHURAI MEVINAAN 

LardessParvthi whose solders are just like bamboo one and she has taken part of lard Siva’s body and who has descended inThiruperumthurai

முங்கிலை ஒத்த தோள்களை உடைய உமாதேவியை இடதுபாகம் உடையவனும் எமது திருப்பெருந்துறைக்கண் எழுந்தருளி இருப்பவனும் ஆகிய சிவபெருமான்


காயத் துள்ளமு தூறஊறநீ கண்டு கொள்ளென்று காட்டிய

KAAYATHTHUL AMUTHU YUURA YUURANEE KANDUKOL ENTRU KAATIYA

In the inner part soul wound where he oozing out just like nectar form and then he allowed me to see it 

சிவபெருமானிடம் இருந்து அமுதம் தொடர்ச்சியாக ஊற அதை நான் பருகி மகிழும் வண்ணம் பார்ப்பதற்கு


சேய மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 583 
SEYA MAAMALAR SEVADIKKAN NAM SENNI MANNI THIKALUMEA

The golden color feet is placed permanently on my head for ever

சிவந்த செந்தாமரைப் பொற்பாதங்கள் எம் சென்னிமன்னி மலரும்என்றவாறு


சித்தமே புகுந் தெம்மையாட் கொண்டு தீவினை கெடுத் துய்யலாம் 

SITHAMEA PUGUNTHU ENNAI AATKONDU THEEVINAI KODUTHU YUYYALAAM

 You have entered in to my soul and then controlled me and theneliminated bad deeds on my part and then elevated to higher level

என் மனத்துள் புகுந்து எம்மை ஆட்கொண்டு தீவினைகளைப் போக்கி நாம் உய்ந்து போதற்குஉரிய


பத்தி தந்துதன் பொற்கழற்கணே பன்மலர் கொய்து சேர்த்தலும்

PATHITHANTHU THAN POR KALARKANEA PANMALAR KOITHU SEERTHTHALUM 

 You have given me your love and then allowed to pluck flowers from your garden and then placed under your feet

அன்பையும் தந்து நாங்கள் பல பூக்களையும் கொய்து தன் பொன் போன்ற திருவடியிலே சாத்தி


முத்தி தந்திந்த மூவுலகுக்கும் அப்பு றத்தெமை வைத்திடும் 

MUTHTHI THANTHU INDHA MUUYULAKUKUM APPURATHTHU EMMAI VAITHIDUM

 To give that mukthi and then allowed to pray under your feet and then you have placed above three logas

வழிபடும் வீட்டு இன்பத்திற்கு உதவி இந்த முன்று லோகங்களுக்கும் அப்பால் எம்மை வணங்கி


அத்தன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 584 
ATHAN MAAMALAR SEVADIKKAN NAM SENNI MANNI MALARUMEEA

 My lard golden feet is placed on my head permanently and it is bloomed forever

தலைவனுடைய திருவடித் தாமரைகள் நம் சென்னிமன்னி மலரும் என்றவாறு


பிறவி யென்னுமிக் கடலைநீந் தத்தன் பேரருள்தந் தருளினான் 

PIRAVI ENNUM IKKADALAI NEEINTHATHAN PEERARUL THANTHARULINAAN

He has given me a boat to cross the birth sea of this life

பிறவியாகிய கடலை நீந்திக் கடக்கத் தன் பேரருள் ஆகிய படகைத் தந்து உதவினான்


அறவை யென்றடி யார்கள் தங்கள் அருட்கு ழாம்புக விட்டுநல் 

ARAVAI ENTRU ADIYARKAL THANGAL ARULKULAM PUGAVITU NAL

I am destitute so that you have allowed me to enter in to the cluster of disciples and then

என்னைத் துணையற்றவன் என்று எண்ணித் திருஅருள் கூட்டத்தில் புகழ் செய்து அவர்களோடு


உறவு செய்தெனை உய்யக்கொண்ட பிரான்தன் உண்மைப் பெருக்கமாம்

YURAVU SEITHU ENAI UYYAKKONDA PIRAANTHAN UNMMAI PERUKKAMAAM 

 You have allowed me to get thick relationship with them and then give me elevated place that type of leader you are

நெருங்கிய உறவு உண்டாகச் செய்து அடியேனை உய்யக்கொண்ட தலைவனும் ஆகிய சிவபெருமானது மெய்மையில் பெருக்கமாகிய


திறமை காட்டிய சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 585 
THIRAMAI KAATIYA SEVADIKKAN NAM SENNI MANNI THIKALUMEEA

The powerful might of true devotees are showed to me and your sacred feet is put on their and then bloomed there for ever

வலிமையை அடியேனுக்கு காட்டிய சேவடிக் கூட்டம் என் சென்னிமன்னி மலரும் என்றவாறு


புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையிற் பொய் தனையொழி வித்திடும்

PULUVINAAL POTHINTHIDU KURAMBAIYIL POI THANAI OLIVITHTHIDUM

 This body is full of insect filled one and you have removed ignorance from this body and lovely form of light 

புழுக்கள் பொதிந்துள்ள உடம்பில் அறியாமை ஆகிய பொய்யைப் போக்கும் அழகியஜோதி


எழில்கொள் சோதியெம் ஈசன்எம்பிரான் என்னு டையப்பன் என்றென்று 

EZHILKOL JOOTHO EM EESAN EMPIRAAN ENNUDAI APPAN ENTRUENTRU

That light form of my lard Siva who isalso my father in this way so many times chanting years together

அழகிய சோதி எம் ஈசன் எம்பிரான் என் தந்தை என்று பலகாலம் சொல்லி


தொழுத கையின ராகித் துய்மலர்க் கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு

THOLUTHA KAIYINAR AAKI THUI MALARK KANKAL NEER MALKU THONDARRKU

 I have showers flowers on your feet so that happy tears are shedded under your feet

பூக்களைத் தூவி தொழுகின்ற கையை உடையவர்காளய்க் கண்களில் ஆனந்த நீர் ததும்புகின்ற தொண்டர்களுக்கு நழுவிலாமலர்ச்

சேவடிக்கண்நம்சென்னிமன்னிமலருமே. 586 
 SEVADIKKAN NAM SENNI MANNI MALARUMEEA

The golden feet of lard Siva is placed on my head which will be in bloomed form for ever

நழுவிப் போகாத திருவடித் தாமரைகள் தம் சென்னி மன்னி மலரும் என்றவாறு


வம்ப னாய்த்திரி வேனைவாவென்று வல்வி னைப்பகை மாய்த்திடும் 

VAMBANAAI THIRIVEENNAI VAAENTRU VILVINAI PAGAI MAAITHIDUM

 I am useless and war monger but you have called me and then erased my miss deeds that prime deva you are

வீணாகத் திரிகின்ற என்னை வா என்று அழைத்து எனது வலிமையான வினைகளான பகைகளை அழிக்கின்ற தேவரும்


உம்ப ரான்உல கூடறுத்தப் புறத்தனாய் நின்ற எம்பிரான் 

YUMPIRAAN YULAGUYUUDU ARUTHU APPURATHANNAI NINDRA EMPIRAAN

 You have penetrated all the worlds and then stand apart from it that form of lard you are

இந்த உலகங்கள் அனைத்தும் ஊடாகச் சென்று அவற்றின் புறத்தனாய் நின்ற எந்தனையும்


அன்பரானவர்க்கருளி மெய்யடி யார்கட் கின்பந் தழைந்திடுஞ்

ANBAR AANAVARKU ARULI MEI ADIYAARKTKU INBAM THALAITHIDUM 

Lard Siva you are blessing your intimate disciples and then giving more and more happiness to them

ஆகிய சிவபெருமான் அன்பர்களுக்கு அருள் செய்யும் மெய் அடியார்களுக்கு இன்பம் மேன்மேலும் தழைக்கவும் செய்கின்ற


செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 587

SEMPON MAAMALAR SEVADIKKAN NAM SENNI MANNI SUDARUMEEA

The red color feet of lard Siva is placed on my head permanently forever

செம்பொன் நிறமான திருவடித் தாமரைகள் எமது சென்னியின் மீது நிலைபெற்று விளங்கும் என்றவாறு


முத்த னைமுதற் சோதியைமுக்கண் அப்பனை முதல் வித்தினை 

MUTHTHANAI MUDHALJOOTHIYAI MUKKAN APPANAI MUDHAL VITHTHINAI

He is naturally above all lust feelings and you are first light to this universe andyou have possessed three eyes and you areseed toall thingsin this world

இயல்பாகவே பாசங்கள் நீங்கிய ஒளிப்பொருட்கள் அனைத்தையும் முன்தோன்றிய ஒளிப்பொருளும் மூன்றுகண்களை உடைய தந்தையும் எல்லாப் பொருட்களுக்கும் விதையாக விளங்குபவனும்


சித்த னைச்சிவ லோகனைத்திரு நாமம்பாடித் திரிதரும்

SITHANAI SIVALOGANAI THIRUNAAMAM PADI THIRITHARUM

 You are sitha form and Sivalogam form and your names are always be chanting with the mouth loudly by your intimates disciples

சித்தனும் சிவலோகனும் ஆகிய சிவபெருமானுடைய திருப்பெயர்களை வாயாரப்பாடித் திரியும் அன்பர்களே


பத்தர்காள்இங்கேவம்மின்நீர்உங்கள்பாசந்தீரப்பணிமினோ 

PATHARKAAL INGEA VAMMIN NEER YUNGAL PAAM THEEIRA PANIMINOO

Lard Siva’s disciples come over here so that your bond in this world will be cut off and then you pray and praise lard Siva

நீங்கள் இங்கே வாருங்கள் உங்களுடைய பாசக்கட்டு அற்று உய்ய வணங்குங்கள்


சித்த மார்தருஞ் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 588

SITHAMAR THARUM SEVADIKKAN NAM SENNI MANNI THIKALUMEA

 The heart filled true devotees group on your head lard Siva’s feet will be permanently imprinted so that it will give you lead kindly light way forever 
மனம் நிறைந்து விளங்கும் சேவடிக் கூட்டம் தலையில் நிலைபெற்று விளங்கும் என்றவாறு
திருச்சிற்றம்பலம் 

OM THIRUCHITRAMBALAM

February 28, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: