OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

ENNAPATHIGAM

ganesheit February 28, 2019

44. எண்ணப்பதிகம்ஒழியா இன்பத்துவகை 

ENNAPATHIGAM

EANNAPATHIGAM- UNSATIYABLE HAPPINESS KIND

ஒழியாத இன்பத்தால் என்றும் உவகையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கூறி இறைவனிடம் வேண்டுவது இப்பதிகம் இதில் ஆறுபாடல்கள் உள்ளன.

பாடல்களில் முதலாவதுபாடலில் பிறப்புஅறுதலும்,அன்புறுதலும்,உன்னால் உய்யக் கொண்டருளப் பெறுதலுமேஎன் எண்ணம் எனவிண்ணப்பித்தல்,பிரிவுஅச்சம் நினைந்துபிரியாது இருக்கவிண்ணப்பித்தல்,தனித்த இன்பத்தைமட்டுமேஅருளவேண்டுதல்,பிரிந்துஆற்றேன் பிறப்புஅறுப்பாய் என்றஎண்ணத்தைவிண்ணப்பித்தல்,நடுநிலைமையைத் தவறித் திருப்பாதம் காணுவதுஒழிந்தேன் என்றதவறைஉணர்ந்துவிண்ணப்பித்தல், இறைவனைச் சோதியாகவும் அமுதாகவும் அனுபவித்த இன்பவகை இடையீடுபடாமைஆற்றுவானனாகஅருளாய் என்றஎண்ணத்தைவிண்ணப்பித்தல்.

          அடைந்த இன்பத்தைக் காத்துஅருள்க (தடைபடாது) எனவேண்டுதலின் இப்பகுதிஎண்ணப் பதிகம் ஆயிற்று.

 Without fail,Manikavaasager always be in happy mood. With that intention he praised lard Siva in the following wards It has six parts.

    With conviction in our mind firmness develops towards lard Siva. He has always think over lard Siva.The future thinking is my likings. The thinkings are two parts, one is to avoid birth and another is to avoid lust feelings and then to get oneness with lard Siva. His blessings are to be received

  He is heroine and lard Siva is hero with that relationship.  THE POEMS ARE SUNG

(தில்லையில் அருளியது – எழுசீர்க் கழினெடிலடி ஆசிரிய விருத்தம்) 

பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும்

paaruvaaya perappu ara veendum bakthimaiyum pera veandum 

The physical birth in this world is to be terminated. So as to attain it, I must get your love

பூமியின் கண் உருவம் கொள்வதாகிய இப்பிறப்பு ஒழிய வேண்டும் அதற்குக் காரணமான அன்புடைமை பெற வேண்டும்.,


சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல்

SEERYURUVAAYA SIVAPERUMAANEA SENG KAMALA MALAR POL

You have been in always be glory filled form Lord siva and you are red colour lotus flower form 

புகல்வடிவானவனே சிவபெருமானே செந்தாமரை மலர்போல்.


ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே

AARYURUVAAYA EANN AAR AMUTHEA YUNN ADIYAR THOGAI NADUVEA

 You have appropriate body possessed form appearing in this world .You are always be in drinkable nectar form .The love state filled disciples among them I should be seated in the central place

பொருந்திய திருமேனியை உடையவனே என்றும் உண்ணுதற்கு இனிய அமுதம் போன்றவனே அந்த அன்பு நீங்காமல் நிலவ உன் மெய் அடியார்கள் கூட்டத்தின் நடுவே


ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே.

OOR YURUVAAYA NINN THIRU ARUL KAATI EANNAI YUIYA KOND ARULEEA

You have taken only onefigure form you have showed it to me in blessing form and then up lift me

ஓர் உருவமாக விளங்கும் நின் திருஅருளைக் காட்டி என்னையும் உய்யக்கொண்டு அருள்வாயாக என்றவாறு. 


உரியேன் அல்லேன் உனக் கடிமை உன்னைப் பிரிந்திங் கொருபொழுதும் 

 YURIYEEAN ALLEEAN YUNAKKU ADIMAI YUNNAI PERINTHU EINGU ORU POLUTHUM

I have no qualification to be your slave, but I am unable to separate from you

உமக்கு அடிமை ஆவதற்கு உரியேன் அல்லேன் ஆயினும் உன்னைப் பிரிந்து இங்கு ஒரு போதும் தங்கமாட்டேன்


தரியேன் நாயேன் இன்னதென்று அறியேன் சங்கரா கருணையினாற்

THARIYEEAN NAAYEEAN EINNATHU EANRU ARIYEEAAN SANKERAA KARUNAIYINAAL

I do not know the reason to stay in this world, Iwill not stay in this world any more. My dear lard  you are my principal form 

தங்கமாட்டேன் நாயேன் இன்னிலை எய்தியதற்குக் காரணம் இன்னது என்று அறியேன் சங்கரா எங்கள் பெருமானே


பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்

PERIYOON ORUVAN KANDUKOL EANRU YUN PEIKALAL ADI KAATI

You have showed me your fighting feet which  is adorned with anklet 

பெரியோன் ஒருவன் “தம்பி இதனைக் கண்டு கொள்” என்று உன்னுடைய வீரக்கழல் அணிந்த திருவடிகளைக்காட்டிப்


பிரியேன் என்றென் றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே.

PERIYEEAN EANRU ARULIYA ARULUM POYOO EANGAL PERUMAANEA

 You have repeatedly told me that I will not separate from me,is it false  one please tell me my dear lord

உன்னை விட்டுப் பிரியேன் என்று பல காலம் சொல்லி அருளும் பொய்தானோ எங்கள் பெருமானே.


என்பே உருகநின் அருள்அளித்துன் இணைமலர் அடி காட்டி

EANBEEA YURUGA NINN ARUL ALITHU YUNN EANAIMALAR ADI KAATI

So as to melt my bones in that way your twin flowery feet are showed to me 

என் எலும்புகள் எல்லாம் உருகத் தேவரீருடைய திருவடித்தாமரை இரண்டையும் காட்டி


முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவர் முனிவா முழுமுதலே

MUNBEEA EANNAI AANDUKONDA MUNIVAA MUNIVAR MULU MULUMUTHALEA

You have already taken me under your fold as slave. You are prime saint to so many other saints 

முன்பே அடியேனை ஆட்கொண்ட முனிவனே முனிவர்கள் அனைவர்க்கும் முதல்வனே.


இன்பே அருளி எனையுருக்கி உயிருண் கின்ற எம்மானே

EANBEEA ARULLI EANAI YURUKKI YUIR YUN GINRA EAMMAANEEA

You have blessed me with happiness and then melted me, and finnaly  you swallowed all the living souls in this world 

இன்பத்தை அருளி என்னை உருக்கி உயிரை உண்கின்ற எம்பெருமான்


நண்பே யருளாய் என்னுயிர் நாதா நின்னருள் நாணாமே

Nanbe eaarullaai eanyui rnaathaa ninarul naanamea 

நண்பனே அருள்வாயாக என் உயிர்த் தலைவா நின் அருளை நாணாமல்
My dear friend please put your grace on me.You are my life leader,give me your blessings without any hesitation


பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல் காணப்

PATHTHILA NEEANUM PANITHILAN EEANUM YUNN YUARTHA PAING KALAL KAANA

I have no bond with your feet. I did not pray under your feet .Your feet are in tender form which is higher than anything in this world I want to see it

I am not lunatic like other faithful deciples. Iam not submitted under your feet as slave, but Iam wanted to see your sacred feet 

யான் உன்பால் பற்று இலேன் ஆயினும் உன்னை வணங்கிலேன் ஆயினும் யாவற்றிற்கும் உயர்ந்த உனது பசிய திருவடிகளைக் காணுதற்குரிய


பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய எம்பெருமானே 

PITHU ILEN AAYINUM PITHARTRALENUM PRAPARUPPAYA EMPERUMANEA

பித்து இலேன் ஆயினும் பித்தால்தொடர்பு இன்றிப் பேசும் பிதற்று உரையேன் ஆயினும் எம் பிறவியை  அறுப்பாயாக எம் பெருமானே

I am not lunatic like faith with you I will not take evenly with the all the above disqualifications please terminate this life my dear prime lord.


முத்தனை யானே மணியனை யானே முதல்வ னேமுறை யோஎன்று

MUTHU ANAIYAI YEAANEA MANI ANAIYAANEA MUTHALVANEA MURAIYOO EANRU

Comparing you are pearls and diamond. You are principal. Is it here after every one 

முத்து ஒத்தவனே மணிக்க மணியை ஒத்தவனே முதல்வனே இனிமேல் முறையோ என்று


எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே. 602

EATHANAAI YAANUM YAAN THODARNTHU YUNAI EANI PERITHU AATREANEA

Whatever might be I will follow your footsteps. I am unable to separate from you 

எத்தன்மை ஆயினும் உன்னைத் தொடர்ந்து செல்லுவதன்றிப் பிரிந்திருக்க ஆற்றேன் ஆயினேன்

காணும தொழிந்தேன் நின்திருப் பாதம் கண்டு கண் களிகூரப்

KAANUMATHU OLINTEEAN NINN THIRU PAATHAM KANDU KANN KALI KOORA

I have conceled once to see your feet ,now I see your feet and eanjoyed by joy in tomy mind 

நின் திருவடிகளைக் காண்பதை விட்டேன் அதனைக் கண்டு கண்கள் களிப்பு மிக


பேணும தொழிந்தேன் பிதற்றும தொழிந்தேன் பின்னைஎம் பெருமானே

PEANUMATHU OLINTHEEAN PETHATRUMATHU OLITHEEN PINNAI EMM PERUMAANEA

I have stopped to pray you .I have not come before you.I have not been chanting your name and then after wards 

வணங்குவதை விட்டேன் அவற்றைப் பற்றி ஆனந்தப் பரவசத்தால் பிதற்றுவதை விட்டேன் பின்பு என் இழித்தன்மையால் நின்னையே


தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந் தன்மைஎன் புன்மைகளால்

thanuveaa alinthean ninn nenain thu yurugum thanmai enn punmaiyinaal

By meditation and melting interally and stopped everything, finaly  I  am stoped to see you 

தியானித்து மனம் உருகும் தன்மைகளைக் காண்பதை விட்டேன் நன்மைகளைக் காண்பதை விட்டேன்


காணும தொழிந்தேன் நீயினி வரினுங் காணவும் நாணுவனே. 603

KAANUMATHU OLITHEEAN NEE ENI VARINUM KAANAYUM NAANUVANEEA

So that my ego of “I” and I am lost from my mind and thinking attitude.So Iam perished, even if you come before me,I will hesitate to see and then feel shy about it 

ஆதலால் நான் அழிந்து போனேன் நீயே இனி என்முன் வரினும்       உன்னைக் காணவும் வெட்கப்படுவேன் என்றவாறு.

பாற்றிரு நீற்றெம் பரமனைப் பரங்கரு ணையோடு எதிர்த்து

PAAL THIRU NEETRU EAMM PARAMANAI PARM KARUNAIYoODU EATHIRTHU

The milky white sacred ashes are adorned by you my lard siva before him true devotes are appeared he will bless them 

பால் போன்ற திருநீற்றை அணிந்த என் பரமனும் மேலான கருணை உள்ளத்தோடும் தாமே எதிர் வந்து தோன்றி


தோற்றிமெய் யடியார்க் கருட்டுறை யளிக்குஞ் சோதியை நீதி யிலேன்

THONRI MEI ADIYAARKU ARUL THURAI ALLIKUM JOTHIYEN NEETHI YEALLEAN

 such true deciples who have gone before you ,you will give your grace and blessings and then give them heavanly life. You are appearing fire glow form. Iam not in a position to judge you  

மெய்அடியார்களுக்குத் திருஅருளாகிய துறையை அளிக்கும் ஜோதியும் ஆகிய சிவபெருமானே நீதியற்ற நான் 

  
போற்றியென் அமுதே என நினைந் தேத்திப் புகழ்ந்தழைத் தலறியென் னுள்ளே 

POTRI EANN AMUTHEA EANANINTHU EAATHI PUGALNTHU ALAITHU ALARI EANN YULLEA

You are my nectar. You are wonder of all things in this world. In this way I am in meditation and then pray and praise you, I will soundly call you and then loudly weeping internally into my heart

என் அமுதமே உடையானே எனத் தியானித்துத் துதித்துப் போற்றிப் புகழ்ந்து கூவி அழைத்து ஒ என்று அலறி என்னுள்ளே


ஆற்றுவனாக உடையவ னேஎனை ஆவஎன் றருளாயே. 604

AATRUVAN AAGA YUDAIYAVANEA EANNAI AAVA EANRU ARULLAAYEA

You are not in hot form(cool) form so that in that manner you will bless us in this way going on(I am helpless please help me)

ஆகி இருப்பவன் ஆக ஆகுக என்று அருள்புரிவாயாக என்றவாறு

திருச்சிற்றம்பலம் 

February 28, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: