OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

ARPUTHA PATHU

ganesheit February 28, 2019

41. அற்புதப்பத்து அனுபவமாற்றாமை 

ARPUTHA PATHU

(திருப்பெருந்துறையில் அருளியது – அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)

 Once Manikkavasager goes through the street ofThiruperunthurai where he saw ordinary people are suffering from innumerable vices. They are lashed by innumerable sufferings. He thought that he is far away from this daily trifles. He is astonished because of lard Siva’s blessings to him so that he sang the under coming songs

 In this world what is not permanent but we think it is permanent one and in this mentality we are put in astonishment

 If we do not enjoy something in this world up to this time  but here after we confront it and then enjoy it and we lost our balance and over joy from it and it is called astonishment

 When we experience the lard Siva experience (anubava) then what is hitherto not experienced in that state of joy has been arisen from the mind of Mannikavasager the following songs are come from his mouth
மிகுதி காரணமாக விளைந்த மேன்மை அதிசயம் நுகரப்படாத ஒன்று தற்பொழுது நுகரும் பொழுது விளைந்த தன்வச மற்ற நிலை அற்புதம் சிவானுபவம் முற்றுதலால் புதிய உணர்வுகளுக்கு ஆளாகி ஆச்சர்யப் பட்டதைக் கூறுவது இப்பகுதி

உலகவர் வாழ்க்கைக் கடலில் துன்ப இன்பத்துறையில் பேராசைப் புயல் தாக்குண்டு வருந்துவதைக் கண்டு தான் அதனின்றும் தப்ப திருஅருள் தந்த சிவபெருமான் கருணைக்கு வியந்து அற்புதப் பத்தாகிய இதனை அருளிச் செய்தார்.

        அற்புதம்வியப்புபுதுமையும், பெருமையும், சிறுமையும், ஆக்கமும் ஆகிய நான்கினையும் நிலைக்களனாகக் கொண்டு தோன்றும்.

        அதிசயம்அற்புதம்.

அதிசயம் என்பது மிகுதி காரணமாக விளைந்த மேன்மையை உணர்த்துவது.

        அற்புதம் என்பது இதுவரை நுகரப்படாத ஒன்று. நுகர்ச்சிக்குப் புலனாகும் போது விளைந்த தன் வசமற்ற நிலை என அறியப்படுதல்.

        இந்தப் பத்துப் பாடல்களும் திருவடியைத் தரிசிப்பதும், அர்ச்சிப்பதும், எடுத்த தேகம் சிவப்பணிக் கென்றே கருதி இடைவிடாது தொண்டு செய்வதும், வணங்குவதும், வாழ்த்துவதும் பிறப்பின் பயன் என நினையாது, தையலார் சுழித்தலைப்பட்டு, தலை தடுமாறி பொய்பேசி, அவர்கள் கண்கள் தாக்கக் கலங்கி எல்லாச் சாதனங்களும் அவர்களோடு கூடிச் சிற்றின்பம் துய்க்கவே என்று கருதி, பித்துக் கொண்டு இச்சையாயினவே செய்து அவர்கள் கிறியும் கீழ்மையும் பேச, அவர்கள் உறுப்பில் கிடந்து மயங்கிக் கிடப்பதைப் பிறந்ததன் பயனாக எண்ணி இருந்த என்னைத் திருவடி காட்டித் தெளிவித்து, சிவஞானமுதவி ஆட்கொண்டுஅருளியஅற்புதம் என் அளவில் அனுபவிக்கத் தக்கதொன்றே அன்றி அறியத்;தக்க தொன்றன்று என வியந்து கூறிய அற்புதப் பத்து ஆகும். 


மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியு ளகப்பட்டுத் 

MAIYALAAI INTHA MANNIDAI VAALVENUM AALIYIL AKAPPATU

 In this maaya world we are tapped and then we are tossed from here and there by the sea of birth

இந்த பூமியில் மயக்கமாகிய உலக வாழ்வு என்னும் கடலின் சுழலில் அகப்பட்டு


தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான் தலைதடு மாறாமே 

THAIYALAAR ENNUM SULITHALAI PATU NAAN THALAI THADUMAARAAMEA

 Under the ladies secret part I am not trapped and not stumbled up on it

பெண்கள் என்னும் சுழியில் சிக்கி தான் தடுமாறிப் போகாமல்


பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன் பொன்னடி யினைகாட்டி 

POIELAAM VIDA THIRUARUL THANTHUTHAN PONADI INNAIKAATI

In the nonpermanent things my mind not got attachment and allare gone away from meand in that way you have showered your blessings and then you have showed your golden feet to me

நிலையற்ற பொருட்களின் மேல் வைத்த பற்று எல்லாம் ஒழியத் திருஅருள் புரிந்து தன்னுடைய பொன் போன்ற திருவடிகளைக்காட்டி


மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. 569 

MEIYANAAI VELIKAATTI MUN NINRATHOOR ARPUTHAM VILAM PEEANEA

You have descended in human form(teacher) from the upper space place( gana agaasam)  and then appeared before me in that of astonishment how will explain to others there is no ward for it (aragara)

திருமேனி தாங்கி வந்து பரவெளியாகிய ஞான ஆகாசத்தைக் காட்டி என் முன்னே வெளிப்பட்டு நின்றதாகிய ஒப்பற்ற அற்புதத்தைச்சொல்லமாட்டாதவன் ஆகின்றேன்

ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர் இயல்பொடும் வணங்காதே

EITHA MAAMALAR ITU MUTHTHATHATHOOR IYALPODUM VANAGKAATHEA 

 The big and handsome flowers are not plucked and put under your feet and not prayed

பொருந்திய பெரிய மலர்களைப் பறித்துச் சாத்தி இடை ஈடுபடாத தன்மையால் பூசிக்காத


சாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந் தலைதடு மாறாகிப் 

SAANDHA MAAR MULAI THAIYAL NALLAARODUM THALAITHADUMAARU AAKI

The sandal paste is applied on the breasts of ladies with whom I have illicit cohabitation and mind is spoilt

சந்தனம் பூசிய முலைகளை உடைய பெண்களோடு கூடித் தலை தடுமாறிச் சென்று யான்


போந்து யான்துயர் புகாவணம் அருள்செய்து பொற் கழலிணை காட்டி 

POONDHUYAAN THUYAR PUGAA VANAM ARULSEITHU POR KALALINNAIKAATTI

You have saved me from the clutches of those ladies and then blessed me and then showed me your golden feet

துன்பக்கடலில் புகா வண்ணம் திரு அருள் புரிந்து பொன்னடிகளைக் காட்டி


வேந்த னாம்வெளியே என்முன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. 570 
VENDHANAAI VELIYEEA EN MUN NINDRATHOOR ARPUTHAM VILIMPEEANEA

You have come before me as teacher form and that appearance is not in a position to explain to others (because it is internal experience)

குருநாதனாக வெளியே என் கண்கள் என் முன் நின்றதாகிய அற்புதத்தை நடித்து மண்ணிடைப்

பொய்யினைப் பலசெய்து நானென தெனும்மாயக்

NADITHU MANNIDA POIYINAI PALASEITHU NAANENATHU ENUMMAAYA 

In this world I lived un holly life but I am acting as holly person after wards I am bitten by this world problems and ultimately I am realized true nature of god and then kept away my ego mind of I and I am and mine

பூமியில் பொய்யான வாழ்வுகள் பல செய்து மெய் யான்பன் போல் நடித்து நான் எனது என்னும் பற்றுகள் ஆகிய அரவுகள் கடிக்க


கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் கழறியே திரிவேனைப்

KADITHA VAAYILEA NINDRU MUNVINNAI MIGA KALARIYEA THIRIVEENNAI 

 In that world misdeed stands there and then not to talk the fat of this world and then wandering everywhere from this daily trifles and then retrieved from it and then catch hold on me

கடித்த வாயிலே நின்று படி வினைகள் பற்றி பேசிக்கொண்டு திரிகின்ற என்னை அவற்றுள் ஆழ்ந்து போகா வண்ணம் பிடித்து
பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய அரும்பொருள் அடியேனை 

PIDITHU MUNNINDRU APPERUMARAI THEEDIYA ARUMPORUL ADIYEENAI

You have stand before me as teacher and rare meaning of veethas

என் முன்னே குருமேனி தாங்கி நின்று அத்தகைய பெரிய வேதங்கள் தேடி அலைகின்ற அப்பொருளாகிய சிவம் அடியேனை


அடித்த டித்துஅக் காரமுன் தீற்றிய அற்புதம் அறியேனே. 571 
ADITHU ADITHU AKKAARAM MUNTHEETRIYA ARPUTHAM ARIYENEA

You have repeatedly beat me and teach me the inner meaning of veethas in sugar juice Cristal form allow me to eat it that type of magic is not known by me

அடித்து அடித்துச்சர்க்கரையை ஊட்டிய அற்புதம் அறியேன் என்றவாறு


பொருந்தும் இப்பிறப் பிறப்பிவை நினையாது பொய்களே புகன்றுபோய்க்

PORUNTHUM IPPIRAPU IRAPU IVAI NINAIYAATHU POI GALEA PUGANDRUPOOI

 Because of previous birth misdeed this birth has been evolved and we did not give regard for it and we are talking the fat of this life and talking false hood and then go in to the wrong way

வினைகளுக்கு ஏற்ப வந்து பெருந்துவானகிய இந்த பிறப்பையும் இறப்பையும் நினையாமல் பொய்களையே சொல்லி தாமே வலிய சென்று  


கருங் குழலினனார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத் 

KARUNGKULALINAAR KANGALAAL EARUNDU KALANGIYA KIDAPENNAI

That black color hair and attractiveeyes are possessed ladies by whom I am attacked and fallen down under their feet and I am unable to stand up and I am feel sorry for it

கரிய கூந்தலை உடைய பெண்களின் கண்களால் தாக்கப் பெற்றுக் கலங்கியே கிடக்கின்ற என்னை


திருந்து சேவடிச் சிலம்பனை சிலம்பிடத் திருவொடும் அகலாதே 

THIRUNTHU SEVADI SILAMBU AVAI SELAMPIDA THIRU VODUM AGALAATHEEA

So I am not separate from the red color feet of lard Siva and his anklets are always raises sound

சிவந்த திருவடிக்கண் உள்ள இலக்கணங்களால் திருந்திய சிலம்புகள் திரு அருளோடும் பிரியாத படி


அருந்து ணைவனாய் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 572 
ARUNTH THUNAI VANAAI AANDUKONDU ARULIYA ARPUTHAM ARIYEENEA

 He is the guide to safeguard me and controlled me and blessed me that magic I do not know

என்னைக் காக்கும் அறிய துணைவனாய் ஆக்கி ஆட்கொண்டு எனக்கு அருள்செய்த அற்புதத்தை யான் அறியேன் என்றவாறு


மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடுங்

MAADUM SUTRAMUM MATRU YULA BOGAMUM MANGAIYAR THAM MOODU

 Wealth relationship worldly pleasure creating articles all are attained with a marriage 

செல்வமும் சுற்றமும் ஏனைய போகப் பொருளும் ஆகிய இவற்றை மன்கையர்களோடு அடைந்து


கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவிய திரிவேனை

KUUDI ANGULLA GUNAKALAAL EAARUNDU KULAAVIYEA THIRIVENAI

And enjoyed that family life and affected by it and mingling with ladies and wandering everywhere

அங்குள்ள தன்மை ஆகின்ற இன்பங்களால் தாக்குண்டு குலாவியே திரிவேனை  


வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி 

VEEDUTHANTHU ENTHAN VEN THOLIL VEETIDA MENMALAR KALALKAATTI

my bad acts are terminated ad then given me a place in heaven  and then showed your soft feet which is flower like one

என்னுடைய தீய செயல்களால் அழிந்து பர போக மாகிய விட்டு இன்பத்தை தந்து அழகிய மெல்லிய மலர்களை ஒத்திருக்கும் திருவடிகளைக்காட்டி


ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர் அற்புதம் அறியேனே. 573 
AADUVITHU ENATHU AKAMPUGUNTHU AANDATHOOR ARPUTHAM ARIYAANEA

And then I have been allowed to dance happily and taken my mind as temple and then ruled me andthat type of magic is done by god and there is no ward to explain it because it is internal experience on my part

என்னைப் பரவசமாய் ஆடச்செய்து என் நெஞ்சமே கோயிலாகக் கொண்டு ஆண்ட ஒப்பற்ற அற்புதத்தை யான் சொல்ல அறியேன் என்றவாறு


வணங்கும் இப்பிறப்புஇறப்பிவை நினையாது மங்கையர் தம்மோடும்

VANAGUM IPPIRAPU IRAPU IVAI NINAIYAATHU MANGAIYAR THAMMOODUM

 This life given to pray you but I did not think in that way and mingling with ladies 

வணங்குவதற்காகக் கிடைத்த இப்பிறப்பையும் சிறப்பையும் அவ்வாறு என்னாது பெண்களுடன் கூடி


பிணைந்து வாயிதழ்ப் பொருவெள்ளத் தழுந்திநான் பித்தனாய்த் திரிவேனைக் 

PINAINTHU VAAIIDHAL PERUVELLATHU ALUNTHINAAN PITHANAAI THIRIVENNAI

 I am submerged in the saliva of ladies and I am in lunatic form and then wandered everywhere to mingle with so many ladies

அவர்கள் வாயில் இருந்து ஊரும் எச்சிலாகிய பெரு வெள்ளத்தில் முழ்கிப் பித்தனாகி திரிகின்ற என்னை


குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல் கோமளத் தொடுங்கூடி

KUNKALUM KURIKALUM ILLAK GUNKKADAL KOMALATH THODUMKUUDI 

 Lard Siva do not have any manarism and symbolism and good character filled sea form and who has given left of his body to lardess Parvathi

குணங்களும் அடையாளங்களும் இல்லாத குணமே வடிவான கடல் போல் பவனாகிய சிவபெருமான் அழகிய உருவம் ஆன அம்மையோடும் கூடிச் சேர்ந்து


அணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 574 
ANNAINTHU VANTHUENAI AANDU KONDU ARULIYA ARPUTHAM ARIYEEANEA

 You have come and controlled me and then blessed me that type of magic is not known by me

வந்து அடியேனை ஆட்கொண்டு அருளிய அற்புதத்தை யான் அறியேன் என்றவாறு


இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான் இயல்பொடு அஞ்சு எழுத்து ஓதித்

IP PIRAPINIL INAIMALAR KOITHUNAAN IYALPODU ANJUELUTHTHU OOTHI 

 In this life I do not pluck good flowers and did not tied a garland and did not chanted five letter ward with proper way

இப்பிறப்பினில் நான் அர்ச்சனைக்கு உகந்த மலர்களைக் கொய்து இலக்கணத்தோடு திரு ஐந்து எழுத்து ஒதி


தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான் தடமுலை யார்தங்கள்

THAPPILAATHU PORKALAL KALUKKU IDAATHU NAAN THADAMULAI YAAR THANKAL 

 And without fail I did not placedthe flowers under your feet and bulky breasts possessed ladies

நான் தவறாமல் பொன் போன்ற திருவடிகளில் சாத்தாமல் பழுத்த முலைகளை உடைய பெண்ணின்


மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலரடி யிணைகாட்டி 

MAIPU YULLAM KANNAAL EAARUKANDU KIDAPPEENAI MALARADI INNAIKAATI

That black crawling eyes are possessed ladies by them I am attacked and fallen down under their feet and you have at that time your twin feet

கருமை தவழக் கண்களால் தாக்குண்டு செயலற்றுக் கிடப்பேனைத் தனது மலர்போலும் திருவடிகளைக் காட்டி


அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 575 
APPAN ENNAIVANTHU AANDUKONDU ARULIYA ARPUTHAM ARIYEEANEA

 My father Parama Siva who has compulsorily come over me and take hold on me that magic is not known by me it is internal experience only

என் தந்தையாகிய பரமசிவன் வலியவந்து என்னை ஆண்டு கொண்ட அற்புதம் அறியேன்


ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின இருவினை அறுத்தென்னை 

YUUSAL AATUM IV YUDAL YUYIR AAYINA IRUVINNAI ARUTHU ENNAI

 The body and mind do not think inone form and they are swayed here and there and the mind tells this is wrong but the body is doing it

இந்த உடலும் உயிரும் ஆயினவற்றை ஊசலாட்டு கின்ற இருவினைகளையும் அறுத்து எனக்கு


ஓசையா லுணர் வார்க்குணர் வரியவன் உணர்வுதந் தொளியாக்கி 

OSAIYAAL YUNARVAARKUYUNAVU ARIYAVAN YUNARYUTHANTHU OLIAKKI

 You can’t count by sound wards and he is beyond that so he converted me in to rays light form

ஒலி அளவையால் அறிவார்க்கு அறிய வொண்ணாத சிவம் ஞானத்தை தந்து என்னை ஒளிப் பொருள் ஆக்கி


பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பெருங் கருணையால்

PAASAM AANAVAI PATRU ARUTHU YUARNTHANATHAN PARAM PERUM KARUNAIYAAL 

 You have guard me from the lust feelings and then gave upliftment in life and with your magnanimous blessings

பாசங்கள் என்னைப் பற்றா வண்ணம் அவற்றை அறுத்து உயர்வற உயர்ந்த தன்னுடைய மேலான கருணையினால்


ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய அற்புதம் அறியேனே. 576
AASAI THEERTHU ADIYAARADIKUUTIYA ARPUTHAM ARIYEEANEA

 At first my likingsaresatisfied and then allowed to enter into the group of true devotees that magic I do not know it

என்னுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு அதன் பிறகு அடியார்கள் மத்தியில் என்னை வைத்துப் புகழ் பெறச் செய்த அந்த ஆச்சிரியத்தை நான் அறியேன் என்றவாறு


பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான் புழுத்தலை நாய்போல 

POCHAI YAANA IPPIRAVIYIL KIDANTHUNAAN PULITHU ALAI NAAIPOLA

 Forest form of this world where I am trapped in this birth and death and wandering everywhere by hungry dog like

காடாக மண்டிக்கிடக்கின்ற இப்பிறவியில் சிக்கிக் கிடந்து நான் புழுத்து அலைகின்ற நாய்போல் திரிகின்ற அடியேனை


இச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங் கிணங்கியே திரிவேனை

ICHAIAYINA EAALAIYARKEA SEITHU ANGU INAGIYEA THIRIVEEANNAI

I am always satisfying the liking of the ladies and oneness with them

பெண்களுக்கு விருப்பமானதையே செய்து அவர்கள் இடத்தில் இணங்கி திரிகின்ற அடியேனை  


இச்ச கத்தரி அயனுமெட் டாததன் விரைமலர்க் கழல்காட்டி 

ICC JAKATHU ARI AYANUM ETTATHA THAN VIRAIMALAR KALALKAATTI

In this world Bharma and Thirumal unable to see your feet  but you have showed your fragrance filled feet to me

இந்த உலகத்திலேயே திருமாலும் பிரமனும் காணுதற்கு எட்டாத தன்னுடைய தெய்வமனம் கமழுகின்ற திருவடித்தாமரை காட்டி


அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 577 
ACHCHAN ENNAIYUM AANDUKONDU ARULIYA ARPUTHAM ARIYEEANEA

 My father lard Siva who has ruled me and controlled me and that magic I do not know it

என் தந்தையாகிய சிவபெருமான் ஆண்டு கொண்டு அருளிய அற்புதத்தை யான் அறியேன் என்ற வாறு


செறியும் இப்பிறப்புஇறப்பிவை நினையாது செறிகுழலார் செய்யுங் 

SERIYUM IP PIRAPU IRAPU IVAI NINAYAATHU SERIKULALAAR SEIYUM

 Thisbirth is given to surrender under lard Siva’s

 Feet which is not understood and go after long hair possessed ladies

இறைவன் திருவடியில் செறிந்தற்குக் காரணமான இப்பிறப்பும் இறப்பும் உதவப் பெற்றது என்பதை எண்ணிப் பாராமல் அடர்ந்த கூந்தலை உடைய பெண்கள் செய்யும்


கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும் உன்னியே கிடப்பேனை 

KIRIYUM KEELMAIYUM KENDAIYANG KANKALUM YUNNIYEA KIDAP PEENAI

 The vengeance filled and low graded and fish like eyes possessed all are think over all the time

வஞ்சனைக்கீழ்மையும் அவர்களுடைய கெண்டை மீன்போன்ற கண்களும் அவற்றையே எண்ணிக் கிடக்கின்ற என்னை


இறைவன் எம்பிரான் எல்லையில் லாததன் இணைமலர்க் கழல்காட்டி

IRAIVAN EMPIRAAN ELLAIILLATHATHAN INNAIMALAR KALALKAATTI

 He is lard to all living creatures and he is also my leader who has showed his feet to me

எல்லா உயிர்களுக்கும் இறைவனும் எம் தலைவனும் ஆகிய சிவன் வரம்பு அற்றதன் திருவடித்தாமரை இரண்டையும் காண்பித்து  


அறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 578 
ARIYUTHANTHU ENNAI AANDUKONDU ARULIYA ARPUTHAM ARIYEEANEEA

 He gave me and helped me with Siva ganna and then managed me and then blessed me that magic reason I do not know it

சிவஞானத்தை உதவி என்னை ஆண்டு கொண்டு அருளிய அற்புதத்தை யான் அறியேன் என்றவாறு


திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM


February 28, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: