THIRUESARAVU
38. திருஏசறவு
THIRUESARAVU
(திருப்பெருந்துறையில் அருளியது – கொச்சகக் கலிப்பா)
Manikavasager wanted to attain motcha it is not near future possibility oneand it will take some more time andbecause of this lateness he got sorrowand once god descended as teacher form and take him as his slave but he did not give mukthi to him so his solestand in still form
Easarayu means liking
விருப்பத்தையும் அது நிறைவேறத் தாமதிப்பதால் வரும் வருத்தத்தையும் காட்டுவது ஏசறவு இறைவன் தம்மை ஆட்கொண்ட விதத்தை எண்ணி ஏசருகிறார் மாணிக்கவாசகர் ஆன்மா தன் செயல் நிற்பதை உணர்த்துவது இப்பகுதி
இப்பத்துப் பாடல்கள் : நரியைச் சிவபெருமான் குதிரையாக்கியது, சிவனடியார்க்குப் பேரின்பம் அளிக்கும் திருவடி காட்டுதல், புறத்தொழாமையில் உறுதி, உலக போகங்களில் தோயா வணள்ணம் காத்தல், பிறிவயை அறுத்து ஆட்கொண்டது, அடியேங்களுக்கு அருள் வழங்கிச் சீபஞ்சாக்கிர அனுபவம் ஒன்றாலேயே இணை இல்லாத இன்பம் துய்க்க வைத்த அருமையை வியந்து அடிகள் ஏசறவுறுகின்றார். (பெருமூச்சு விடுதல்)
இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக்
IRUMBUTHARU MANATHEENAI EERTHU EERTHU ENENBU YURUKKI
I have iron like mind but you have attracted me in magnet form repeatedly and then ultimately you have melted my bones
இரும்பினை ஒத்த மணத்தை உடைய அடியேனன் இழுத்து இழுத்து என் எலும்பையும் உருகப்பண்ணி
கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலிணைகள்
KARUMBUTHARU SUVAIENAKU KAATINAI YUNKALAL INNAIGAL
Your twin feet are oozing out sugar cane juice which is showed to me and then blessed me
உன் திருவடிகள் இரண்டிலும் ஊறுகின்ற கரும்பை ஒத்த சுவையினை எனக்குக் காட்டி அருளினாய்
ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம்
ORUNGUKUTHIRAI YULAVUSADAI YUDAIYAANEEA NARIKAL ELLAAM
Lard Siva you have allowed the river Ganges to wander in your hair in waves are emanating form and then converted all foxes in to horses
அலைகள் உடைய கங்கை ஆறானது ஒன்று சேர உலாவ விடுகின்ற திருச்சடைகளை உடைய பெருமானே நரிகள் அனைத்தும்
பெருங்குதிரை ஆக்கியவா றன்றேஉன் பேரருளே. 546
PERUNG KUTHIRAI AAKIYAVAARU ANDREA YUN PEERARULEEA
Those horses are in bigger in size in that way you have showed your magnanimity
பெரிய குதிரைகள் ஆக்கியது அன்றோ உன் பேரருள் என்றவாறு
பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க்கு
PANAARINTHA MOZHIL MANGAI PANGAA NIN AALANAARKU
Lardess yumadevi has possessed musical note like wards to talk so you have taken left part of your body
இசை போல இனிய பொழியை உடைய உமாதேவியை ஒரு பாகத்து
உண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை
YUNNAAARINTHA AARAMUTHEEA YUDAIYAANEEA ADIYENAAI
You are appear just like consumable form of nectar and I am destitute person and you have taken me as slave to do service under your feet
உண்ணத்தக்க நிறைந்த அரிய அமுதமே எம்மை அநாதியே ஆளாக உடையனே
மண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாஎன்னக்
MANNAARNTHA PIRAPPU ARUTH THITTU AALVAAI NEE VAAENNAK
I am your disciple and in this vices filled world you have terminated my repeatedbirth and death and allow me to serve under your feet
அடியேனை இக்கன்ம பூமியான மண்ணில் பொருந்திய மனிதப் பிறவியை போக்கி ஆட்கொண்டவனே நீ அடியேனை வா என்று அழைக்கவந்து
கண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே. 547
KANNAARA YUYITHAVAARU ANDREA YUN KALAL KANDEEA
You have showed your lotus flower like feet so as to see with my full eye and get upliftment in life and how will I explain it to others
நீ காட்டிய திருவடியைக் கண்ணாரக்கண்டு உய்ந்த படியாக என்ன சொல்வேன் என்றவாறு
ஆதமிலி யான்பிறப்பு இறப்பு என்னும் அருநரகில்
AADHAMILI YAAN PIRAPUIRAPU ENNUM ARU NARAGIL
I am helpless and destitute person so birth and death regularly come and go and ultimately enter in to hell
யான் ஆதரவு அற்றவனாய்ப் பிறப்பும் இறப்புமாகிய அரிய நகரில்
ஆர்தமரும் இன்றியே அழுந்துவேற் காவாவென்று
AARTHAMARUM INDRIYEEA ALUNTHUVEERKU AAVAA ENTRU
I have no close relatives so I am in depressed state so you have call me that I am here O my dear child you may come over here and thenyou have entered in to me
தன்மைச் சார்ந்த உறவினர்கள் யாரும் இல்லாமல் ஆள்கின்ற எனக்கு ஆஆ என்று இறங்கி
ஓதமிலி நஞ்சுண்ட உடையானே அடியேற்குன்
OOTHAMMILI NANGUNDA YUDAIYAANEEA ADIYERKU YUN
பெருக்கமைந்த கடலில் இருந்து எழுந்த நஞ்சை அமுதம் ஆக்கிய தலைவா
பாதமலர் காட்டியவா றன்றேஎம் பரம்பரனே. 548
PAATHAMALAR KAATTIYAVAARU ANDREEA EM PARAMPARANEEA
You have showed your sacred feetto me and then catch hold on me and in that boon I have got in this world
உன் திருவடித்தாமரைகளைக் காட்டி ஆட்கொண்ட விதம்மன்றோ யான் அடைந்த பேறு என்றவாறு
பச்சைத்தா லரவாட்டீ படர்சடையாய் பாதமலர்
PACHAITHTHAAL ARAVU AATI PADAR SADAIYAAI PAATHAMALAR
The green color tongue possessed snake you have to dance on your body and you have spread over hair you have possessed and then your sacred feet is adorned on my head
பசுமையான நாவினை உடைய பாம்பைச் சூடியவனாகிய படர்ந்த சடையை உடையவனே உன் திருவடி தாமரையைச் சூடியதால்
உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு
YUCHATHTHAAR PERUMAANEA ADIYEENAI UYYAKKONDU
Your have got the highly regarded saints but I have moved as per my mind instructed wrong way and then did sins
உயர்ந்த அடியார்களுக்குப் பெருமானே என் மனம் போன வழியில் குற்றம்
எச்சத்தார் சிறுதெய்வம் ஏத்தாதே அச்சோஎன்
EACHSATHTHAAR SIRUTHEIVAM EETHTHAATHEEA ACHCOEN
The vices filled sub gods are not to allow to pray and put me elevated place in this world in that sacred grace I have seen with astonishment
பொருந்திய சிறு தெய்வங்களைப் பணியாமல் அடியேனை உய்யக் கொண்ட உன் அருள் திறங்களையே எண்ணி அச்சோ
சித்தத்தா றுய்ந்தவா றன்றேஉன் திறம் நினைந்தே. 549
SITHTHATHU AARU YUITHTHAVAARU ANTREA YUN THIRAM NINANTHEEA
I have been elevated and then put in to higher eclon of life that is giving to me even today astonishment
அடியேன் உய்ந்த வகையன்றோ எனக்கு வியப்புத் தருவது என்றவாறு
கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும்
KATRARIYEEN KALAI GNAANAM KASINTHU YURUGEEN AAYIDINUM
I did not learnt Siva agama arts and I did not put my mind towards you and did not melt my heart
சிவ ஆகமம் கலைகளைக் கற்று அறியேன் உன்பால் உள்ளம் வைத்துக் கசிந்து உருகேன்
மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல்வந்
MATRARIYEEN PIRADEIVAM VAAKKU IYALAAL VAAR KALALVANTHU
I did not know other sub lards and because of your blessing wards I have pro to your long feet
ஆயினும் பிற தெய்வங்களை அறியேன் நின் அருள் வாக்கின் தன்மையால் நின் நெடிய கழல்களைச் சார்ந்து
துற்றறிமாந் திருந்தேன்எம் பெருமானே அடியேற்குப்
YUTRU IRUMAANTHU IRUNTHEEN EMPERUMAANEEA ADIYEERKU
I am in ego state my dear lard and your blessing feet is belonged to me
இறுமாற்றிருந்தேன் எம் பெருமானே இன்று பொன்னான திரு அருள் அடியோற்கு உண்டானது
பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே. 550
POONTHAVISU NAAIKKUM IDUMAARU ANDREEA NINPON ARULEEA
To the dog a gold sitting seat is given just like to me you have provided
நாய்க்குப் பொன்னால் ஆகிய சிம்மாசனம் இட்டது போல அன்றே என்றவாறு
பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
PANCHAAYA ADIMADAVAAR KADAIKANNAAL IDARPATU
Thoseladies whose feet is cotton like soft one and whose sidesight I have been put in to miserable situation
பஞ்சு போலும் மெல்லிய அடிகளை உடைய பெண்களின் கடைக்கண்னால் துன்பப்பட்டு
நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின்னருளால்
NANCHAAYA THUYARKUURA NADUNGUVEEAN NINARULAAL
I have been affected by poison and put in to miserable situation and body got shivering form and with your sacred blessings
நஞ்சு போலும் கொடிய துன்பம் மிக நடுங்கவே நான் நின் அருளால்
உய்ஞ்சேன் எம் பெருமானே உடையானே அடியேனை
YUINTHEEIN EMPERUMAANEA YUDAIYAANEA ADIYEENAI
I have escaped from their mesmerism so I have surrender under your feet and you are my protector
தப்பி உய்ந்தேன் எம் பெருமானே உடையனே அடியேனை
அஞ்சேலென் றாண்டவா றன்றேஅம் பலத்தமுதே. 551
ANGEEAL ENTRU AANDAVAARU ANDREA AMPALATHU AMUTHEA
You have given me strength that not too afraid of anything in this world and you have taken measyour slave and after wards you are happily dancing in Chithamberam temple
நீ எனக்குச் சக்தியை கொடுத்து இருக்கிறாய் இந்த உலகத்தில் எதற்கும் அஞ்சாமால் இருப்பதற்கு என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டாய் நீங்கள் சிதம்பரத்தில் சந்தோசமாக நடனம் ஆடிக்கொண்டு இருக்கிறீர்கள்
என்பாலைப் பிறப்பறுத்திங் கிமையவர்க் கும் அறியவொண்ணா
ENPAALAI PIRAPUARUTHU INGU IMAIYAVARKUM ARIYA VONNAATHA
The water without dry land(DESSERT) like you have terminated my repeated birth and death and even deevass are not known form
பாலை நிலம் போல பசையற்றதாகிய என் பிறவியைப்போக்கி இங்கு தேவர்களும் அறிய ஒண்ணாத
தென்பாலைத் திருப்பெருந் துறையுஞ் சிவபெருமான்
THENPAALAI THIRUPERUNTHURAI YURAIYUM SIVAPERUMAAN
In the southern part of Thiruperumthurai place you have descended
தென்பகுதியில் உள்ளதாகிய திருப்பெருந்துறைக்கண் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானே
அன்பால்நீ அகம்நெகவே புகுந்தருளி ஆட்கொண்டது
ANBAAL NEE AKAM NEGAVEEA PUGUNTH ARULI AATKONDATHU
You have showered love towards me so my mind melted and at that time you have entered in to my mind and then ask me as your slave
என் மீது நினைத்த அன்பால் என் மனம் நெகிழ அதனுள் புகுந்து அடியேனை ஆட்கொண்ட
தென்பாலே நோக்கியவா றன்றேஎம் பெருமானே. 552
THEANPAALEEA NOOKKIYAVAARU ANDREA EMPERUMAANEEA
That act is wonderful one and then poured your grace towards me at that time is glorious to me
அருமையான செயல் என்பால் கருணை நோக்கம் செய்தலால் அன்றே என்றவாறு எம்பெருமானே
மூத்தானே மூவாத முதலானே முடிவில்லா
MOOTH THANEA MOOVAATHA MUTHALAANEA MUDIYUILLAA
You are the oldest object comparing anything in this world and you did not get old age and you are infinitive form in this world
மூத்த பொருள் அனைத்திற்க்கும் முதல்வனேமூப்பை அடையாத முதல் பொருள் ஆனவனே
ஒத்தானே பொருளானே உண்மையுமாய் இன்மையுமாய்ப்
OOTHTHANEEA PORULAANEA YUNMAIYUMAAI INMAIYUMAAI
You are in veetha form and its meaning form and abstract and concrete form in this world
வேத வடிவு ஆனவனே அவ்வேதங்களின் பொருள் ஆனவனே உள்ள பொருளும் இல்லாத பொருளும் ஆகித் தோன்றியவனே
பூத்தானேபுகுந்திங்குப்புரள்வேனைக்கருணையினால்
POOTHTHANEA PUGUNTHU INGU PURAL VEANNAI KARUNAIYINAAL
I have been trapped in this vices filled world and got repeated birth and death
இக்கன்ம பூமியில் புகுந்த உழல்கின்ற என்னை
பேர்த்தேநீ ஆண்டவா றன்றேஎம் பெருமானே. 553
PEERTHEANEE AANDAVAARRU ANDREA EMPERUMAANEA
You have special love toward me and then taken me under your control and what type of astonishment it is
நின் கருணையினால் எம்மைப் பார்த்து ஆட்கொண்டவாறு அன்றோ என்ன வியப்பு என்றவாறு எம்பெருமானே
மருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருகத்
MARUYU INIYA MALAR PATHAAM MANATHIL VALARNTHU YULYURUKA
The unattainable flower like feet you have and then kept it on my head so that I have melted form of heart
அடைவதற்கு இனிய மலர்போலும் திருவடிகள் அடியேன் மனத்தில் வளர்ந்ததால் உள் உருகி
தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமா னென்றேத்திப்
THERUYUTHORUM MIGAALARI SIVAPERUMAAN ENTRUEAATHTHI
I am all over the street cried lard Sivas name and chanting and murmuring it
தெருக்கள் தோறும் சிவசிவ என்று அலறிக்கொண்டு சிவபெருமான் என்று தோத்தரித்து
பருகியநின் பரங்கருணைத் தடங்கலிற் படிவாமாறு
PARUKIYA NIN PARAM KARUNAI THADANGALIL PADIVAAMAARU
I have taken grace water with my hands and consumed it and then dipped in to it
அள்ளிக் குடித்து நின் பரங்கருணை தடங்கடலில் தோயும் வண்ணம்
அருளெனக்கிங் கிடைமருதே இடங்கொண்ட அம்மானே. 554
ARULEANAKU INGU IDAIMARUTHEEA IDAM KONDA AMMAANEEA
Please bless me you have taken THiruvidai maruthoor as your abode in the name Magalinga daity form
அருள்வாயாக திருவிடை மருதூரையே இடமாகக் கொண்டு எழுந்தருளி உள்ள மகாலிங்க மூர்த்தியே என்றவாறு
நானேயோ தவஞ் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்
NAANEAYOO THAVAMSEITHEEAN SIVAAYANAMA ENAPPETREEAN
O my lard what type of penance I have done and the manthra ward SIVAYANAMA which is I am allowed to chant
ஓ நான் தவம் புரிந்தேன் சிவாய நம என ஐந்து எழுத்தினைச் ஜெபிக்கும் பேரு பெற்றேன்
தேனாய்என் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான்
THEEN NAAI EN AMUTHAMAAI THITHIKUM SIVAPERUMAAN
You are honey nectar form govingtaste to me and you are that wonderful lard Siva
தேனாகவும் இனிய தேவ அமிர்தமாகவும் எனக்கு இனிக்கும் சிவபெருமானே
தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்
THAANNEEA VANTHU ENATHU YULLAM PUGUNTHU ADIYEERKU ARUL SEITHAAN
You have voluntarily come and entered in to my mind in simpleform and then blessed me
தானாகவே எளிமையாக வந்து எழுந்தருளி என் உள்ளம் புகுந்து அடியேனுக்கு அருள் வழங்கினான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே. 555
OONNAARUM YUIRVAALKAI ORUTHTHU ANDREEA VERUTHIDAVEEA
So to live in this body and it is not useless one so you can’t disregard this bodyand this life will give you immense benefits with simple way to attain theend (MOTHA HEAVEN) AND THIS IS THE MEANS TO GET IT(this worldly life is to get maturity in this world and then with that maturity you may attain god (from dog life to god life) this life boat is given to cross the birth sea and then enter in to Sivalogam so Manikkavasge called him as dog in more than sixty places in thiruvasagam
(ஆதலால் என் உயிர் இந்த உடலில் வாழும் வாழ்கை வீணாஅடியோங்களால் ஒறுத்து வெறுப்பதற்கானது அன்று பெரும்பயனை எளிமையில் கிடைக்கச் செய்து சாதனம் ஆயிற்று என்றவாறு
திருச்சிற்றம்பலம் OM THIRUCHITRAMBALAM.
February 27, 2019