OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

PIDITHA PATHU

ganesheit February 27, 2019

37. பிடித்த பத்து – முத்திக்கலப்புரைத்தல் 

PIDITHA PATHU

(திருத்தோணிபுரத்தில் அருளியது – எழுசீர் ஆசிரிய விருத்தம்)

 To teach mingling with heaven

Manikavasage has clinged the feet of lard Siva strongly an so toother souls what he has enjoyed and what type of happiness he has received

The following poems explain the same

While staying in Seerakali (Thiruthonipuram) he things over Thillaichithabarm god Natarajer and caught him firmly in mind and stood before in Thonipuram and he sings the following songs


இறைவனை விடாமல் இறுகப் பற்றிக் கொண்டதனைக் கூறுவதன் முலம் மற்ற ஆன்மாக்களுக்குத் தான் அனுபவித்த முக்தி இன்பத்தை உணர்த்துதல்

இப்பத்துப் பாடல்களிலும் இறைவன் திருவடியேபற்றுக் கோடாய் இருப்பவர்களுக்குஅங்கங்கேவந்துஅருள் புரியும் அருமையையும்,தந்தையும் தாயுமாய் ஒப்பற்றபெரும் பொருளாய் எழுந்தருளிஉடலிடம் கொண்டுபாசவேர் அறுத்து,பால் நினைந்துஊட்டும் தாயினும் சாலப் பரிந்துபாதுகாத்துஉவப்பு இலாஆனந்தத்தைஉதவி இன்பவடிவாய் இருத்தலின் நான் உன்னைவிடமாட்டேன்.  நீயும் இனிஎங்கும் எழுந்துஅருள இயலாதுஎன்றுதம் உறுதியையும் தலைவனுடையகடமையையும் உணர்த்தியவாறுதெளிக. 


உம்பர்கட்கரசே ஒழிவறநிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு 

UMBARKATKU ARASEEA OLIYUARA NIRAINTHA YOGAMEA OOTRAIYEEN THANAKU

 You are the king of all other deevas and you have pervaded all the places and you are seated in Siva Lyoga form and my body is made of flesh and I am your disciple

தேவர்கள் அனைவருக்கும் அரசே எங்கும் நீக்கமற நிறைந்து உள்ள சிவயோக வடிவானவனே ஊனாலாகிய உடம்பினை உடைய அடியேனுக்கு


வம்பெனப் பழுத்தென் குடிமுழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே 

VAMBUENA PALUTHUEN KUDIMULUTHU AANDU VAALYUARA VALVITHTHA MARUNTHEA

 You are allow us to ripe in the novel way and at first to control my entire family and allow us to enjoy the family life in this world and after wards you have allow us to live the yoga form of life under your feet

புதுமையாகப்பழுத்து என் குடி குலத்தையும் ஆட்கொண்டு வரவேண்டிய இகவாழ்வு இல்லையாம் வண்ணம் வாழச் செய்த தேவதேவனே


செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே 

SEMPORUL THUNIVEEA SEER YUDAIKALALEEA SELVAMEEA SIVAPERUMAANEEA

All the veethas and by experience and then ultimately realized that you are prime god in this world. You are the wealth to us and your golden feet has so many glories and you are gaana wealth form

எல்லா நூல்களாலும் அனுபவத்தாலும் துணியப் பெற்ற தான செம்பொருளே செல்வமே சிவபெருமானே சிறப்புகள் பெற்ற திரு அடியே ஞானச்செல்வமே சிவபெருமானே


எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 536 
EMPORUTTU YUNNAI SIKENAPIDITHEN ENGU ELUNTHU ARULUVATHU INIYEA

 I have for my sake clinked firmly and then how will go away from me

இனியே எமக்காகஉன்னை இறுகப் பற்றிக் கொண்டேன் எமை விட்டு இனி எங்கே எழுந்தருளுவது என்றவாறு


விடைவிடா துகந்த விண்ணவர் கோவே வினையனே னுடையமெய்ப் பொருளே 

VIDAIVIDAATHU YUKANTHA VINNAVAR KOOVEEA VINAIYA NEN YUDAIYA MEI PORULEEA

You have taken bull as caravan to travel all the places and you are deevass leader. I am sin filled person and you are true god in this world

மெய்பொருளே இடபத்தை விடாமல் ஊர்தியாக விரும்பிய தேவதேவனே வினை உடையேன் ஆகிய எம் மெய்பொருளே


முடைவிடா தடியேன் மூத்தறமண்ணாய் முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து 

MUDAIVIDAATHU ADIYEAN MOOTHARA MANNAAI MUZHUPULUK KURAMPAIYIL KIDANTHU

 I am your disciple but this stinking body I am fastly holding it so ultimately old age set in and then ultimately go in to soil as dead body so as to eat this body by insects and then vanished from this world

அடியேன் முடைநாற்றம் வீசும் இந்த உடலை விடாமல் முதிர்ந்து, மண்ணாய் அழிய முழுதும் புழு மயமான இந்த உடலில் இருந்து


கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட கடவுளே கருணைமா கடலே 

KADAIPADAA VANNAM KATHTHUENNAI AANDA KADAYULEEA KARUNAI MAA KADALEEA

 Not to go degraded form so that have mingled with me and then took me as your slave and ruled me so you are my lard

கிழாகா வண்ணம் அடியேனைக் கலந்து ஆட்கொண்ட கடவுளே பெரிய கருணைக் கடலே


இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 537 
IDAIVIDAATHU YUNNAI SIKENA PIDITHTHEEAN ENGU ELUNTHARULUVATHU INIYEEA

 I will hold you without any deviation and then where will you go and descend somewhere else

உன்னைச் சிறிதும் இடைவிடாமல் இறுகப் பிடித்துக் கொள்வேன் இனித் தேவரீர் எழுந்து அருள்வது எங்கே என்றவாறு


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே 

AMMAIYEEA APPAA OPPILAA MANIYEAA AANBINIL VILANTHA AARAMUTHEEA

You are my mother and father and you have no comparison of diamond jewel and in my mind you have developed as nectar form

அடியேற்கு அன்னையே அப்பா ஒப்பற்ற மாணிக்க மணியே என் அன்பில் விளைந்த அரிய அமுதமே


பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்

POIMAIYAI PERUKKI POLUTHI NAI SURUKUM PULUTHTHALAI PULAIYENEEN THANAKUU 

I have done all the unwanted things in this world and so that my longevity of life is reduced and then all the deceases are entered in to my body so I am dog like form wandering in this world

பொய்மையான பயனற்ற காரியங்களையே மிகச் செய்து வாழ்நாளைச்சுருக்கிக் கொள்ளும் புழுத்து அலைகின்ற நாய் ஒத்த இழிதன்மையை உடையேனாகிய எனக்கு


செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே 

SEMMAIYEA AAYA SIVAPATHAM ALITHA SELVAMEA SIVAPERUMAANEEA

 The pure form of feet is given to me to pray under it and you are my wealth

செம்மையான சிவபதத்தை அருளிய செல்வமே சிவபெருமானே


இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 538 
IMMAIYEEA YUNNAI SIKENNA PIDITHEEN ENGU ELUNTHARULUVATHU INIYEEA

 Inthis birth itself I have held firmly so that you may not go anywhere else

இப்பிறப்பிலேயே உன்னை உறுதியாகக் பற்றினேன் ஆகையால் இனி தேவரீர் எழுந்தருள்வது எங்கே என்றவாறு


அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே பெருந்திறல் அருந்தவர்க் கரசே 

ARULUDAI SUDAREEA ALINTHATHOOR KANIYEA PERUNTHIRAL ARUM THAVARKU ARASEEA

 The grace filled light form you are existing in this world and those saints who are seated in penance you are leader to them

அருளாகிய ஒளியை உடைய சுடரே கனிந்த தவத்தைச் செய்யும் முனிவர் பெருமக்களுக்கு எல்லாம் தலைவனே


பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே

PORUL YUDAI KALAIYEEA PUGALCHIYAI KADANTHA BOGAMEEA YOGATHTHIN POLIVEEA 

 Your light glow is always blessing one and you are ripped wonderful fruit.With your mighty power saints are doing penance so you are the prime lard and you are got by Siva experience form

மெய்பொருளை அகத்து அடக்கிய சிவஞானக் கலையே பொலிவே உலகவர் உரை அளவையால் அடங்கிக்கிடக்கும் புகழ்ச்சியைக் கடந்த அனுபவமே சிவயோகத்தல் கிடைத்த அனுபவமே


தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெருமானே 

THERUL IDATHU ADIYAAR SINTHAYUL PUGUNTHA SELVAMEA SIVAPERUMAANEA

After my impurities are removed from my mind and then afterwards you have entered into my mind so you are real asset and real god

மலநீக்கம் பெற்றுத் தெளிந்த காலத்து அடியார்கள் மனத்தில் புகுந்த செல்வமே சிவபெருமானே


இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 539 
IRUL IDATHU YUNNAI SIKENA PIDITHEEAN ENGU ELUNTHARUVATHU INIYEEA

I am unable to understand me and in that pleasure I the darkness filled time I caught hold on you afterwards where will you go

என்னை நான் அறியாத இன்பத்தால் இருளான நிலையில் உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் இனி எழுந்தருள்வது எங்கு என்றவாறு


ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே 

OPPU YUNAKU ILLAA ORUVANEEA ADIYEEAN ULLATHYUL OLIRGINDRA OLIYEEA

 You have no comparison in this world and you areunique form and you are the mightiest person in this world and in my internal mind you are fire glow form glittering

உமக்கு ஒப்பு ஆனவர் யாரும் இலாத ஒருவனே அடியேன் மனத்துள் ஒளிர்கின்ற ஒளியே


மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு விழுமிய தளித்ததோர் அன்பே

MEIPATHAM ARIYAA VEERU ILIYEEARKU VILUMIYATHU ALITHTHATHOOR ANBEEA

 What is the real one which is not known by me but you have given me the precious mukthi so you have no comparison in this world and you are appearing in love form

உண்மை நிலை இது என்பதை அறிந்து உய்ய மாட்டாத முடிவற்ற எனக்குமிகச் சிறந்ததாகிய முக்திப் பேற்றினைப் வழங்கிய ஒப்பற்ற அன்பு வடிவானவனே  


செப்புதற் கரிய செழுந்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே 

SEPUTHARKU ARIYA SELUNSUDAR MOORTHEE SELVAMEA SIVAPERUMAANEEA

 I am unable to state in words that fireglow form you are appearing and your real wealth form and your name is lard Siva

சொல்லுதற்கு அறிய செழுமையான சுடர் உருவானவனே செல்வமே சிவபெருமானே


எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 540 
EIPPUIDATHU YUNNAI SIKENA PIDITHEEAN ENGU ELUNTHARUL VATHU INIYEEA

 My hay days are over now I am in destitute state so you are the only savior to me in this world so I have fastly clinked your feet so you do not go somewhere else

இளைத்த காலத்தில் உன்னை இறுகப்பற்றினேன் இனி நீ எழுந்து அருள்வது எங்கு என்றவாறு


அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு அளவிலா ஆனந்த மருளிப்

ARAVAIYEEN MANAMEA KOYILAA KONDU AANDU ALAVILAA AANATHAM ARULI 

 I am in destitute state and I do not have any support in this world and I am your disciple and you have taken my mind as temple and then entered in to it so that infinitive happiness is given to me

ஆதரவு அற்றவனாகிய அடியேன் மனத்தைக் கோயிலாகக் கொண்டு என்னையும் ஆண்டு கொண்டு எல்லையற்ற ஆனந்தத்தை எனக்கு அருளி


பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா பெரியஎம் பொருளே

PIRAVI VEER ARUTHU ENKUDU MULUTHUAANDA PINCHAKAA PERIYA EMPORULEEA

Now you have cut of my birth root completely and my whole sect is ruled and you are yellow form existing in this word and your bigger than anything in this world

பிறவியின் வேரை அறுத்து என்குடி முழுவதையும் ஆண்ட மஞ்சள் நிறம் ஆனவனே பெரியவற்றிற்கு எல்லாம் பெரிய எனது பொருளே  


திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே

THIRAVILEA KANDA KATCHIYEEAI ADIYEEAN SELVAMEEA SIVAPERUMAANEEA

I have seen you in the open space form so you’re my wealth and your name is lard Siva 

திறந்த வெளியில் யான் கண்ட காட்சிப் பொருளே செல்வமே சிவபெருமானே


இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 541 
IRAVILEAA YUNNAI SIKENA PIDITHEEAN EANGU EALUNTHARULVATHU INIYEAA

In thefag end of my life I have clinged your feet where else will you go

இறுதிக் காலத்தில் உன்னை இறுகப் பற்றினேன் இனி எழுந்து அருள்வது எங்கு என்றவாறு


பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற் கருளிப்

PAASA VEER ARUKUM PALAMPORUL THANNAI PATRUMAARU ADIYANERKU ARULI 

You have terminated my ego impurities at the root level andyou are good old prime lard in this world and allow me to catch you in that way you have blessed me

ஆணவ மலத்தின் ஆணிவேரை அறுக்கும் பழம்பொருள் ஆகிய தன்னைப் பற்றும்வண்ணம் அடியேற்கு அருள் செய்து


பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே 

POOSANAI YUKANTHUEN SINTHAIYUL PUGUNTHU POOGALAL KAATIYA PORULEEA

My prayer is accepted and entered permanently in to my mind and gave me your sacred appearance to me and showed your feet to me to pray for ever

என்னால் செய்யப்படும் பூசைகளுக்கு விரும்பி என் மனதில் இடைவிடாது எழுந்தருளி இருந்த திருவடிக்கட்சியைத் தருகின்றசெம் பொருளே


தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே 

THESUDAI VILAKEA SELUNGSUDAR MOORTHEE SELVAMEEA SIVAPERUMAANEEA

 You are burning light form and inthat lamp you are fire glow form you are deity form to this world and wealth form to me and your name is lard Siva

ஒளியை உடைய விளக்கே விளக்கினுள் எரியும் செழுமையாகிய சுடர் வடிவாகிய மூர்த்தியே செல்வமே சிவபெருமானே


ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 542 
EESANEEA YUNNAI SIKENA PIDITHEEN ENGU EALUNTHARULVATHU INIYEEAA

  Lard Siva I have tied you with my hands afterwards where will you go

ஈசனே உன்னை இறுகப்பற்றினேன் இனி நீ எழுந்தருள்வது எங்கு என்றவாறு


அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற ஆதியே யாதும்ஈ றில்லாச்

ATHTHANEEA ANDAR ANDAMAAININDRA AADHIYEEA YAATHUM EERILLA 

My dear father and you are the prime god to deevass and your principal to them and your infinitive in this world

தந்தையே தேவர்களாகவும் அவர்கள் வாழ்கின்ற உலகமாகவும் நின்ற முதல்வனே ஒரு சிறிதும் முடிவு இல்லாத


சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே சிவபெருமானே 

SITHANEEA PATHAR SIKENA PIDITHA SELVAMEA SIVAPERUMAANEEA

 You have so many special powers so I catch hold on you afterwards where ill you go

சித்திகளை உடையவனே மெய் அன்பர்கள் இறுகப் பற்றிய செல்வமே சிவபெருமானே


பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப் பிழைத்தவை அல்லையாய் நிற்கும்

PITHANEA ELLA YUYIRUMAAI THALAITHU PILATHTHAVAI ALAIYAAI NIRUKUM 

 You have dead fast love towardsme and you are spread over all the things in this world and then allow to proliferate in this world and if they do any wrong in this world then you do not take any responsibility for it

பித்தனே எல்லா உயிர்கள் இடத்தும் கலந்து நின்று அந்த உயிர்களைத் தழைக்கச் செய்து அவற்றுள் பிழை செய்தலை அல்லையாய் நிற்கின்ற என்னை


எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 543 
ETHTHANEEA YUNNAI SIKENA PIDITHEEN ENGU EALUNTHARULVATHU INIYEEA

 You are bad person so I hold you tightly then here will you escape

எத்தனே உன்னை இறுகப்பற்றினேன் இனி எழுந்து எங்கு அருள்வது என்றவாறு


பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய

PAAL NINANTHU OOTDUM THAYINUM SAALA PARINTHU NEE PAAVIYEN YUDAIYA 

 You aremore than the mother because  who feed her child while if it cries only but god is above that state who showers his love voluntarily but I am sinner in this world

குழந்தையின் பசியை நினைந்து பால் ஊட்டுகின்ற தாயைக்காட்டிலும் நீ மிக அன்பு கூர்ந்து பாவியாகிய அடியேனுக்கு

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய 

OONNINAI YURUKI YULOLI PERUKKI YULAPU ILLA AANADHAMAAYA

You have melted my flesh and internal light is illuminated and gannaform of life is given and without dried form happy honey is oozing internally

உடலை உருக்கி உன் ஒளியாகிய ஞானத்தை பெருக்கி வற்றாத ஆனந்தமாகிய தேனினைச் சொரிந்து


தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே 

THEENINAI SORINTHU PURAMPURAM THIRINTHA SELVAMEEA SIVAPERUMAANEEA

and you are my wealth in this world

  You have poured honey on me and an then you stand away from me

தேனினைச் சொரிந்தும் புறத்துக்கும் புறமாகத் திரிந்த செல்வமே சிவபெருமானே


யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 544 
YAAN YUNNAI THODARNTHU SIKENA PIDITHEEN ENGU EALUNTHARULVATHU INIYEEA

 I have followed you and then catch hold on you and where will you go

நான் உன்னை விடாது தொடர்ந்து இறுகப் பற்றினேன் இனி எழுந்து அருள்வதற்கு எங்கு சொல்வாயாக என்றவாறு 


புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென் 

PUNPULAAL YAAKAI PURAIPURAI KANIYA PONNEDUNG KOYILAA PUGUNTHUEN

From thisignanimus body which has nine holes from it always emanating stinking smell but you have considered it and then entered in to it

இழிந்த புலால் மணம் வீசுகின்ற உடல் துளைகள் தோறும் நெகிழ உடலையே பொன்னாகிய எளிய கோயிலாகக் கொண்டு எழுந்து அருளி


என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே 

ENBUELAAM YURUKI ELIMAIYAAI AANDA EESANEA MAASILAA MANIYEEA

 You have melted all my bones and then descended in to it in simple form and you are my principal and you are flawless ruby diamond form

என் எலும்புகள் அனைத்தும் உருக்கி எளியனாக எழுந்தருளி நின்ற முதல்வனே குற்றம் இலாத மணியே


துன்பமே பிறப்பே இறப்போடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்தநற்சோதி 

THUNBAMEA PIRAPEA IRAPODU MAYAKKAAM THODANKU ELLAM ARUTHTHA NAL JOTHEE

 The sorrow birth death and fainting all are cut off and eliminated and  then put your grace on me and then blessed me and you are light form

துன்பம் பிறப்பு இறப்பு மயக்கமும் ஆகிய வினைத் தொடர்கள் அனைத்தையும் நீக்கி அருளிய நல்ல ஒளியே


இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 545 
INBAMEAAYUNNAI SIKENA PIDITHEEN ENGU EALUNTHARULVATHU INIYEAA

 You are my happiness so I tied you with my hands and then here after where will you go

இன்பமே உன்னை இறுகப்பற்றினேன் இனி இங்கு எழுந்து அருள்வது எங்கு என்று சொல்வாயாக
திருச்சிற்றம்பலம் 


omthiruchitrabalam


February 27, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: