PIRARTHTHANAIPATHU
32. பிரார்த்தனைப் பத்து
PIRARTHTHANAIPATHU
(திருப்பெருந்துறையில் அருளியது
– அறுசீர்க் கழி
நெடிலடி ஆசிரிய விருத்தம்)
Without any interruption he wanted to take bath in the Siva’s happiness sea. He prays for this so this is called prayer ten even though it has eleven songs
After some time he went to Thiruperum thurai where he sang the following songs
இடையீடு இல்லாமல் சிவானந்தக்கடலில் தில்லைக்கூத்தன் திருஅருளை வேண்டுவது பிராத்தனைப் பத்து பதினோரு பாடல்களை க் கொண்டது
பாடல்களில் : தைலதாரை போன்ற இடையீடு இல்லா அன்பு, கருணைக்கடல் பொங்கிப் பாய, ஓவாது உருகவும் மெய் அன்பை விழைதல், மிகுதியாக அன்பை வேண்டுதல், பரமானந்தப் பழங்கடலில் சேருதல், இன்பப்பேறு தானே சித்திக்கும் இறை அன்பு வேண்டுதல், அருள் கனியே விரைந்து வந்து தாமதிக்காமல் திருவடி தந்து அருள வேண்டுதல், பேரானந்தம் என்னும் பேராமை அருள வேண்டும் என்று உரிமை தோன்ற விண்ணப்பிக்கின்றார். உருகிப் பெருகும் உள்ளம் வேண்டுதல் ஆனந்தமேயாக இருக்கும் அருள் நிலையை வேண்டிக் கொள்கின்றார்.
கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன்
KALANTHU NIN ADIYAARODU ANDRU VALLA KALITHIRUNTHEN
Once you have taken control on me and then I have sit with your disciples calmly
நீ ஆண்டு கொண்ட அன்று நின் அடியார்களோடு சும்மா மகிழ்ந்து இருந்தேன்
புலர்ந்து போன காலங்கள் புகுந்துநின்ற திடர்பின்னாள்
PULARNTHU POONNA KALANGAL PUGUNTHU NINDRATHU IDARPINNAAL
I have idly spent my life time without any purpose so after wards sorrow gets in to my mind
என் ஆயுட்காலம் பயன் இன்றி கழித்தேன் பின்னாளிலே துன்பம் புகுந்து நின்று
உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்பச் சுடர்காண்பான்
ULARNTHU POONEEAN YUDAIYANEEA YULAVAA INBA SUDARKAANPAAN
So your disciple I am got sorrow and dried up and you are never depleted form of happiness and in light form so I wanted to see you in that state
அதனால் அடியேன் வாடினேன் என்றும் வற்றாத இன்பமே வாராத ஒளியைக் காணும் பொருட்டு
அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வங் கூர அடியேற்கே. 485
ALARNTHU POONEN ARULSEIYAAI AARVAM KUURA ADIYERKEA
So I am feel sorrow for it and you have taken me as slave so please put your grace on me so that love over flowing towards me
வருந்தினேன் என்னை ஆளாக உடையவனே அருள் செய்க என்றவாறு அடியோற்கு அன்பு மிகும்படி
அடியார் சிலருன் அருள்பெற்றார் ஆர்வங் கூர யான் அவமே
ADIYAAR SILAR YUNARUL PETRAARAR AARVAMKUURA YAAN AVAMEA
Your true disciples because of over flowing love they have entered in to heavenly life but I do not have any desire I am still here
மெய் அடியார்கள் சிலர் நின்மேல் ஆர்வம் மிகுதியால் உன் அருளைப் பெற்று உய்ந்தனர் நான் மட்டும் ஆர்வம் இல்லாமல் இருந்தேன்
முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன்
MUDAIYAAR PINATHIN MUDIVUINDRI MUNIVAAL ADIYEEAN MUUKKINDREN
With this stinking body just like as dead person I still living in this world without any end so I got old age
முடைநாற்றம் வீசுகின்ற பிணத்தைப்போல வீணாக முடிவு இல்லாமல் வெறுப்பினால் அடியேன் மூப்பு அடைகின்றேன்
கடியேனுடைய கடுவினையைக் களைந்துன் கருணைக் கடல்பொங்க
KADIYEN YUDAIYA KADU VINNAIYAI KALAINTHU YUN KARUNAI KADAL PONGA
I am heard hearted person but you may remove my misdeeds in this world and then put your grace on me so as to over flow on me
கடியவனாகிய என்னுடைய கொடிய வினைகளாகிய கலைகளைக் களைந்து உன் கருணையாகிய கடல் பொங்கி என் மீது பாய
உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவா துருக அருளாயே. 486
YUDAIYAAI ADIYEEAN YULLATHEEA OOVATHU YURUKA ARULAAYEA
You have taken me as your disciple and then give me inner happiness and love without any interruption and then my mind catch your grace and then allow me to melt under your feet
உடையாய் உடைமையாக அடியேன் மனத்து ஆகத்து அன்பைத்தந்து யான் இடைவிடாது உனது அருளையே பற்றி மனம் உருகப் பணிந்து அருள்வாய் என்றவாறு
அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த
ARULLAAR AMUTHA PERUNG KADALVAAI ADIYAAR ELLLAAM PUKUALUNTHA
The sacred nectar sea all your true disciples are entered and then got astonishment
திரு அருளாகிய பெரிய அமுதக்கடலிலே புகுந்து திளைக்க அடியார்கள் அனைவரும் புகுந்து திளைக்க
இருளா ராக்கை யிதுபொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே
IRULAAR AAKAI ITHU PORUTHEA EITHTHEN KANDAAI EMMAANEA
Your disciple I am but entered into the ignorance darkness body and carried it everywhere and got tired of its weight and then got weak my dear lard Siva you may bless me with your side eye sight
அடியேன் மட்டும் அஞ்ஞானமாகிய இருள் நிறைந்த உடலாகிய இதனைக் சுமந்து இளைத்தேன் இதனைச் சிறிது கடைக்கண் அளித்து அருள்க எம்மானே
மருளார் மனத்தோர் உன்மத்தன் வருவாய் என்றிங் கெனைக்கண்டார்
MARULAAR MANATHOOR UNMATHTHAN VARUVAAL ENTRIRKU ENNAIKANDAAN
I have full of wavering mind and others are seeing me as lunatic person
மயக்கம் நிறைந்த மனத்தை உடைய ஒரு பைத்தியக்காரன் வருகிறான்
வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டும்மே. 487
VERULAA VANNAM MEIANBAI YUDAIYAAI PERANAAN VENDUMEA
Others are see meas lunatic person and not to ran away from me and in that way I want to get your true love from you
என்று வெறுண்டு ஓடா வண்ணம் நான் உண்மை அன்பை உடையவனே நான் பெற வேண்டும் நீ அருள்வாயாக
வேண்டும் வேண்டும் மெய்யடியா ருள்ளே விரும்பி எனை அருளால்
VENDUM VENDUM MEIADIYAAR YULLEA VIRUMBI ENNAI ARULAAL
Among your disciples I am also much liked by you and then put your grace on me and then ruled me as your subject
மிகமிக விரும்பும் மெய் அடியார்கள் உள்ளே மிக விரும்பி என்னையும் கருணையினால் ஆண்டாய்
ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதே அருமா மணிமுத்தே
AANDAAI ADIYEEAN IDARKALAINTHA AMUTHEA ARUMAAMANI MUTHEA
In that way you have taken me as your subject and then eradicated all my sorrows at root level and you are nectar form rare ruby diamond and pearls form
அவ்வாறு ஆண்டு அடியேனுடைய துன்பங்கள் எல்லாம் வேறோடும் அகற்றிய அமுதே கிடைத்ததற்கு அரிய பெரிய மணியே முத்தே
தூண்டா விளக்கின் சுடரனையாய் தொண்டனேற்கும் உண்டாங்கொல்
THUNDAA VILAKIN SUDARANNAIYAAI THONDAA NEEARKUM YUNDAAMKOL
You are unkindled diamond rays form and I am your disciple and allow me to enjoy that grace light by me
தூண்டா விளக்காகிய இரத்தின தீபத்தின் ஒளியை ஒத்தவனே தொண்டனாகிய எனக்கும் உண்டாமே என்றவாறு
வேண்டா தொன்றும் வேண்டாதுமிக்க அன்பே மேவுதலே.
VENDAATHU ONDRUM VENDAATHU MIKA ANBEA MEVUTHALEEA
I do not want any unnecessary things from you I am liking only your immense love only
தேவரீர் விரும்பப்படாத ஒன்றையும் யானும் விரும்பாமல் நின்பால் மிக்க அன்பு அடைதல்
மேவும் உன்றன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே
MEEAYUM UNTHAN ADIYAARUL VIRUBI YAANUM MEIMAIYEA
So many true disciples are surrender your feet only showing love to wards you and just like I am one among them
விரும்பி உன்னை வந்து அடைந்த உன்னடியாருள் ஒருவனாகயானும் விரும்பி மெய்யாகவே அடைந்தேன்
காவி சேருங் கயற்கண்ணாள் பங்கா உன்றன் கருணையினால்
KAAVI SERUM KAYAL KANNAAL PANGAAYUNTHAN KARUNAIYINAAL
Lard Siva you have given left part of your boy to lardess Parvathi and whose eye color is blue one and kayal fish like broad one
நீல மலரைச் சேர்ந்து விளங்கும் கயல் மீன் போலும் கண்களை உடைய உமாதேவியாரை ஒரு பாகமாகக் கொண்டவனே
பாவியேற்கும் உண்டாமோ பரமா னந்தப் பழங்கடல்சேர்ந்
PAAVIYEEARKUM YUNDAAMO PARAMAA AANANDHA PALANGKADAL SERNTHU
I am sinner will you pour your grace on me and so that I will enter Siva’s bliss sea
பாவியாகிய எனக்கும் உன் கருணையினால் உண்டாகுமோ மேலான சிவனந்தமாகிய பழங்கடலில் சேர்ந்து
ஆவி யாக்கை யான் எனது என்றுயாது மின்றி அறுதலே. 489
AAVIYAAKKAI YAANENATHU EANRU YAATHUM INDRI ARUTHALEEA
My body and life is surrendered under your feet so it is belonged to me and this is mine, that type of mentality is completely vanished on my part
உடலும் உயிரும் யான் எனது என்னும் பற்றுகளும் சிறிதும் இன்றி நீக்குதல்
அறவே பெற்றார் நின்னன்பர் அந்தமின்றி அகநெகவும்
ARAVEEA PETRAAR NINANBAR ANTHAM INDRI AKAMNEGAYUM
Without any limit your devotees are got unlimited bliss and I am seeing it with broken heart with unlimited sorrow
மிகுதியாக நின் அன்பர்கள் இன்பத்தைப் பெற்றனர் எல்லை இன்றி மனம் உடையவும்
புறமே கிடந்து புலைநாயேன் புலம்பு கின்றேன் உடையானே
PURAMEA KIDANTHU PULAINAAYEN PULAMBUKINDREEAN YUDAIYAANEA
I am murmuring in the last grade dog place and you have already taken me asyour slave
புறமே கிடந்து புலை நாயேன் புலம்புகின்றேன் என்னை அடிமையாக உடையவனே
பெறவே வேண்டும் மெய்யன்பு பேரா ஒழியாய் பிரிவில்லா
PERAVEEA VENDUM MEIYANBU PERAA OLIYAAI PIRIVU ILLA
I want to get your real love and you did not left from me and did not separate from me and be in dormant state
நின்பால் மெய் அன்பு பெற வேண்டுகின்றேன் என்றவாறு என்றும் நீங்காததும் பிரிவு இல்லாத இடம் பெயராததும்
மறவா நினையா அளவில்லா மாளா இன்ப மாகடலே. 490
MARAVAA NINAIYAA ALAVUILAA MALA INBA MAKADALEEA
You are not forgettable and then remembering that type unlimited happy sea form you are
மறக்கவும் மீண்டும் நினைக்கவும் முடியாததும் எல்லையற்றதும் ஆகிய பெரிய இன்பக்கடலே
கடலே அனைய ஆனந்தங் கண்டா ரெல்லாங் கவர்ந்துண்ண
KADALEA ANNAIYA AANDHAM KANDAAR ELLAAM KAVARNTHUNNA
You arebig happiness bliss form and all are enjoyed it
கடலை ஒத்த பேரின்பத்தை உடைய உன்னைக் கவர்ந்து கண்டவர்கள் எல்லாம் அனுபவிக்க
இடரே பெருக்கி ஏசற்றிங் கிருத்த லழகோ அடிநாயேன்
IDAREEA PERUKI EAASATRUINGU IRUNTHAL ALAKO ADINAAYEEAN
I have multiplied my miseries and sorrows and feel sorry for it and then stillliving in this world is it lovelier on your part to see and I am your slave dogform
துன்பங்களை மிகக் செய்து வருந்தி இங்கு இருப்பது உனக்கு அழகோ அடிமையாகிய நாயேன்.
உடையாய் நீயே அருளிதியென் றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன்
YUDAIYAI NIYEEA ARULUTHE ENTRU YUNARTHAATHU OLINTHEA KALINTHOLINTHEEAN
You have taken me as your slave and I do not know that you are the only person inthis world O MY LARD give heaven and mukthi so I have wasted my time and life and spoilt
என்னை உடையாய் நீயே அருள்வாய் என்று முன்னர்த் தெரிவியாது இருந்த காலம் கழித்து ஒழிந்தேன்
சுடரார் அருளால் இருள்நீங்கச் சோதி இனித்தான் துணியாயே. 491
SUDARAAR ARULAAL IRULNEENGA JOTHII INITHAAN THUNIYAAYEA
You are in
fire glow form and with your you have come over me andcatch hold on me so that
my impurities are removed just like gold Is put on fire and then its impurities
areremoved and at least here after catch and take hold on me
சோதி இனியாவது ஒளிப்பிழம்பான திரு
அருளால் என மல இருள் நீங்க இனியாவது திருஉள்ளம் பற்றுவாயாக என்றவாறு
துணியா உருகா அருள்பெருகத் தோன்றும் தொண்டரிடைப்புகுந்து
THUNIYAAYURUKAA ARULPERUGA THONDRUM THONDAR IDAIPUGUNTHU
O my lard Siva your true devotees are getting your immense blessings so that their mind melt and shine in happiness and enjoyment but I am false person but stood in themiddle of your true disciples
சிவனே நின் அருள் மேன்மேலும் பெருகுவதால் மனம் உருகி இன்பக் களிப்பில் காணப்படுகின்ற மெய் அடியார்கள் நடுவே நான் புகுந்து நின்று
திணியார் மூங்கிற் சிந்தையேன் நின்று தேய்நின்றேன்
THINIYAAR MUUNGIL SINTHAIYEEAN SIVANEEA NINDRU THEEIKINDREEAN
I am just like the hardened bamboo tree like mind and entered in the group of true disciples and melting there
கெட்டியான மூங்கிலைப் போன்ற மனத்தை உடைய யான் புகுந்து நின்று சிந்தையேன் சிவனே தேய்கின்றேன்.
அணியா ரடியா ருனக்குள்ள அன்புந் தாராய் அருளளியத்
ANNIYAR ADIYAAR YUNAKU YULLA ANBUM THAARAAI ARULALIYA
You have intimate disciples to whom you give your grace and love in thesame way you may give it to me the grace ripped form
நெருக்கத்தில் உள்ள அடியார்கள் இடத்து உனக்கு உள்ள அன்பைத் தருவாயாக கருணை கனிய
தணியா தொல்லை வந்தருளித் தளிர்ப்பொற் பாதந் தாராயே. 492
THANIYAATU OLLAI VANTHARULI THALIRP PORPAADHAM THAARAAYEA
I don’t want to waste my time and don’t made to wait long time so please fastly come and gave me your tender feet to enjoy it
காலம் தாழ்த்தாது விரைவாக வந்து தளிர் போன்ற பொன்மையான திருவடியைத் தந்தருள் என்றவாறு
தாரா அருளொன் றின்றியே தந்தாய் என்றுன் தமரெல்லாம்
THARAA ARULONDRU INDIRIYEA THANTHAAI ENTRU UN THAMARELLAM
You have given me allthe blessings and without any residue and all disciples are
தரப்படாது எஞ்சிய அருள் ஒன்றும் இன்றியே தந்துவிட்டாய் என்று உன் தமர்களாகிய அடியார்கள் எல்லாம்
ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ
AARA NINDRAAR ADIYENUM AYALAAR POLA AYARVVENOO
Enjoyed your grace buteven though you have taken me as your disciple but I am not got your grace to enjoy it
களிப்போடு நுகர்ந்தனர் அடியேனும் அயலார்போல் உன் அருளை நுகராது இருந்து வருந்துவேனோ
சீரார் அருளாற் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா
SEERAAR ARULAL SINTHANAIYAI THIRUTHI AANDA SIVALOGAA
With your best blessing you have converted my mind in the right path to go and then guided me as father
சிறந்த அருளால் என் மனத்தைத் திருத்தி ஆண்ட சிவலோகபதியே
பேரா னந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே. 493
PEAR AANDHAM PERAAMAI VAIKA VENDUM PERUMAANEA
You must keep me in the Siva bliss forever and not to left over from that place
நின் பேரானந்தத்தில் என்றும் நீங்காத வண்ணம் என்னையும் வைக்க வேண்டும் என்றவாறு
மானோர் பங்கா வந்திப்பார் மதுரக் கனியே மனநெகா
MAANOOR PANGA VANTHIPPAAR MADURAK KANIYEA MANAMNEGA
Lard Sive you have kept lardess Parvathi in your left part of your body those disciples who pray you under your feet as good sweet fruit form and you are leader to all
மான்போன்ற உமாதேவியை ஒருபாகமாக உடையவனே வணங்குகின்ற மெய் அடியார்களுக்கு இனிமையான கனியை ஒத்தவனே தலைவா மனம் நெகிழாத மானோர் பங்கா வந்திப்பார்
நானோர் தோளாச் சுரையொத்தால் நம்பி இத்தால் வாழ்ந்தாயே
NAANOR THOLA SURAIOTHTHAAL NAMBI ITHTHAAL VAALNTHAAIYEEA
Your disciple I am just like unholed SURRAIKAI form which has no use in this world just like you have put me in this world
அடியேன் துளைக்கப்படாத ஒரு சுரைக்காயை ஒத்து இருப்பேனோயின் இதனை நம்பி நீ வாழ்ந்தாய்
ஊனே புகுந்த உனையுணர்ந்த உருகிப் பெருகும் உள்ளத்தைக்
YUUNEEAA PUGUNTHA YUNNAI YUNARTHEA YURUKIPERUKUM YULLATHAI
You have entered in to my flesh and then melt it so that I have completely realized you and then give me productive mind
இந்த உடலில் புகுந்து உன்னை நன்றாக உணர்ந்து உருகி அதனால் ஆக்கத்தை அடையும் மனத்தை
கோனே அருளுங் காலந்தான் கொடியேற் கென்றோ கூடுவதே. 494
KONEA ARULUM KALANTHAAN KODIYERKUM ENTROO KUUDUVATHEEA
You are my leader when will you put your grace on me but I am wild person when will I attain it
தலைவா நீ அருளும் காலம் தன் கொடியேன் ஆகிய எனக்கு என்று கூடும் சொல்லி அருள்க என்றவாறு
கூடிக்கூடி உன்னடியார் குனிப்பார் சிரிப்பார் களிப்பாறாய்
KUUDIKKUUDI YUN ADIYAAR KUNIPPAAR SIRIPPAAR KALIPAARAAYAAI
Your true disciples are majority of them are dancing under your feet and then got happy from it in that happiness sea dipped and enjoyed it and I that ego state they stand there
நின்மெய் அடியார்கள் பலரும் கூடிக் கூத்தாடுபவர்களாகவும் மகிழ்பவர்களாகவும் ஆனந்த அனுபவத்தில் செருக்கி நிற்க
வாடி வாடி வழியற்றேன் வற்றல் மரம்போல் நிற்பேனோ
VAADI VAADI VALI ATREEAN VATRAL MARAMPOL NIRPEENOO
Will I sand alone as dried tree form and sorrow full state stand there without know the way to get upliftment in life?
யான் மட்டும் வற்றல் மரம்போல் நிற்பேனோ வாடி வாடி உய்யும்வழியும் அற்று இருப்பேனோ
ஊடி ஊடி உடையாயொடு கலந்துள் ளுருகிப் பெருகிநெக்கு
YUUDI YUUDI YUDAYAAYOODU KALANTHU YUL YURUKI PERUGI NEKKU
You have taken me as your slave and I have so many generation got angry with you (just like wife got angry with his husband) sothat my mind melts and then after wards happiness multiplied and then melt with that happiness
என்னை உடைமையாகப் பெற்றவனே உன்னோடு பலகாலம் கூடியும் உள்ளம் உருகி அதனால் ஆனந்தம் பெருகி நெகிழ்ந்து
ஆடிஆடி ஆனந்தம் அதுவே யாக அருள்கலந்தே. 495
AADI AADI AANDHAM ATHUVEA AAKA ARULKALNTHEA
With your internal bliss and happiness I will dance all the time and then stand there in mingled form.so my lard Siva I want to catch your mind to mingle with you and then enjoy ever ending bliss just like you are in dancing form. I want mingle with Siva anantha( sat chit anantha) sachithanantha forever in Siva logam
பரவசமாய் ஆடிஆடி ஆனந்தமே யான் ஆக நின் திரு உள்ளதோடு கலந்து நிற்பேனோ தேவரீர் திருஉள்ளம் பற்ற வேண்டும் என்றவாறு
திருச்சிற்றம்பலம் om thiruchitramblam.
February 22, 2019