KULAITHAPATHU
33. குழைத்தபத்து – ஆத்தும நிவேதனம்
KULAITHAPATHU
(திருப்பெருந்துறையில் அருளியது –
அறு சீர்க்கழி
நெடிலடி ஆசிரிய விருத்தம்)
Thesoul has turnedfrom its position and then went into lower grade of activities because of our previous misdeeds so it got low graded status
Because of good and bad deeds and body ignorance this soul has got degraded position so this part is call kulaita pathu
So my dear lard Siva with my
innumerable misdeeds with it take me and forgive me now it is informed to soul
and now with awakeful form the following songs are being sung
இறைவா நான் எத்தனை
பிழைகள் செய்திருந்தாலும் நீயே பொறுத்தருள வேண்டும் என்று ஆன்மா தன்னை அறிவித்து
இறைவனை வேண்டுவது இப்பகுதி வினைகளால் உயிரைத் தன்னிலை திரியுமாறு குழையச் செய்தல் குழைத்தல்
பத்து ஆகும்.
வினைகளால் உயிரைத் தன்னிலை திரியுமாறு குழையச் செய்தல் குழைத்தல் ஆகும்.
குழைத்தல் – வாடச் செய்தல், துன்புறுத்தல்.
குழைதல் – சோறு குழைந்தது – கஞ்சியொடு கஞ்சியாகச் சோறு உருவம் இன்றி மெலிதல்.
அதுபோல இருவினைகளால் எடுத்த உடல் அறியாமையால் உயிரைக் குழைத்தது.
ஆத்தும – தான், நிவேதம் – நன்றாக அறிவித்தல்
பத்துப் பாடல்கள் – பிழைசெய்தல் ஆன்மாவின் இயல்பு. ஆண்டவன் இயல்பு அவற்றைப் பொருத்து ஆட்கொள்ளல். முதன் முதலில் நீ ஆட் கொண்டபோதே என் துன்பங்கள் அனைத்தும் அகன்றன என்று இருந்தேன். துன்பக் கொள்;கலமான இந்த உடலைச் சிதைக்காமல் மேலும் நீ துன்புறுத்துகின்றாய்.
ஆட்கொண்ட காலத்தில் இருந்த கருணை இன்று இல்லையா , என் கருவி கரணங்கள் அனைத்தும்; நீ, உடல்பொருள் ஆவி அனைத்தும் உனக்குச் சொந்தம், எனக்கு இடையூறு ஒன்றும் இல்லை. நீ உடலை இந்;த உலகில் விட்டுவை அல்லது வீடுபேறு அளி. எனக்கு என்ன சுதந்திரம் இருக்கின்றது.
ஆனாலும் ஒன்று விண்ணப்பிக்கின்றேன். நீ வீட்டு உலகைத் தந்து அருளாது என்னைக் குழைக்கின்றாய். இது தகாது. திருஉள்ளம் கொண்டு அருள வேண்டும் என்று விண்ணப்பிக்கின்ற அழகு அன்பு நிறைந்த உள்ளத்திற்கு அமுதம் ஆதல் காண்க.
குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய் காவாய் உடையாய் கொடுவினையேன்
KULAITHTHAAL PANDAI KODUVINNAINOOI KAAVAAI YUDAIYAAI KODUVINNAIYEEAN
My bad previous behavior now it disstablishes me and then got punishment for it please guard me now I am slave to you andI am bad fellow I accept it
மிகப் பழமையான கொடிய வினைகள் அதனால் விளையும் துன்பங்கள் என்னைக் குழைத்தால் காப்பாயாக என்னை ஆளாக உடையவனே கொடிய வினைகளை உடைய யான்
உழைத்தா லுறுதியுண்டோ தான் உமையாள் கணவா எனை ஆள்வாய்
YULAITHTHAAL YURUTHI YUNDOO THAAN UMAIYAAL KANAVAA ENNAIAALVAAI
If I surrender under your feet will I get upliftment in life now if I take any sincere efforts, is there any benefit derived from it
திருவடியில் சேர்ந்து உய்யும் பொருட்டு முயன்றால் பயன் உண்டோ ஆதலால் நீயே திரு உள்ளம் இரங்கி என்னை அருள்வாயாக
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ பிறைசேர் சடையாய் முறையோவென்
PILLAITHAAL PORUKA VENDAAVOO PIRAISEAR SADAIYAAI MURAIYOO VENTRU
If do wrong things in this world in advertently you must forgive me and you have carried in your pigtail carried third day moon if I cry always in distress is it good for you and you may give your blessings
அடியேன் தவறு இழைத்தால் பிழைகளைப் பொறுக்க வேண்டாமோ ஒரு கூனல்பிறை தாங்கிய சடையை உடையவனே யான் முறையோ என்று அழைத்தால் அருளாது ஒழிவதே
றழைத்தால் அருளா தொழிவதே அம்மானே உன்னடியேற்கே. 496
AALAITHAAL ARULAATHU OLIVATHEA AMMAANEA UN ADIYEAARKEA
உன்னை அழைத்தால் அம்மான் நீ அருளாது ஒழிவது தகுமோ கூறி அருள் என்றவாறு அம்மானே உன் அடியார்களாகிய எனக்கு
அடியேன் அல்லல் எல்லாம்முன் அகலஆண்டாய் என்றிருந்தேன்
ADIYEEAN ALLAL ELLAAMUN AKALA AANDAAI ENTRU IRUNTHEEAN
You are my lard I am your subject once you have removed my sins previously and taken me as your slave and I have think it so
அடியேனுடைய துன்பங்கள் அனைத்தும் தாமே விலக ஆட்கொண்டாய் என்று எண்ணி இருந்தேன்
கொடியே ரிடையாள் கூறாஎங்கோவே ஆவா என்றருளிச்
KODIYEER IDAIYAAL KURAAEM KOVEA AAVAAI ENTRARULI
மின்னல் கொடி ஒத்த இடையினை உடைய
Lard Siva you have taken lardess Yuma devi in your left part whose waist is glittering in lightning form and you have removed my miseries and then took hold on me in this way I have thought over O my lard ALAS it is not
உமாதேவியை ஒருபாகமாக உடையவனே எம் அரசே அடியேனுடைய துன்பங்கள் அனைத்தும் தாமே விலக ஆட்கொண்டாய் என்று எண்ணி இருந்தேன் ஆஆ என இரங்கி
செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக் கெங்கள் சிவலோகா
SEDISEER YUDALAI SITHAIYAATHU ETHUTHUKU ENGAL SIVALOGA
This body is misdeed filled one how will you allow it to continue in this world what is the reason for it please tell me
வினைகள் சேர்தற்குக் காரணமாகிய இந்த உடலை இன்றும் அழிக்காதது ஏனோ எங்கள் சிவலோகா
உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமே. 497
YUDAIYAAI KUUVIPANI KOLLAATHU ORUTHTHAAL ONDRUM POOTHUMEEA
You have hold on me and taken me as slave and give punishment to me is it enough on your without bless me
எம்மை உடையவனே அடிமைகளாகிய எம்மை அழைத்துப் பணி கொள்ளாமல் தண்டித்தால் மட்டும் போதுமோ அருளவும் வேண்டாமோ என்றவாறு
ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை
ONDRUM POOTHAA NAAYENNAI YUYYA KONDA NINKARUNAI
I am useless person and doglike bad character filed person but you have caught hold on me and then give upliftment in life that form of grace filled person you are
ஒன்றுக்கும் பற்றாத நாய் போன்ற என்னை உய்ய ஆட்கொண்ட தேவரீர் திருஅருள்
இன்றே இன்றிப் போய்த்தோதான் ஏழை பங்கா எங்கோவே
INDREA INDRI POOITHOOTHAAN EAALAI PANGAA EMKOOVEA
But to day you have left me alone and lard Siva you have kept lardess Yumadevi in your left part of the body
இன்று இல்லாமல் போயிற்றேதான் உமாதேவியை ஒருபாகமாக உடையவனே
குன்றே அனைய குற்றங்கள் குணமா மென்றே நீகொண்டால்
KUNTREEA ANNAIYA KUTRANGAL KUNAMAAM ENTREEA NEEKONDAAL
You are my leader and I have did hill amount of sins but you consider it as good one
எம் தலைவா மலையை ஒத்த குற்றங்களையும் குணம் ஆக நீ கொண்டால்
என்றான் கெட்ட திரங்கிடாய் எண்தோள் முக்கண் எம்மானே. 498
ENTHAAN KETTATHU IRANGKIDAAI ENTHOOL MUKKAN EMMAANEA
I have been spoilt butyou mayconsider my sins as forgivable one and then descended in this world with eight soldiers and three eyes
கெட்டது என்னவோ திரு உள்ளம் இறங்குவாயாக என்றவாறு
மானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்திவ்
MAANNEER NOOKKI MANAVAALAA MANEA NINSEER MARAPITHUIVV
Lades YUMathevi eye sight is just like stage one you have married her and then you have forgotten me
மான் நோக்கினை ஒத்த நோகத்தை உடைய உமாதேவியின் மணவாளா அரசே உன் புகழை மறக்கச்செய்து
வூனே புகஎன்தனைநூக்கி உழலப் பண்ணு வித்திட்டாய்
YOONEAPUGA ENTHANAI NUUKI YULAP PANNU VITHTHITTAAI
You have allowed me to take this body and put me in this world to toil and moil form
இந்த உடம்பில் புகுந்து உழலும் படியாக என்னைஉலகவாழ்க்கையில்தள்ளிவிட்டு உழலும் படியாக என்னைச் செலுத்திவிட்டனை
ஆனால் அடியேன் அறியாமை அறிந்துநீயே அருள்செய்து
AANAAL ADIYEEAN ARIYAAMAI ARINTHU NEYEEA ARULSEITHU
After wards to know my ignorance and lift from this worldly temporary pleasure and then bless me
அனால் அடியேன் அறியாமையை யான் அறிந்து உய்யும் வண்ணம் நீயே அருள் வழங்கி
கோனே கூவிக் கொள்ளுநாள் என்றென் றுன்னைக் கூறுவதே. 499
KOONEA KUUVIK KOLUMNAAL ENTRU ENTRU UNNAI KUURUVATHEA
When will you call me to surrender under your feet and when will glorify me please tell me
என்னை அழைத்துக் கொள்ளும் நாள் என்றைக்கு உன்னைப் புகழ்ந்து கூரும் நாள் என்றைக்கு என்றவாறு
கூறும் நாவே முதலாகக் கூறுங் கரணம் எல்லாம்நீ
KUURUM NAAVEA MUTHALAAKA KUURUM KARANAM ELLAAM NEE
From my tongue to five sense organs are always chanting your names only
பேசுகின்ற நாக்கு முதலாக ஐந்து பொறிகளும் கூறப்படுகின்ற கரணங்கள் யாவும் நீயே
தேறும் வகைநீ திகைப்புநீ தீமைநன்மை முழுதும்நீ
THEERUM VAKAI NEE THIKAIPUNEE THEEMAI NANMAI MULUTHUM NEE
You are good aswell as bad in this world and forgettingand remembering form you are and you will be saving boat also in this world
நன்மை தீமை அனைத்தும் நீயே தெளிவதற்கான உபாயமும் நீயே மறதியும் நீயே
வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்
VEROOR PARISU INGU ONDRILLAI MEIMMAI UNNAI VIRITHU YURAIKIL
I am your slave and do not have any separate indivuguvality in this world to take decision and it is my promise and only repeatedly praise your glory in this world
அடியேற்கு என்று தனித்ததோர் தன்மை சிறிதுமில்லை இது சத்தியம் உன்னப் பற்றியே விரித்து விரித்துப் புகழ்ந்து கூறின்
தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ. 500
THEERUM VAGAI EN SIVALOGAA THIGATHAAL THERA VENDAAVOO
You must show me the way to get rid of this worldly lifeand I am in confused state you must show me the cleardirection
அடியேனை தெளிவிக்க வேண்டாவோ சிவலோகா யான் திகைத்தால் கடைத்தேறும் உபாயமாக
வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்டமுழுதுந் தருவோய்நீ
VENDATHTHAKATHU ARIVOOI NEE VENDAMULUTHUM THARUVOOI NEE
Your disciple I am and you know what my requirements without put demand in prayer youwill give it to me
அடியேன் விரும்பத்தக்க பொருள்கள் இவை என்பதை யான் விண்ணப்பிக்காமலே அறிபவன் நீ அடியேன் அது அறிந்து நின் திரு உள்ளக் குறிப்பின் வண்ணம் வேண்டிக்கொள்ள அவை முழுவதையும் அருள்பவனும் நீயே
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
VEENDUM AYANMAARKU ARIYOOI NEE VENDI ENNAI PANIKONDAAI
Without any limit Bharma and THirumalalways put their requirements before you so you are rareperson to thembut you have been taken me as your menialservant in this world
இடைவிடாது இது வேண்டும் அது வேண்டும் என்று வேண்டிக் கொண்டே இருக்கின்ற திருமாலுக்கும் அயனுக்கும் அரியவன் நீ அடியேன் தகுதி அறிந்து அடியேனை விரும்பப் பணி ஆளாக ஏற்றாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
VENDINEE YAATHU ARUL SEITHAAI YAANUM ATHUVEA VENDINALLAL
I am your slave you know what is my requirements and apart from it
இந்த அடிமைக்கு இப்போது இன்னது வேண்டும் என்று நீ எதனை விரும்பி அருள் செய்தாயோ அதனை அடியேனும் விரும்பின் அல்லது
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே. 501
VEENDUM PARISU ONDRUM YUNDU ENIL ADHUYUM YUNTHAN VIRUPANDREA
If I want anything in this world this wish is only your liking only
என்னால் விரும்பத்தக்க தன்மையாது ஒன்று வேறாக உண்டானால் அது தேவரீர் திரு உள்ளக் குறிப்பே ஆகும் என்றவாறு
அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங்
ANDREA ENTHAN AAVIYUM YUDALUM YUDAIMAI ELLAAMUM
While you have taken me as slave I have surrendered my soul body other things are surrendered under your feet
அடியேனை ஆட்கொண்ட இன்றைக்கே என் உடல் பொருள் ஆவி மூன்றையும் உன்னுடைய
குன்றே அனையாய் என்னைஆட் கொண்டபோதே கொண்டிலையோ
KUNDREA ANAIYAAI ENNAI AATKONDA POOTHEA KONDILAIYOO
You have taken hill form in Thiruvannamalai and then I am surrendered under your feet
மலையை ஒத்தவனே என்னை உன்னுடையதாக ஏற்றுக் கொண்டனை அன்றோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
INDROOR IDAIYUURU ENAKU YUNDOO EN THOOL MUKKAN EMMAANEA
I am your slave so I do not got any trouble under your feet and you are my leader with eight hands and three eyes
அடிமையாகிய எனக்கு இன்று ஏதாயினும் துன்பம் உண்டோ எட்டுத் தோள்களையும் மூன்று கண்களையும் உடைய எம் தலைவனே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே. 502
NANDREEA SEIVAAI PILAI SEIVAAI NANNOO ITHARKU NAAYAKAMEEA
You may do good orbad to me I am not a king only I am your subject and slave
எனக்கு நன்மையைச் செய் அல்லது தீமையைச்’ செய் இதற்குத் தலைவன் எளியேன் அல்லேன்
நாயிற் கடையாம் நாயேனை நயந்துநீயே ஆட்கொண்டாய்
NAYIR KADAIAAM NAAYENAI NAYANTHU NEEYEA AATKONDAAI
I am below the dignity of the low graded dog but liked me and then taken as your slave so I have happily accepted it
நாயினும் கீழான நிலையைஒத்த அடியேனை விரும்பி நீயே ஆளாக ஏற்றுக் கொண்டனை
மாயப் பிறவி உன்வசமே வைத்திட்டிருக்கும் அதுவன்றி
MAAYAPIRAVI YUNVASAMEEA VAITHITHU IRUKUM ATHUANDRI
Here after maya way of birth entrested with you and I am under your control and there is no separate will power on my part
எனக்கு இனிவர இருக்கும் மாயாகரியமான பிறவிகளை உன்வசமாக வைத்து இருப்பது அல்லாமல்
ஆயக்கடவேன் நானோதான் என்ன தோஇங் கதிகாரங்
AAYAK KADAVEEN NAANOO THAAN ENNA THOO INGU ATHIKAARAM
I have no capacity to exam it. I do not have any authority on my part. I am only your slave
நானோ இதனைப்பற்றி ஆராயக் கடமைப் பட்டவன் இதில் எனக்கு என்ன அதிகாரம் உள்ளது
காயத்திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. 503
KAAIYATHU IDUVAAI YUNNUDAIYA KALAR KIZHL VAIPPAAI KANNUTHALEA
You may put me in prison or put me under your feetand whatever do you want you may do it and I do not care about it
உடல் சிறையில் இருத்து அல்லது உன்னுடைய திருவடியின் நிழலிலே இருத்து எது வேண்டுமானாலும் செய் என்றவாறு
கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர
KANNAAR NUTHALOOI KALAL INNAIKAL KANDEEN KANGAL KALIKUURA
You have possessed fore head eye and I have seen your feet and enjoyed it and then got upliftment in life
நெற்றிக்கண்ணை உடையவனே நின் திருவடிகள் இரண்டையும் என் கண்கள் களிப்பு மிகக் கண்டு உய்ந்தேன்
எண்ணா திரவும் பகலும்நான் அவையே எண்ணும் அதுவல்லால்
ENNAATHU IRAYUM PAGALUM NAAN AVAIYEA ENNUM ATHUALLAAL
I do not think any other thing night and day except your feet alone in meditation
பிற பொருட்களை எண்ணாமல் இரவும் பகலும் நான் அவைகளை தியானித்து இருப்பது அல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும்
MANMEELYAAKKAI VIDUMAARU VANTHU YUN KALARKEA PUGUMAARUM
In this world got this body to laid on rest and then entered in to your Siva logam
இம்மண் உலகில் எடுத்த இந்த உடலை விடுமாற்றையும் சிவபுரத்தில் வந்து உன் திருவடிக்கண் பொருந்து மாற்றையும்
அண்ணா எண்ணக் கடவேனோ அடிமைசால அழகுடைத்தே. 504
ANNAA ENNAIK KADAVENOO ADIMAISAALA ALAGU YUDAITHEA
My lard may I get your work to be done here or in the upper world and I do not care about it because I am slave only
தந்தையே என்றும் கடைமையைப்பெறுவேனோ என் அடிமை மிகவும் அழகானது என்றவாறு
அழகே புரிந்திட் டடிநாயேன் அரற்று கின்றேன் உடையானே
ALAGEA PURITHITU ADINAAYEN ARATRU KINDREEN YUDAIYAANEA
I have been doing lovely service under your feet and I am dog like person and murmuring under your feet and everywhere your glory and you are my holder
அழகான தொண்டுகளைச்’ செய்து அடிமையாகிய நாயேன் புலம்பித் திரிகின்றேன் உடையவனே
திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய்
THIGALAA NINDRA THIRUMEENI KAATI ENNAI PANIKONDAAI
You have attracted me with your glorified with your light form of body and then I am automatically come under your control as slave servant and you have accepted me as your menial
ஒளி விளங்குகின்ற திருமேனியைக் காட்டி என்னைப் பணி ஆளாக எற்று அருளினை
புகழே பெரிய பதம்எனக்குப் புராண நீதத் தருளாதே
PUGALEEA PERIYA PATHAM ENAKKU PURAANANEE THANTHU ARULAATHEA
You have blessed with your glory filled feet and put it on my head and you are the prime oldest person in this world
அடியேற்கு புகழால் பெரிய திருவடிகளைத் தந்து மிகவும் பழமையனாவனே நீ அருளாது
குழகா கோல மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே. 505
KILAKAA KOOLA MARAIYOONEA KOONEA ENNAI KULAITHAAYEA
You are teen ager form of body and anantha (happiness) form of appearance and you are my leader and all the time put me in distress mode and all the time give me innumerable trouble so as to shape to live under your feet in ripped form
என் இளையோனே அழகிய அந்தணனே தலைவனே என்னைக் குழைய வருத்தினாய்
திருச்சிற்றம்பலம்
om thiruchitrambalam
February 22, 2019