THIRUKKALUKUNDRA PATHIKAM
30. திருக்கழுக்குன்றப் பதிகம் – குரு தரிசனம்
THIRUKKALUKUNDRA PATHIKAM
(திருக்கழுக்குன்றத்தில் அருளியது –
ஏழுசீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
Once we have got relationship with god and lost that relationship and now we got it again (sarguru tharisanam). The following poems explain the same. The old books call it as vision ten but we have got seven poems only
Manikkavasager once again visited
Thirvannamalai,Kanchipuram and so many other places and then finally reached
the Thirukalukunram temple where he got the gods vision in the form of teacher.
He got immense happiness and then sang the following songs
பசுத்தன்மை
நீங்கப்பெற்ற ஆன்மாவுக்கு சற்குருவின் தரிசனம் மீண்டும் கிடைத்ததை இப்பகுதி காட்டுகின்றது இதைக்
காட்சிப் பத்து எனப் பழைய நூல்கள்
குறிப்பிடுகின்றன ஏழு பாடல்கள் மட்டும் உள்ளன.
அடிகளார் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் முதலிய பல தலங்களை வணங்கிக் கொண்டு திருக்கழுக்குன்றத்திற்கு எழுந்து அருளினார்கள். அங்கு சிவபெருமான் குருவடிவாக எழுந்தருளிக் காட்சி வழங்க அதனைக் கண்டு மகிழ்ந்து காட்சிப் பத்தாகிய இதனை அருளிச் செய்தார்.
அடிகள் முதன் முதலில் கண்ட குருவடிவ அனுபூதியே இங்கும் கிடைக்கப் பெற்றது. அந்த ஆனந்தத்தால் அருளிச் செய்யப்பட்ட பதிகம் இது.
சில உரையாசிரியர்கள்
இயக்கிமார் அறுவர் பக்திமால் கொள எண்குணம் செய்த ஈசனே – திருவிளையாடல் புராணத்தில் அட்டமா சித்தி உபதேசித்த வரலாறு.
முருகப் பெருமானுக்கு முலை கொடுத்த யட்ச மாதர் அறுவரும் தமக்கு, அட்டமா சித்திகளையும் உபதேசித்து அருளும் வண்ணம் சோமசுந்தரப் பெருமானை வழிபட்டுத் தவம் இயற்றினர்.
போக மூர்த்தியாக எழுந்தருளிய பெருமான் அவர்கள் தவத்திற்கு இரங்கி , அட்டமா சித்திகளும் என் பக்கத்தில் உள்ள பராசக்தியின் அருளால் எய்தத் தக்கவை. அவள் கருணையைப் பெற வேண்டி வழிபடுங்கள் என்று கூறி அவளை வழிபடும் முறையைக் கூறிக்கொண்டு இருந்தார்.
அப்போது ஆறு மாதர்களும் உபதேங்களைக் கூர்ந்து கவனிக்காது அசட்டையாகக் கேட்டனர்.
பெருமான் சிறிது சினந்து நீங்கள் கல்லாகக் கிடக்கக் கடவீர் என்று சபித்தார். பெண்கள் வெருண்டு பெருமானே நாங்கள் செய்த தவறுகளுக்கும், சாபத்திற்கும் விமோட்சனம் எப்பொழுது என அருள வேண்டினர்.
பெருமான் சினம் தணிந்து ஆலவாய்க்கு யாம் வருவோம். அப்பொழுது சாப விடுதி விளையும் என அருளினார்.
பெண்கள் அவ்வாறே பட்டமங்கையில் கல்லாய்க் கிடந்தனர். குறித்தபடி பெருமான் அங்கு எழுந்தருளி அவர்களைப் பெண்கள் ஆக்கி அட்டமா சித்திகளையும் உபதேசித்து எட்டுக் குணங்களையும் அருளினார் என்பது வரலாறு. இதனைப் பட்டமங்கையில் பாங்காய் இருந்தும் அட்டமா சித்தி அருளிய அதுவும் என்ற பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.
எண்குணங்கள்: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கையாகவே பாசங்கள் நீங்கியமை, முற்றும் உணர்தல், இயற்கை உணர்வினன் ஆதல், பேரருள் உடைமை, அழிவு இல்லா ஆற்றல் உடைமை, வரம்பு இல்லா இன்பம் உடைமை – இவை இறைவனுக்கே உரிய எண் குணங்கள்.
பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க்
PINAAKU ILAATHA PERUNTHURA PERUMAAN UN NAAMAGKAL PEEASUVAARKU
My dear lard Siva you have nodifference in thiruperum thurai. Those who praise you and pray under your feet and talk about you and chanted your sacred names
மாறுபாடு இல்லாத திருப்பெருந்துறையின் கண் விளங்கும் பெருமானே உன் திரு நாமங்களே பேசும்மெய் அடியார்களுக்கு
இணக்கிலாததோர் இன்ப மேவுருந் துன்ப மேதுடைத் தெம்பிரான்
INAKU ILAATHATHOOR INBAMEA VARUM THUNBAMEEA THUDAITHU EMPIRAAN
Their sorrows are completely removed and then the result will be happiness only and you are always be in happiness form
உழலும் துன்பங்களை அறவே துடைத்து அதனால் விளையும் இணையற்ற இன்ப வடிவாக இருப்பவனே துன்பத்தைத் துடைக்கும் எம் இறைவன்
உணக்கிலாததோர் வித்துமேல்விளை யாமல் என்வினை ஒத்தபின்
YUNNAKU ILAATHOOR VITHU MEL VILAIYAAMAL ENVINNAI OTHAPIN
The seed is not completely dried up so it won’t germinate and just like my good and bad deeds are balanced
நீர் உலராத விதைபோல் முளையாத வண்ணம் என் இரு வினைகளையும் ஒத்த பின்
கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 468
KANAKU ILAATHA THIRUKOOLAM NEEVANTHU KAATINAAI KALUKUNDRILEA
Innumerable form of appearances are showed to me in thiru kalukkunram place
எண்ணிக்கை இல்லாத உன்னுடைய திருக் கோலங்களை எனக்குக் காட்டினாய் திருக்கழுகுன்றக் கோயிலில்
பிட்டுநேர்பட மண்சுமந்த பெருந் துறைப்பெரும் பித்தனே
PITU NEERPADA MANSUMANTHA PERUNTHURAI PERUM PITHANEEAA
Lard Siva you have got rice cack as consideration for carrying soil on head to stop flooded water of the river Vaigai and in that way you have stayed in Thiruperum thurai in fast attachment form
பிட்டுக்காகத் தலையில் மண் சுமந்த திருப்பெருந்துறையில் உள்ள பித்தன்
சட்டநேர்பட வந்திலா சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்
SATTANEEARPADA VATHILAATHA SALAKKANEAN UNNAI SAARINTHILEEAN
This body I have got from you in holly form but I have used it for bad acts and earned so many sins in this world in that way I am unable to go heaven so I am deviated from your path
உடல் கிடைக்கவும் அதன் முலம் என் வினை போகங்களைத் தொலைத்துப் பரிகாரம் பெற்ற உடல் கிடைக்கவும் அதனால் உய்ந்து உன்னிடம் வந்திலாத வஞ்சனாகிய அந்த வஞ்சனாகிய நான் உன்னை அடைந்திலேன்
சிட்டனே சிவலோகனேசிறு நாயினுங்கடையாய வெங்
SITTANEEA SIVALOOGANEEASIRU NAAYINUM KADAIYAAYA VENG
You have good chareter filled person and you are living in Sivalogam. I am last graded dog so I have no character in my life
ஒழுக்கம் உடையவனே சிவலோகனே சிறிய நாயினும் கீழ்பட்ட கொடிய
கட்டனேனையும் ஆட்கொள்வான்வந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 469
KATANENAIYUM AATKOOLVAANVANTHU KAATINAAI KALUKUNDRILEEA
Now I am in miserable condition so you have descended in this world to take me as slave and then showed your guru form of appearance in THIRU KALLUKUNRAM temple place
கொடும் துன்பவடிவான என்னையும் அருள் கொள்வதற்காக எழுந்தருளி வந்து நின் திரு உருவத்தைத் திருக்கழுக்குன்றிலே காட்டினாய் என்றவாறு
மலங்கினேன் கண்ணின்நீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை
MALANKINEEAN KANIN NEERAI MAATRI MALAM KEDUTHA PERUNTHURAI
You have rubbed my tears and stopped it. I am in ignorant state because of my ego so you have removed it and then started from Thiruperum thurai
கலங்கிய எனது கண்ணீரைத் துடைத்து எனது அறியாமைக்கு ஏதுவாகிய ஆணவ மலத்தையும் வலியையும் ஒடுக்கிய திருப்பெருந்துறையை விட்டு
விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவதறிந்திலேன்
VILANKINEEAN VINNAI KEDANEEAN INI MEAL VILAIVATHU ARINTHILEEAN
And then left over there alone. I am in misdeed control so that I am spoilt. I do not here after what will happen
விலகினேன் வினைகளாய் கெடுபவனாகிய யான் இனி மேலே விளையப் போவதை அறியேன்
இலங்குகின்றநின்சேவடிகள் இரண்டும் வைப்பிடமின்றியே
ILANGUKINDRA NIN SEVADIGAL IRANDUM VAIPIDAM INDRIYEEA
Your feet are always in active form so that it has moved away from my head once you have placed it.
விளங்குகின்ற நின்சேவடிகள் இரண்டும் வைத்த இடத்தில் இல்லாமல் போக
கலங்கினேன் கலங்காமலேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 470
KALANGINEN KALANKAAMALEA VANTHU KAATINNAAI KALUKUNDRILEA
I am in the state of shedding tears to remove my tears you have once again showed your feet to me in Thirukallukunram
கலங்கினேன் அவ்வாறுநான் இனியும் கலங்காமல் வந்து கழுக்குன்றிலே திருவடி தரிசனம் தந்து அருளினாய் என்றவாறு
பூணொணாததோரன்பு பூண்டு பொருந்திநாள்தொறும் போற்றவும்
POON ONAATHATHU OOR ANBU POONDU PORUNTHI NAALTHOORUM POTRAYUM
I have been adorned your love which is not got by anybody else and I have been again oneness with your feet and daily once again I pray you in visual form
பிறரால் மேற்கொள்வதற்கு இயலாத ஒப்பற்ற அன்பினை அணிந்து நின் திருவடிக்கண் பொருந்தி நாள்தோறும் நான் வணங்கவும்
நாணொணாததொர்நாணம் எய்தி நடுக்கடலுள் அழுந்திநான்
NAANONAATHATHU OOR NAANAM EITHI NADUK KADAL YUL ALUNTHI NAAN
I have got hesitation and then drowned in the big sea
நாணத்தகாத பெரு நாணத்தை அடைந்து நடுக்கடலில் நான் முழ்கி
பேணொணாதபெருந்துறைப்பெருந் தோணிபற்றியுகைத்தலுங்
PEEN ONAATHA PERUNTHURAI PERUMTHONI PATRI YUKAITHTHALUM
No other person has not got that boat is I am got and climbed upon it and sailed on it
வேறுயாராலும் பற்ற இயலாத திருப்பெருந்துறைக் கண்ணதாகிய பெருந்தோணியைப் பற்றி செலுத்துதலும்
காணொணாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 471
KAAN ONAATHA THIRUKOOLAM NEEVANTHU KAATINAAI KALUKUNDRILEAA
No other can see you but you have showed me your full appearance to me in Thiru kallukunram temple place
நீ வந்து வேறு எவராலும் காண இயலாத அழகிய வடிவத்தைக் காட்டினாய் திருக்கழுக்குன்றிலே என்றவாறு
கோலமேனிவராக மேகுணமாம் பெருந்துறைக்கொண்டலே
KOLA MEENI VARAAKAMEEA GUNAMAAM PERUNTHURAI KONDALEEA
You have lovely appearance just like gold form and you have descended in Thiruperum thurai as rain cloud form
அழகிய வடிவை உடையவராகவே திருப்பெருந்துறைக் கண் எழுந்தருளிய உள்ள குணக் கொண்டலே
சீலமேதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி
SEELAM EAATHUM ARINTHILAATHA EN SINTHAI VAITHA SIGAAMANI
I do not know the essence of Siva way of life but you have gone in to my mind and then blessed me
சைவத்தின் சாரங்கள் ஒன்றையும் அறியாத என் சிந்தையுள் தன்னை வைத்து அருளிய முடிமணியே
ஞாலமேகரியாக நானுனை நச்சி நச்சிட வந்திடுங்
GNANALAMEAA KARIYAAKA NAAN YUNAI NACHI NACHIDA VANTHIDUG
The world is in witness form that you have liked me and I am liked you and then descended up on me and then you are guard to me
உலகம் சாட்சியாக நான் உன்னை விரும்பிய என்னை விரும்பி எழுந்தருளிய காவல் வடிவானவனே
காலமேஉனை ஓதநீ வந்து காட்டினாய் கழக்குன்றிலே472
KAALAMEEA YUNAI OOTHA NEEVANTHU KAATINAAI KALUKUNDRILEEA
You are time form and I am repeatedly chanting you so you have showed your real appearance to me
காலம் வடிவானவனே உன்னையான் இடைவிடாது சொல்ல கழுக்குன்றிலே வந்து காட்டினாய் என்றவாறு
பேதம் இல்லது ஓர் கற்பளித்த பெருந்துறைப் பெருவெள்ளமே
PETHAM ILAATHU OOR KARPU ALITHA PERUNTHURAI PERU VELLAMEA
I have no differences with anybody and I have been seeing all the things in this world in your form you gave me such type of mentality and then showed your face to me and blessed me
வேறுபாடு அற்ற கற்பினை எனக்குக் கொடுத்த திருப்பெருந்துறைக் கருணைக் கடலே
ஏதமேபல பேசநீஎனை ஏதிலார் முனம் என்செய்தாய்
ETHAMEEA PALAPEESA NEE ENAI ETHILLAAR MUNAM ENSEITHAAI
அயலார் குற்றம் பல கூற என்னை முன்னே என்ன செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமையற்ற தனிச்சரண் சரணாமெனக்
SADHAL SADHAL POLLAMAI ATRA THANI SARANAAM ENAK
You have no death and its consequences so you’re wonderful feet I have clinked and followed your foot steps
மரணமும் மரணத்தால் விளையும் தீமையும் தீங்கும்இல்லாத ஒப்பற்ற திருவடிகளையே எமக்கு அடைக்கலம் ஆவது என எண்ணி
காதலால் உனைஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 473
KADHALAAL YUNAIOOTHA NEEVANTHU KAATINAAI KALUKUNDRILEA
I am praising you by love
so that you have descended in Thirukalu kunram and showed me your real
appearance
காதலால் உன்னைப்
புகழ நீ வந்து கழுக்குன்றிலே திருஅருளைக் காட்டினை என்றவாறு
இயக்கி மாரறு பத்து நால்வரை எண்குணம்செய்த ஈசனே
EYAKI MAAR ARUPATHU NAALVARAI ENKUNAM SEITHA EESANEEA
To those sixty four disciples (EAYAKIMARS) the eight types of special powers you have preached them and then ruled them
இயக்கிமார்கள் அறுபத்து நான்கு நபர்களுக்கு என் குணங்களும் அமையும்படி ஆட்கொண்ட ஈசனே
மயக்க மாயதோர் மும்மலப்பழ வல்வினைக்குள் அழுந்தவும்
MAYAKAM AAYATHU OOR MUMMALAP PALA VAL VINNAIKUL ALUNTHAYUM
The soul pervasiveness is veiledby three types of impurities ( anavam kanmam mayai) ego wrong doing and maaya in that slush I have been trapped
யான் ஆன்ம வியாபகத்தை மறைப்பதான ஒப்பற்ற மும்மலர்களும் பலவினைகளும் ஆகிய சேற்றில் அழுந்தவும்
துயக்கறுத்தெனை ஆண்டுகொண்டு நின் தூய்மலர்க்கழல் தந்தெனக்
THUYAKU ARUTHU ENNAI AANDUKONDU NIN THUUI MALAR KALAL THANTHU ENNAI
You have seen my distress and melted for it and then removed my distress and then taken me as your slave and then showed your feet to be prayed
யான் படும் துன்பங்களைக் கண்டு இரங்கி தளர்ச்சியைப் போக்கி என்னை ஆண்டு கொண்டு
கயக்க வைத்தடி யார்முனேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 474
KAYAKA VAITHU ADIYYAR MUNEA VANTHU KAATINAAI KALUKUNDRILEEA
I am in sour mood before your decuples but you have appeared before me in guru teacher form
அடியேனைக் கயக்க வைத்து அடியார்கள் முன்னிலையில் குருவாக வந்து திருக்கழுக்குன்றிலே நின்ற திரு உருவைக் காட்டினை என்றவாறு
திருச்சிற்றம்பலம் om thiruchitrambalam