ARUTPATHU
29. அருட்பத்து – மகாமாயா சுத்தி
ARUTPATHU
(திருப்பெருந்துறையில் அருளியது –
எழுசீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
While
I call you don’t be in quiet and mum form. Please at least respond to my call
as what is it and at least put your grace on me I have dissuaded world maaya
and its influence on my part and in this way Manikkavasager call lard Siva in
the following ten poems
நான் உன்னை
அழைக்கும் போது சும்மா இராமல் அது என்ன என்று கேட்கும் அருளையாவது புரிக என்று
வேண்டுவது இப்பகுதி உலகமாகிய மாயையை விட்டுவிலகி இறைவனை அழைப்பது இதன் உட்பொருள்
பிறவிக்கடலில் கிடந்து அலையாதே அப்பா அருகே வா, இது தான் திருக்கயிலைக்குப் புகும்வழி. விரைந்து போதருக என்று அருள்செய் என வேண்டுகிறார் என்பது பதிகப் பொழிப்பு ஆகும்.
சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழற் பணைமுலை மடந்தை
JOTHIYEA SUDAREA SUULOLI VILAKEA SURIKULAL PANAIMULAI MADANTHAI
The lamp bears its light and the light bears the glow and where the god is just like fire glow form and lardessYumadevi whose hair is in curling thick form and her breasts are in good shape form
ஜோதியே ஜோதியைத் தாங்கும் சுடரே ஒளிசூழ்ந்த சுடரை ஏந்திய விளக்கே சுருண்ட கூந்தலையும் பணைத்த முலையினையும் உடைய உமாதேவியாரை
பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய் பங்கயத் தயனுமா லறியா
PATHIYEA PARANEA PAALKOL VEN NERTRAAI PANKAYATHTHU AYANUM MAALARIYAA
You have only half part of your body only and you are prime god to this world and adorned white milk like assesses all over the body but lotus flower residing Bharma and Thirumal unable to see you
திருமேனியில் பாதியாகக் கொண்டவனே பரனே பால்போலும் வெண்ணிறம் கொண்ட திருநீற்றை உடையவனே
நீதியே செல்வத் திருப்பெருந்துறையில் நிறைமலர்க் குருந்தமே வியசீர்
NEETHIYEEA SELVATH THIRUPPERUNTHURAIYIL NIRAIMALRAK KURUNTHAM MEVIYASEER
In the wealth filled Thirperumthurai place you have seated in balanced form and descended in kuruntha tree and that place is surrounded by lotus flower ponds
செல்வம் நிறைந்த திருப்பெருந்துறையில் மலர்கள் நிறைந்த குருந்த மரத்தடியில் விரும்பி எழுந்தருளி உள்ள புகழினை உடைய
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என் றரு ளாயே. 458
AADHIYEEA ADIYEEAN AADHARITHU ALAITHAAL ATHENTHUVEA ENTRU ARULAAYEA
My dear prime lard Sivaand I am your disciple and if call you at least respond to my wards what you want from me
முதல்வனே அடியேன் விரும்பி அழைத்தால் அது என்ன என்று கேள்விகேட்டு அருள்வாயாக என்றவாறு
நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக் கண்ணனே விண்ணுளோர் பிரானே
NERUTHANEEA NIMALAA NEETRANEEA NETRI KANNANEEA VINNULLOOR PERAANEEA
You are dancing in happy form and you have no impurities and you have applied sacred ashes all over the body and you have possessed fore head eye and you are devaass leader
பரமானந்தத் தாண்டவம் செய்யும் நிருத்தனே மல மற்றவனே திருநீறு அணிந்தவனே நெற்றிக்கண்ணனே தேவர்கள் தலைவனே
ஒருத்தனே உன்னை ஓலமிட்டலறி உலகெலாந் தேடியுந் காணேன்
ORUTHANEEA YUNNAI VOOLM EITTU ALARI YULAGU EALLAAM THEEADIYUM KAANEEAN
YOU ARE UNIGUE form I this world and I have been weeping state loudly call you and searched all the places but I am unable to see you
ஒப்பற்றவனே உன்னை ஓலம் இட்டு அலறியும் உலகம் எல்லாம் தேடியும் உன்னைக் காணேன்
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர்
THIRUTHAMAAM POIKAI THIRUPPERUNTHURAIYIL SELU MALRAK KURUNTHAM MEEVIYA SEER
The pure water body’s filled Thiruperum thurai place where you have descendedunder kuruntha tree shadow in that flower filled place in glory filled form
தூய்மையான பொய்கைகளை உடைய திருப்பெருந்துறையில் வளமான மலர்கள் நிறைந்த குருந்த மரத்தடியில் எழுந்தருளி இருந்த புகழோடு கூடிய மெய்ப்பொருளே
அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 459
ARUTHANEEA ADIYEEAN AADHARITHU ALAITHAAL ATHENTHUVEEA ENTRU ARULAYEA
You are true meaning filled form and if I call you atleast respond what do you want
மெய்பொருளே அடியேன் ஆதரித்து அழைத்தால் என்ன என்று வினாவி அருள் என்றவாறு
எங்கள்நாயகனே என்னுயிர்த் தலைவா ஏலவார் குழலிமார் இருவர்
EANGAL NAAYAGANEA EANN YUIR THALAIVAA EALAVAAR KULAI MAAR ERUVAR
YOU ARE MY HERO and you are my soul leader and two ladies one is lardess yumadevi who has possessed long hair and the another is Ganges River on your head
எங்கள் நாயகனே என் உயிர்த்தலைவனே மயிர் பந்து அணிந்த நீண்ட கூந்தலை உடைய உமாதேவியாரும் கங்கையுமாகிய இருவருக்கும் தலைவனே
தங்கள் நாயகனே தக்கநற்காமன் தனதுடல் தழலெழ விழித்த
THANGAL NAAYAGANEEA THAKKA NALL KAAMAN THANATHU YUDAL THALLAL EANA VILITHA
The appropriate lust emanating person named Manmatha and whose body is put in to flames by fore head fire of lard Siva
தகுதி வாய்ந்த நல்ல மன்மதன் உடலை நெருப்பு எழுப்பி நெற்றிக்கண்களை திறந்து எரித்த
செங்கண்நாயகனே திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர்
SENKAN NAAYAGANEA THIRUPPERUNTHURAIYIL SELU MALRAK KURUNTHAM MEEVIYA SEER
Lard Siva you have red color eyes in hero form seated in Thiru perunthurai temple under kuantha tree adorned with good flowers
சிவந்த கண்களை உடைய தலைவனே திருப்பெருந்துறையில் செழுமையான மலர் நிறைந்த குருந்த மரத்தடியில் எழுந்தருளி இருக்கும்
அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றருளாயே. 460
ANGANAA ADIYEEAN AADHARITHU ALAITHAAL ATHENTHUVEEA ENTRU ARULAAYEEA
You have glory filled person with three eyes and I am your disciple if I call you at least respond what you want
புகழோடு கூடிய அங்கன் அடியேன் ஆதரித்து அழைத்தால் அது என்ன என்று வினா எழுப்பி அருள்வாயாக
கமலநான்முகனுங் கார்முகில் நிறத்துக் கண்ணனும் நண்ணுவதற்குஅரிய
KAMALA NAAN MUGANUM KAAR MUGIL NERATHU KANNANUM ANUTHARKU ARIYA
The lotus flower seated four face person Bharama and dark color body possed Thirumal they are unable to approach you
தாமரை மலரில் இருக்கும் நான் முகனாகிய பிரமனும் கரிய மேகம் போன்ற நிறத்தை உடைய கண்ணனும் அணுகுவதற்கு அறிய அனாதியே
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
VEEMALANEA EANNAKU VELLIPADAA EANNA VIYAN THALAI VELLIPATTA EANTHAAI
LARD Siva you are pure form andthey are prayed before lard to reveal his face but before them he appears in fire glow form and you are my father
மலம் அற்றவனே எமக்கு வெளிப்படுவயாக என்று வேண்ட பெரிய தீப்பிழம்பாக வெளிப்பட்ட எந்தையே
திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர்
THIMILANAAN MARAISEAR THIRUPPERUNTHURAIYIL SELUMALRAK KURUNTHAM MEVIYA SEER
The four veethas are sung in Thiruperumthurai temple place under kurantha tree shadow where rich flowers are bloomed in that surrounding place
நான்கு வேதங்களும் ஒலிக்கும் திருப்பெருந்துறையில் செழுமையான பூக்களோடு கூடிய குருந்த மரத்தடியில் எழுந்தருளி உள்ள
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 461
AMALANEEA ADIYEEAN AADHARITHU ALAITHAAL ATHENTHUVEA ENTRU ARULAAYEA
You are glory filled person if I call you in distress sate please you may respond at least what do you want and then put your grace on me
புகழுடன் கூடிய அமலனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அது என்ன என்று அருள்வாயாக என்ற வாறு
துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை துணைமுலைக் கண்கள்தோய் சுவடு
THUDDI KOL NEEAR EADAIYAAL SURI KULAL MADANTHI THUNAI MULAI KANGAL THOOI SUVADU
Lardess Yumadevi waist is narrow one just like lard Siva”syudukkai a small drum carried on lard Siva’s hand and her hair is curling one and two breasts are attractive one and which is embedded on lard Siva’s chest in scar form
உடுக்கையின் நடுவை ஒத்த இடையினை உடையவளும் சுருண்ட கூந்தலையும் உடையவளும் இரண்டு தனங்களின் கண்களும் தோயப் பெற்றதால் உண்டான சுவடு
பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு பொங்கொளி தங்குமார் பினனே
POODI KOLVAAN THALIL PULLI POL EARANDU PONGU OLI THANGU MAARBINANEA
And lard Siva who has adorned sacred ashes all over the body which is light emanating one
சிவபெருமான் தன்னுடைய உடல் முழுவதும் வெண்மையான திருநீற்றை அணிந்தவன் திரு மார்பை உடையவன்
செடிகொள்வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர்
SEDIKOL VAAN POLILSUUL THIRUPPERUNTHURAIYIL SELU MALRAK KURUNTHAM MEVIYA SEER
In the small bushes flower filled place of Thiruperunthurai where lard Siva descended under the shadow of kuruntha tree
சிறு தூறுகளை உடைய பெரிய சோலையோடு கூடிய திருப்பெருந்துறையில் செழுமையான மலர்களை உடைய குருந்த மரத்தின்கீழ் எழுந்தருளி உள்ள
அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 462
ADIKALEA ADIYEEAN AADHARITHU ALAITHAAL ATHENTHUVEEA ENTRU ARULAAYEA
You have wonderful glory filled person and I am your disciple and at distress if I call you the you may answer at least what do you want
சிறப்பினை உடைய அடிகளே அடியேன் ஆதரித்து அழைத்தால் அது என்ன என்று கேள்விகேட்டு அருள்வாயாக என்றவாறு
துப்பனே தூயாய் தூயவெண்ணீறு துதைந்தெழு துளங்கொளி வயிரத்
THUPPANEA THUUYAAI THUUYA VENNEERU THUTHAINTHUEALU THULANGU OLI VAIRATHU
You are coral like pure form and you have applied white ashes all over the body which is glittering with ruby diamond rays
பவளம் போல்பவனே தூய்மையானவனே தூய வெண்ணீறு நெருங்கியதால் விளங்குகின்ற ஒளி ஒரு காலைக்கு ஒரு கால் எழுகின்ற வயிர மணிக்கு
ஒப்பனே உன்னை உள்குவர் மனத்தில் உறுசுவை துளிக்கும் ஆரமுதே
VOPPANE YUNAI YULGUVAAR MANATHIN YURU SUVAI ALIKKUM AARAMUTHEA
Youarediamond like form and those who are meditating under your feet you are always nectar in their mind and give immense taste to them
ஒப்பானவனே உன்னை இடைவிடாது தியானிப்பார் மனத்தில் மிக்க சுவையைத் தரும் அரிய அமுதே
செப்பமா மறைசேர் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர்
SEPPAMAA MARAISEEAR THIRUPPERUNTHURAIYIL SELU MALRAK KURUNTHAM MEVIYA SEER
The good veethas are available in Thiru perunthurai place where under kurantha tree shadow you are seating happily
செப்பமான வேதங்கள் சேர்ந்து விளங்குகின்ற திருப்பெருந்துறையிலே மேவிய செழுமலர்க் குருந்த மரத்தடியில் மேவிய சீர்
அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 463
APPANEA ADIYEAN AADHARITHU ALAITHAAL ATHENTHUVEEA ENTRU ARULAAYEEA
You are my father if I call you under distress at least answer what you want
பொருந்திய அப்பனே அடியேன் அன்புடன் கூர்ந்து அழைத்தால் அது என்ன என்று அருள் செய்வாயாக என்றவாறு
மெய்யனே விகிர்தா மேருவே வில்லா மேலவர் புரங்கள் மூன்றெரித்த
MEIYANEA VIGIRTHAA MEARUVEEA VILLAA MEEAL OUR PURANGAL MOONRU EARITHA
You are prime god and you will take whatever form do you want and you have converted Meru hills as bow and destroyed the three casteles with fire arrow and that type of hand you have possessed
மெய்யனே வேறு வேறு உருவம் கொள்பவனே மேருமலையை வில்லாகக் கொண்டு பகைவர்களின் முப்புரங்களையும் எரித்த திருக்கரங்களை உடையவனே
கையனே காலாற் காலனைத் காய்ந்த கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்
KAAIYANEEA KAALAAR KAALANAI KAAIYNTHA KADUM THALAL PELAMU ANNA MEEANI
You have sacred hands and with your feet you have kicked the death god eama and showed your angry towards him and your body is fire glow color one
திருக்கரங்கள் உடையவனே எமனைத் திருவடியால் உதைத்துக் கோபித்து மிக்க நெருப்புப் பிழம்பை ஒத்த திருமேனியை உடையவனே
செய்யனே செல்வத் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர்
SEIYANEEA SELVA THIRUPPERUNTHURAIYIL SELUMALRAK KURUNTHAM MEVIYA SEER
The wealth filled thiruperumthurai place you have descended under the kurantha tree shadow that specialty filled person you are
செல்வர்கள் நிறைந்த திருப்பெருந்துறையில் செழுமலர்குருந்த மரத்தடியில் எழுந்தருளிய சிறப்பினை உடையவனே
ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 464
AIYANEEA ADIYEEAN AADHARITHU ALAITHAAL ATHENTHUVEA ENTRU ARULAAYEA
My dear father if I call you in distress situation you may at least answer my call
ஐயனே அடியேன் தனித்து அழைத்தால்அதெந்துவே என்று அருள்வாய் என்றவாறு
முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்
MUTHANEEA MUTHALVAA MUKKANAA MUNIVAA MOTTU ARAA MALAR PARITHU EARAINGEE
You are the senior most person in this world and you have three eyes and you are the sainthood form and newly budding flowers are plucked and placed it under your feet and prayed
முத்தனே முதல்வா மூன்று கண்களை உடையவனே முனிவா அலரும் பருவத்து அரும்புகளைப் பறித்துத் திரு அடியில் இட்டு வணங்கி
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யுஞ்
BAKTHIYAAI NERAITHU PARAYUUVAAR THAMAKKU PARA GATHI KODUTHU ARULLUM
With love form prayed under your feet and seated in meditation to that true devotes you gave them heavenly life of mukthi
அன்புடன் தியானித்துத் தோத்தரிக்கும் மெய் அடியார்களுக்குப் பரகதி அருளும் திரு உள்ளம் உள்ளவனே
சித்தனே செல்வத் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர்
SITHANEA SELVA THIRUPPERUNTHURAIYIL SELU MALRAK KURUNTHAM MEVIYA SEER
You are sitha form seated under kurantha tree shadow and preach veethas to four saints in thiruperumthurai place
சித்தனே தாங்கள் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்த மேவிய சீர்
அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 465
ATHANEA ADIYEEAN AADHARITHU ALAITHAAL ATHENTHUVEEA ENTRU ARULAAYEEA
My dear father if I call you at distress time you may answer what do you want
அத்தனே அடியேன் ஆதரித்துஅழைத்தால்அதெந்துவே என்று அருள்வாய் என்றவாறு
மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி மறுமையோ டிம்மையுங் கெடுத்த
MARULLANEEAN MANAITHAI MAYAKKARA NOOKKI MARUMAIYODU IMMAIYUM KEDUTHA
I AM IN THE COFUSED STATE of fainting and you have removed my misdeeds and then put an end to repeated birth and death and then given a place in heaven
மயக்க உணர்வினாகிய அடியேன் மலத்தை நீங்கத் திரு அருள் நோக்கம் புரிந்து மறுமையும் இம்மையுமாகிய இரு பிறவிப்பிணியும் இல்லையாகிய
பொருளனே புனிதா பொங்குவா ளரவங் கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்
PRULANEEA PUNITHAA PONGU VAALL ARAVAM GANGAI NEER THANGUM SADAIYAAI
You are true matter form and gaanna knowledge form and adorned with glittering snakes and Ganges River on your head and that red color hair you have possessed
மெய்ப்பொருள் ஆனவனே புனித ஒளி மிகுந்த பாம்புகளும் கங்கை நீரும் தங்கப் பெற்ற செஞ்சடையை உடையவனே
தெருளுநான் மறைசேர் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர்
THERULUM NAAN MARAISEEAR THIRUPPERUNTHURAIYIL SELU MALRAK KURUNTHAM MEEVIYA SEER
The clear cut form of four veethas are preached under kurantha tree shadow
தெளிவான நான்கு வேதங்களும் பொருந்திய திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தம் மேவிய சீர்
அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 466
ARULANEA ADIYEAN AADHARITHU ALAITHAAL ATHENTHUVEEA ENTRU ARULAAYEA
You are grace filled lard Siva if I am called you at distress time please answer my call
அருள் உடையவனே அடியேன் ஆதரித்துஅழைத்தால் அது எந்து என்று அருள் செய்வாயாக என்றவாறு
திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர்
THIRUNTHUVAAR POLIL SOOL THIRUPPERUNTHURAIYIL SELU MALAR KURUNTHAM MEEVIYA SEER
The row form of flower bushes are planted in thiruperum thurai temple place where under kurantha tree shadow willingly descended in specialty filled way
திருத்திய நீண்ட சோலைகள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் செழுமையான மலர்கள் நிறைந்த குருந்த மரத்தின் நிழலிலே விரும்பி எழுந்தருளி உள்ள சிறப்பே
இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட் டென்னுடை யெம்பிரான் என்றென்
IRUNTHAVAARU ENNI ESARAA NINAINTHIDU ENNUDAIA EMPIRAAN ENTRUENTRU
You have taken the form of lard Siva and I am in silent mood call you aslard Siva
வடிவான சிவபரம் பொருளே இருந்தவாற்றை எண்ணி ஏசராது நினைந்து என்னுடைய எம்பிரானே என்று
றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால் அலைகடல் அதனுளே நின்று
ARUNTHAVAA NEENAINTHEA AATHARITHU ALAITHAAL ALAIKADAL ATHANULEEA NINDRU
You are seated in rare meditation form in that way if I have call you and then you will retrieve me from the birth sea
அரிய தவத்தை உடையவனே என்று நினைந்து அன்பு கொண்டு அழைத்தால் அலைகளோடு கூடிய பிறவிக் கடலில் இருந்து
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண் போதராய் என்றளு ளாயே. 467
PORUNTHAVAA KAYILAI PUGUNERI ITHUKAAN POTHARAAI ENTRU ARLAAYEA
You may call me to approach in that Thiru kaiyilai place and it is the way to go to heaven in that way you may bless me and put your feet on me and so on
என்னைப் பொருந்தவா திருக்கயிலை மலைக்கண் புகும் வழி இது அதனைக்காண வருவாயாக என்று அருள் செய் என்றவாறு
திருச்சிற்றம்பலம்
THIRU CHITRAMBALAM.