OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

VALAAPPATHU

ganesheit February 20, 2019

28. வாழாப்பத்து – முத்தி உபாயம் 

VALAAPPATHU

(திருப்பெருந்துறையில் அருளியது – 
அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)

உலகப் பற்று அற்றுப் போவதே முக்திக்கு வழி பற்றில்லாத என்னை அழைத்துக் கொள் என வேண்டுவது இப்பகுதி

அடியேனை ஆட்கொண்ட தேவரீர் நீங்கள் கைவிடில் நான் என்ன செய்வேன். எனக்கு ஒன்றிலும் பற்று இல்லை. குறைகளை யாரிடத்தில் எடுத்துச் சொல்லுவேன்.

       ஆதலால் நான் வாழ மாட்டேன் என்ற கருத்து அமைய விண்ணப்பிக்கின்றார்.

    ஆகவே உலகப்பற்று அறுத்தல் முத்திக்கு உபாயம் ஆதலால் இது முக்தி உபாயத்தை மொழிவது எனப்பட்டது.

       அத்துவித அன்பு முக்தியே திருவடி ஞானத்திரு அருள் வாழ்வு. அஃது எய்தாத உயிர் வாழ்ந்தும் பயன் இல்லை என்பதை அறிவிக்கின்றது.

       இப்பத்துப் பாடல்களாலும் இவ்வண்ணம் உமை ஒரு பாகனாகவும், பகை ஒழிப்பவனாகவும், எங்குமாய் யாகுமாய் யுhவுமாய் விளங்குபவனுமாகிய நீ நின்பால் உறுதியாகப் பற்றுக் கொண்ட என்னை வருக எனப் பணித்தருள். இல்லை ஆயின் இந்த உலகத்தில் வாழேன் என அறிவித்தல் காண்க.

If you eradicate to worldly pleasure it shows the way for mukthi( heaven).I have no desire so you can take me. This form of prayer is vairakiyam. I do not want to live in this world

Already you have taken me as your slave and now if you hand washed me what I do for it. I have no desire in this world objects and my deficiency where I go and tell it

 Anybody who are disuaveaded desire and lust and then it will show the way for mukthi

If you integrate as one with god we will get the god’s feet to live under to live. If you do not get god’s feet there is no purpose to line in this world and it declared the void part of our life and in this world 


பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய்

PARODU VINNAI PARANTHA EMPIRANEA PATRUNAAN MATRUILEN KANDAAI

My dear Siva you have spread over everywhere in canceled form land to space. I have any desire in this world except your feet and you have been clearly understood it

மண்முதல் விண்ணீராக எல்லாப் பூதங்களிலும் பரவிக் கலந்து விளங்கும் என் சிவபெருமானே நான் வேறு ஒன்றிலும் பற்று இல்லேன் இதனை நீ நன்கு அறிக  


சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே

SEERODU POLIVAAI SIVAPURATHTHU ARASEA THIRUPERUNTHURAI URAI SIVAANEA 

 You have been appearing in glorious form in this world and you are the king to Sivapuram and also taken in Thiruperumthurai temple place

புகழோடு விளங்குபவனே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறையில் உறையும் சிவனே


ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ அருளிலை யானால் 

AARODU NOKON AARKU EDUTHU URAIKEEAN AANDANEE ARULILAI YAANAAL

 This type of deficiency where I go and informed it and with whom I get together and then tell my distress. You have taken me as your slave and then controlled me and managing me and then if you do not bless me

இக்குறையை யான் யாருக்கு எடுத்துச் செல்வேன் யாரோடு கூடித் துன்புறுவேன் ஆட்கொண்ட எமக்கு அருளவில்லையானால்


வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. 448 

VAARKADAL ULAKIL VALKILEN KANDAI VARUKA ENTRU ARULPURIYAYEA

In this world is surrounded by big sea and I have no strength to live here and so please you allow me to go with me and I am expecting this type of ward from your mouth
ஒழுகுகின்ற நீண்டகடலால் சூழப்பெற்ற இந்த உலகில் வாழும் ஆற்றல் இல்லேன் ஆதலால் என்னை வருக என்று அருள் புரிவாயாக


வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே மற்றுநான் பற்றிலேன் கண்டாய்

VAMNEEAN THANNAI AANDA MAA MANIYEA MATRUNAAN PATRUILEEAN KANDAAI

I have spoilt myself with unnecessary confrontation with others but you have taken me as your slave so except your feet there is no other desire in this world

வீணாகப்போன என்னை ஆண்ட பெரிய குருமணியே வேறு எதனிடத்தும் நான் பற்று இல்லேன்  


உம்பரும் அறியா ஒருவனே இருவர்க் குணர்விறந்துலக மூடுருவுஞ்

UMPARUM ARIYAA ORUVANEEA IRUVARKUM UNARVU IRANTHU ULAGAM YUUD YURUYUM 

 Lard Siva you have red color body and you are king to Sivapuram and also residing in Thiruperum thurai

சிவந்த நிறம் உடைய பெருமானே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறையில் உறையும் சிவனே


செம்பெருமானே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே 

SEMPERUMANEASIVAPURATHTHU ARASEEA THIRUPERUNTHURAI URAI SIVANEEA

 You have golden color and living in Siva puram 

தேவர்களும் அறியாத தனி முதல்வனே அயனும் அறியுமாகிய இருவருக்கும் அறிவின் எல்லையைத் தாண்டி எல்லா உலகங்களையும் ஊடுருவிக் கடந்த


எம்பெருமானே எனனையாள்வானே என்னைநீ கூவிக் கொண்டருளே. 449

EMPERUMAANEEA ENNAI AALVAANEA ENNAI NEE KUVIK KONDARULALE 

 You are my god you are my ruler so I am our disciple and call me to go under your feet
எம்பெருமானே என்னை ஆள்பவனே ஆகையால் என்னை அடியேனை நீ அழைத்துக்கொள் என்றவாறு


பாடிமால் புகழும் பாதமே அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்

PADIMAAL PUGALUM PATHAMEA ALLAAL PATRUNAAN MATRUILLEEAN KANDAAI 

 Thirumal who has been praising lard Siva’s feet and I am also liked those feet and there is no desire in this world

திருமால் புகழ்ந்து பாடிய திருவடிகளை அன்று வேறு ஒன்றினும் பற்றிஇல்லாதவன் ஆயினேன்


தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே

THEEDI NEE AANDAAI SIVAPURATHTHU ARASEA THIRUPERUNTHURAI URAI SIVANEEA 

 You have searched me and then taken me as your slave and that form of Sivapuram king you are and also residing in Thiruperum thurai temple place 

அடியேனைத் தேடி நீ ஆட்கொண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறையில் உறையும் சிவனே


ஊடுவ துன்னோ டுவப்பதும் உன்னை உணர்த்துவ துனக்கெனக்குறுதி

YUUDUVATHU YUNNODU YUVAPPATHUM UNNAI UNARTHUVATHUM YUNAKU ENAKU YURUTHI 

You have got on my part soft form of angery (yoodal) and then I will mingle with you and happily enjoyed it and you give me swearing statement and then talking good wards with me and these areactivities between us

நின்னோடு ஊடல் புரிவதும் உன்னைக் கூடி மகிழ்வதும் எனக்கு உறுதி பயக்கும் இன்ப உரைகளை உணர்த்துவதும் நம் இருவருக்கும் உரிய செயல்கள் ஆயின்


வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. 450 

VADINEEAN INGU VAALGILEEAN KANDAI VARUKA ENTRU ARULPURIYAYEEA

 Even in this manner you are not always with me so I got sad in this world and I will not live in this world any longer so give well come wards in to your heaven and allow me to enter in your fold
அவ்வாறு இருந்தும் நீ உடலுணர்த்தமையால் வாடினேன் இங்கு வாழமாட்டேன் வருக என்று அருள் புரியாயே


வல்லைவாளரக்கர் புரமெரித்தானே மற்றுநான் பற்றிலேன் கண்டாய்

VALLAIVAAL ARAIKAR PURAM ERITHAANEEA MATRUNAAN PATRUILEEAN KANDAAI

Even in this manner you did not allow me so I am in sad mood and you have destroyed fastely three castles and I do not have any other lust mind on my part

விரைந்து கொடிய அரக்கர்களின் முப்புரங்களையும் எரித்தவனே வேறு ஆசை எனக்கு இல்லை காண் என்றவாறு  


தில்லைவாழ் கூத்தா சிவபுரத்தரசேதிருப்பெருந்துறையுறை சிவனே

THILLAI VAAL KUUTHTHA SIVAPURATHTHU ARASEA THIRUPERUNTHURAI YURAI SIVANEEA 

You are living in Chitham baram in dancing form and you are king of Sivapuram and also living in Thiruperum thurai temple place

தில்லைவாழ் கூத்தா சிவபுரத்து அரசே திருபெருந்துறையில் உறையும் சிவனே


எல்லைமூவுலகும் உருவியன் றிருவர் காணும்நாள் ஆதியீ றின்மை 

ELLAIMUULAGUM YURUVI ANDRU IRUVAR KANNUMNAAL AADHI EERU INMMAI

 One up on a time Bharms and thirumal searched your feet and head and then penetrated in to three worlds but unable to see it in that way you have growned beyond that so you have no begging and end

முன்னொரு காலத்து அயனும் அரியுமாகிய இருவரும் அடிமுடி தேடிய காலத்து முன்று உலகங்களையும் எல்லைகளையும் ஊடுருவி முதலும் முடிவும் இன்மையாக வளர்ந்தவனே


வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 451

VALLAIYAAI VALARNTHAAI VALKILEN KANDAAI VARUGA ENTRU ARULPURIYAYEEA

You have grown in that manner and I am living here so please call me and take me under your fold 


வளர்ந்தவனே நான் வாழ்கின்றேன் வருக என்று அருள் புரிவாயாக


பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்

PANNIN NERMOZHIYAL PANKANEE ALLAL PATRUNAAN MATRUILEEAN KANDAAI

 The musical note filled form of wards are uttering lades, yumadevi has been kept left part of your body and you are the only person loved by me please you may keep it in your mind

பண்களை ஒத்த  மொழியினை உடைய உமாதேவியாரை ஒரு பாகத்து உடையவனே நீ அன்றி நான் வேறு பற்று உடையவன் இல்லாதவன் என்பதைத் திருஉள்ளம் பற்றுக


திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே 

THINAMEEAA AANDAI SIVAPURATHTHU ARASEEA THIRUPERUNTHURAI URAI SIVANEEA 

 You have strongly controlled me my dear Sivapuram king and you are also residing in Thiruperunthurai place

அடியேனை உறுதியாக ஆண்டு கொண்டாய் சிவபுரத்து அரசே திருபெருந்துறையில் உறையும் சிவனே


எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண் என்றினை நின்கணே வைத்து 

ENNAMEA YUDALVAAI MUKODU SEVI KAN ENTRU IVAI NINKANEEA VAITHU

 I have put all my mouth mind body ears  and other sense organs on you so in this land I won’t live any more time here after

ஆதலால் என் எண்ணம் உடல் வாய் மூக்கு செவிகள் என்ற கருவிகரணங்கள் யாவற்றையும் நின்பால் வைத்து விட்டு


மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. 452

MANNINMEEAL ADIYEN VALKILEEAN KANDAI VARUKA ENTRU ARULPURIYAYEEA 

 In this soil world I won’t live any longer so that you may give your feet to permanently forever
மண்ணுலகில் அடியேன் வாழமாட்டேன் ஆதலால் வருக என்று அருள் புரிவாயாக


பஞ்சின்மெல்லடியாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்

PANJIN MEL ADIYAAL PANGANEE ALLAAL PUTRUNAAN MATRUILEEAN KANDAAI 

 Lard Siva you have taken lardess Yumadevi in your left part of your body whose feet is softer than the cotton and I have no other guide except you are

பஞ்சைக் காட்டிலும்மெல்லிய திருவடிகளை உடைய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டவனே உன்னை அன்றி வேறு துணை இல்லை காண்


செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே

SENSEVEEA AANDAI SIVAPURATHTHU ARASEEA THIRUPERUNTHURAI URAI SIVANEEA

 You have conveniently ruled me and you are Siva puram king and in addition living in Thiruperumthurai  

செம்மையான என்னை ஆண்டு கொண்டாய் சிவபுரத்து அரசே திருபெருந்துறையில் உறையும் சிவனே


அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த அருளினை மருளினால் மறந்த

ANJINEEAN NAAYEEAN AANDUNEE ALITHA ARULINAI MARULINAAL MARANTHA

 You have controlled me and then gave your blessings to me but because world pleasure I have forgotten your blessings 

ஆட்கொண்டு நீ எனக்கு அளித்த அருளை அறியாமையால் மறந்த


வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 453

VANJANEEAN INGU VAALKILEEAN KANDAAI VARUGA ENTRU ARUL PURIYAYEEA

I am vengeance person I am living here and please forgive me and then take me under your fold and then call me and then give me your blessings
வஞ்சனையாகிய நாயேன் அஞ்சினேன் இந்த உலகில் வாழ்கிறேன் வருக என்று எனக்கு அருள்வாயாக


பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் 

PARUTHIVAAL OLIYAAI PATHAMEEA ALLAAL PATRUNAAN MATRU EALEEAN KANDAAI

 You are giving light to sun to shed light and heat to this world and only relaying on your feet and you know it and enquire it

சூரியன் வாழ்வதற்கு உதவும் ஒளிவடிவனவனே நின் திருவடிகள் அன்றி வேறு பற்று ஒன்றும் இல்லேன் இதனை நன்கு ஆராய்ந்து பார்


திருவுயர்கோலச் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே

THIRUYUAR KOLA SIVAPURATHU ARASEA THIRUPERUNTHURAI YURAI SIVANEEA

 You have enhance your handsome appearance and you are appearing in lovely form as Sivaburam king besides residing in thiruperum thurai  

அழகு உயர்வதற்கு ஏதுவாக அழகிய வடிவத்தினை உடைய சிவபுரத்து அரசே திருபெருந்துறையில் உறையும் சிவனே


கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக் கலந்துநான் வாழுமா றறியா

KARUNAIYEEA NOOKKI KASINTHU YULAM YURUKI KALNTHU NAAN VAALUMAARU ARIYAA

Your disciple I am and expecting your blessing and my mind melts and I want to mingle with you and I do not know the way to attain it 

அடியேன் உன் திரு அருளையே எதிர்நோக்கி மனம் கசிந்து நான் வாழுமாறு அறியாத வகையினை அறியாத


மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 454

MARULANEEAN YULAKIL VALKILEEAN KANDAAI VARUGA ENTRU ARUL PURIYAYEEA

 I am afraid of this world material benefits so you may fastly approach me and then take control on me and then bless me 
மருள் உடைய

வள் ஆதலால் இந்த உலகத்தில் வாழவில்லை விரைந்து வருக என அருள்புரிவாயாக என்றவாறு


பந்தணை விரலாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்

PANDHANAI VIRALAAL PANGANEE ALLAAL PATRUNAAN MATRU EALEEAN KANDAAI

 Lardess Yuma devi fingers tips are ball shaped  one and you have taken in your left part of your body and I have only likings on your feet nothing else please think over it

பந்து வந்து பொருந்துகின்ற விரல்களை உடைய உமாதேவியை ஒரு பாகத்து உடையவனே நீ அன்றிப்பற்று ஒன்றும் இல்லேன் யான் அதனை நன்றாக திரு உள்ளத்திலே எண்ணிப்பார்  


செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே

SENTHALAL POLVAAI SIVAPURATHTHU ARASEEA THIRUPERUNTHURAI YURAI SIVANEEA 

You are just like fire glow form and Sivapuram king and in adission residing in Thiruperumthurai 

செந்தீ போல்பவனே சிவபுரத்து அரசனே திருப்பெருந்துறையில் உறையும் சிவனே


அந்தம்இல் அமுதமே அரும்பெரும் பொருளே ஆரமுதே அடியேனை 

ANTHAMIL AMUTHEA ARUMPERUM PORULEEA AARAMUTHEA ADIYEENAI

 You have no frontiers in this world you are the permanent material to acquire in this world and your are easily consumable amutham form available In this worlds

எல்லை இல்லாத அமுதமே பெறுவதற்கு உரிய பெரிய பொருளே உண்ணத்தக்க அமுதமே


வந்துய்ய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 455 

VANTHUUYA AANDAAI VAALKILEEAN KANDAAI VARUGA ENTRU ARUL PURIYAAYEA

In simple you have com and took me as slave and then rulled me so I do not want to live here anymore in this world and callme in to your world of Sivalogam and then bless me
எளிமையாக வந்து அடியேன் உய்யும் வண்ணம் ஆட்கொண்டாய் ஆதலால் இந்த பூமியில் வாழ விரும்பவில்லை வருக என்று அருள்புரிவாயாக என்றவாறு


பாவநாசாவுன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் 

PAAVANASAA UN PATHAMEA ALLAAL PATRUNAAN MATRU ELEEAN KANDAAI

You are the only person to destroy my sins and except you are nothing else I want in this world

பாவங்களை அழிப்பவனே நின் பாதங்கள் அன்றி வேறு பற்று இலேன் என்றவாறு


தேவர் தந்தேவே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே 

DEVARTHAM DEVEEASIVAPURATHTHU ARASEA THIRUPERUNTHURAI URAI SIVANEA

 You are god to other sub lards and you are residing in Sivapuram besides in Thiruperumthurai 

தேவர்களுக்கு எல்லாம் தேவனே சிவபுரத்து அரசனே திருப்பெருந்துறையில் உறையும் சிவனே


மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழலாய் நிமிர்ந்தானே 

MUUYULAGU URUVA IRUVAR KEELMELAAI MULUNGA ALALAAI NIMIRNTHAANEA

 To penetrate in to three world as fire form to Thirumal and Bharma and you are in that fire glow form in  appeared before them to get afraid of

அயன் மால் என்ற இருவரும் மேலும் கீழாகத் தோன்றி முழங்குகின்ற தீயாய் உலகங்களையும் ஊடு உருவும் வண்ணமே உயர்ந்து விளங்குபவனே


மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 456 

MAA YURIYAANEA VAALKILEEAN KANDAAI VARGA ENTRU ARUL PURIYAAYEEA

 Lard Siva you have adorned elephant skin as upper dress and so in this world I do not want to live anymore and you may put your grace on me
யானையின் மேல் தோலை போர்வையாக உடையவனே ஆகையால் இந்த மண் உலகில் வாழ மாட்டேன் வருக என்று அருள்புரிவாயாக என்றவாறு


பழுதில் தொல் புகழால் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்

PALUTHU IL THOLPUKALAAL PANGA NEE ALLAAL PATRUNAAN MATRUILLEN KANDAAI

 You have naturally no sin on your part. And you are the oldest person to this world and you have taken lardess yumadeevi on your left part of your body and without you I have no other desire in this world

குற்றங்கள் ஏதும் இயல்பாகவே இல்லாத பழமையான புகழினை உடையவனே உமாதேவியை ஒருபாகமாக உடையவனே நீ அல்லது வேறு பற்று இலேன்


செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறைச் சிவனே 

SELUMATHI ANINTHAAI SIVAPURATHTHU ARASEEA THIRUPERUNTHURAI URAI SIVANEEA 

 You have adorned the growing moon on your hair and you are sivapuram king besides residing inTthiruperumthurai temple place

செழுமையான இளம் மதியை அணிந்தவனே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறையில் உறையும் சிவனே


தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய்

THOLUVANOO PIRARAI THUTHIPANOO ENAKU OOIR THUNAIENA NINAIVANOO SOLLAAI 

I won’t pray any other god except you are and you are the only guide to me

பிற தெய்வங்களைத் தொழுவேனோ துதிப்பேனோ எனக்கு ஒரு துணை என நினைவேனோ சொல்வாய்


மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 457 

MALA VIDAIYAANEEA VAALKILEEAN KANDAAI VARGA ENTRU ARUL PURIYAYEEA

 Lard siva you have got young bull as your travellingmedium and I won’t live in this world alone and so ask me to go in to your fold and invite me to the heaven
இளமையான எருதை உடையவன் இத்துணை உறுதி உடையான் இந்த மண்ணிலே வாழமாட்டேன் ஆதலால் வருக என்று அருள்புரிவாயாக என்றவாறு


திருச்சிற்றம்பலம். 
OM THIRUCHITRAMBALAM


February 20, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: