AASAIPATHTHU
25. ஆசைப்பத்து – ஆத்தும இலக்கணம்
AASAIPATHTHU
(திருப்பெருந்துறையில் அருளியது
-அறுசீர்க்கழி
நெடிலடி ஆசிரிய விருத்தம்)
ஆன்மாவின் இலக்கணத்தை அறிந்து பெற்ற உலகச் சார்பை விட்டுப் பெறவேண்டிய அருட்சார்பை விரும்பி அருள் வழங்கப் பெற ஆசைப்படுவது
ஆசை முருகிய அன்பு காரணமாக ஒருபொருளை அடைய வேண்டும் என்று எழுகின்ற விருப்பம்.
மாணிக்க வாசகருக்கு இறைவனது செவ்வி காணவும், செவ்வியில் ஈடுபட்டு அழுந்தி நிற்கின்ற பொழுது அருளைப் பெறவும், அருளை விரும்புகின்ற என்னைப் பார்த்து இரங்கி வா வா என்று உன்னால் அழைக்கப் பெறவும்,அழைத்தாலும் வரமுடியாமை என்பால் இருப்பதை அறிந்து நீயே என்பால் எழுந்தருளி வந்து அருள் வழங்கப் பெறவும் ஆசைப்படுவதாக அறிவிப்பதால் இப்பத்துப் பாடல்களும் ஆசைப்பத்து எனப் பெயர் பெற்றது.
இதன் கருத்து ஆன்ம பேதத்தை அறிதல் என்பது பழைய குறிப்பு.
The definition of soul is declared here and now we are pro world. To get rid of it we must go pro god so that we must get his blessings. We must aspire for it.
Manikavasager wants to see god and while in meditation he gets his blessings and call him to come on and again call to come on. I am unable to go and heed his callings so lard Siva you must descend on me and then give your blessings and I want your holdon me. So this part is called aasai pathu
கருடக்கொடியோன் காணமாட்டாக் கழற்சே வடியென்னும்
KARUDA KODIYOON KAANA MAATTA KALAL SEVADI YENNUM
The eagle flag carrier sub lard Thirumal unable to see your feet(eagle is a bird which see the prey at distant place).Lard Siva You have adorned brave anklet on your feet
கருடக்கொடியைத் தாங்கியவானகிய திருமாலும் காணமுடியாத வீரக்கழலை அணிந்த சிவந்த சேவடி என்னும்
பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியேயோ
PORULAI THANTHUINGU ENNAI AANDA POLLAA MANIYEEAYOO
Lard Siva gave me pleasure object and control up on us and prevailed up on us you are pure diamond without any hole in it.
பொருளைக்கொடுத்து இப்பூஉலகில் ஆட்கொண்ட முழு மாணிக்கமே
இருளைத் துரந்திட் டிங்கே வாவென்றங்கே கூவும்
IRULAI THURANTHITU INGEAAVAA ENTRU ANGEA KUUYUM
He has removed my mind darkness and then call me to come over here and in this way he called me from heaven
என் மனஇருளைப் போக்கி இங்கே வா என்று வீட்டு உலகில் இருந்து அழைக்கும்
அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 418
ARULAI PERUVAAN AASAI PATEAN KANDAAI AMMAANEEA
I wanted to get your blessings and grace my dear lardSiva it is my liking
திருஅருளைப் பெறுவதற்கு விரும்பினேன் அம்மானே இதுவே என் விருப்பம் என்றவாறு
மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல் போர்த்த
MOIPPAAL NARAMBU KAYIR AAGA MOOLAI ENBUTHOL PORTHTHA
The closely netted veins are rope andbrain and borne are covered by the skin
நெருங்கிய பல பகுதிகளாக விளங்கும் நரம்புகளே கயிறாக மூளை எலும்பு இவற்றை தோலில் போர்த்தப் பெற்ற
குப்பாயம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ
KUPPAYAAM PUKKU IRUKKAKILEEN KUUVIK KOLLAAI KOVEAAYOO
In this body care case I will not go inside and will not live long so you loudly call me and take me under your fold my dear lard Siva
சட்டையாகிய இந்த உடம்பில் புகுந்து நெடுங்காலம் இருக்க மாட்டேன் என்னை அழைத்துக் கொள் அரசே
எப்பா லவர்க்கும் அப்பாலாம் என்னாரமுதேயோ
EPPALA AVARUKUM APPAALAAM EN AAR AMUTHEYOO
Whatever mighty character all are possessed lard Siva is above all of them and he is the rare nectar to them
எத்தன்மை உடையவர்களுக்கும் அப்பாலாகக் கடந்து விளங்கும் எனக்கு அரிய அமுதே
அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 419
APPAA KAANA AASAIPATEEAN KANDAAI AMMAANEEA
My dear father I wanted tosee you and you have already found me as your disciple
என் தந்தையே நின்னை எப்போதும் தரிசிக்க விரும்பினேன் அம்மானே காண் என்றவாறு
சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ் சிறுகுடில் இது சிதையக்
SEEVAARTHU EEMOITHU ALUKKODU THIRIYUNG SIRUKUDIL ITHU SITHAIYA
The fussis shedding and bees are seated on it in that form of this small body whichis tobe destroyed
சீ ஒழுகி ஈ மொய்த்து மலத்தோடு அலைகின்ற சிருகுடிசையாகிய இவ்வுடல் அழிந்துபட
கூவாய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளுங் குருமணியே
KUUVAAI KOOVEA KUUTHTHA KAATHTHU AATKOLLUM GURUMANIYEA
You are my leader you are a dancer and you are the preserver and take me as your slave and you are glittering in diamond form
என்னை விரைந்து அழைப்பாயாக அடியேனுடைய தலைவா கூத்தா எம்மைக் காத்து அடிமை கொள்ளும் குருமணியே
தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி
DEVAA DEVARKU ARIYAANEA SIVANEA SIRITHU EN MUGAMNOOKKI
Devas’s deva you are rare to them and lard Siva you may see my face atleast a fraction of a second
தேவர் தேவர்களுக்கும் அரியவனே சிவனே அடியேனுடைய முகத்தைச் சிரிதுபார்த்து
ஆவா வென்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 420
AAVAA ENNA AASAIPATEEAN KANDAAI AMMAANEEA
O my dear child come here and I like it in this way you will call me
ஆவா என்று நீ அழைக்க விரும்பினேன் இதுவே என் விருப்பம் கண்டாய் என்றவாறு
மிடைந்தெலும் பூத்தை மிகக்கழுக் கூறல் வீறிலி நடைக்கூடம்
MIDAINTHU EALUMBU UUTHTHAIMIKKU AZHUKKU OORAL VEERALI NADAIKKUUDAM
The bones are tightly fixed form and the unwanted fluids in the body oozing out and because of old age the power in the body diminishes and then walking slowly
எலும்புகள் நெருங்கி உள்ளதை, மிகுந்த அழுக்கு நீர் உறுதலை உடைய சிறப்பு இல்லாத நடைக்கூடம் ஆகிய இந்த உடம்பு
தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன் சோத்தம் எம்பெருமானே
THODARNTHU ENNAI NALIYATH THUYAR YURUKINDREN SOTHTHAM EM PERUMAANEA
As old age sets in and its consequences are continuously hunting and you are rare nectar to me
என்னைத் தொடர்ந்து வந்து துன்புறுத்துகின்ற எம்பெருமானே வணக்கம்
உடைந்துநைந் துருகி உள்ளொளி நோக்கி உன்திரு மலர்ப்பாதம்
YUDAINTHUNAINTHU YURUKI YULOLI NOOKKI YUNTHIRU MALARPPAATHAM
My mind isspoilt and mind is in concelled form and meltit down after wardsyour sacred lightis seen and then ultimately see your feet
என் அகந்தை கெட்டு மனம்மறைந்து உருகி உன் திரு அருள் பிரகாசத்தையே கண்டு உன் மலர்போன்ற திருவடிகளை அடைந்து
அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 421
ADAINTHU NINTRIDUVAAN AASAIPATEAN KANDAAI AMMAANEEA
You must come here and realized that he is the right person and then put your blessings up on me and my dear leader you may seeit
அதன் கண்ணே நிலைபெற்று இருக்க ஆசைப்பட்டேன் அம்மானே இதனைக் கண்டு அருள் என்றவாறு
அளிபுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடையாக்கை
ALI PUN AGATHU PURAM THOOL MOODI ADIYEAN YDAI YAAKKAI
The internal wound is there so that to concel this body is covered with skinand inthis way of your disciple body
அகத்தே அளித்த புன்னையும் புறத்தே தோலால் மூடியும் அடியேன் உடைய உடல்
புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்விடையாய் பொடியாடி
PULIYAMPALAM OTHU IRNTHEEAN IRUNTHUM VIDAIYAAI PODI AADI
In this way I am turmeric fruit seed external cover form of detachment form I am living in this world and lard Siva you have possessed bull chariot in this world and applied
Scared ashes all over the body
உடைமையால் புளியும் பழமும் அதன் ஓடும் ஒத்திருந்தேன் அங்ஙனம் இருந்தன இடபவாகனத்தை உடையவனே திருநீற்றை அணிந்தவனே ‘
எளிவந்தென்னை ஆண்டுகொண்ட என்னாரமுதேயோ
ELIVANTHU ENNAI AANDU KONDA ENAAR AMUTHEEAYOO
You have come over here in simple form and thengot hold onme and in this rare amutham form existing in this world
எளியனாக எழுந்தருளி வந்து எம்மை ஆண்டு கொண்ட என்னுடைய அரிய அமுதமே
அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 422
ALIYEEAN ENNA AASAIPATEEAN KANDAAI AMMAANEEA
You have descended here and found out that he is right person and showered your blessings and my dear lard you may see it
நீ என்று இவன் இரங்கத்தக்கான் என்று அழைக்க விரும்பினேன் அம்மானே இதனைக் காண் என்றவாறு
எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்ககில்லேன் இவ்வாழ்க்கை
EITHEAN NAAYEEAN INIINGU IRUKKA GILEN IVV VAALKAI
Iam dog like person and I am tired so with this body I have no strength to live in this vices filled world. This life is given by you
நாயை ஒத்த அடியேன் இளைத்தேன் இனி இந்த உடலோடு கன்ம பூமியாகிய இங்கு இருக்க ஆற்றல் இல்லேன் இந்த உலக வாழ்க்கையை
வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர்ச்சே வடியானே
VAITHAAI VAANGAAI VAANOOR ARIYAA MALAR SEEVADIYAANEEA
So take it away my dear lard Siva, deevass whoare unable to see your feet that type of flowery feet you have possessed
அடியேற்குக் கூட்டி வைத்த நீயே மீட்டுக் கொள் தேவர்களால் அறியப்படாத திருவடித்தாமரைகளை உடையவனே
முத்தா உன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகைகாண
MUTHTHAA YUNTHAN MUGAOLI NOOKKI MURUVAL NAGAI KAANA
You are good old person to this worldso I wanted to see your face with simile so that I will feel happy about it
முத்தா அத்தா உன் திருமுகச் செவ்வியை நோக்கி புண்முறுவலைக் கண்டு மகிழ விரும்புகின்றேன்
அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 423
ATHTHAA SAALA AASAIPATEEAN KANDAAI AMMAANEEA
Imuch like it so it is also my wish and you may see it
மிக விரும்பினேன் என் விருப்பம் என்றவாறு அம்மானே இதுவே காண்
பாரோர் விண்ணோர் பரவியேத்தும் பரனே பரஞ்சோதி
PAROOR VINNOOR PARAVI EATHUM PARANEA PARAM JOOTHI
Those who are in this world people and upper world people and all are pray and praise you and you are prime lard in fire glow form
பூமியில் உள்ள மக்களும் விண்ணில் உள்ள தேவர்களும் வணங்கித் துதிக்கும் பரம்பொருளே பரஞ்சோதியே
வாராய் வாரா வுலகந்தந்து வந்தாட்கொள்வானே
VAARAAI VAARAA ULGAM THANTHU VANTHU AATKOLVAANEA
O my dear lard you have descended in this world and then you allow me to goin to heaven which is non-returnable place and in this way given heaven and prevailed up on me
தேவரீர் எழுந்தருளி வந்து வாராய் என மீண்டும் வாராத உலகமாகிய வீட்டினைத் தந்து தேவரீரே ஆட்கொள்ளுபவரே
பேராயிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் என ஏத்த
PEEAR AAYIRAMUM PARAVI THIRINTHU EMPERUMAAN ENAEEATHA
You have thousands of sacred names and we with it pray it and praise with it and then wandering so many places and search you and you are my lard and prey for it and like it to do so
உம் ஆயிரம் திருநாமங்களையும் சொல்லி அலைந்து எம்பெருமான் என்று வணங்க ஆசைப்பட்டேன்
ஆரா அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 424
AARAA AMUTHEA AASAIPATEAN KANDAAI AMMAANEA
While we consume amutham a lot of it it won’t give sour taste and you see it and then bless me
உண்டு தெவிட்டாத அமுதமே இதனைக் கண்டு அருள் என்றவாறு
கையால் தொழுதென் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண்டு
KAIYAAL THOLUTHU EAN KALAL SEVADIGAL KALUMA THALUVI KONDU
With folded hands we pray you and your feet are adorned with brave anklet which is embraced with hands
கைகளால் உம்மைத் தொழுது வீரக்கழல்களை அணிந்த உன் சேவடிகளை நிரம்பத் தழுவிக்கொண்டு
எய்யா தென்றன்தலைமேல் வைத்தெம்பெருமான் பெருமானென்று
EIYAATHU YEN THAN THALIMEEAL VAITHU EMPERUMAAN PERUMAAN ENTRU
And without any break I put your feet on my head as flower andthen called your names repeatedly my lard and my lard
யான் இடைவிடா வண்ணம் அவற்றை என் தலைமேல் சூட்டிக் கொண்டு எம் பெருமானே பெருமானே என்று
ஐயா என்றன் வாயா லரற்றி அழல்சேர மெழுகொப்ப
IYYA ENTHAN VAAYAAL ARATRI ALALSER MELUKUOPPA
O my father in that way murmured with my mouth I will like to melt just like wax put on fire and like it
ஐயா என்று என் வாயால் புலம்பி நெருப்பைச் சேர்ந்த மெழுகினை ஒத்து உருக ஆசைப்பட்டேன்
ஐயாற் றரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 425
AIYAATRU ARASEEA AASAIPATEEAN KANDAAI AMMAANEEA
My dear lard Siva you have descended in Tiru vaiyaaru temple place where I meltbefore you
திருவையாற்றில் எழுந்தருளி உள்ள அரசே உருக ஆசைப்பட்டேன்
செடியா ராக்கைத் திறமற வீசிச் சிவபுரநகர்புக்குக்
SEDIAAR AAKKAITH THIRAMARA VEESI SIVAPURA NAGARPUKKU
The stinging body which has some capacities but I dis-regarded it and then entered in to sivalogam
முடை நாற்றம் பொருந்திய உடலுக்கு வேண்டிய திறன்களை அறவே வீசி சிவபுரமாகிய நகரின் கண் புகுந்து
கடியார் சோதி கண்டுகொண்டென் கண்ணினை களிகூரப்
KADIYAAR JOTHIKANDU KONDU EN KANINNAI KALIKUURA
I have seen you much light filled form which is found out and then kept it in to my heart and then my two eyes are got enjoyment
மிக்க விளக்கம் பொருந்திய ஜோதியான உன்னைக்கண்டு அகத்துள் கொண்டு என் இரண்டு கண்களும் களிப்பு மிக
படிதா னில்லாப் பரம்பரனே உன்பழஅடியார் கூட்டம்
PADITHAAN ILLAA PARAMPARANEEAYUN PALA ADIYAAR KUUTTAM
You have no comparison and you are prime god and I am your disciple and want see the old disciple cluster and then mingled in to it and then see you with them
ஒப்பு இல்லாத பரம்பொருளே உன்னை அடியேன் உன் பழைய அடியார் கூட்டத்தைக் காண
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 426
ADIYEAN KAANA AASAIPATEAN KANDAAI AMMAANEEA
In that way I wanted to see you and you are my leader
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே என்றவாறு
வெஞ்சேலனைய கண்ணார்தம் வெகுளிவலையில் அகப்பட்டு
VENG SEAL ANNAIYA KANAAR THAM VEGULI VALAIYIL AGAPPATU
The kayal fish like eyes are possessed ladies by whom we are tapped
விரும்பத்தக்க சேல்மீனை ஒத்த கண்களை உடைய மாதர்களின் புலவியாகிய கோபவலையில் அகப்பட்டு நைந்து போனேன்
நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நானோர் துணைகாணேன்
NAIGEEN NAAYEEN GNANASUDAREA NAAN OOR THUNAI KAANEEAN
Iam in the state of very weak so I am dog like person but you are ganaa person so I do not see any type of guidance to me
நைந்து போனேன் நாயை ஒத்த யான் ஞான விளக்கே நான் ஒருவகையான துணையையும் காணேன்
பஞ்சேரடியாள் பாகத்தொருவா பவளத் திருவாயால்
PANG SEAR ADIYAAL PAAKATHU ORUVAA PAVALA THIRUVAAYAAL
You have taken Lardess Parvathi in your left part of your body and whose feet is just like soft cotton like one and you are wonderful and with your wonderful red color mouth
பஞ்சை ஒத்த திருவடிகளை உடைய உமாதேவியை இடது பாகத்தில் கொண்ட ஒப்பற்றவனே ஆதலால் செம்பவளத்தை ஒத்த திருவடியால்
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 427
ANGEEAL ENNA AASAIPATEEN KANDAAI AMMAANEEA
You may told me not to afraid of anything in this and this is the ward I like to hear from your mouth so that I will see you as my leader
அஞ்சாதே என்று நீ சொல்ல ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே என்றவாறு
திருச்சிற்றம்பலம் om thiruchitrambalam.