OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

KOVIL THIRUPATHIGAM

ganesheit February 19, 2019

22. கோயில் திருப்பதிகம் – அனுபோக இலக்கணம் 

KOVIL THIRUPATHIGAM

(தில்லையில் அருளியது – 
எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) 

சிவன் அனுபூதி பெற்றவர்களின் அடையாளம் கூறுவது

        மாணிக்க வாசகர் தி;ல்லையில் எழுந்தருளி இருக்கின்ற காலத்து இறைவன் அருள் விரைந்து பெற்று அடியாருடன் கூடிக் களிக்கவும், பேரின்பம் அடையவும் முடியாமல் இருப்பதைத் திரு உள்ளம் கொண்டு பஞ்சாட்சரத்தைத் தியானிக்கும் முறையில் நின்று விண்ணப்பிப்பதாக அருளிச் செய்யப் பெற்றது.

        சிவானுபூதி பெற்றவர்கள் சிவனை இன்பமாக, அன்பாக, குறைவிலா நிறைவாக, கனியாக, ஆனந்த மாக்கடலாகக் காண்பர்.

        கொண்டது என் தன்னை தந்தது உன்தன்னை, யான் இதற்கு ஓர் கைம்மாறு இலன் என்று இரங்குவார் என அனுபூதிக்கு அடையாளம் கூறப் பெற்றது.

        இப்பதிகத்தில் ஐந்து மலமும் அருளாய் நின்ற முறைமையால் உடலும் உன்கோயில் ஆன அநாதி இன்பமே கரணமெனவும், எல்லாச் செயலும் சிவன் செயல் எனவும்,சிவன் குறைவு இல்லா நிறைவு குணக்கடல் என்றும் அன்பான இன்பப் பெருக்கத்தை அளவளாவி அருளிய சிவஞான ஊதியம் இப்பதிகம் என அனுபூதி உரைக்கின்றது.

Those who have got god’s blessings their identity will be revealed

 While staying in Thillai Manikavasager did not get god’s grace. He did not mingled with devotes and did not internal bliss and so he goes in to meditation and chanted panchatsaram that is five letter manthara wards om sivayanama om namasiva and in that way he appealed to god to take him under his fold

 Those who siva anu boothi( Sivas blessings) they will see lard as loving one pleasure one friendly one and dear one and without any deficiency he is in complete form and as a ripe fruit and pleasure big seaform

 You have taken me and you are given tome as a consideration

 You gave yourself to me and what I will give you as consideration for it

So he melt this wonderful stateof this experience received by him

 In the following ten poems he describes five types of impurities and he himself stands on god’s feet and see the world and he himself turned as god’s nature and so in this state of mind he sees his body ass temple and infinitive bliss appeared to him. All the acts are lard Siva’s acts. Siva is in complete form and there is no deficiency and he is good character of sea form. He experiences love within him and this is the remuneration of sivagaana .While he stays in Thillai he thinks Thiruperunthuraiand sang on it


மாறிநின்றென்னை மயக்கிடும் வஞ்சப் 

MAARININDRU ENNAI MAYAKIDUM VANJA

The five sense organs are directed into wrong side of life and then gave fainting’s in life sothat you have shut down five external receptors

ன்னுடன் மாறுபட்டு நின்று மயக்கத்தை விளைவிக்கும் வஞ்சனை பொருந்திய

புலனைந்தின் வழியடைத் தமுதே 

PULAN EAINTHIN VALI ADAITHTHU AMUTHEA

and that five sense orgons acts are stopped and then entered in to my mind as amutham form

ஐம்புலன்களின் வழியைத் தடுத்து என் உள் அமுதமாய்


ஊறிநின்றென்னுள் எழுபரஞ்சோதி 

UURI NINDRU ENNUL ELU PARANJOTHI

Your are oosing in to my mind in pure light form in that state you are existing

சுரந்து நின்று விளங்குகின்ற மேலான ஒளியே

உள்ளவா காணவந்தருளாய் 

 YULLAVAA KAANNA VANTHARULAAI

In natural form entered in to my mind and give bliss tome

உள்ளபடி காணும் வண்ணம் எழுந்து அருள்வாயாக என்றவாறு


தேறலின் தெளிவே சிவபெருமானே

THERALILN THELIVEA SIVAPERUMANEA

You are clear honey form existing in this world 

தேனின் தெளிவனாவவே சிவபெருமானே

திருப்பெருந்துறையுறை சிவனே
THIRUPPERUNTHURAI SIVANEA

You have descended in thiruperum thurai temple pace 

திருபெருந்துறையில் எழுந்தருளிய சிவனே


ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த

EERILAP PADANGAL YAAVAIYUM KADANTHA

The nonperishablepositionsare by passed above it you are acting

அழிவற்ற பதவிகள் யாவையும் கடந்து விளங்கும்  

இன்பமே என்னுடை அன்பே. 388 

INBAMEA ENN YUDAIYA ANBEA

 And you are happiness form and love form existing inthis world

இன்பவடிவனாவனே என்னுடைய அன்பே


அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை

ANBINAAL ADIYEN AAVIYOODU AAKAI

 To show love towards lard Siva so that my body and soul 

தேவரீர் மீது செலுத்திய அன்பினால் அடியேன் உடைய உயிரும் உடலும்

ஆனந்த மாய்க் கசிந்துருக

AANATHA MAAI KASINTHU YURUGA

WIth happiness it melts 

ஆனந்தமாய்க் கசிந்து உருகும் படி ஆனந்தமாய் கசிந்து உருக


என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்

ENPAM ALLAH INARUL THANTHAAI

You have bestowed your glorious bliss on me and it is notlimited me alone 

என் அளவில் அமையாத இனிய பேரருளைப் புரிந்தாய்

யானிதற் கிலனொர்கைம்மாறு 

YAANITHARKU ILANOOR KAIMMAARU

Because your big benefit of bliss which I have received and in return I do not have anything to give you as consideration

இந்த பேருஉபகாரத்திற்கு அடியேன் செய்யும் கைம்மாறுஒன்றிலேன் என்ற வாறு


முன்புமாய்ப் பின்னும் முழுதுமாய்ப்

MUNBUMAAIP PINNUM MULU THUMAAIK PARANTHA

 You have pervaded in all the places as firstlast and all the form

எல்லாவற்றிற்கும் முன்னுமாய் பின்னுமாய் முழுவதுமாய்     வியாபித்து விளங்கும்  

பரந்த முத்தனே முடிவிலா முதலே 

MUTHTHANEA MUDIVILLA MUTHALEA

YOU are ripe good old form and there is no distractionto you that type of prime object you are

    முத்தனே அழிவற்ற முதல் பொருளே


    தென்பெருந்துறையாய் சிவபெருமானே

THENPERUNTHURAIYAAI SIVAPERUMAANEA

You have descended in hot destroyable temple place in prime lard form 

அழிவற்ற அழகிய திருப்பெருந்துறையில் எழுந்தருளி இருப்பவனே சிவபெருமானே

சீருடைச் சிவபுரத்தரைசே. 389

SEERUDAICH SIVAPURATHU ARASEA

You are glorious king and your residential place sivaburam

மிகக் புகழை உடைய சிவபுரத்தின் அரசே  


அரைசனே அன்பர்க் கடியனே னுடைய

ARAISANEA ANBARKU ADIYENAN YUDAIYA 

You are king to your disciples and you are father to your slaves

அன்பர்களுக்கு அரசனே அடிமையாகிய என்னுடைய தந்தையே

அப்பனே ஆவியோ டாக்கை 

APPANEA AAVIYOODU AAKAI

My dear father this body with life

தந்தையே உயிரோடு கூடிய உடல்


புரைபுரை கனியப் புகுந்துநின்றுருக்கிப்

PURAIPURAI KANIYA PUGUNTHUNINDRU YURKI

 MY hair in the body holes sweat and you entered in to my soul and then considered as temple and permanently stayed into it on seeing this my mine melts

மயிர்க் கால்கள்தோறும் நெகிழ என் உயிருள் புகுந்து அதுவே தமக்கு ஆலயமாக நினைந்து நின்று என்னை உருகச்செய்து

பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே

POI IRUL KADINTHA MEISUDAREA

You have removed my false ignorance and allow to see the true fire form of jothi

 பொய்யான அறியாமை இருளை அகற்றி உண்மை வடிவான ஜோதியே


திரைபொரா மன்னும் அமுதத் தெண்கடலே

THIRAI PORAR MANNUM AMMUTHATH THENKADALEA

 Without any waves are beaten form you have appeared a clear amutham form 

அலைமோதாமல் நிலைபெற்ற அமுதமாகிய தெளிந்த கடலே

திருப்பெருந்துறையுறை சிவனே 

THIRUPPERUNTHURAI SIVANEA

You have taken rest in thiruperum thurrai temple place

திருப்பெருந்துறையில் பள்ளி கொள்ளும் சிவனே


உரையுணர் விறந்துநின்றுணர்வதோர் உணர்வே

YURAI YUNARYU IRANTHUNINDRU YUNARVATHUOOR UNARVEA

My wards are coming from my mouth and then that wards are created illumination and feeling in my mind but above all you stand in wonderful form of gaana wards and then give feelings wards to praise you

அடியேனுடைய உரையையும் உரையைத் தோற்றுவிக்கும் உணர்வையும் கடந்து விளங்குகின்ற

ஒப்பற்ற ஞானமே யானுன்னை உரைக்குமா றுணர்த்தே. 390 

YAANUNNAI URAIKUMMAAR YUNARTHTHEA

 Your disciples will say glorified way and then give feeling wards to praise you

YoU mustraise feelings into my mind then only I will realize you
அடியேன் உன்னைப் புகழ்ந்து உரைக்கும் வண்ணம் உணர்த்துவயாக என்றவாறு


உணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார்

YUNARNTHA MAAMUNIVAR UMBAROODU OLINTHAAR

The big saints realize the nature of god but the devas and others

இறைவன் இயல்பை உணர்ந்த பெரிய முனிவர்கள் தேவர்களோடு ஏனையோர் 

உணர்வுக்குந் தெரிவரும் பொருளே

 YUNARV YUKUM THERIVARUM PORULEA

 They are unable to get the feelings of god and you are such type of wonderful god

அவர்களுடைய உணர்விற்கும் உணர முடியாத பொருளே ஒப்பற்றவனே  


இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே

INANGILI ELLA YUYIRKATKUM YUYIREA

You are life giver to other living beings

எல்லா உயிர்களுக்கும் உயிராக உள்ளவனே  எனைப் பிறப் பறுக்கும் எம்மருந்தே

  You have removed my re birth and prevailed up on me inthat medicine form you are

என் பிறப்பை நீக்கி ஆட்கொள்ளும் எம் மருந்தே


திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே

THININTHA OOR IRULIL THELINTHA THUU VELIYEA

In the utter darkness you are clearly visible in the space place

மிகவும் செறிவான இருளில் தெளிந்து காணப்படும் தூய்மையான சிதாகாசமே  

திருப்பெருந்துறையுறை சிவனே

THIRUPPERUNTHURAI YURAI SIVANEA

 You areresiding in Thiru perum thurai

திருப்பெருந்துறையில் உறையும் சிவனே

 
குணங்கள் தாமில்லா இன்பமே உன்னைக்

GUNANGAL THAAM EALLA EANBAMEA YUNNAI

You have no vices and you have only happiness giver to your deciples

குணங்கள் இல்லாத இன்பமே உன்னை  

குறுகினேற் கினியென்ன குறையே. 391 

KURUKINEARKU INIENNA KURAIYEA

I have attained you and here after I will not have any deficiency

அடைந்த எனக்கு இனி என்ன குறை என்றவாறு


குறைவிலா நிறைவே கோதிலா அமுதே

KURAI YUILA NIRAVEA KOOTHUILAA AMUTHEA

Any time and everywhere you are full ness in form

என்றும் எங்கும் நிறைந்த பொருளே குற்ற மற்ற அமுதமே  

ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே

EERUILAA KOLUNG SUDARKUNDREA

You have no end and fertile light hill form

இறுதி இல்லாத வளமான ஒளி மலையே  


மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்

MARAIYUMAAI MARAIYIN PORULUMAAI VANTHU EN

Intheveetha inner meaning form you have descended and then entered into my mind

வேதங்களுமாகிய வேதத்தில் விளம்பப்படும் பொருளுமாகி எழுந்தருளி வந்து அடியேனுடைய

மனத்திடை மன்னிய மன்னே

MANATHIDAI MANIYA MANNEA

 In that way you have descended in to my mind as king form

மனத்தில் எழுந்தருளி உள்ள அரசே  


சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப்பாயும்

SIRAIPERAA NEERPOL SINTHAI VAAI PAAYUM

There is no dam to stop water in that way you have entered intomy mind

அணையற்ற வெள்ளம் போல் எனது மனதில் வந்து பாய்கின்ற  

திருப்பெருந்துறையுறை சிவனே

THIRUPERUNTHURAI YURAI SIVANEA

Lard Siva you has descended in the thiru pervnthurai temple

திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ளவனே  


இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்

EIRAVANEA NEEEN YUDALIDAM KONDAAI 

 My dear god you have taken my body as temple and stayed there

இறைவனே நீ அடியேனுடைய தேகத்தைத் திருக்கோயிலாகக்கொண்டு எழுந்தருளி உள்ளாய்

இனியுன்னை யென்னிரக் கேனே. 392

INNI YUNNAI EN IRAIK KEANEA 

So here after what will ask from you
ஆகவே இனியான் உன்னிடம் என்ன யாசிப்பேன் என்றவாறு


இரந்திரந் துருக என்மனத் துள்ளே

IRANTHU IRANTHU YURUKA EN MANATHULEA 

So many years I pray and melt for you now you are in the form of light appeared into my mind

பலகாலும் இரந்து உருக என் மனதுள்ளே தோன்றுகின்ற ஒளிப்பிழம்பே

எழுகின்ற சோதியே இமையோர் 

ELUKINDRA JOOTHIYEAA IMAIYOOR

You are shining in the form of light fire

தோன்றுகின்ற ஒளிப்பிழம்பே தேவர்கள்


சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்

SIRAMTHANIL POLIYUM KAMALA SEVADIYAAI

In my mind your lotus feet form of flower is bloomed

சிரத்தின் மீது விளங்குகின்ற திருவடித் தாமரையை உடையவனே  

திருப்பெருந்துறையுறை சிவனே

THIRUPERUNTHURAI YURAI SIVANEA

 You have been residing in thiru perunthuri temple place

திருப்பெருந்துறையில் உறங்கும் சிவபெருமானே  


நிரந்தஆகாயம் நீர்நிலம் தீகால் 

NIRANTHA AAGAYAM NEERNILLAM THEEKAAL

All the places it is spread over in the form of land water space wind and fire form of boothass

எங்கும் பறந்து உள்ள விண்ணும் நீர் நிலம் தீ காற்று ஆகிய ஐந்து பூதங்களும் ஆகிய

ஆயவை அல்லையாய் ஆங்கே

AAYAVAI ALAIYAAI AANGEA

At times you are beyond the five boothas and also mingled in idle of my mind

அவை அல்லாதவனும் ஆகிய அந்தந்த பூதங்களிலேயே  


கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்

KARANTHU OOR YURUVEA KALITHANAN YUNNAI

 You have cancelled form in to my mind and now Ihave seen in to my internal mind 

மறைந்து உருவானவனே கண்கள் பொருந்த உன்னை இன்று

கண்ணுறங் கண்டுகொண்டின்றே. 393 

KANURAK KANDUKONDU INDREA

 Now I have found out and gottaste about you and so on

கண்டுகொண்டேன் களித்தேன் என்றவாறு


இன்றெனக் கருளி இருள்கடிந்துள்ளத்

INDRUENAKU ARULI IRULKADINTHU YULLATHU

 To day you have blessed me and then removed my ignorance in the inner side

இன்று அடியோற்கு அருள் சுரந்து என் அக இருளாகிய அறியாமையைப் போக்கி  

தெழுகின்ற ஞாயிறே போன்று

EALUKINDRA GNAYIREA PONDRU

 You have arisen in my heart just likesun raises in light form

என் உயிர் இடமாகத் தோன்றும் சூரியனைப் போன்று ஒளிமயமாக  


நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்

NINDRANIN THANMAI NINAI PARA NINAINTHEEAN

Because your nature my thinking power terminated

நின்றநின் தன்மையின் எனது நினைப்பு அற்றுப்போக 

நீயலால் பிறிது மற்றின்மை 

NEEALAAL PIRITHU MATRINMAI

You are real object in this world all others are illusory one

உன்னை அல்லாமல் வேறு பொருள் இன்மையை அறிந்தேன்


சென்றுசென்றுணுவாய்த் தேய்ந்துதேய்ந்தொன்றாம்

SENDRU SENDRU ANUVAAI THEAINTHU THEAINTHU ONDRAAM 

 We slowly by pass all the world objects and at last settle in the soul knowledge and then afterwards it goes into smaller and smaller and just like atom and then it spreads all the places and stands like as one influid form

எல்லா பொருட்களையும் சிறிது அரிதாகக் கடந்து நீங்கி நின்ற ஆன்ம அறிவு சென்று அணுவாகத் தோய்ந்து முடிவில் பரிபூரண ரசமாகி நிற்கும் 

திருப்பெருந்துறையுறை சிவனே 

THIRUPERUNTHURAI YURAI SIVANEA

 In that way you have descended in thiru perun thurai lard Siva form

திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே


ஒன்றும் நீயல்லை அன்றியொன் றில்லை 

ONDRUMNEE ALLAI ANDRI ONDRUM ILLAI

You cannot be a thing in this worldly object by visual appearance but without you there is no other object in this world

சுட்டறிவால் காணப்படுகின்ற ஒரு பொருளும் நீ இல்லை உன்னையன்றி ஒருபொருளும் இல்லை

யாருன்னை அறியகிற்பாரே. 394
YAAR UNNAI ARIYAKIRPAAREA

You have mingled in all the objects in cancelled form who will identify you with external visual eyes 


இவ் வண்ணம் கலந்து மறைந்து நிற்கின்ற உன்னை அரியவல்லவர் யார்


பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்

PAARPATHAM ANDAM ANAITHUMAAI MULAITHU

 Lard Siva you havegerminated asthis world and heaven  and all are controlled in thisuniverse

பூமியும் சுவர்க்கமும் அவற்றை அடக்கி உள்ள அண்டங்களுமாகத் தோன்றி  

பரந்ததோர் படரொளிப் பரப்பே

PAARANTHATHOOR PADAROLIP PARAIPEA

You are spread all over place in wonderful form and also spread in light form and you are within it

எங்கும் பரந்து ஒப்பற்ற மேன்மேலும் படர்கின்ற ஒளியின் பரப்பாக உள்ளவனே  


நீருறு தீயே நினைவதேல் அரிய

NEER YURU THEEYEA NINAIVATHEEAL ARIYA

 In the ashes at the inner side you are fire glow form inthat cancelled form you if we arethink over you are rare one

நிரின் கண் பொருந்திய தீயாக உள்ளவனே நினைக்க முயற்சித்தால் அதற்கு அரிய  

நின்மலா நின்னருள் வெள்ளச்

NINMALAA NINARUL VELLA

Without any impurities you are flooded form of blessings

மலமற்றவனே நினது அருள் வெள்ளமாகிய  


சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே

SEER YURU SINTHAI ELUNTHA THOOR THEENEA 

In my pure thinking mind where you have appeared just like honey

சீர்மை பொருந்திய சிந்தையில் தோன்றிய ஒப்பற்றவனே

திருப்பெருந்துறையுறை சிவனே 

THIRUPERUNTHURAI YURAI SIVANEA

 Inthat way you have taken abode in Thiru perunthurai

திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே
ஆருற வெனக்கிங் காரய லுள்ளார்

AAR YURAVU ENAKUINGU YAARAYAL YULLAR

You are all the objects and all the humanbeings and you have cancelled in to it I see it in the happy jothi light

 And then in this world who is relative to me and enemy to me

இந்த உலகத்தில் எனக்கு உறவானவர் யார் அயலாக உள்ளவர் யார் என்றவாறு  

ஆனந்தம் ஆக்குமென் சோதி. 395 

AANANTHAM AAKKUM ENJOTHI

And all are allowed to live in this world haply under your light
இறைவா நீயே அனைத்தும் அனைவரும் ஆதலைக் காண்கின்றேன்


சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்

JOTHIYAI THONDRUM YURUVAMEA ARUVAAM

You are just like light form(LEADMKINDLY LIGHT) AND YOU DO NOT HAVE ANY CONCERET FORMas material one AND ONLYOBSTRSPACT FORM

ஒளியாகத் தோன்றும் உருவமே உருவற்ற அருளாகிய ஒருவனே  

ஒருவனே சொல்லுதற் கரிய 

ORUVANEA SOLUTHARKU ARIYA

 You are one but veethas are unable tosee you


ஆதியே நடுவே அந்தமே பந்தம்

AADHIYEA NADUVEA ANTHAMEA PANDHAM

You are first middle and last person to this world and five bothas covered form

முதலும் இடையும் முடிவுமாய் உள்ளவனே ஐந்து பஞ்சபூதங்களால் விளையும் கட்டினை  

அறுக்கும் ஆனந்தமா கடலே 

ARUKKUM AANANTHAMAA KADALEA

And that bond is broken form and just like happy living form of sea

      அறுக்கும் ஆனந்தம் ஆகிய பெரிய கடலே


தீதிலா நன்மைத் திருவருட்குன்றே

THITHUILLA NANMAI THIRUVARUL KUNDREA 

 You are not mixed with any defectsand you are only good form and you are blessing hill form

தீமையே கலவாத நன்மையே வடிவான திருஅருள் மலையே

திருப்பெருந்துறையுறை சிவனே 

THIRUPERUNTHURAI YURAI SIVANEA

 In that state you have descended in Thiru perum thurai temple

திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே


யாதுநீ போவதோர் வகையெனக்கருளாய்

YATHUNEE POVATHU OORVAKAI ENAKU ARULAAI 

 to get rid off this clutches of life please tell me the way to get releaf from it and what is the way please tell me and then bless me

உய்ந்து போவதற்கு உரியதோர் உபாயம் யாது என்று எனக்கு அருளுக என்றவாறு

வந்துநின் இணையடி தந்தே. 396 
VANTHUNIN INAIADI THANTHEA

 Please you descended to this world and then give me yourtwo feet
நீ எழுந்தருளி வந்து நின்று இரண்டும் திருவடிகளையும் அடியேனுக்கு அளித்து


தந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச்

THANTHATHU UNTHANNAIK KONDATHU ENTHANNAI

 You have come in to my mind as experience giver and then you have taken me as your disciple

அடியேனுக்கு அணுவாகப் பொருளாகத் தந்து உன்னை அனுபவிப்பவனாக ஏற்றுக் கொண்டது என்னைச் 

சங்கரா ஆர்கொலோ சதுரர் 

SANGARAA AARKOLO SATHURAR

 Lord Siva who is judicious person between you and me

சங்கரா நம் இருவரில் சாமர்த்தியம் பொருந்தியர் யார்


அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
ANDHAM ONTRU MILAA AANANTHAM PETREEN 

 my dear lard I have got from you infinitive bliss

அடியேன் தேவரிடமிருந்து எல்லை இல்லாத ஆனந்தம் பெற்றேன்

யாதுநீ பெற்றதொன் றென்பால் 

YAATHUNEE PETRATHU ONDRUENPAAL

 my dear have you got any thing from me please tell me

தேவரின் அடியேனிடம் இருந்து பெற்ற பொருள் ஏதேனும் உண்டா


சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்

SINTHAYEA KOVILKONDA EMPERUMAAN

 You have taken abode in to my mind 

என் மனதையே கோயிலாகக் கொண்டு வீற்றிருக்கும் எம் பெருமானே

திருப்பெருந்துறையுறை சிவனே 

THIRUPERUNTHURAI YURAI SIVANEA

 You are residing in thiru perum thurai temple place

திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே


எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்

ENTHAIYEA EESSA YUDAL IDAMKONDAAI

 My dear father have you taken my body as blessing and living spot

எம் தந்தையே ஈசா என் உடலையும் நீ எழுந்து அருளும் இடமாகக் கொண்டாய்  

யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே. 397
YAAN ITHARKU ILANOOR KAIMMAAREA 

 To this help what I have received and in return I am not in a position to give youany consideration


இத்தகைய பெறுதலுக்குச்செய்யும்கைமாறு ஒன்றும் இல்லை என்றவாறு


திருச்சிற்றம்பலம் OM CHITRAMBALAM


February 19, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: