THIRUPONUSAL
16. திருப்பொன்னூசல் – அருட் சுத்தி
THIRUPONUSAL
(தில்லையில் அருளியது – ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா)
அருட்சக்தி இருந்து ஆடத் தாலாட்டி மகளிர் ஆட்டும் பொன்னுசல் பாடல்களில் இறைவன் அறக்கருணையும் அருளால் பெற்ற தூய்மையும் விளக்கப்படுகின்றன
மகளிர் ஊசல்ஆடும் பொழுது இறைவன் புகழைப் பாடுவது ஆகும்.
பரிபாகமுற்ற ஆன்மாக்கள் அறிவால் சிவனே ஆன அடியார்கள்.
அம்மகளிர் நிலையில் இருந்து பாடுகின்ற அருட்பாக்கள் ஆகும்.
While staying in Chitamberm he sang the following poems
While ladies are sitting in the swing(yoongal) they sang the following poems. Here ladies means the ripped souls She mingled with ganna knowledge and then she converted herself in god form. Saint Manikavasager stands into the feet of ladies and sang the following songs
சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
SERRAR PAVALNGKAAL MUTHTHAM KAYIRU AKA
The lovely coral (pavalam) is the leg of the swing and white pearl garland is the rope of the swing
சிறப்புகள் நிறைந்த பவளமே கால்களாகவும் வெண்மையான முத்து மாலையே கயிறாகவும்
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
ERAARUM PORPALAKAI ERI INITHU AMARNTHU
The beautiful golden seat of swing on it we climb and seated there with pleasure
அழகு மிக்க பொன்னால் ஆகிய பலகை மீது ஏறி இனிமையுடன் இருந்து
நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
NARAYANAN ARIYA NANMALATHTHAL NAAI ADIYORUKU
Thurumal unable to see lard Sivas feet but he shows me his feet even though I am dog like low graded person
திருமாலும் அறிய முடியாத அன்று மலர்ந்த தாமரை மலரைப் போன்றதிருவடியை நாய் போன்ற இழிந்த அடியோர்க்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
OORAKA THANTHARULUM YUTHARA KOSAMANGAI
Lard has descended into the Yutharagosa mangai abode
ஊர் ஆகத் தந்து அருளும் உத்தரகோச என்னும் ஸ்தலத்தில்
ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப்
AARA AMUTHIN ARULTHAAL INNAIPAADI
He is just like amutham form (nectar) which is drunk a lot of it, it won’t be in distaste form so that his twin feet are sung
எழுந்தருளி உள்ள உண்டு தெவிட்டாத அமுதத்தை ஒப்பான திருஅருளே வடிவான திருவடி இணைகளைப் பாடி
போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ. 329
PORAAR KANMADAVEER PONNUSAL AADAMO
Fighting with each other that form of arrow like eye sight possessed ladies you may sit on the swing and then swayed on either side
ஒன்றோடு ஒன்று சண்டை இடுகின்றவையும் வேலை போன்றவையும் ஆகிய கண்களை உடைய பெண்களே பொன்மயமான ஊசலில் இருந்து ஆடுவோம் என்றவாறு
மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
MUNDRANGU ILANGU NAYANATHTHAN MUUVAATHA
Lard Siva is in active form and three eyes are possessed form and he did not got old age
விளங்குகின்ற முன்று கண்களை உடையவனும் மூப்பு அடையாத
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
VAANTHANGU DEVAR KALUM KAANA MALAR ADIGAL
Those deevas who are residing in the upper world that deevass are unable to see the tender feet of lard Siva whose feet are stayed into my mind
வான் உலகத்தில் தங்கி வாழ்கின்ற தேவர்களும் கணாத மலர்போலும் மெல்லிய திருவடிகள் என் உள்ளத்தில் தங்கி
தேன்தங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு
THENTHANGI THITHITHU AMUTHU OORI THAN THELINTHU ANGU
That feet is just like honey form which give me in tastier form and then which clear my mind
தேன் நிறைந்த தித்தித்து அமுதம் போலும் இனிமையை மேல்மேலும் கூர்ந்து தெளிவைப் பிறப்பித்து
ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
UNTHANGI NINDRU OORUKUM UTHTHARA KOSAMANGAI
He melts our flesh whose abode is Yuthira gosa mangai. He is our king
ஊனினை உருக்கும் உத்திரகோச மங்கை கோனும்
கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
KONTHANGU IDAIMARUTHU PADIK KULAMANJAI
The king form of lard Siva who has descended in the abode of Yuthira gosa mangai we sing his glory and just like peacock shadow
கோனும் ஆகிய சிவபெருமான் எழுந்து அருளி உள்ள திருவிடை மருத்தூரைப் பாடி மரபு வழியில் வந்து மயில்போலும் சாயலையும்
போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ. 330
PONDRUANGU ANANADAIYEER PONNUSAL AADAMO
you are just like annabird like walking and you are young girls you may seated on the swing and play it
அன்னம் போன்ற நடையினையும் உடைய பெண்களே
முன்னீறும் ஆதியு மில்லான் முனிவர்குழாம்
MUNERUM AADHIYUM ILLAN MUNIVARKULLAM
Lard Siva has no begning and end and the saints group
முதல்வனாகிய முடிவும் முதலும் இல்லாத பெருமான் முனிவர் கூட்டம்
பன்னூறு கோடி யிமையோர்கள் தாம் நிற்பத்
PALNUURU KODI IMAIYOORKAL THAAMNIRPA
Where hunderd and hunders of crores of deevas are stood before you
முப்பத்து முக்கோடி தேவர்களும் திரு அருளை வேண்டி நிற்க
தண்ணீர் எனக்கு அருளித் தன்கருணை வெள்ளத்து
THANNEERU ENAKU ARULI THANKARUNAI VELLATHU
You gave me your sacred ashes to me and then blessed me and which has emanated on my part
தன் வீபூதியை அடியேனுக்கு அளித்துத் தன் கருணைப் பிரவாகத்து உள்ள
மன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை
MANUURA MANNUM MANI YUTHTHARA KOSAMANGAI
And then oozing out from my heart in that way he has descended in to the yuthara gosa mangai abode
கிடந்து ஊரும் வண்ணம் எழுந்தருளி உள்ள அழகிய உத்தரகோச மங்கை கோயிலில்
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
MINYEERUM MADA VIYANMAALIGAI PAADI
The lightning like glittering manson’s beauty is sung with our songs
மின்னல் கொடிகள் மிக்க மாடங்களையும் பாடி
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 331
PONERU PUUNMULAIYEER PONNUSAL AADAMO
You are 24 gold carrot pure form and you have adorn gold ornaments on your breasts and then ascended on the swing and swayed it
முலையினை உடைய பெண்களே பொன் ஊசல் ஆடுவோம் என்றவாறு
நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
NANJUAMAR KANDATHTHAN ANDATHTAVAR NAADHAN
Lard Siva’s throat is in blue color form who is the king of upper world deevas
நஞ்சை உண்ட கண்டனும் வானத்தவர்களுக்கு தலைவனும்
மஞ்சுதோய் மாடமணி உத்தரகோசமங்கை
MANJU THOOI MADAMANI UTHTHARA KOSAMANGAI
In the yuthara gosa mangai mansions are crawling with clouds in lovely form
மேகங்கள் தோயப்பெற்ற மாடங்களால் அழகு பெற்ற உத்தரகோச மங்கையாகிய
அஞ்சொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
ANJSOLAL THANODUM KUDI ADIYAVARKAL
The lovely wards are coming from Yumaadevi mouth and they stayed mingled form in the minds of disciples and saints
அழகிய சொல்லை உடைய உமாதேவி யாருடன் கூடி அடியார்கள் மனத்திலே நின்று நின்று
நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து
NENJULEA NINDRU AMUTHAM OORIK KARUNAISEITHU
He has been oozing out in the minds of saints in nectar form
அமுதம் போல மனத்துளே ஊறி இனித்துக் கருணை செய்து அவர்களுக்கு சாதலையும் பிறத்தலையும் நீக்கும் சிவபெருமான்
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
THUNJAL PIRAPU ARUPPAAN THUUYA PUGAL PAADI
He has been removing their birth and death so that we naturally praise his feet by songs
உடைய இயல்பாகவே சிவபெருமான் உடைய தூயதான புகழைப்பாடி
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ. 332
PONJAMAAR VELVALAIYEER PONN YUUSAL AADAMO
My dear girls you have adorned with exquisite white bangles and then you placed lard Siva in gold swing and swayed him to sleep
திரட்சியான வெண்மை நிறம் பொருந்திய வயல்களை உடைய பெண்களே பொன் ஊசல் ஆடுவோம் என்றவாறு
ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
AANO ALIYO ARIVAIYO ENTRU IRUVAR
Bharma and Vishnu are unable to distinguish whether he is man woman or ali
பிரமா விஷ்ணுக்கன் ஆணோ பொண்ணோ அலியோ என்று
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
KANAAK KADAYULKARUNAIYINAL DEVARKULAAM
They are unable to know him and then in grace form of deeva cluster
அறிய முடியாத கடவுளும் கருணையினால் தேவர் கூட்டம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
NANAAMEA YUIYYA AATKONDARULI NANJUTHANAI
They are unable to hesitate and got upliftment from the blessing of lard Siva and from the sea emanated poison
நாணா வண்ணம் அவர்கள் நாணாது உய்யக் கருணையினால் ஆட்கொண்டு அருளி நஞ்சினை
ஊணாக உண்டருளும் உத்தர கோமங்கைக்
YUUNAKA UNDARULUM UTHTHARA KOSAMANKAI
He has consumed it as food form and then seated in the Yutharagosa mangai temple place
உணவாகத் திரு அமுது செய்து உத்தரகோச மங்கை
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
KOONNAAR PIRAICHENNI KUUTHTHAN KUNAMPARAVI
The curved tender moon which is adorned on the hair of lard Siva. He is a happy dancer always we describe his mannerism and sang and then pray him
வளைந்த இளம் பிறையினைத் திருமுடியிலே அணிந்த ஆனந்தக் கூத்தப் பெருமான் உடைய குணங்களைச் சொல்லித் தோத்தரித்து
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ. 333
POONAAR VANAMULAIYEER PONNUSAL AADAMO
Ladies you have adorned neck and breast ornaments with it you sing lard Siva’s glory
அணிகள் பலவும் நிறைந்த அழகிய முலையினை உடைய பெண்களே பொன்ஊசல் ஆடுவோம் என்றவாறு
மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
MATHU AADU PAKATHTHAN UTHTHARA KOSAMANGAI
Lard Siva has given left part of his body to lardess Yumaadevi and descended in Yutharagosa mangai temple place
உமாதேவியார் எழுந்தருளி உள்ள இடது பாகத்தை உடையவனும் உத்தரகோச மங்கை என்னும் தலத்தில் எழுந்தருளி உள்ள
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
THATHADU KONDRAI SADAIYAAN ADIYAARUL
Lard Siva adorned the pollon filled konrai flower garland on his hair who has taken me as his desciples
மரகதங்கள் நிறைந்த கொன்றை மலரை அணிந்த சடையை உடையவனும் என்னைத்தன் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
KOTHAAITI NAAYENAI AATKONDU EN THOLPIRAVI
Lard Siva considered me as his child and reared me and controlled me. In my good old days
ஒருவனாக சீராட்டி ஆட்கொண்ட எனது பழமையான பிறவியை உள்ளதுமான
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
TEETHU YOODA VANNAM THIGALAP PIRAPPU ARUPPAAN
He has destroyed my good old miss-deeds completely and then he has terminated my birth at root level
துன்பங்கள் தப்பி ஒடாத வண்ணம் நீக்கி அடியேன் விளங்க எனது பிறவியை வேரோடு அறுப்பவனும் ஆகிய
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
KAATHAADU KUNDALANGAL PADIK KASINTHU ANBAAL
Lard Siva has adorned ear moving ornament (gundalam) which is swaying on either side on seeing it we pray with melted heart
சிவபெருமான் உடைய அசைகின்ற குண்டலங்களை அன்புடன் மனம் கசிந்து பாடி
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 334
POTHAADU POON MULAIEER PONNUSAL AADAMO
You are in the stage of getting puberty and you have adorned gold ornaments on your breasts which has won over the pods of flowers and you may sway softly the swing
மலரும் பருவத்து அரும்புகளை வென்று விளங்குகின்ற அணிகளை அணிந்த முலையினை உடைய பெண்களே பொன் ஊசல் ஆடுவோம் என்றவாறு
உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை
UNNARKU ARIYATHIRU UTHRA KOSAMANGAI
Those who are tied with relationships and positions they are unable to think over lard Siva in Yuthagosamangai
பாசபசு ஞானிகளால் எண்ணுதற்கு அறிய திரு உத்தரகோச மங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
MANNI POLINTHIRUNTHA MAA MARAIYOON THANPUGALEA
In This shrine he has taken permanent place in the form of anthana and whose glory
என்னும் ஸ்தலத்தில் நிலைபெற்று விளங்கி இருக்கின்ற அந்தணனாகிய சிவபெருமான்
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
PANNI PANITHU IRANJA PAA VANGAL PATRU ARUPPAAI
Prayed with lard Siva’s glory so many times and fallen down on land and prayed him. He removed that type of disciple’s sins permanatly
பலகாலும் சொல்லிப் பணித்து கீழே விழுந்து வணங்கும் அன்பர்களுடைய பாவங்களின் தொடர்புகளை நீக்குபவன்
அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல்
ANNAITHIN MELYEARI AADUM AANIMAYILPOL
The Annaa bird (lark) on it back peacock dances
அன்னம் பறவையின் மீது ஆடும் அணி மயில் போல்
என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்
ENATHTHAN ENNAIYUM AATKONDAN ELILPAADI
My father who has held on us and control on me that mannerism is sung by songs
என்னுடைய தந்தையும் என்னை ஆட்கொண்டவரும் என்னைத் தன்பால் ஏற்றுகொண்டவரும் சிவபெருமானுடைய கவர்ந்து இழுக்கும்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 335
PONOTHA PUUN MULAIYEER PONNUSAL AADAMO
You have adorned your breasts with gold ornaments and you may sway the gold swing by singing songs
பொன் நிறத்தால் ஒத்து விளங்கும் பூண்களை அணிந்த முலையினை உடைய பெண்களே பொன் ஊசல் ஆடுவோம் என்றவாறு
கோலவரைக்குடுமி வந்து குவலயத்துச்
KOLA VARAI KUDUMI VANTHU KUVALAYATHTHU
You have not only taken abode in the kaiyilai hills but also descended into this world
அழகிய கயிலையாகிய மலை உச்சியில் எழுந்தருளி இருப்பது அன்றி பூமியின் கண் வந்து
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
SAALA AMUTHUNDU THAKKADALIN MEETHU ELUNTHU
மதுரையில் வந்தி என்னும் பிட்டுவிற்கும் வாணிகக் கிழவி அவள் தரும் பிட்டு பிரகிருதி மாயா காரியம். இது அன்பு என்னும் சுத்த மாயாகாரியமான குனசக்கரை கூட்டப்பட்டு,அதனைக் கூலி ஆளாக வந்து இறைவன் விரும்பி உண்டார் , வந்திக்குப் பரமுத்தி நிலையை அளித்தார்.
இறைவன் திருக்கயிலையில் உமையம்மைக்கு ஆகமங்களை உபதேசித்து அருளிய பொழுது பாராமுகமாக அம்மை இருந்ததால் மீனவப் பெண்ணாகப் பிறக்கச் சபித்தார். சாப விமோட்சனம் வேண்ட உரிய காலத்தில் தாமே மீனவர் வேடத்தில் வந்து வலைவீசிப் பெரிய மீனைப் பிடித்துக் கொன்று உம்மை மணப்பேன் என்று கூறினார்.
இப்பாடல்கள் – திருவடியையே ஊராகத் தந்தான். திரு அருள் சார்பால் ஆன்மா சுத்தம் அடைதல், தன் கருணை வெள்ளத்தில் ஊற வைத்தமை, கருணை செய்து, இறப்பு பிறப்பு அறுப்பவன், ஆன்மாக்களைச் சுத்தி செய்யும் தீட்சை, அன்பால் கசிதல், பாவங்கள் பற்று அறுதல், திரு அருள் சேர்க்கையால் சுத்தி பெற்ற ஆன்மா அகம் குழைதல், உள்ளம் உடல் பூரித்தல், இறைவன் ஆட்கொள்ளும் முறையும் , அதன் பயன் பிறப்பறுத்தல் கூறுவதால் அருள் சுத்தியாயிற்று.
He ate residue rice cake which is given Vanthi old lady as wages to lard Siva and so that she got place in the heaven and lard Siva who has taken the form fisher man and travel on the sea to kill shark fish and then blessed the fisher men sect
கட்டுமரத்தில் பரதவனாக எழுத்து அருளும் மீனவன்
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
GNALAM MIGAPPARIMER KONDU NAMAI AANDAAN
He has descended in this world as horse man so as to elevate this world people to upper world
இந்த உலகமானது ஈடேறி உயரக் குதிரையின் மேல் உட்கார்ந்து கொண்டு பரிமேல் அழகராக எழுந்தருளவும் நம்மை ஆட்கொண்ட பரமன்
சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை
SELAM THIKALUM THIRU UTHTHIRA KOSAMANGAI
That cool place is Yuthara gosa mangai place
குளிர்ச்சியோடு விளங்கும் திரு உத்தரகோச மங்கையில்
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
MAALUKKU ARIYANAAI VAYAARA NAAMPAADI
Even Thirumal unable to see Lard Sivas feet but we pray him with mouth full of songs
திருமாலும் அறிந்து வழிபடற்கரிய அவனை நாம் வாய் நிரம்பப் பாடி நாம்
பூலித் தகம்குழைந்து பொன்னூசல் ஆடாமோ. 336
PUULITHU AKAMKULAINTHU PONNUSAL AADAAMO
Our mind and body with un-controable joy and filled with mouth full of songs so that our mind melts and then swing the yoongal
நமது மனமும் உடலும் பேரானந்தத்தால் நிறையும்படி மனம் கசிந்து பொன் ஊசல் ஆடுவோம் என்றவாறு
தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
THENGULAVU SOLAI THIRU YUTHTHARA KOSAMANGAI
Coconut trees are surrounded and flower bushes are covered place is Yuthara gosa mangai place
தென்னைகள் சூழ்ந்து விளங்குகின்ற சோலைகள் சூழ்ந்த திரு உத்தரகோச மங்கையில்
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
THANGUULAYUU JOTHI THANI YURUVM VANTHARULI
Lard Siva is descended as fire and light form. He has taken that special form
எழுந்தருளி விளங்குகின்ற பேரொளியில் பிழம்பான தானேயான வடிவம்
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
ENGAL PIRAPPU ARUTHTHITU EMTHARAMUM AATKOLVAAN
We are also relieved from this birth and death decease. You have removed it and whatever state we are you have descended in that state and prevailed upon us and managed us
எங்கள் அநாதியே பற்றிவரும் பிறவி நோயை நீக்கி எந்த நிலலையிலும் ஆட்கொள்வதற்காக
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
PANGUULA YUU KOTHAIYUM THANUM PANIKONDA
He gave left part of his body to ladess Parvathi and together they descended as ARTHANARISWARER form and accepted as their slaves and then employed under their feet
இடது பாகத்தில் விளங்குகின்ற உமாதேவியும் தாமுமாக எழுந்தருளி வந்து அடிமையாக ஏற்றுக்கொண்டு பணி கொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
KONGU YULAVU KONDRI SAIYAAN KUNAMPARAVI
The scent fragrance filled konrai flower garland you have adorned it and who has long pigtail of hair possessed lard Siva whose nature is praised with songs and rock the swing
மணம் வீசுகின்ற கொன்றை மலர் மாலையை அணிந்த திருச்சடையை உடைய சிவபெருமானுடைய குணங்களைப் பாடி
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 337
PONGU YULAYUU POONMULAIYEER PONNUSAL AADAAMO
You have adorned your breasts with so many ornaments .You are ladies sway the swing and allow the god to take rest at night and then go sleep we slowly swaying the swing.
கிளர்ந்து விளங்குகின்ற அணிகளாக அணிந்த முலைகளை உடைய பெண்களே பொன் ஊசல் ஆடுவோமாக என்றவாறு
திருச்சிற்றம்பலம் om thiruchitrambalam