OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUUNTHIYAAR

ganesheit February 14, 2019

14. திருஉந்தியார் – ஞான வெற்றி

THIRUUNTHIYAAR

(தில்லையில் அருளியது- கலித்தாழிசை) 

உந்தியாடும் மகளிர் விளையாட்டு இதன் மூலம் முப்புரம் எரித்தது தக்கன் யாகம் அழித்தது ஆகியவற்றைக் கூறும் ஞான வெற்றி

உந்திபறத்தல் மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. கைகள் இரண்டையும் மேலே தூக்கி, இருமருங்கிலும் நீட்டிவானில் பறப்பதுபோல, இரு கால்களையும் சேர்த்துப் பெருவிரல் நுனியில் நின்றுகொண்டுபாடிஆடும் விளையாட்டுகளில் ஒன்று. பெரியாழ்வார் திருமொழிதலைவன் வெற்றியைவாயால் புகழ்ந்துகொண்டுஉயரஎழுந்துகுதித்தல் என்றகுறிப்புகாணப்படுகின்றது. Thiruyunthiyar is a play which is played by girls.

While playing they are singing with three castles are destroyed,Thakkan yoga fire is destroyed and so on

Manikavasager while staying in Thilaiyambathi he saw girls are playing way

 It is such type of play girls are raised their hand on either side just like wings. They raised their legs and stand on one finger and play it

       While playing one girl praises lard Siva’s glory and another girl explains the effects of that glory

1 to 4 poem explains that three castles are destroyed

By fire

5 to12 poems explains that Thakkan yoga fire destroyed

13to17 punishment given to different persons

18 Bharma head beheaded

19 Ravana power destroyed

20 praising the saint’s


வளைந்தது வில்லு விளைந்தது பூசல் 

VALANTHATHU VILLU VILANTHATHU POOSAL

The Meru hills are converted as bow and war started

மேருமலையாகிய வில் வளைந்தது போர் முண்டது


உளைந்தன முப்புரம் உந்தீபற 

YULANTHANA MUMPURAM UNTHEEPARA

The three castles are destroyed by fire. You play it by flying

திரிபுரங்களும் வலைந்தன என்று பாடித் தோழியே நீ உந்தீபறப்பாயாக என்று கூற


ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. 295 
ORUNGUDAN VENTHAVARRU UNTHEEPARA

The three castles are destroyedinstantly the other girl said

மற்றவன் முப்புரங்களும் ஒரு சேர வெந்தமையைப் பாடி உந்தீபற என்றாள் என்றவாறு


ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் 

EERAMBU KANDILAM EKAMPAR THAMKAIYIL

In the hands of Eagambeeswarer I did not see two arrows at any movement of time

ஏகாம்பரநாதர் திருக்கரத்திலே இரண்டு அம்புகளை நான் ஒருபோதும் கண்டது இல்லை


ஓரம்பே முப்புரம் உந்தீபற 

ORR AMBEA MUMPURAM UNTHEEPARA

That single arrow is unnecessary my dear friend you may go on flying

ஓர் அம்பினாலேயே முன்று புரங்கள் அழிந்தன என்று என் தோழியே உந்தீபற


ஒன்றும் பெருமிகை உந்தீபற. 296 
ONDRUM PERUMIGAI YUNTHEEPARA

That single arrow is excess one my dear friend

அந்த ஒரு அம்பும் கூட பெரு மிகையாம் உந்தீபற என்றவாறு


தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்

THACHU VIDUTHALUM THAAMADI YITALUM

To prepare a chariot tocarry Siva on itto battle field .In that chariot he put a foot on it 

தேரினைத் தைத்துத் தன்முன் ஓடவிடுத்தலும் அதில் நாம் அடி வைத்தலும்


அச்சு முறிந்ததென் றுந்தீபற 

ANCHU MURINTHATHENRUYUNTHEEPARA

The chariot prime axle has broken you sing it and yunthieepara

தேர் அச்சு முறிந்தது அதனைப் பாடி உந்தீபற


அழிந்தன முப்புரம் உந்தீபற. 297 
ALINTHANA MUP PURAM YUNTHEEPARA

இத்திருப்பாடல்முப்புரப் போருக்குத் தேர் முதலியவை பயன் படாமையைஅறிவிக்கின்றது.

பூமியைத் தேராகவும், சூரியசந்திரர்களைத் தேர்ச்சக்கரம் ஆகவும்,கலைகளைக் காலாகவும்,மேருமலையைவில்லாகவும்,அக்கினியைஅம்பின் அடியாகவும்,சந்திரனைஅந்தஅம்பின் இடைப் பகுதியாகவும்,திருமாலைஅதன் நுனியாகவும்,வாயுவைஅம்பின் சிரசு (தலை) ஆகவும் அமைத்தனர்.

    இறைவன் தேர்மீதுஅடிவைத்ததும் அதன் அச்சுமுறிந்தது. ஆனாலும் இறைவன் தன் சிரிப்புஆற்றலால் முப்புரங்களையும்,காற்றுஅலைகளால் அழித்தார் என்றவாறுஅதனுள் உணர்த்தப் படுகிறது.

    இறுமாந்துதம் ஆற்றலால் தான் இறைவன் முப்புரங்களையும் அழிக்கஉள்ளார் என்றுஎண்ணினர். அந்தஎண்ணத்தைஉணர்ந்தசிவபெருமான் அவர்கள் உதவி இல்லாமல் சர்வசக்திமான் என்றவிதிப்படிஅழித்தார்.  

Anyhow before going for war the three castles are destroyed by mearlaughing

ஆனாலும் முப்புரங்களும் அழிந்தன உந்தீபற என்றவாறு


உய்யவல் லாரெரு மூவரைக் காவல்கொண்

UYIYA VALLAAR ORU MUUVARAI KAAVALKONDU

While destroying three castles three personsare escaped from the fire they are brought back and given to guard his door steps 

திரிபுரம் எரித்த காலத்தில் அதில் பிழைக்கத் தக்கவர்காளகிய முவரையும் தமக்குக் காவலாகக் கொண்டு


டெய்யவல் லானுக்கே உந்தீபற 

EIYYA VALLANUKEA YUNTHEEPARA

By shooting an arrow such type of warier he is and you sing about him and then yuntheepara

அழியும் வண்ணம் அம்பு எய்ய வல்ல பெருமானுக்கே உந்தீபற


இளமுலை பங்கனென் றுந்தீபற. 298 
ILAM MULAI PANGAN ENTRU YUNTHEEPARA

அழியும் வண்ணம் அம்புஎய்யவல்லசிவபெருமானுக்கேஉந்தீபற. அவன் இளமைபொருந்தியமுலையினைஉடையஉமாதேவியைஒருபாகத்தேஉடையவன் என்றுஉந்தீபறஎன்றவாறு.

அழிக்கவேண்டியவற்றைஅழித்து,கப்பவர்களைக் காக்க இறைவனுடையஆற்றல் இதில் எடுத்துஉரைக்கப் படுகின்றது.

உய்யவல்லார் : தாரகாட்சன்,கமலக்ஸன்,வித்துன்மாலி இவர்கள் மூவரும் சிவபக்தியும், இடையறாதுசிவபூஜையும் செய்யும் சிந்தையும் உடையவர்கள்;. சிவபெருமானிடமேஅழியாவரத்தையும்,பறக்கும் கோட்டைகளையும் பெற்றவர்கள். பெறுதற்குஅரியதைப் பெற்றபின் சிந்தைபிரிதல் உயிர்களுக்கு இயற்கை. வரம் பெற்றதும் நகரங்கள் பலவற்றையும் அழித்துவந்தனர்.

தேவர்களும் முனிவர்களும் இறைவனிடம் முறையிட்டும்,அவர்கள் சிவனடியார்களாகவிளங்குவதால் எவராலும் அவர்களைஅழிக்கமுடியவில்லை.

அந்நிலையில் திருமால் புத்தர் அவதாரம் எடுத்துஅவர்கள் இடம் சென்று அரன் அடிக்குஅன்புசெய்யும் செயலைமாற்றினார். பின்னர் சிவபெருமான் அவர்களைமட்டுமேஉய்யக் கொண்டுமுப்புரங்களையும் எரித்தார்.

முப்புரங்களைச் சிரித்தேஎரித்தார். உய்யக் கொண்ட மூவரையும் திருக்கோயிலில் காவலர்களாக    இருக்கப் பணித்தார்.

He gave his tender breasts are possessedlardessyumadeevi and lard Siva gave left part of his body to her

இவன் இளமை பொருந்திய முலையினை உடைய உமாதேவியை ஒரு பாகத்தை உடையவன் என்று உந்தீபற என்றவாறு


சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்

SAADIYA VELVI SARINTHIDA DEVARGAL

Veerabathirer who has destroyed the yaga fire pit and deevas 

வீரபத்திரன் தாக்கிய வேள்வியானது அழியத் தேவர்கள்


ஓடிய வாபாடிஉந்தீபற 

OODIYAVAA PAADI YUNTHEEPARA

அஞ்சி ஓடியவற்றினைப் பாடி உந்தீபற

They frightened and ran away my dear friend you sing it and then yunti para


உருந்திர நாதனுக் குந்தீபற. 299 
URUNTHIRA NAADHANUKU YUNTHEEPARA

தக்கன்வேள்வியில் சிவனுக்குஉரியஅவிர்பாகம் தரமறுக்கப்பட்டது. இறைவன் வீரபத்திரைஅனுப்பி,வேள்வியைஅழித்துவரப் பணித்தார்.

அந்தவேள்வியில் அவிர்பாகம் உண்டும் திருமால் அழியாது இருந்தான். அதற்குக் காரணம் பிரம்மனின் தந்தையாவார். பிரம்மன் அவன் தலையெழுத்தை இன்றும் முடிக்கவில்லை.

படைப்புத் தொழிலைஉடையபிரம்மன் காக்கும் தொழிலைஉடையதிருமால்,சிவனின் வேலையாட்கள்அந்தப் பதவியைத் தந்ததுசிவபெருமான் என்றுஉணர இயலாதவர்கள் இருவரும் ஆயினர் என்றுஎள்ளிநகையாடஉரைத்ததுஆகும்.

மிகக் கொடியவன் ஆகியஅக்கினித் தேவன் அவியைவிழுங்குவதற்காகஅதனைஉருட்டியகையைவீரபத்திரன் வெட்டினான். எனவேயாகமேகலங்கியதுஎன்றுஉந்தீபறஎன்றார்.

Lard Siva whose name here is yurithiranather you sang it and then yuntheepara

உருதிரர்களுக்கும் எல்லாம் தலைவனாகிய சிவபெருமானுக்கு உந்தீபற


ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று

AA AA THIRUMAAL AVIPPAKKAM KONDANRU

O ALAS O ALAS WHERE Thirumal has taken the yoga fire offered food and cried with sorrow

அவிப்பாகத்தைக் கொண்டு அன்று திருமால் அய்யோ அய்யோ என்று


சாவா திருந்தானென்றுயுந்தீபற 

SAAVAATHU IRUNTHAAN ENTRU YUNTHEEPARA

He is saved from the verge of death so play with yunthi para

இறக்காது இருந்தனே என்று உந்தீபற


சதுர்முகன் தாதையென் றுந்தீபற. 300 
SATHUR MUGAN THAATHAI ENTRU YUNTHEEPARA

He is the father of bharama with that song you yunthipara

அவன் பிரமனுக்குத் தந்தை என்று உந்தீபற என்றவாறு


வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய 

VEIYAVAN ANGI VILUNGATH THIRATIYA

The bad fellow of sun sub god who collected the yoga fire food in ball form

மிகக் கொடியவனாகிய அக்கினித் தேவன் அவியை விழுங்குவதற்காக அதை உருட்டிய


கையைத் தறித்தானென் றுந்தீபற 

KAIYAI THARINTHAAN ENTRU YUNTHEEPARA

God slashed his hand so sing it and then yunthipara

கையை வெட்டினான் இறைவன் என்று உந்தீபற


கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 301 
KALNGKITRU VELVI ENTRU YUNTHEEPARA

The yoga gunda fire itself shed its tears you sing it and then yunthi para

யாகமே கலங்கியது என்று உந்தீபற என்றவாறு


பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்

PAARPATHIYAI PAKAI SAATRIYA THAKKANAI

Thaken said that his daughter is also his enemy you sing and then yunthi para 

பார்வதி தேவியாரையே பகை என்று சொன்னதக்கனை


பார்ப்பதென் னேயேடி யுந்தீபற 

PAARPATHU ENNEADE YUNTHEEPARA

HOW WILL YOU SEE IT MY DEAR FRIEND WITH THAT SONG YOU PLAY YUNTHI PARA

பார்ப்பது என்னே தோழி உந்தீபற


பணைமுலை பாகனுக் குந்தீபற. 302 
PANNAI MULAI PAAKANUKU YUNTHEEPARA

Lard Siva you have taken left part of your body with that song you may play yunthi para

உமாதேவியை ஒருபாகம் கொண்ட சிவபெருமானுக்கு நீ உந்தீபற என்றவாறு

இது பெண்மைக் குலத்தையேபழித்தஅந்தகனைப் பார்ப்பதுஏன்என்கின்றது. (பெண்களின் தலைவிதாட்சாயிணி)

தாட்சாயிணிஎன்றநாமத்தோடு இருந்தஉமாதேவிதக்கன் தன்னையும் ,தம் தலைவனையும் பகைத்தமையால் அவன் சார்பில் வந்ததேகத்தையேஉதறிப் பெயரையும் அழித்துப் பர்வதராஜனுக்குமகளாகியபார்வதிஆனாள்.

        சிவநிந்தனைகளைப் பார்ப்பதும் பாவம் ஆதலின் அவனைப் பார்ப்பதுஎன்னேஎன்றாள்.

        தக்கன் பெண் குலத் தலைவியாகியபராசக்தியையேஅவமதித்ததால்,அவனோடுதமக்கென்னஉறவு,அவனைப் பார்ப்பதுஏன் என்றுகேட்டாள். எனவேஅவன் ஆட்டுத் தலைக்குஉரியவன் ஆனான்.

        இந்திரன் ஒருபூங்குயில் ஆகிமரத்தில் ஏறிஒளிந்துதப்பினான். வியாத்திரன் (பிரம்மா) யாகப் பசுவைக் கொல்பவன். அவன் தலையைஅறுத்துமான் தலையைப் பொருத்தினான். தக்கன் தலைவெட்டப்பட்டுஆட்டுத்தலைவைக்கப் பட்டது.

        சூரியன் கண்கள் பிடுங்கப் பட்டன.

        கலைமகள் மூக்குஅறுபட்டது.

        பிரம்மன் சிரம் அழிந்தது.

        சந்திரன் முகம் நெரிந்தது.

        சூரியனுடைய சிவந்த வாயினில் பற்கள் வாரிநெரிக்கப்பட்டது.


புரந்தர னாரொரு பூங்குயி லாகி 

PURANTHARANAARORU PUNGUYI LAAGI

Inthira who has converted into a parrot and claimed into tree with that you play yunthi para

இந்திரன் ஒரு பூங்குயிலாக மரத்தில் ஏறி


மரந்தனி லேறினார் உந்தீபற 

MARANTHANIL EARINAAR YUNTHEEPARA

He has climbed on the tree and concealed himself and yunthi para

மரத்தில் ஏறி ஒளிந்து தப்பினான் உந்தீபற


வானவர் கோனென்றே உந்தீபற. 303 
VAANAVAR KONENTRA YUNTHEEPARA

He is the king of devas with that song you may yunthi para

அவன் யார் தெரியுமா தேவர்களுக்கு எல்லாம் அரசன் என்பது உந்தீபற என்றவாறு


வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை 

VENGINA VELIVI VIYATH THIRAANAR THALAI

With angry mood of yaga fire pit the fire head named viyaathiranaar

என்னடி கொடிய கோபத்தோடு இயற்றப்பட்ட யாகத்திலே வியாத்திரனார் தலை


துஞ்சிய வாபாடி உந்தீபற 

THUNGIYAVAAPAADI YUNTHEEPARA

Be headed that characteristic feature you may sing and then yunthieepara

அழிந்த தன்மையைப் பாடி உந்தீபற


தொடர்ந்த பிறப்பற உந்தீபற. 304 
DHODHARNTHA PIRAPPARA YUNTHEEPARA

The births are coming continuously just like flood water. It is going to be terminated in this life so happily play yunthi para

வெள்ளம் போலத் தொடர்ந்து வரும் மறு பிறப்பும் இற்றது என்று உந்தீபற


ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்

AATIN THALAIYAI VITHIKU THALAI AAGA

Thakken is one of the Bharammas Lard Siva cut his head and then in its place put goat head

பிரம்மர்களில் ஒருவன் ஆகிய தக்கனுக்கு தலையாக விளங்கும்படி ஆட்டுத் தலையை

 
கூட்டிய வாபாடி உந்தீபற 

KUUTIYAVAA PAADI YUNTHEEPARA

He replaced goat head in the place of Thakken head you may sing about it while playing

சேர்ந்த வாற்றினைப் பாடி உந்தீபற


கொங்கை குலுங்கிநின் றுந்தீபற. 305 
KONGAI KULUNGI NINTRU YUNTHEEPARA

The breasts are vibrating while playing yunthi para

கொங்கைகள் உந்தீ பறப்பதனால் குலுங்கும்படி உந்தீபற என்றவாறு 


உண்ணப் புகுந்த பகனொளிந் தோடாமே

UNNA PUGUNTHA PAGAN OLITHU OODAMEA 

The sun god tried to eat the yoga gunda pit foot. He could not be allowed to conceal anywhere and ran away from that place and sing it yunthi para

யாகத்தின் அவியை உண்ண வந்த பகன் என்னும் சூரியவன் ஒழிந்து ஓடாத வண்ணம்


கண்ணைப் பறித்தவா றுந்தீபற 

KANNAI PARITHA VAARU YUNTHEEPARA

His eyes are plucked and sing about it

அவன் கண்களைப் பிடுங்கினவற்றைப் பாடுக என்றவாறு


கருக்கெட நாமெல்லாம் உந்தீபற. 306 
KARUKEDA NAAMELAAM YUNTHEEPARA

In this way Lard Siva did so many plays. But our births are so miserable one. He will terminate the nucleus of birth and then we are given heaven. You sing it and yunthee para

அங்ஙனம் பெருமான் செய்த அடியோ மெல்லாம் வருந்தும் பிறவிக்கு ஏதுவாகிய கருவனாது அழிய என்று உந்தீபற என்றவாறு


நாமகள் நாசி சிரம்பிர மன்படச் 

NAAMAKAL NAASI SIRAM PIRAMAN PADA

The wealth god named saraswathi whose nose is cut off and Bharama head is slashed

கலைமகள் மூக்கும் பிரம்மன் சிரமும் அழியவும்


சோமன் முகன் நெரித் துந்தீபற 

SOMAN MUGAM NERITHU YUNTHEEPARA

The moon god face is smashed and torned off you may sing it and yunthee para

சோமன் முகம் நெரியவும் ஒறுத்ததைக் கூறி உந்தீபற


தொல்லை வினைகெட உந்தீபற. 307 
THOLLAI VINNAIKEDA YUNTHEEPARA

By doing this our old misdeeds are terminated and play with yunthi para

அங்ஙனம் செய்வதால் நமது பழமையான வினை கெடுவதாக என்று உந்தீபற என்றவாறு

Bharama and maagathu eayamaan fallen down on land

நான்மறை யோனும் அகத்திய மான்படப்

NAANMARAI YONUM AGATHIYAMAANPADA

The yoga fire leader Thakkan perished

வேள்வித் தலைவன் ஆகிய தக்கன் அழியப் பிரமன்  


போம்வழி தேடுமா றுந்தீபற 

POMVALI THEDUMAARU YUNTHEEPARA

To escape from the wrath of veerabathara they tried to searched the way there that mannerism you sing and then yunthipara

தப்பிப் போவதற்கு உரிய வழியைத் தேடிய திறத்தைச் சொல்லி உந்தீபற


புரந்தரன் வேள்வியி லுந்தீபற. 308 
PUANTHARAN VELVIYIL YUNTHEEPARA

In that yoga Inthiran who has taken part tried to escape from that place sing it and then yunthi para

அந்த யாகத்தில் இந்திரன் தப்பியயோட முயன்றதைப் பாடி உந்தீபற என்றவாறு


சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை 

SURIYANAAR THONDAI VAAYINIL PARKALAI

The sun god who has taken part whose teeth are broken, you sing it

தக்கன் யாகத்தில் சூரியன் உடைய சிவந்த வாயில் உள்ள பற்களை


வாரி நெரித்தவா றுந்தீபற 

VAARI NERITHAVAARU YUNTHEEPARA

That teeth are replaced and crumbled that matter you may sing it

பெயர்த்து நொறுக்கிய தன்மையைப் பாடி உந்தீபற

So the yoga fire pit is completely turned it upside down so sing it here


மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 309 
MAYANKITRU VELVEE ENTRU YUNTHEEPARA

அதனால் வேள்வி நிலை குலைந்தது என்று உந்தீபற


தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கன்

THAKKANAAR ANTREA THALAI ILANTHAR THAKKAN

Thakken instantly lost his head

தக்கன் அப்போதே தன் தலை இழந்தான்  


மக்களைச் சூழநின் றுந்தீபற 

MAKKALAI SUULANINDRU YUNTHEEPARA

All Thakken sons and daughters are encircled him but they are unable to do anything you may sing it and yunthi para

தன் மக்கள் சூழ நின்றும் என்று உந்தீபற


மடிந்தது வேள்வியென் றுந்தீபற. 310 

MADINTHATHU VELVIENTRU YUNTHEEPARA

So yaga fire is destroyed sing it and yunthi para

அதனால் அந்த வேள்வி மடிந்தது என்று உந்தீபற


பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட

PALAKANAARKU ANTRU PAARKADAL EENTHIDA 

To saint yubamanyuu, Lard Siva gave milk sea as gift to drink

உபமன்யு முனிவருக்கு அகன்ற பாற்கடல் கொடுத்து அருளிய


கோலச் சடையற்கே யுந்தீபற 

KOLA SADAIYARKEAYUNTHEEPARA

Lard siva who has possessed lovely pigtail you may sing it and play yunthi para

அழகிய சடையை உடைய சிவபெருமானுக்கு உந்தீபற


குமரன்தன் தாதைக்கே உந்தீபற. 311 

KUMARAN THAN THATHAIKEAYUNTHEEPARA

உபிமன்யூ முனிவருக்குப் பாற்கடலைக் கொடுத்துஅருளியசடையினைஉடையசிவபெருமானுக்குஉந்தீபற,குமரப் பெருமான் தந்தைக்கேஉந்தீபற.

        உபமன்யூ முனிவர் குழந்தையாக இருந்தபொழுதுபால் வேண்டிஅழ,புலிக்கால் முனிவர் வேண்டுகோளின் வண்ணம் உபமன்யூ குடிப்பதற்காகப் பற்கடலைஅழைத்துஉண்ணக் கொடுத்தார் என்பதுவரலாறு.

The father of lard muruga you may sing it

குமரப்பெருமான் தந்தைக்கே உந்தீபற


நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை

NALLA MALARIN MEL NAAN MUGANAAR THALAI

 The lovely flower lotus on it seatedBharama whose head is

நல்ல தாமரை மலரின் மேல் எழுந்தருளி இருக்கும் நான்முகனார் தலை

 
ஒல்லை யரிந்ததென் றுந்தீபற 

OLLAI ARINTHATHU ENTRU YUNTHEEPARA

The head is plucked with nail you may sing it

விரைவில் கிள்ளியவற்றினைப் பாடி உந்தீபற


உகிரால் அரிந்ததென் றுந்தீபற. 312

UGIRAAL ARINTHATHU ENTRU YUNTHEEPARA

ஒருமுறைபிரம்மனுக்கும்திருமாலுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்றுபோட்டிஎழ,பிரம்மன் எனக்கும் ஐந்துதலை,சிவனுக்கும் ஐந்துதலை. சிவனையும் படைத்ததுநானே. சிவனும் எனக்கமகனேஎன்றுஅகந்தையால் கூறினனான். சிவன் இதைஉணர்ந்துஅவன் முன் தோன்றிவாமகனேஎனநான்முகனைஅழைத்தான். உடனேசிவன் காலபைவரைஅழைத்துஐந்துதலைகளுள் நடுவில் உள்ளதலையைநகத்தால் கிள்ளிவரஉத்தரவு இட்டார். அவ்வாறேஒருதலைநகத்தால் கிள்ளிநீக்கப்பட்டுக் கர்வம் நீக்கப் பட்டது.

 With nail cut off you may sing it

நகத்தினால் அரிந்தது என்று உந்தீபற


தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்

THERAI NIRUTHI MALAI EADUTHAAN SIRAM

Ravana whose chariot is stoped by the kaiyilai hills who tried to lift it with his hands

புஷ்பகம் என்னும் தேரை நிறுத்திக் கயிலை மலையைப் பெயர்த்த இராவணன் உடைய  


ஈரைந்தும் இற்றவா றுந்தீபற 

EERAINTHUM ITRAVAARU YUNTHEEPARA

 Those that ten heads are smashed you may sing it with praising songs

பத்து சிரங்களும் இற்றவாற் சொல்லி உந்தீபற


இறுபதும் இற்றதென் றுந்தீபற. 313 
IRUPATHUM ITRATHU ENTRU YUNTHEEPARA

Those twenty hands are mutilated that may also sing in your songs

இருபது தோள்களும் ஒடிந்தன என்று உந்தீபற


ஏகாசமிட்ட இருடிகள் போகாமல் 

EAGAASAM ITTA IRUDIKAL POKAAMAL

The persons are named Irudies who have adorned upper dress and the are saved

மேலே ஆடையை இட்ட இருடியாகிய வால இல்லியர்கள் அழியாதவாறு


ஆகாசங்காவலென் றுந்தீபற 

AAKAASAM KAAVAL ENTRU YUNTHEEPARA

இறைவன் ஆகாசத்திற்கே காவல் ஆனவன் என்று உந்தீபற


அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற. 314 
ATHARKU AAPALUM KAAVAL ENTRU YUNTHEEPARA

அதற்கு அப்பாலும் அவனே காவல் என்று உந்தீபற


திருச்சிற்றம்பலம் OM THIRUCHITRAMBALAM


February 14, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: