OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUTHELLEANAM

ganesheit February 13, 2019

11. திருத்தெள்ளேணம்

                                                THIRUTHELLEANAM

(தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) 

THILLAIYIL ARULIYADHU- NAALADI THARAVU KOCHAKA KALIPPA

சிவனுடன் கலந்து இடையறாது நிற்பதற்காக அவன் புகழ்பாடி மங்கையர் கும்மி கொட்டும் பாடல்

சிவனுடன் கலந்து இடையறாது நிற்பதற்காக அவன் புகழ்பாடி மங்கையர் கும்மி கொட்டும் பாடல். தெள்ளேணம் என்பது ஒருவகைப் பறையைக் குறிக்கும். மகளிர் பலர் ஒன்று கூடித் தமக்கு விருப்பமான பாடல்களைப் பாடிக கொண்டுசிறுபறை கொட்டி விளையாடுதல்.

          To mingle with god SIVA continuously, the ladies are praising the lord SIVA and they sing these KUMMI songs.

          Once MANICKVASAGAR was residing at CHIDAMBARAM, he went to a park where small girls are chanting songs (they have no meaning in it).

          So THIRUVATHAVOORAR has been taking the position of small girls, he sang so many songs to praise the lord SIVA using THELENNAM a kind of drum. Small girls clubbed into one group and were chanting songs.

          It may be this play and some other play we are not in a position to say correctly because there is no former record about it.

திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை 

THIRUMALUM PANRIYUM CHENDRU YUNARAATHA THIRUVADIYAI

திருமால் பன்றி வடிவாக எடுத்தும் தேடியும் அறியப்படாத திருவடியின்

Once THIRUMAL has taken the form of pig and tried to search the lord feet but in vain

உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் 

URUNAAM ARIYAVOR ANDHANANAAI AANDUKONDAAN

உருவத்தை நாம் அறிய பின் உய்ய ஒப்பற்ற ஆசிரியர் பெருந்தகையாக எழுந்தருளி ஆண்டு கொண்டவனும்

To know his form and to get upliftment from our present position, he descended as teacher to this world and he controls us

ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரந் 

ORUNAAMAM ORRYURUVAM ONRUMILLAR AAYIRAM

ஒரு பெயரும் ஒரு உருவமும் உண்மையாக ஒரு பொருளும் இல்லாதவனும் ஆகிய சிவபெருமானுக்கு ஆயிரம்

He has no name, no form, no wealth and possession, who is SIVA    with thousands


திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 235 
THIRUNAAMAM PAADINAAM THELEANEANAM KOTTAAMO

திருப் பெயர்களைப் புகழ்ந்து பாடித் தெள்ளேணம் கொட்டுவோம் என்றவாறு
He has thousands of names so we praise and beat the drums

திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக் 

THIRUVAAR PERUNTHURAI MEYAPIRAAN ENPIRAVI

திருபெருந்துரையில் விரும்பி எழுந்தருளிய சிவபெருமான் என்னை ஆண்டு என் பிறவியின்

He descended in the THIRUPERUNTHURAI aboad and he has ruled me manages me and my birth


கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை 

KARUVER ARUTHAPIN YAAVARAYUM KANDATHILLAI

மூலத்தை அறுத்த பிறகு யாம் எம்மவர் என்று யாரையும் கண்டது இல்லை

To destroy the root of birth afterwards I did not see any person he is my relative and other are not (there is no discrepancy on my part)


அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவும் 

ARUVAAI URUVAMUM AAYAPIRAN AVANMARUVUM

அருவும் உருவும் ஆகிய தலைவன் எழுந்தருளி உள்ள

He is in the form of concrete and abstract form he descended in


திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 236

THIRUVAAROOR PAADINAAM THELLENENM KOTTAAMO

திருவாருரைப் பாடித் தெள்ளேணம்கொட்டுவோம் என்றவாறு

We sing THIRUVAAROOR and beat the drums 

அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் 

ARIKUM PIRAMATKUM ALLADHA DEVARKATKUM

திருமால் பிரம்மன் ஏனைய தேவர்கள் இவர்களுக்கு

He did not give his appearance to THIRUMAL, BRAMA and other DEVAS


தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் வந்துநம்மை 

THERIKUM PADITHANRI NINRASIVAM VANDHUNAMMAI

தெரிவிக்க ஒன்னாத சிவபரம் பொருள் தாமே எழுந்தருளி வந்து

He did reveal his form SIVAPARAMPORUL, he himself descended


உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட்டுலகமெல்லாம் 

URUKUM PANIKOLLUM ENBATHUKETU YLAGAMELAM

நம்மை உருக்கும் பணிகளை ஏற்கும் என்று நாம் சொல்லுவதைக் கேட்டு உலகம் அனைத்தும்

He comes and melts us and turned us as a ripped fruit. We say it but the whole world


சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 237 
SIRIKUNDH THIRAMPAADITH THELLENENM KOTTAMO

சிரிக்கும் தன்மையைப் பாடி நாம்தெள்ளேணம் கொட்டுவோம் என்றவாறு

They will laugh at us this type of mannerism we sing and beat the drum to praise the lord


அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே 

AVAMAAYA THEVAR AVAKATHIYIL AZHUNDHTHAMEA

வீணாகத் தேவர்களது கீழான நெறியில் அழுந்தாதபடி

The spoiled DEVAS just like me the lower grade of life go and sink in it


பவமாயங் காத்தென்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி 

PAVAMAAYANGH KAATHENAI AANDUKONDA PARANJOTHI

பவ மாயம் காத்து என்னை ஆண்டு கொண்ட பிறப்பால் உண்டான வஞ்சனையில் இருந்து அடியேனைக் காப்பற்றிப்

The bad deed of birth he preserves and saves me from its defects


நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம்ஒழிந்து 

NAVAMAAYA SENJUDAR NALKUTHALUM NAAMOZHINTHU

புதிதாகச் சிவஞானத்தை அருளுதலும் நாம் என்னும் முனைப்பு நீங்கி

He teaches SIVAGANAA and blessed us the concept of I and I am removed from my mind (ego)


சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 238 
SIVAMANA VAAPADITH THELLENEM KOTTAMO

சிவம் ஆன தன்மையைப் புகழ்ந்து பாடித் தெள்ளேணம் கொட்டுவோம் என்றவாறு

I, we ego have gone from us, we are considered as SIVA this state of characteristics we will praise in the form of songs and beat the drums accordingly


அருமந்த தேவர் அயன்திருமாற் கரியசிவம் 

ARUMANDHA DEVAR AYANTHIRUMAT KARIYASIVAM

அரு மருந்தை ஒத்த தேவர்களுக்கும் பிரம்மன் திருமால் முதலியவர்களுக்கும் அறிதற்கு அறிய பரமசிவம்

The DEVAS are in the form of medicine, above all THIRUMAL and BRAMA all are unable to understand him


உருவந்து பூதலத்தோர் உகப்பெய்தக் கொண்டருளிக் 

URUVANDHU BHOODHALATHOR UGAPEITHAK KONARULIK

எம்மை அடிமையாக ஏற்றுக் கொண்டு அருளி

He has descended in the world in the form of GURU on seeing it, the world people will get pleasure, the GOD taken us as a slave and blessed us


கருவெந்து வீழக் கடைக்கணித்தென் உளம்புகுந்த 

KARUVENDHU VEEZHAK KADAIKANITHEN ULAMPUGUNDHA

என் பிறவிக்கு ஏதுவான கரு வெந்து விழும் வண்ணம் திருஅருள் நோக்கம் பாவித்து எனது மனத்தில் புகுந்து

You have blessed one to get rid of the nucleus of birth source and you have gone into my mind


திருவந்த வாபாடிக் தெள்ளேணங் கொட்டாமோ. 239 

THIRUVANDHA VAAPADIK THELLENENM KOTTAAMO

சிவஞானம் செல்வமாகத் திகழ்வதைப் புகழ்ந்து பாடித் தெள்ளேணம் கொட்டுவோமாக என்றவாறு

We have been turned in the SIVAGNANA resource we praise this state of mind and sing it and beat the drums accordingly

அரையாடு நாகம் அசைத்தபிரான் அவனியின்மேல் 

ARAYAADU NAAGAM ASAITHAPIRAAN AVANIYINMEAL

ஆடுகின்ற பாம்பைத் திரு அறையின் கண்ணே கட்டிய பெருமான்

He has tied the snake which dances in his half part of his body as a belt


வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிறம் 

VARAIYADU MANGAITHAN PANGHKODUMVANDH THAANDATHIRAM

இமயமலையரசன் மகிழ்ந்து கொண்டாடும் மங்கையாகிய உமாதேவியை இடது பாகத்தில் கொண்டு இப்பூமியில் வந்து எம்மை ஆட்கொண்ட தன்மையை

The king of Himalayas who praises and his daughter UMADEVI to whom the god SIVA give her his half part of his body. They descended to this world and taken me as their fold and manage me


உரையாட உள்ளொளியாட ஒண்மாமலர்க் கண்களில்நீர்த் 

URAYADA ULLOLIYADA ONE MAAMALARK KANGALILNEERTH

உரை தடுமாறவும் உள்ளொளி மிகவும் ஒள்ளிய பெரிய மலரை ஒத்த கண்களில் ஆனந்தக் கண்ணீர்

My words are trembling to come out, my inner light increases, my eyes are shedding happy tears


திரையாடு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 240 

THIRAYADU MAAPAADITH THELLENENGH KOTTAMO

திரையிட்டால் போல மூடித் ததும்பவுமாகப் பாடித் தெள்ளேணம் கொட்டுவோமாக என்றவாறு

It is closed by screen and overflowing of it, we sing and beat the drums

ஆவா அரிஅயன்இந்திரன் வானோர்க் கரியசிவன் 

AAVAA ARIAYANINDIRAN VAANORK KARIYASIVAN

ஆஆ மால் பிரம்மன் இந்திரன் முதலான தேவர்களுக்கும் அறிதற்கரிய சிவபெருமான் பூமியில் வந்து

‘O’ ‘O’ ah ah THIRUMAL BRAMA INDIRAN and the DEVAS he is rare to them. He is only far me descended to this world
ஒன்றற்கும் பற்றாத என்னையும் வா வா இன்றுஎனைப் பன்முறை அழைத்து வற்புறுத்தி அடிமையாக ஆண்டு கொண்ட பெருமான்

VAAVAAVENRENEYUM BOODHALATHEA VALITH AANDUKONDAN 
வாவாவென் றென்னையும் பூதலத்தேவலித்தாண்டுகொண்டான் 

ஒன்றற்கும் பற்றாத என்னையும் வாவா என பன்முறை அழைத்து வற்புறுத்தி அடிமையாக ஆண்டு கொண்ட பெருமான்

I am stupid and useless but called me by name in so many times and compels me and takes me as his slave and manages me

பூவார் அடிச்சுவ டென்தலைமேற் பொறித்தலுமே

POOVAR ADICHUVA DENTHALAIMEAL PORITHALUMEA

அவ்வண்ணம் ஆட்கொண்ட பெருமான் தாமரை மலர் போலும் திருவடியை என் தலைமேல் சூட்டி அதன் அடையாளத்தைப் பொறித்தவுடன்

In this way he prevailed and taken me in his fold and in his hold and he put his flowery feet on my head and its resemblance has been fixed in my body [TATTOO FORM]


தேவான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 241 

DEVANA VAAPADITH THELLENENGH KOTTAMO

நான் தெய்வத்தன்மை பெற்ற விதத்தை பாடித் தெள்ளேணம் கொட்டுவோமாக என்றவாறு

I have afterwards got godly features so that I sing and beat the drums

கறங்கோலை போல்வதோர் காயப்பிறப்போ டிறப்பென்னும் 

KARANKOLAI POLVATHOR KAAYA PIRAPO DIRAPENNUM

காற்றடியின் ஓலையைப் போல் வதாகிய உடலுக்கு இருப்பதாகிய பிறப்பு இறப்பு என்கின்ற அச்சத்தையும்

The palm leaf fan goes round and round just like birth and death, I fear about it


அறம்பாவ மென்றிரண்டச் சந்தவிர்த்தென்னை ஆண்டுகொண்டான் 

ARAMPAAVA MENRIRANDACH SANDHAVIRTHTHENNAI AANDUKONDAAN

இந்த உலகத்தில் உள்ள உண்மை தீமை என்ற இரண்டு செயல்களையும் என்னிடத்தில் இருந்து நீக்கி என் மேல் பற்றுக் கொண்டு என்னைத் தொடர்ந்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து இருந்தான்

The two views are good and bad deeds. He removed fear from me and taken hold on me and then manages me


மறந்தேயுந் தன்கழல்நான் மறவாவண்ணம் நல்கிய அத் 

MARANTHEYUNDH THANKAZHALNAAN MARAVAAVANAM NALKIYA ATH

தன் திருவடியை நான் மறந்ததும் மறவா வண்ணம் உபகரித்த

I will not be forgotten his golden feet inadvertently in this way he invites me


திறம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 242 

THIRAMPADAL PAADINAAM THELLENENGH KOTTAAMO

அத்தன்மையைப் பாடித் தெள்ளேணம் கொட்டுவோமாக என்றவாறு

Such a type of characteristics we sing his glory with drum beatings

கல்நா ருரித்தென்ன என்னையுந்தன் கருணையினால் 

KALNA RURITHTHENNA YENNAIYUNDHAN KARUNAYINAAL

கல் நார் உரித்தாற் போல வலிய மனம் படைத்த என்னையும் தன் கருணையினால்

You have pierced the stone just like I have hard stoned like mind you have melt it with your benevolent power


பொன்னார் கழல்பணித் தாண்டபிரான் புகழ்பாடி 

PONNAR KAZHALPANITH THAANDAPIRAN PUGAZHPAADI

பொன்னை ஒத்துப் போற்றத்தக்க திருவடியைத் தந்து ஆண்ட தலைவனுடைய புகழைப் பாடி

He has given gold like feet to me and he prevailed upon me so we sing his glory


மின்னோர் நுடங்கிடைச் செந்துவர்வாய் வெண்ணகையீர் 

MINNORE NUDANGHGIDAI SENDHUVARVAAI VENNAKAIYEER

மின்னல் கொடியை ஒத்துத் துலங்குகின்ற இடையினையும் சிவந்த பவளம் போன்ற வாயினையும்

The secret parts just like lightening line they have red lips just like PAVALAM (coral)


தென்னா தென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ. 243

THENNAA THENNAAVENDRU THELLENENGH KOTTAMO

தென்னா தென்னா என்று தெள்ளேணம் கொட்டுவோமாக  
we call his name the southern part of king named Thenan, king so that we play the drum and sing accordingly


கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் 

KANAVEYUNDH DEVARGAL KAANBARIYA KANAIKAZHALONE

தேவர்கள் கனவிலும் காண்பதற்கு அறிய ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்த பெருமான்

The lord SIVA has sound emanating anklet which can’t be seen by DEVAS even in their dream


புனவே யனவளைத் தோளியோடும் புகுந்தருளி 

PUNAVEA YANAVALAITH THOOLIYODUM PUGUNTHARULI

புனத்தில் வளர்ந்த முங்கிலை ஒத்த தோள்களை உடைய பெருமாட்டியோடும் எழுந்தருளி வந்து

In the forest bamboos are growing its stem part is just like UMA’S upper hand. The lord SIVA together with UMA descended to this world


நனவே எனைப்பிடித்தாட் கொண்டவா நயந்துநெஞ்சம்

NANAVE YENAIPIDITHAT KONDAVAA NAYANDHUNENJAM

என்னுடைய விழிப்பு நிலையிலேயே என்னைப் பிடித்து ஆட்கொண்டவற்றை மனத்தால் நயந்து  

In my conscious state of mind you have held me and prevailed me and with your mind you softly handled

சினவேற்கண்நீர் மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ. 244

SINAVERKAN NEER MALGATH THELLENENGH KOTTAMO

சிறிய வேல் போலும் கண்களில் மகிழ்ச்சிக் கண்ணீர் நிறைய தெள்ளேணம் கொட்டாமோ என்றவாறு  
in the arrow like eyes the happy tears filled with so that we sing and beat the drums and go on


கயல்மாண்ட கண்ணிதன் பங்கன்எனைக்கலந் தாண்டலுமே 

KAYALMAANDA KANITHAN PANGANYENAIKALANDH THAANDALUMEA

கயல் மீனை ஒத்த கண்களை உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட இறைவன் அடியேன் மனத்திலே புகுந்து என்னோடு ஒன்றி கலந்து ஆண்டனவும்

God has taken part of UMADEVI whose eyes are like KAYAL (fish like). He went into my mind and mingled with me and manages me


அயல்மாண்ட ருவினைச் சுற்றமுமாண்ட வனியின்மேல் 

AYALMAANDA ARUVINAICHUTRAMUM AANDA AVANIYINMEL

புறச் சார்பு நீங்கிப் போக்குதற்கு அறிய வினைகளால் விளைந்த உறவும் கெட்டு பூமியின் மேல் உள்ள 

We have had external dependence which has been gone from me the bad deeds are vanished in this world


மயல்மாண்டு மற்றுள்ள வாசகமாண் டென்னுடைய 

MAYALMAANDU MATRULLA VAASAGAMAAN DENUDAYA

மயக்கம் கெட்டு மற்றும் உள்ள பேச்சுகளும் கெட்டு என்னுடைய

We have attachment which has been removed and then theunnecessary words are not come from mouth


செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 245

SEYALMAANDA VAAPADITH THELLENENGH KOTTAMO 

ஜிவத் தொழிலும் கெட்ட முறையினைப் பாடித் தெள்ளேணம் கொட்டுவோமாக
my living and doing work came to an end. The way in which it came to an end and we sing and beat the drum accordingly


முத்திக் குழன்று முனிவர்குழாம் நனிவாட 

MUTTHIK KUZHANDRU MUNIVARKUZHAM NANIVAADA

முனிவர் கூட்டம் முக்தி இன்பம் அடைவதற்காக வருந்தமாக வாட

The saint group to get MUKTHI they have taken innumerable miserable ways

அத்திக் கருளி அடியேனை ஆண்டுகொண்டு 

ATHIK KARULI ADIYENAI AANDUKONDU

அந்த முக்தி திசையையே அடியோர்க்கு அருளிச் செய்து அடியேனை ஆண்டு கொண்ட

He has given me easily the heaven and he manages me


பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி 

PATHIK KADALUT PATHITHA PARANJOTHI

அன்பாகிய பெரிய கடவுள் என்னை என்றும் பெயராது பதியச் செய்த மேலான சோதி வடிவான சிவபெருமானை

The lovely prime god has given unmovable place in his heaven he is in the form of fire he is SIVA


தித்திக்கு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 246 

THITHIKU MAAPAADITH THELLENENGH KOTTAMO

தித்திக்கும் பாடல் பாடித் தெள்ளேணம் கொட்டுவோமாக என்றவாறு

Just like a sweet taste we sing and beat the drums accordingly to the song

பார்பாடும் பாதாளர் பாடும்விண்ணோர் தம்பாடும்

PAARPAADUM PAATHALAR PAADUMVINNORE THAMPAADUM

மன்னுலத்தார் பக்கமும் பாதாளத்தில் உள்ளார் பக்கமும் விண்ணவர் பக்கமும்  

Beside the land people underworld people and upper world people


ஆர்பாடுஞ் சாரா வகையருளி ஆண்டுகொண்ட
 

AARPADUM SAARA VAGAIYARULI AANDUKONDA

எவர் பக்கமும் சார்ந்து கெடாத வகையை அடியேனுக்கு அருளிச் செய்து

I’m not allied to anybody so that I am not spoiled you have blessed me


நேர்பாடல் பாடி நினைப்பரிய தனிப்பெரியோன்

NERPAADAL PAADI NINAIPARIYA THANIPERIYON 

நிகழ்ச்சிகளை அறிவிக்கும் பாடல்கள் பாடி நினைப்பதற்கு அறிய ஒப்பற்ற பெரியோன் ஆகிய சிவபெருமான்

The activities of lord SIVA we sing he is rarely recognized by thinking power who is lord SIVA


சீர்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 247

SEERPADAL PAADINAAM THELLENENGH KOTTAMO

புகழ் அமைந்த பாடல்களைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக  
The glorious activities of lord SIVA we say by way of songs and drum beats


மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே 

MAALE BRAMANEA MATROZHINTHA DEVARKALEA

திருமாலும் பிரம்மனும் ஏனைய தேவர்களும்

THIRUMAL BRAMA and other DEVAS


நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்தடியேன் 

NOOLE NUZHAIVARIYAN NUNIYANAAI VANDHADIYEN

வேத முதல் நூல்களும் முயன்றும் அறிய முடியாத பரமசிவம் மிக நுண்ணியதாய் அடியேன் பால் வந்து

The prime VEDAS and other books tried but unable to understand god he is such a micro form he comes to me


பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவாகத்தால் 

PAALEA PUGUNDHU PARINDU YURIKUM PAAVAAGATHAL

என் உள்ளத்தின் பால் புகுந்து கருணை செய்து என்னை உருக்குகின்ற தியான முதிர்ச்சியால்

He has entered into my mind he blessed me he melts me by meditation RIPPED FORM (MUDHIRCHIYAAL) (completeness)


சேலேர்கண் நீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ. 248

SELERKAN NEERMALKATH THELLENENGH KOTTAMO

சேல் மீன் ஒத்த கண்களில் ஆனந்தக் கண்ணீர் ததும்ப என்றவாறு  
The KENDAI fish like eyes, the eyes sheds water it trembles we can beat the drum and sing songs accordingly


உருகிப் பெருகி உளங்குளிர முகந்துகொண்டு 

URUGIP PERUGI ULANKULIRA MUGANDHUKONDU

மனம் ஊருகியும் உடல் பூரித்தும் மனம் குளிர இருகைகளாலும் முகந்து

My melting mind the body got excitement the mind got cooled down by the two hand we take


பருகற் கினிய பரங்கருணைத் தடங்கடலை 

PARUGAT KINIYA PARANKARUNAI THADANKADALI

குடித்ததற்கு இனிய மேலான கருணைக்கடல் ஆன இறைவனைத் தழுவி

And drink the highly praised god`s sea of blessing and then we are  embrace the lord SIVA


மருவித் திகழ்தென்னன் வார்கழலே நினைந்தடியோம் 

MARUVITH THIKAZTHENNAN VAARKAZHALEAA NINAITHADIYAAM

விளங்குகின்ற பாண்டிய னாகிய பெருந்துறையானது ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்த திருவடியே நினைத்து

We think over the PANDIYA’S mighty feet which are adorned by anklets


திருவைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 249 

THIRUVAIP PARAVINAAM THELLENENG KOTTAMO

இவ்வண்ணம் எல்லாம் செய்யக் கிடைத்த அடியோர்களின் புண்ணியப்பேற்றைப் போற்ற என வணங்கும்

By this way we have got the good deeds think over it and beat the drums


புத்தன் புரந்தராதி யர்அயன்மேல் போற்றிசெயும் 

BUDDHAN PARANTHARAATHI YARAYANMEL POTRISEYUM

-ஞானமே வடிவானவனும் பிரம்மன் திருமால் இந்திரன் முதலான தேவர்களும் போற்றி போற்ற என வணங்கும்

He is in GNANA form BRAMA, THIRUMAL, INDRA and etc. they cries that they say long live lord SIVA


பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பறுத்த 

PITHAN PERUNTHURAI MEYAPIRAAN PIRAPARUTHA

பித்தனும் திருப்பெருந்துறையில் விரும்பி எழுந்தருளிய பிரானும் அடியேனுடைய பிறவி அறுக்க

He is lunatic he descended in THIRUPERUNTHURAI he terminates my repeated world rebirth


அத்தன் அணிதில்லை அம்பலவண் அருட்கழல்கள்

ATHAN ANITHILLAI AMBALAVAN ARUTKAZHALGAL

தலைவனும் ஆகிய அழகிய தில்லை அம்பலனுடைய திரு அருளே வடிவான திருவடிகள்  

The feet of THILLAIAMBALAM (Chidambaram) he is always dancing         form he is my leader TO GUIDE ME


சித்தம் புகுந்தவா தெள்ளேணங் கொட்டாமோ. 250 

SITHAM PUGUNDHAVA THELLENENGH KOTTAMO

எனது மனத்தில் புகுந்தவாற்றைப் பாடித் தெள்ளேணம் கொட்டுவோமாக என்றவாறு

He has entered in my mind and sings and beat the trumpet accordingly

உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம் 

UVALAICH SAMAYANGAL OVAATHA SAATHIRAMAAM

பொய்யான சாத்திரங்கள் ஒன்றோடுடோன்று ஒவ்வாத சாஸ்திரங்களும் ஆகிய

The untrue VEDAS and contradictory with one another VEDAS


சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறும் 

SAVALAIK KADALYULA NAAIK KIDANTHU THADUMAARUM

தெளிவற்ற கடலிலே உள்ளனவாய்ச் செயல் அற்று கரை ஏறமட்டது இருந்து தடுமாறுகின்ற

The inactive sea of religion they are unable to get from the sea of differences and do not have clear cut principles of their religion


கவலைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளும் 

KAVALAIK KEDUTHUK KAZHALINAIGAL THANTHARULUM

கவலையைப் போக்கித் திருவடி இரண்டையும் உய்யும் உபகாரமாகத் தந்தருளும்

To remove our distress to get into the feet of god. And get upliftment in life and then get his blessings


செயலைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 251

SEYALAIP PARAVINAM THELLENENGH KOTTAMO

செய்கையைப் பிறவி நாம் தெள்ளேணம் கொட்டுவோமாக என்றவாறு  

The activities are teaches to this world and beat the drum

வான்கெட்டு மாருதம் மாய்ந்தழல்நீர் மண்கெடினும் 

VAANKETU MAARUTHAM MAAINTHAZHALNEER MANKEDINUM

அதனைச் சார்ந்த நீரும் அதனைத் சார்ந்த மண்ணும் கெடினும்தான் மட்டும் கெடுதல் இன்றி அசைவற்று இருக்கும் தன்மையானாகிய சிவபெருமானுக்கு

The space has spoiled and then the wind in it spoiled. It is depend on fire and water and all are depended on earth if all are spoiled by our act

The god alone motionless and unspoiled and such a character is lord SIVA


தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு 

THAANKETA LINDRICH SALIPARIYADH THANMAIYANUKU

தான் மட்டும் கெடுதல் இன்றி அசைவற்று இருக்கும் தன்மையாகிய சிவபெருமானுக்கு

He alone not spoilt he is ever motionless he is nucleus such a type of mannerism is lord SIVA

ஊன்கெட் டுயிர்கெட்டுணர்வுகெட்டென் உள்ளமும்போய்

OONKETU UYIRKETU YUNARVUKETEN ULLAMUMPOI 

என்னுடைய சதை கெட்டு என்னுடைய உணர்வும் கெட்டு என்னுடைய உள்ளமும் கெட்டுப்போய்

My flesh spoiled my impulses are spoiled my life is spoiled my mind is also spoiled


நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 252

NAANKETA VAAPADITH THELLENENGH KOTTAMO 

நான் என்னையே கெடுத்துக் கொண்டேன் இதைப் பாடித் தெள்ளேணம் கொட்டுக என்றவாறு

I am also spoiled I sing about it and beat the drums accordingly

விண்ணோர் முழுமுதல் பாதாளத் தார்வித்து

VENNORE MUZHUMUDHAL PAADHALTH THAARVITHU

தேவர்களும் முழுமுதற்கடவுளும் பாதாளத்தில் உள்ளவர்களுக்கு வித்தாகவும்  

The upper land DEVAS, Siva is prime god he is head to the lower land people


மண்ணோர் மருந்தயன் மாலுடைய வைப்படியோம்

MANNORE MARUNDHAYAN MAALUDAYA VAIPADIYOM

மண் உலக மக்களுக்குத் தேவ அமுதம் போல்பவனும் பிரம்மன் திருமால் இவர்களுக்குச் சேமநிதி போன்றவனும் ஆன சிவபெருமான்   

To this land people he just like DEVAMUDHAM to BRAMA and VISHNU he is just like a fixed deposit


கண்ணார வந்துநின்றான் கருணைக் கழல்பாடித்

KANNARA VANDHUNINARAN KARUNAIK KAZHALPAADHITH

அடியோர்கள் கண்ணுக்கு நேரே தமேவந்து நின்றான் அவனுடைய திரு அருளே வடிவான திருவடியை  

To the devotees just like me he obviously comes before me to see his blessed feetand our


தென்னாதென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ. 253

THENNATHENNAVENDRU THELLENENGH KOTTAMO 

தென்னா தென்னா எனப்பாடித் தெள்ளேணம் கொட்டுவோமாக

We call him as a king of southern part of India so we praise him and beat the drum

குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல் வளையாள் 

KULAMPAADIK KOKIRA KUMPAADIK KOL VALAYAAL

இறைவனுடைய குலத்தைப்பாடி அவன் அணிந்து இருக்கின்ற கொக்கு பூவையும் பாடி ஒருபாகமாக இருக்கின்ற திரண்ட வளையலை உடைய

We sing the gods sect and who wears the co co birds ‘feathers and flowers. He has given a part to who wear bangles


நலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாள்தோறும் 

NALAMPAADI NANJUNDA VAAPAADI NAALTHORUM

உமாதேவியின் நலன்களைப்பாடி இறைவன் தேவர்களைக் காக்கும் பொல்லாத நஞ்சு உணவாக உட்கொண்ட திருஅருள் செயலைப் பாடி

We sing UMADEVI good characteristics to save the DEVAS he consumed the poison so we praise his place of such an act


அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற

ALAMBAAR PUNALTHILLAI AMBALATHEA AADUGINRA 

அசைகின்ற நிறைந்த நீர் சூழ்ந்த தில்லையிலே சிற்றம்பலத்திலே இடைவிடாது ஐந்து தொழில் ஆடல் புரிகின்ற

The moving water is around the THILLAICHITRAMBALAM he does continuously five types of work by way of dancing (just like a heartbeat)


சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 254

SILAMBADAL PAADINAM THELLENENGH KOTTAMO 

எழுகின்ற சிலம்பு ஆடலையும் பாடி நாம் தெள்ளேணம் கொட்டமோ.

His anklets are always raising sound because he dances continuously so we sing and beat the drum of joy sound

திருச்சிற்றம்பலம்  om thiruchitrambalam

February 13, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: