THIRUPORSUNNAN –ANANTHA MANOLAYAM
9. திருப்பொற் சுண்ணம் – ஆனந்த மனோலயம்
THIRUPORSUNNAN –ANANTHA MANOLAYAM
(தில்லையில் அருளியது
– அறுசீர் ஆசிரிய விருத்தம்)
(THILLAIYIL
ARULIYADHU-ARUSEER AASEERIYA VIRUTHAM)
It is sung in THILLAI
இறைவன் புகழ்பாடி ஆனந்த மனோபவத்துடன் பொன் நிறமிருக்கும் பொடி இடித்துச் சிவபெருமான் திருமஞ்சனம் ஆடக் கொடுத்தல்
பொற்சுண்ணம் என்பது தலைமகன் திருமஞ்சனம் கொள்வதற்காகப் பொன்னோடு எட்டுவகையான நறுமணப் பொருட்களையும் கூட்டி உரலில் இடிக்கப்படுவது. பொன் நிறமாக இருக்கும் பொடி ஆதலின் பொற்சுண்ணம் எனப்பட்டது.
On singing SIVA’s glory with lighted heart the ladies prepare a golden color paste to get bath in it, so many varieties of fragrant elements are combined and mixed in the special instrument called YURAL in TAMIL language
It is in golden colour so the name is given as THIRUPORSUNAM
MUTHUNAL THAAMAMPOO MAALAITHOOKI
முத்துநல் தாமம்பூ மாலைதூக்கி
தோழிகளே முத்துக்கள் கோர்க்கப்பெற்ற நல்ல மாலைகளையும் பூமாலைகளையும் தொங்க வேண்டிய இடத்தில் தொங்கவிட்டு
Friends do the pearl garland and flower garland are hanged them at appropriate places
MOOLAIKUDAM THOOPAMNAL THEEBAMVAIMMIN
முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின்
முளைக்குடம் தூபம் தீபம் இவைகளையும் உரிய இடத்தில் வையுங்கள்
My dear friends you put the sprouting seeds, the fragrance emanating smoke. The oil light at appropriate places
SAKTHIYUM SOMIYUM PAARMAGALUM
சக்தியும் சோமியும் பார்மகளும்
உமாதேவி திருமகள் சரஸ்வதி
The LORDESS SAKTHI THIRUMAGAL PAARMAGAL (kalaivaani)
NAAMAKALODU PALLANDI SAIMIN
நாமகளோடுபல்லாண்டிசைமின்
நாமகளோடு சேர்ந்து பல்லாண்டு பாடுங்கள்
With NAAMAGAL(names) so many years you sing the glory of god
SITTHIYUM GOWRIYUM PAARPATHIYUM
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
சித்தி பார்வதி கௌரி
SITTHI GOWRI and PARVATHY
GANGAIYUM VANDHU KAVARIKONMIN
கங்கையும் வந்து கவரிகொண்மின்
கங்கையாகிய நீங்கள் வந்து கவரி வீசுங்கள்
GANGA DEVI you have also come and sway the hand fan
ATTHAN AIYAARAN AMMAANAI PAADI
அத்தன் ஐயாறன்அம்மானைப்பாடி
நாம் எங்கள் தலைவனும் திருவையாறனுமாகிய இறைவனைப் பாடி
We sing on praising our leader and the god of THIRUVAIYARU
AADAPOR SUNNAM IDITHU NAAMAEA
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 195
அவன் நீர் ஆடுவதற்குப் பொற்சுண்ணம் இடிப்போம் என்றவாறு
We prepare fragrance sandal paste to bath by lord SIVA
POOVIYAL VAARSADAI EMBIRAARKU
பூவியல் வார்சடை எம்பிராற்குப்
நாம் பூக்களோடு கூடிய நீண்ட சடையினை உடைய எம்பிரான் திருமஞ்சனம் கொள்ள
Our god has long pig tail adorned by flower garland we prepare to bath god by the golden colour perfume paste
POTRIRU SUNNAM IDIKA VENDUM
பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும்
பொன் நிறமான திருச் சுண்ணம் இடிக்க வேண்டும் வாருங்கள்
The golden colour sacred paste will be mingled please come on all my dear girls
MAAVIN VADUVAGI RANNA KANNEER
மாவின் வடுவகி ரன்ன கண்ணீர்
மா பிஞ்சின் வடுவின் பிளவை ஒத்த கண்களை உடைய பெண்களே
The leader eyes are just like tender mango sliced into two inside there is tender seed sliced into two it is just like ladies eyes
VAMMINGAL VANDHUDAN PAADUMINGAL
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள்
வாருங்கள் வந்து உடன் பாடுங்கள்
You my dear girls come and sing with others
KOOVUMIN THONDAR PURA NILAAMAEA
கூவுமின் தொண்டர் புறநிலாமே
தொண்டர்கள் வெளியில் நில்லாமல் அழையுங்கள்
Call all the disciples and asked not to stand outside please come in
KUNIMIN THOZHUMINENG KONENGKUTHAN
குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன்
ஆனந்தத்தால் ஆடுங்கள் வணங்குங்கள் எம் தலைவன் ஆகிய கூத்தப் பெருமான்
The god itself is a dancer so you dance before him with pleasure, pray him he is my leader
DEVIYUM THAANUM VANDHU EMMAIYAALA
தேவியுந் தானும்வந்தெம்மையாளச்
சிவகாமி தேவியும் தானுமாக வந்து எங்களை ஆட்கொள்ள
The leaders SIVA and Parvathi and the god himself came and take us in their fold
SEMPONSEI SUNNAM IDITHU NAAMAEA
செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே. 196
செம்பொன் சேர்ந்து செய்யப் பெற்ற சுண்ணத்தை இடிப்போம் என்றவாறு
The golden colour gold mingled with other fragrance and hitting it to mingle as a paste
SUNDARA NEER ANINDHUM MEZHUGI
சுந்தர நீறணிந் தும்மெழுகித்
தோழிகளே அழகான திருநீற்றை அணிந்து நீங்கள் சுண்ணம் இடித்தற்கு உரிய இடத்தை மெழுகி
My dear friends lovely sacred ashes are adorned and the place where the paste is prepared are cleaned by cow dung
THUUYA PON SINDHI NIDHI PARAPPI
தூயபொன்சிந்தி நிதிபரப்பி
தூய்மையான பசும் பொன்னான அவ்விடத்தில் சிதறிய மணி முதலிய நிதிகளைப் பரப்பி
The pure yellow gold is sprayed, the diamond and other costly materials are spread
INDHIRAN KARPAGAM NAATI ENGUM
இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்
இந்திரனுக்குச் சொந்தமான கற்பகமரம் கொணர்ந்து அங்கு நட்டு எங்கும்
The KARPAGA tree (which can give whatever we want) bring from INDHIRALOGA and placed it here and everywhere
EZHIL SUDAR VAITHU KODIYEDUMIN
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
அழகான கொழுந்து விட்டு எரிகின்ற தீபங்கள் நிறைந்து இடபக் கொடியைக் கட்டுங்கள்
The AGAL( MUD LIGHT) lights are put up everywhere and the flag of IDABAM (bull) tied everywhere
ANDHAAR KONAYAN THAN PERUMAAN
அந்தரர் கோன்அயன் தன்பெருமான்
தேவர்களுக்குத் தலைவனும் பிரம்மனும் பெருமானும்
SIVA is the head of DEVAS and BRAHMA he is god
AAZHIYAAN NAATHAN NAL VELANTHAADHAI
ஆழியான் நாதன்நல் வேலன்தாதை
தலைவன் நல்லவோர் படையைக் கையில் தாங்கிய முருகனுக்குத் தந்தை
The wheel force possessed sub god Thirumal whose god the good VELMURUGAN father
ENTHARAM AAL YUMAIYAAL KOZHUNAL
எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்
எம்முடைய பரிபாக நிலைக்கு ஏற்ப எம்மை ஆளுகின்ற உமாதேவியின் கணவனும் ஆகிய சிவனுக்குத்
The lord SIVA manages according to my mannerism of mine who is UMADEVI’s husband
KEINDHA POR SUNNAM IDITHU NAAMAEA
கேய்ந்த பொற்சுண்ணம் இடித்துநாமே. 197
தகுந்தாற் போல் நல்ல பொற்சுண்ணத்தை நாம் இடிப்போம் என்றவாறு
We will be hitting the appropriate golden paste to bath lord SIVA
KAASANI MINGAL ULAKKAI ELLAAM
காசணி மின்கள் உலக்கையெல்லாம்
தோழியர்களே நம்முடைய உலக்கைகளுக்கு எல்லாம் பொன்னும் மணியுமாகிய வடங்களை அணியுங்கள்
My dear friends to hit sticks (ULAKKAI)gold and diamond rope tied around it so that it will emanate sound while using
KAAMPANI MINGAL KARAIYURALAI
காம்பணி மின்கள் கறையுரலை
கரையாகிய உரலைப் பாட்டாடை சுற்றி அணி செய்யுங்கள்
The silk dress is tied around the rock grinder
NESAMUDAIYA ADIYAVARGAL
நேசமுடைய அடியவர்கள்
அன்பு உடைய அடியவர்கள் என்று
Those who have true devotees are in love with god
NINDRU NILAAYUGA ENDRU VAAZHTHI
நின்று நிலாவுக என்றுவாழ்த்தித்
நிலைபெற்று விளங்குக என்று வாழ்த்தி
Praise the lord with the word long live
DESAMELLAAM PUGAZHNDHU AADUM KATCHI
தேசமெல்லாம் புகழ்ந் தாடுங் கச்சித்
உலகம்யாவும் புகழ்ந்து கொண்டாடும் காஞ்சிபுரத்தில் உள்ள
The world is praised in the place of lord KANCHIPURAM abode
THIRUVEGAM PANSEMPON KOVILPAADI
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப்
திருவேகம்ப நாதனது செம்பொன் மயமான கோயிலைப் பாடி
The golden appearance of temple of THIRU EAGAM BHARA NAATHAR
PAASAVINAIYAI PARITHU NINRU
பாசவினையைப் பறித்துநின்று
நம்முடைய பாசங்களையும் வினைகளையும் வேறோடு பறித்து நின்று
Our family relationship lust and bad deeds all of them are removed from the stem root level
PAADI PORSUNNAM IDITHU NAAMAEA
பாடிப் பொற்சுண்ணம் இடித்துநாமே. 198
இறைவனைப் பாடிப் பொற் சுண்ணம் இடிப்போம் என்றவாறு
We praise the lord simultaneously and hit the golden paste for lord
ARU KEDUPPAAR AYANUM ARIYUM
அறுகெடுப்பார் அயனும்அரியும்
இறைவனுடைய திருவடியில் சூட்ட அருகம்புல் எடுத்தவர்களாகிய பிரம்மனும் திருமாலும்
BRAHMA and THIRUMAAL and all the sub gods have taken ARUGAMPUL (grass)to put in the feet of lord SIVA and pray him
ANDRIMATTRU INDIRANODU AMARAR
அன்றிமற்றிந்திர னோடமரர்
அல்லாமல் மற்று சந்திரனோடு கூடிய தேவர்களும்
Apart from INDHIRA and DEVAS
NARUMURU DEVARKANANKAL ELLAAM
நறுமுறு தேவர்கணங்கெளெல்லாம்
நறுமுருக்கின்ற மற்ற தேவர்கள் கூட்டம் எல்லாம்
The other DEVAS group are in the boiling mind that they are not in the first place to praise and pray god
NAMMIR PINBU ALLATHU EADUKKA VOTTOM
நம்மிற்பின் பல்லதெடுக்க வொட்டோம்
நமக்குப்பின்பு அல்லது முதற்கண் எடுக்க விடமாட்டோம்
We won’t allow others to pray first we only pray first then allow others afterwards only
SERIYUDAI MUMMADHIL EAIDHAVILLI
செறிவுடை மும்மதில் எய்தவில்லி
உறுதி உடைய முப்புரங்களையும் ஒரு அம்பால் எய்த வில்லை உடைய
He has destroyed with one arrow all the three castles which is wandering in the space
THIRUVEGAM PAN SEMPON KOVIL PAADI
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி
ஏகம்பத்தில் செம் பொன்னால் ஆகிய கோயிலைப்பாடி
In EGAMBAM abode the temple is made of red gold we sang it
MURUVAL SEVVAAYINEER MUKKANAPPARKU
முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற்
புன்முறுவல் பொருந்திய சிவந்த வாயினை உடைய பெண்களே முன்று கண்களை உடைய நம் தந்தை போல்வனாகிய சிவனுக்கு
Those who are red mouth ladies they slightly laugh at the three eyed SIVA who is like our father
AADA PON SUNNAM IDITHU NAAMAEA
காடப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 199
திருமஞ்சனம் கொண்டு அருளுவதற்காகப் பொற்சுண்ணம் இடிப்போம் என்றவாறு
To bath in the colour powder and bless the devotees we hit the red powder and so on
ULAKKAI PALAOCHU VAARPERIYAR
உலக்கை பலஒச்சு வார்பெரியர்
உலக்கையை ஓங்கிக் குத்துங்கள் பெரியவர்கள்
The elder people hit the grinder with greater force
ULAMELLAM URAL PODHAATHENDRAEA
உலகமெலாம்உரல் போதாதென்றே
இந்த உலகம் எல்லாம் உரலாக இருந்தாலும் இடம் போதாது என்று சொல்லும் படி
If the whole world is grinder, it is not enough to hit the powder
KALAKA ADIYAVAR VANDHU NINDRAAR
கலக்க அடியவர் வந்துநின்றார்
இதில் கலந்து கொள்ள அடியார்கள் வந்து வரிசையில் நின்றனர்
So many devotees stand in the queue to take part in it
KAANA YULAGANGAL PODHAATHENDRAEA
காண உலகங்கள் போதாதென்றே
பலர் உலகம் ஆகி இடம் போதாது என்றபடி காண வந்து நின்றனர்
The whole world is not enough to stand and see the god such number of people come and see it
NALAKKA ADIYOMAI AANDUKONDU
நலக்க அடியோமை ஆண்டுகொண்டு
நலமுற அடியார்களாகிய எங்களை ஆண்டு கொண்டு
God has prevailed up on us to live happy life well living life
NAAN MALAR PAADHANGAL SOODA THANTHA
நாண்மலர்ப் பாதங்கள் சூடந்தந்த
அன்று மலர்ந்த மலர்களைப் போன்ற திருவடிகளை நாங்கள்சூடிக் கொள்வதற்கு மகிழ்ந்து கொடுத்த
Today new flower just like the feet of god who gave us to adorn in our head
MALAIKU MARUKANAI PAADIPAADI MAGIZHNDHU
மலைக்கு மருகனைப் பாடிப்பாடி மகிழ்ந்து
இமயமலையின் மருகனாகிய சிவனைப் பலகாலும் பாடி
In the Himalaya mountain lord SIVA takes this place as his abode we praise him so many generations and long time
PON SUNNAM IDINTHUM NAAMAEA
பொற்சுண்ணம் இடிந்தும்நாமே. 200
மகிழ்ந்து பொற்சுண்ணம் இடிப்போம் நாம் என்றவாறு
We hit the golden powder with happiness
SOODAGAM THOLVARAI AARPPA AARPPA
சூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத்
கை வளையலும் தோள் வளையலும் பலகாலும் ஒலிக்க
The bangles and upper hand bangles are rising sounds
THONDAR KUZHAAM EZHUNDHAARPPA AARPPA
தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப
அடியார்கள் கூட்டம் எழுந்து ஆரவாரிக்க
The devotees stand up and rise the sound of praising
NAADAVAR NANDHAMMAI AARPPA AARPPA
நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாட்டு மக்கள் நம்மை நசைந்து ஆரவாரம் செய்ய
The people in the land laugh at us (they are lunatic devotees)
NAAMUM AVARTHAMMAI AARPPA AARPPA
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப்
அவர்களை நகைத்து நாமும் ஆரவாரிக்க
We also laugh at the people because they are not devotees
PAADAGA MELLADI YAARKU MANGAI
பாடக மெல்லடி யார்க்கு மங்கை
மெல்லிய திருவடியின் கண்ணே பாடகம் என்றும் அணியானது கிடந்து ஒலிக்கும் உமாதேவியாரை
The feet of UMADEVI is very thin she won’t wear PAADHAGAM (cheppal) it raises the sound
PANGINAN ENGAL PARAAPARANUKKU
பங்கினன் எங்கள் பராபரனுக்கு
இடதுபாகத்திலே உடையவனும் எங்கள் பராபரனும்
Left side of UMADEVI he is our god’s god
AADAGA MAAMALAI ANNAKOVIKKU
ஆடக மாமலை அன்னகோவுக்
மேருமலையை ஒத்த தலைவனுமாகிய இறைவன்
The Himalaya Mountain like leader is our god
AADA PON SUNNAM IDITHUM NAAMAEA
காடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 201
திருமஞ்சனம் கொள்ளப் பொற்சுண்ணம் இடிப்போம் என்றவாறு
To take bath we hit the power of golden colour
VAAL THADANGANMADA MANGAI NALLEER
வாள்தடங்கண்மட மங்கைநல்லீர்
ஒளி பொருந்திய அகன்ற கண்களையும் இளமையும் கொண்ட நல்ல மங்கையர்களே
You have light beaming eyes you have teenage good girls
VARIVALAI AARPPAVAN KONGAI PONGA
வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத்
கையில் உள்ள கீற்றுக்களோடு கூடிய நல்ல வளையல்கள் ஒலிக்க வளவிய கொங்கைகள் சிறந்து தோன்ற
The bangles in the hand are long lines which emanates rays it bangs the breast are coming forward
THOLTHIRU MUNDAN THUDHAITHILANGA
தோள்திரு முண்டந் துதைந்திலங்கச்
தோள்கள் இரண்டும் அழகிய தலையைச் சேர்ந்து
The two upper hands with lovely head
SOTTHEMBI RAANENDRU SOLLI SOLLI
சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி
எம் பெருமானே தோத்திரம் என்று சொல்லிச் சொல்லி
My dear lord we are chanting your songs repeatedly
NAAL KONDA NAANMALAR PAADHANGKAATI
நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி
அன்று அலர்ந்த தாமரை மலர் போன்ற பாதங்களைக் காட்டி
Today bloomed lotus flower just like the god’s feet
NAAYIL KADAIPPATTA NAMMAIYIMMAI
நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை
நாயினும் கடைப்பட்ட நம்மை இப்பிறவிலேயே
We are the last dog but in this birth itself
AATKONDA VANNANGAL PAADIPAADI
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி
ஆளக் கொண்ட முறைகளைப் பாடிப்படி
He has taken us as his disciple this mannerism we praise and sing
AADA PON SUNNAM IDITHUM NAAMAEA
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 202
அவன் நீர் ஆடுவதற்காகப் பொற்சுண்ணம் இடிப்போம் என்றவாறு
He has to take bath so we have to hit the golden powder
VAIYAGAM ELLAAM URALATHAAKA
வையகம் எல்லாம் உரலதாக
உலகம் யாவையும் உரலாகவும்
This world is just like a grinder
MAAMERU ENNUM ULAKKAI NAATTI
மாமேரு என்னும் உலக்கை நாட்டி
மேருமலையை உலக்கையாக மாற்றி இறைவனுக்கு பொற்சுண்ணம் இடிக்க
MAAMERU hills are just like a stick (ULAKKAI) to grind the powder
MEIYYANUM MANJAL NIRAIYA ATTI
மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி
உண்மை அன்பு என்னும் மஞ்சள் நிறைய இட்டு
The true love mixed with MANJAL (turmeric cake) put into the grinder
MAETHARU THENNAN PERUNTHURAIYAAN
மேதகு தென்னன் பெருந்துறையான்
மேன்மை பொருந்திய சிறந்த தென்னனும் பெருந்துறையானும் ஆகிய
The king of southern PANDIYA kingdom and THIRUPERUNTHURAI god
SEIYYA THIRUVADI PAADI PAADI
செய்ய திருவடி பாடிப்பாடிச்
அவனுடைய சிவந்த திருவடிகளைப் பாடிப்பாடி
God’s red colour feet are praising by way of songs
SEMPON ULAKKAI VALAKKAI PATRI
செம்பொன் உலக்கை வலக்கைபற்றி
செம்பொன் மேருவாகிய உலக்கையை வலக்கையால் இறுகப் பற்றி
The red colour Himalayas is the rock grinder with long stick to grind the powder which is hold by theright hand
AIYAN ANITHILLAI VAANANUKAEA
ஐயன் அணிதில்லை வாணனுக்கே
குருவாகிய தில்லை வானவனுக்கு
As a teacher his abode is in THIRU THILLAI abode
AADA PON SUNNAM IDITHUM NAAMAEA
ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 203
நீராடப் பொற்சுண்ணம் இடிப்போம் நாம் என்றவாறு
We prepare golden powder paste to take bath by the god
MUTHU ANI KONGAIGAL AADA AADA
முத்தணி கொங்கைகள் ஆடஆட
முத்துமணி அணிந்த கொங்கைகள் அசைய அசைய
The breast are adorned by pearl garland it swayed either way
MOIKUZHAL VANDINAM AADA AADA
மொய்குழல் வண்டினம் ஆடஆடச்
அடர்ந்த கூந்தலில் வண்டுகள் பலகாலும் எழுந்து ஒலிக்க
In the thick hair the trees are so many times goes up and down with singing
SITHHAM SIVANODUM AADA AADA
சித்தஞ் சிவனொடும் ஆடஆடச்
நம் மனம் அதில் கோயில் கொண்டுள்ள சிவனொடும் ஆட ஆட
Our minds are swayed here and there where god has taken his abode
SENGAYAR KANPANI AADA AADA
செங்கயற் கண்பனி ஆடஆடப்
சிவந்த கயல் மீன் போன்ற கண்களினாலும் ஆனந்தக் கண்ணீர் ஆட ஆட
The red colour fish eyes are shedding happy water so it dances and dances
PITHEM PIRAANODUM AADA AADA
பித்தெம் பிரானொடும் ஆடஆடப்
நாம் இறைவனோடு கொண்ட பித்து அவனோடு பலகாலம் ஆட
We have got lunatic love with god so we so many generation dances with him
PIRAVI PIRARODUM AADA AADA
பிறவி பிறரொடும் ஆடஆட
உலகில் உள்ள ஏனையோருக்கும் பிறவி அசைவு காண
The others in the world also swayed with birth and death who don’t pray god
ATTHAN KARUNAI YODU AADA AADA
அத்தன் கருணையொ டாடஆட
தலைவனாகிய சிவன் தன் கருணையாகிய சக்தியோடும் ஆட
The head SIVA dances with UMA his wife
AADA PON SUNNAM IDITHUM NAAMAEA
ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 204
அவன் திருமஞ்சனம் கொள்வதற்காகப் பொற்சுண்ணம் இடிப்போம் என்றவாறு
So he takes bath in red powder paste we hit the red colour powder in grinder
MAADU NAGAIVAAL NILAAVERIPPA
மாடு நகைவாள் நிலாவெறிப்ப
பல்லின் வெண்மையான ஒளி பக்கங்களிலே பறவ வாய் திறந்து
The white colour of the teeth spread on either side of the mouth
VAAI THIRANDHU AMPAVALANDHU THUDIPPA
வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப்
அலைய பவளம் போன்ற உதடுகள் துடிக்கப்பாடுங்கள்
The lovely PAVALAM mouth and its lips vibrates and sing the songs of god
PAADUMIN NANDHAMMAI AANDAVAARUM
பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
இறைவன் நம்மைப் பணி கொண்ட வகைகள் பற்றியும்
God has employed us in variety of ways
PANIKONDA VANNAMUM PAADI PAADI
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித்
இறைவன் நம்மை ஆட்கொண்ட முறைமையும் பாடிப்பாடி
God has taken us in his fold and manages according to his wish
THEDUMIN EMPERUMAANAI THEDI
தேடுமின் எம்பெருமானைத்தேடி
தேடி மனம் மகிழ அதனால் திகைப்புற்று
By searching and get happy about it and been astonished
SITTHAM KALIPPA THIGAITTHU THEARI
சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி
பிறகு சித்தம் தெளிவடைந்து ஆடுங்கள்
Afterwards get clarity about him and then dance
AADUMIN AMBALA THAADI NAANUM
ஆடுமின் அம்பலத் தாடினானுக்
நாம் திரு அம்பலத்துள் திருநடனம் புரியும்
We dance in the CHIDAMBARAM the god himself dances there
KAADA PON SUNNAM IDITHUM NAAMAE
காடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 205
பெருமான் திருமஞ்சனம் கொள்வதற்காகப் பொற்சுண்ணம் இடிப்போம் என்றவாறு
God to get bath in the golden powder paste we hit it to convert it to the powder form of fragrance
MAIYAMAR KANDANAI VAANANAADAR
மையமர் கண்டனை வானநாடர்
பாம்பின் விடம் தங்கப்பெற்ற கழுத்தினை உடையவனும் தேவர்களுக்கு
The poison of the snake standing in the neck of lord SIVA he is to the DEVAS
MARUNDHINAI MAANIKKA KOOTHAN THANNAI
மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை
அமுதம் போல்பவனும் மாணிக்கம் போலும் கூத்தினைச் செய்யும்
He is like AMUTHAM, like diamond and always dancing
AIYANAI AYYAR PIRAANAI NAMMAI
ஐயனை ஐயர்பிரானைநம்மை
தலைவனும் தலைவர்கள் எல்லோருக்கும் தலைவனும் நம்மைத்
He is the head of all the heads he will be
AGAPADU THAAT KONDARUMAI KAATTUM
அகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும்
தம் அருளில் சிக்கவைத்து ஆளாக ஏற்றுப் தம் அருமையை நாம் உணர்ந்து உய்ய உணர்த்தும்
He catches us in his fold of blessings he has taken as a person. His magnanimity is understood by us and want others to understand
POIYYAR THAM POIYANAI MEIYYAR MEIYYEI
பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யைப்
பொய்யார்க்குப் பொய்யனும் மெய் அடியார்களுக்கு மெய்ம்மை ஆனவனும்
He is a falsehood to false person and to the true devotees he is a real person to them
PODHARI KANNINAI PORRODITHOL
போதரிக் கண்ணினைப் பொற்றொடித்தோள்
பூப்போலும் செல்வரி படர்ந்த இரு கண்களையும் பொன்னால் ஆகிய வளையலை அணிந்த தோள்களையும்
The two eyes have red veins in it. He has adorned in his hand gold bangles
PAIYARA VALKUL MADANDHAI NALLEER
பையர வல்குல் மடந்தைநல்லீர்
பாம்பின் படம் போன்ற நல்ல உறுப்பை உடைய நல்ல பெண்களே
Just like snake picture of head ,the lady have their secret parts
PAADI PON SUNNAM IDITHUM NAAMAEA
பாடிப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 206
சிவனைப் பாடி நாம் பொற்சுண்ணம் இடிப்போம் என்றவாறு
We sing lord SIVA’s glory and then simultaneously we mixed the golden powder in the grinder by hitting a stick
MINNIDAI SENDHUVAR VAAIKKARUNGAN
மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
மின்னலை ஒத்துத் தோன்றி மறையும் இடையினையும் சிவந்த பவளம் போல் வாயினையும் கரிய கண்ணினையும்
Just like a lightning as her central part. The precious PAVALAM mouth and dark eyes
VENNAGAI PANNAMAR MEN MOZHIYEER
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர்
வெண்மையான பற்களையும் பண்ணை ஒத்த மேன்மையான மொழியையும் உடைய பெண்களே
The white teeth the music like light words who have this mannerism of girls
ENNUDAI AARAMUDU ENGALAPPAN
என்னுடை ஆரமுதெங்களப்பன்
என்னுடைய கிடைத்தற்கு அறிய அமுதம் போல்பவனும் எங்கள் தந்தையும்
He is my father he is like AMUTHAM which is rare to get
EMPERUMAAN IMA VAANKATKU
எம்பெருமான் இம வான்மகட்குத்
எங்களுக்குத் தலைவனும் இமயமலை அரசன் மகளாகிய பார்வதிக்குக் கணவன்
He is my leader and the mountain king’s daughter, PARVATHY she is SIVA’S wife
THANNUDAI KELVAN MAGAN THAGAPPAN
தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன்
பார்வதிக்கு கணவன் மகன் தகப்பன்
To PARVATHY he is her husband, son and father
THAMAIYAN EM AIYAN THAALGAL PAADI
தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப்
தமையன் என்ற பல்வேறு முறைகளை உடையவனும்
He is the son and so many relationships he has
PONNUDAI POON MULAI MANGAI NALLEER
பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்
பொன்னாகிய பூண்களை அணிந்த முலையினை உடையவர்களே மங்கை நல்லீர்
The breast of the lady are adorned by golden ornaments and they are good girls
POTTRIRU SUNNAM IDITHUM NAAMAEA
பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 207
எம் குருநாதனும் ஆகிய சிவபெருமான் திருவடிகளைப் புகழ்ந்து பாடிப் பொன் கூட்டிச் செய்யப் பெற்ற திருச் சுண்ணத்தை நாம் இடிப்போம் என்றவாறு
We praise the teacher feet and sang it we have prepared the gold mixed golden powder paste we will hit and mix it
SANGAM ARATTRA SILAMBU OLIPPA
சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்
சிவந்த அணிகளை உடைய பெண்களே சங்கு வளையல்கள் ஒலிக்கவும் காலில் அணிந்துள்ள சிலம்பு ஒலிக்கவும்
Those who wear good ornaments the KANCH ornaments are raising sound, in the leg anklets are raising sound
THAAZH KUZHAL SOOZH THARU MAALAIYAADA
தாழ்குழல் சூழ்தரு மாலையாடச்
தந்த கூந்தலைச் சுற்றி உள்ள மாலை ஆடவும்
The lowpig tail and its flower garland also swings
SENGANI VAAYI THAZHUM DHUDIPPA
செங்கனி வாயிதழுந்துடிப்பச்
சிவந்த கொவ்வைக் கனி போலும் உதடு துடிக்கவும்
The lips are in red (KOVAI) fruit from it vibrates
SEYIZHAI YEER SIVALOGAM PAADI
சேயிழை யீர் சிவலோகம் பாடிக்
சிவந்த அணிகளை உடைய பெண்களே இறைவனுடைய சிவலோகத்தைப் புகழ்ந்து பாடி
The red ornaments are adorned by ladies they chant SIVALOGA glory and sings
GANGAI IRAIPPA ARAA IRAIKKUNG
கங்கை இரைப்ப அராஇரைக்குங்
தலையில் அணிந்துள்ள கங்கையாறு ஒலிக்க அதைக் கண்டு திருமுடியில் பாம்பு சீறி ஒலித்தும்
The Ganges in the head of lord SIVA raises sound of water on hearing it the snake in the head raises hissing sound
KATTRAI SADAIMUDI YAAN KAZHARKAEA
கற்றைச் சடைமுடி யான்கழற்கே
சடைக் கற்றையாலாகிய முடியை உடைய சிவபெருமான் திருவடிக் கண்
The pig tail of SIVA are in large size under his feet
PONGIYA KAADHALIL KONGAI PONGA
பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப்
மிகுந்த அன்பினால் கொங்கைகள் எடுப்பாகத் தோன்ற
With immense and intensive love his breasts are bubbling and show its attractiveness
POTTRIRU SUNNAM IDITHUM NAAMAEA
பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 208
பொன் நிறமான திருச் சுண்ணத்தை இடிப்போம் என்றவாறு
We guide and hit the golden colour sacred powder
GNANA KARUMBIN THELIYAI PAAGAI
ஞானக் கரும்பின் தெளியைப் பாகை
ஞானமே வடிவான கரும்பினின்று எடுக்கப் பெற்ற சாற்றின் தெளிவு போல்பவனும் அதில் இருந்து காய்ச்சப் பெற்ற பாகுபோல் பவனும்
God is in GNANA form which just like sugarcane clear juice and its cack form of almond
NAADAR KARIYA NALATHAI NANDHAA
நாடற் கரிய நலத்தை நந்தாத்
தேடுதற்கு அறிய இன்பமானவனும் அவை குன்றாத
He is a lovely person who can’t be searched rarely the taste won’t diminish
THAENAI PAZHASUVAI AAYINAANAI
தேனைப் பழச்சுவை ஆயினானைச்
தேனைப் போன்றவனும் பழங்களின் சுவை ஆனவனும்
He is just like the taste of honey and fruit
SITTHAM PUGUNDHU THITHIKKA VALLA
சித்தம் புகுந்துதித் திக்கவல்ல
என் மனத்துள் புகுந்து தானே வந்து இனிக்க வல்ல இறைவனும்
He voluntarily gets into my heart and sweet taste god
KONAI PIRAPPU ARUTHU AANDU KONDA
கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
இறைவன் அடியேனின் பிறவியை அறுத்து ஆண்டு கொண்ட
The god has terminated my birth and command me
KOOTHANAI NAATHAZHUM PERA VAZHTHI
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப்
சிவபெருமானை நாவில் தழும்பு மிகுமாறு வாழ்த்திப்
We praise the lord repeatedly with our tongue and so the tongue has got scar on it
PAANAL THADANGAN MADANDHAI NALLEER
பானல் தடங்கண் மடந்தைநல்லீர்
நீலப் பூப்போல அகன்ற கண்களை உடைய மடந்தைகளே
The spinster have eyes in violet colour like
PAADI PORSUNNAM IDITHUM NAAMAEA
பாடிப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 209
பாடி நாம் பொற்சுண்ணம் இடிப்போம் என்றவாறு
We praise the lord and simultaneously we hit the golden powder to bath god
AAVAGAI NAAMUM VANDHANPAR THAMODU
ஆவகை நாமும் வந்தன்பர்தம்மோடு
ஒன்றற்கும் பற்றாத நாமும் உய்யும் வகை வந்து அருள் செய்து எம் அன்பர்களோடு நாமும் கலந்து
He blessed us and go into the fold of true devotees but weare useless to any form
AAT SEIYUM VANNANGAL PAADI VIN MEL
டாட்செய்யும் வண்ணங்கள் பாடிவிண்மேல்
திருவடிக்கு ஏவல் செய்யும்படி பணிந்த முறைகளைப் பாடி விண் உலகில்
We has to do menial work to his feet the way in which to do this work in the outer space
THEVAR KANAAVILUM KANDU ARIYAA
தேவர் கனாவிலுங் கண்டறியாச்
விண் உலகில் வசிக்கின்ற தேவர்களும் கனவிலும் கண்டு அறியாத
The DEVAS are unable to find him even in their dreams
SEMMALAR PAADHANGAL KATTU SELVA
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச்
செந்தாமரை மலர் போலும் திருவடித் தாமரைகளை நாம்கண்டு உய்யும் படிக் காட்டுகின்ற திருஅருள் செல்வத்தை உடைய
He has red colour lotus like feet we see and go upper place he has such a type of blessing power
SEVAGAM EANDHIYA VEL KODIYAAN
சேவகம் ஏந்திய வெல்கொடியான்
இடபத்தைத் தன்னகத்தே தாங்கிய வெற்றிக் கொடியை உடையவனாகிய சிவபெருமான்
The axe has his chariot he has winning flag on the passion of lord SIVA
SIVA PERUMAAN PURAM SETTRA KOTTRA
சிவபெரு மான் புரஞ் செற்றகொற்றச்
சிவபெருமான் முப்புரங்களையும் அழித்த வெற்றி
The lord SIVA has destroyed the three castles and his winning
SEVAGAN NAAMANGAL PAADI PAADI
சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்
வீரன் என அவன் மெய்களால் பாடிப்பாடி
He is a hero to win and his names are sung and sung
SEM PON SEI SUNNAM IDITHUM NAAMAE
செம்பொன் செய்சுண்ணம் இடித்தும்நாமே. 210
செம் பொன்னால் ஆன சுண்ணத்தை நாம் இடிப்போம் என்றவாறு
The red colour powder paste is prepared to take bath for lord SIVA
THAENAGA MAAMALAR KONDRAI PAADI
தேனக மாமலர்க் கொன்றைபாடிச்
தேன் நிரம்பிய பெரிய கொன்றைமலர் மலையைப் பாடியும்
The honey filled KONDRAI flower garlands are sung by us
SIVAPURAM PAADI THIRUCHADAIMEAL
சிவபுரம் பாடித் திருச்சடைமேல்
அவன் இடைவிடாது எழுந்தருளி இருக்கும் நலமாகிய சிவபுரதைப் பாடியும் அவன் திருச்சடைமேல் விளங்கும்
The abode SIVAPURAM where he settled permanently in his pig tail
VAANAGA MAAMADHI PILLAIPAADI
வானக மாமதிப் பிள்ளைபாடி
வானகத்தே விளங்கிய பிறை மதியையும் பாடி
In the space the tender moon exists continuously we praise it by songs
MAALVIDAI PAADI VALAKKAI EANDHUM
மால்விடை பாடி வலக்கையேந்தும்
அவர் ஏறுகின்ற திருமாலாகிய இடபத்தைப் பாடியும் வலக்கையில் ஏந்தி இருக்கின்ற
He rides on the back of OXEN which is THRUMAAL vehicle he kept in his right hand
OONAGA MAAMAZHU SOOLAM PAADI
ஊனக மாமழுச் சூலம்பாடி
தசையை உடைய பெரிய மழு பெரிய சூலம் இவற்றைப் பாடியும்
A big fighting force named soolam which has meat in it and big SOOLAM and so on we praise by the songs
UMBARUM IMBARUM UYYA ADRU
உம்பரும் இம்பரும் உய்யஅன்று
தேவர்களும் இவ் உலக மக்களும் உயிர் பிழைப்பதற்காக அன்று
The DEVAS and the people of this land to save their lives
PONAGA MAAGANANJ SUNDAL PAADI
போனக மாகநஞ் சுண்டல்பாடிப்
நஞ்சை உணவாக உண்டு அருளியதைப் பாடியும்
The poison has been eaten as food and blessed the people these activities are praised and sang
POTRI SUNNAM IDITHUM NAAMAE
பொன் திருச்சுண்ணம் இடித்தும்நாமே. 211
பொற்சுண்ணம் நாம் இடிப்போம் என்றவாறு
We hit the golden powder and so on
AYAN THALAI KONDU SENDU AADAL PAADI
அயன்தலை கொண்டுசெண்டாடல்பாடி
பிரம்மனது தலையைக் கையில் கொண்டு பூச்செண்டு போலத் தரித்து சூடிய விதத்தையும்
The head of the BHRAMA is the red like a flower ball and played upon that might we can sing and dance upon
ARUKKAN EAYIRU PARITHAL PAADI
அருக்கன் எயிறு பறித்தல்பாடி
சூரியனது பல்லைப் பறித்த வீரத்தையும்
The teeth of the sun god is plucked that mighty power god is praised and sang upon it
KAYANTHANAI KONDRURI PORTHAL PAADI
கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக்
யானையைக் கொன்று அதன் தோலைப்போர்த்தியதையுமே
He killed the elephant and pierced his skin and covered it with his body
KAALANAI KAALAAL UDHAITTHAL PAADI
காலனைக்காலால் உதைத்தல்பாடி
காலனையும் காலால் உதைத்ததையும் பாடி
The death god was killed by lord SIVA by kicking him
IYAIDHANA MUPPURAM EAITHAL PAADI
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி
ஒன்றோடு ஒன்று பொருந்தியவையாகிய முப்புரங்களையும் அழித்தலையும் பாடி
The three castles are destroyed by lord SIVA with a single arrow we praise it and sing it
AEZHAI ADIYOMAI AANDU KONDA
ஏழை அடியோமை ஆண்டுகொண்ட
அறிவற்ற எங்களையும் ஒரு பொருளாக எண்ணி ஆண்டு கொண்ட
We are not studied and we are poor disciples but you consider us as a person and command us
NAYANDHANAI PAADI NINRAADI AADI
நயந்தனைப் பாடிநின் றாடியாடி
கருணை மேன்மையையும் பாடி நின்று ஆடி ஆடி
His magnanimity is sung and danced
NADHARKU SUNNAM IDITHUM NAAMAEA
நாதற்குச் சுண்ணம் இடித்தும்நாமே. 212
எம் தலைவருக்கு நாம் சுண்ணம் இடிப்போம் என்றவாறு
To our head lord SIVA we hit and prepare golden powder
VATTA MALAR KONDRAI MAALAI PAADI
வட்டமலர்க்கொன்றை மாலைபாடி
பிரணவ வட்டமான கொன்றை மலராகிய மாலையைப் பாடி
The round shaped KONDRAI flower garland we sing
MATHAMUM PAADI MADHIYAM PAADI
மத்தமும்பாடி மதியும்பாடிச்
அவன் அணிந்துள்ள ஊமத்தம் பூவையும் பாடிச் சந்திரன் மதியையும் பாடி
He has adorned with UMATHAI flower and the moon in the sky we sing
SITTARGAL VAZHUM THEN THILLAI PAADI
சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்
மேலோர் வாழ்கின்ற அழகிய தில்லையையும் பாடி
The highly respected people are living in THILLAIBATHI we praise them and sing about it
SITTRAM PALATHENGAL SELVAM PAADI
சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக்
திருச்சிற்றம்பலத்து எழுந்தருளி உள்ள எங்கள் பெரும் செவ்வாணன் ஆகிய சிவனைப் பாடி
The lord SIVA descended in THIRU CHITRAMBALAM he has vast property in his passion
KATTIYA MAASUNAKKACHAI PAADI
கட்டிய மாசுணக்கச்சைப் பாடிக்
அவன் அறையில் கட்டி உள்ள பாம்புக் கச்சையைப் பாடி
He has tied in his half part of his body as a belt, the snake we sing on it
KANGANAM PAADI KAVITHAGAIM MEL
கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல்
அவனுடைய பாம்புகள் கனத்தையும் பாடிக் கலிந்துள்ள கையின் மேல் அணியப் பெற்று நின்று ஆடுகின்ற பாம்பையும் பாடி
His snakes cluster we sing and in his hand snakes stand and play that type of songs we sing
ITTU NINDRADUM ARAVAM PAADI
இட்டுநின் றாடும் அரவம்பாடி
அணியப்பட்டு நின்று ஆடும் பாம்பையும் பாடி
He has wear the snakes in his body so we sing on it
EESARKU SUNNAM IDITHUM NAAMAEA
ஈசற்குச்சுண்ணம் இடித்தும்நாமே. 213
எம்மை உடையவனாகிய ஈசற்குச் சுண்ணம் இடிப்போம் என்றவாறு
The possesser of mine is SIVA to him we prepare golden powder
VEDHAMUM VELVIYUM AAYINAARKU
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
வேதங்களும் அவைகளிலே விதிக்கப் பெற்ற வேள்விகளும் ஆனவனும்
He is in the form of VEDHA and VELVI fire form of SIVA
MEIMMAIYUM POIMMAIYUM AAYINAARKU
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச்
உண்மையும் பொய்யுமாக விளங்குபவரும் ஆனவனே
He is a true as well as false person to appropriate person
SODHIYUM MAAI IRUL AAYINAARKU
சோதியும் மாய் இருள் ஆயினார்க்குத்
வெளிச்சமாகவும் இருளாகவும் ஆகின்ற இறை வடிவம் கொண்டவனே
He is light as well as in dark form
THUNBAMUMAAI INBAM AAYINAARKU
துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்குப்
இறைத் தொண்டர்களுக்கு வருத்தமும் சந்தோசத்தையும் அளிப்பவனும்
He is the sorrow as well as happiness to the devotees
PAADHIYUMAAI MUTTRUM AAYINAARKU
பாதியு மாய் முற்றும் ஆயினார்க்குப்
பாதியும் முழுதும் ஆனவரும்
He is half as well as in full form
PANDHAMUMAAI VEEDUM AAYINAARKU
பந்தமு மாய் வீடும் ஆயினார்க்கு
கட்டும் மோட்சமும் ஆயினாய்
We are tied up with life as well as liberal in another form of giving heaven
AADHIYUM ANDHAMUM AAYINAARKU
ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு
முதலும் இறுதியும் அனைவரும் ஆகிய இறைவற்கு
He is the beginner and ender of this world to all to such a type of god
AADAR PON SUNNAM IDITHUM NAAMAEA
ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 214
நீராடப் பொற்சுண்ணம் இடிப்போம் என்றவாறு
To take bath we hit and prepare golden powder for him
Om thiruchitrambalam
திருச்சிற்றம்பலம்
February 12, 2019