OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru ammanai

ganesheit February 11, 2019

8. திரு அம்மானை

Thiru ammanai

(திருவண்ணாமலையில் அருளியது – 
தரவு கொச்சகக் கலிப்பா / ஆனந்தக் களிப்பு)

ஆத்மநாதன் புகழை நினைந்து ஆனந்தக் களிப்போடு பாடிய அம்மானைப் பாடல்

திருவம்மானை மகளிர் ஆடும் விளையாட்டுகளில் ஒன்று. தலைவனது புகழையும், அழகையும், ஆற்றலையும் வியந்து ஒருத்தி கேள்வியாகப் பாட மற்றவள் விடையாக அதனை ஒட்டியும் வெட்டியும் உரைக்க, மூன்றாமவள் அமைதிப் படுத்தும் முறையாகப்பாடப்பெற்றது.
Ammanai means you are just like loving young stage form

 Saint Manikkavasager while staying in Thiruannamalai he sang the following songs

 Thiruammana is a play which is played by ladies only. There girls are take part in this play

The first girl sings lards magnanimity handsome and glory to do anything in this world and his mighty capacity and she asks in the form of question

The young spinster sings in pro andante form and the

Third girl moderates the two girls by way of songs

 Athamanathan magnanimity is praised and the mind and soulis melting form of singing
செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய 

SENGAN NEDUMAALUM SENDRIDANTHU KANPARIYA

 The red color eyed Thirumal has taken the form of pig and excavated the land up to the lower world but he is unable to see lard Sivas feet

சிவந்த கண்களை உடைய திருமாலும் பன்றியாகக் சென்று பாதாளம் வரை தோண்டியும் அறிதற்கரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி 

PONDU MALARPAADHAM POOTHALATHEA PONTHARULI

 The happiness go no bound that sacred feet is to be seen by all he hasdescended in this world

இன்பம் பொங்கும் திருவடித் தாமரையை எல்லாரும் காண இப்பூமியின்கண் எழுந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு

ENGAL PRAPPUARUTHTHITUEANTHARAMUM AATKONDU

 Thebirth and death are continuously coming without any break but you have descended inthis world to terminate this birth and deathand then takeus in your fold

இடையீடு இன்றி வருகின்ற எங்கள் பிறப்பையும் அறுத்து எங்கள் தரத்தை ஆராயாது ஆட்கொண்டு  
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்

THENGU THIRAL SOLAI THENNAN PERUNTHURAIYAAN 

 The coconut trees are in the formof cluster in Thiruperunthurai place where lard Siva descended in the name of pondiya king

தென்னை மரங்கள் திரளாகக் கூடிய சோலைகள் சூழ்ந்த திருபெருந்துறையில் எழுந்து அருளி இருப்பவனும் பாண்டிய மன்னனும்


அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்

ANGANAN ANTHANNANAAI ARAIKUUVI VEEDU ARULUM

He has descended in the Bharamin form and whose eyesarein lovely one. He has descended as teacher and called us loudly and gave the place in the heaven and blessed us

அழகிய கண்களை உடையவனுமாகிய இறைவன் அந்தண வடிவம் கொண்டு ஆசாரியனாக வலிய அழைத்து நிலைத்த பேரின்பமாகிய வீட்டை அருளும்  
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 175 
ANGKARUNAI VAARKALALEA PAADUTHUNGKAAN AMMAANAAI

 The lovelygrace honey is oozing out that feet we may sing it

அழகிய கருணைத் தேன் ஒழுகுகின்ற திருவடியையே பாடுவோமாக என்றவாறு
பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார் 

PAARAAR VISUMPULLAAR PADHALATH THAARPURATHTHAR

 In this word living saints and the upper world Thrumalandother sub- gods and those others who are living in snake lower land and others and the other external place living peoplein magic world

பூமியில் உள்ள முதலானோர் விண் உலகம் உள்ள இந்திரன் திருமால் பரமுக்தியில் உள்ளோரும் பாதாளத்தில் வசிக்கின்ற நாகர் முதலியோரும் அதற்கு புறமே உள்ள மாயா புவனவாசிகளும் ஆகிய
ஆராலுங் காண்டற் கரியான் எமக்கெளிய

 AARAALUNG KANDAR KARIYAAN EMAKKELIYAAN

All are unable to see him he is that formof rare person but to me he is simple person to me

எவராலும் காணுதற்கு அறிய பொருளாக உள்ளவனும் எமக்கு மிக பெரிய எளிமையானவன்
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி 

PRAALAN THENNAN PERUNTHURAIYAAN PICHEATRI

Lard Siva ismighty person with mighty powersand has taken abode in south  at Tamilnadu into Thiru perunthurai temple

பேராருளாளனும் தென்பாண்டி நாட்டுத் திருபெருந்துறையனுமாகிய சிவன்
வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த 

VAARAA VALIYARULU VANTHEN ULAM PUGUNTHA

 He has showed the path of heaven to me which is deviated from repeated birth and death and who has compulsorilycomes andsits in to my mindpermanently

மீண்டும் பிறவிக்கு வராத வழியைக் காட்டி என் உள்ளத்திலேயே வலிய வந்து புகுந்து
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்

AARAA AMUTHAAI ALAIKADALVAAI MEENVISIRUM

We can eatamuthamin unlimited amount withoutany distasteand in theheavy waves of sea Lard Siva has thrown net tocatch fish

தெவிட்டாத தெள்ளமுதமாய் அலைகளோடு கூடிய கடலின் கண் மீனைப் பிடிக்க வலையை வீசும்  
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய். 176 
PERAASAI VAARIYANAIP PAADUTHUNGKAAN AMMAANAAI

 That happy sea of lard Siva we may sing him with praising songs

பேரின்பக் கடலான ஈசனைப் பாடுவோம் காண் என்றவாறு
இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும் 

INDHIRANUM MAALAYANUM EANORUM VAANORUM

The upper world king Indra thirumal bharama and other devas and Irudies

இந்திரன் திருமால் பிரம்மன் முதலான தேவர்களும் இருடிகளும் மற்றும் உள்ள தேவர்களும்
அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி 

ANTHARAMEA NIRKAK SIVANAVANI VANTHARULI

 All arestand in the space place but lard Sivadescended inthisworld

ஆகாயத்தில் நிற்கச் சிவபெருமான் இப்பூமியின் கண் எழுந்துஅருளி
எந்தரமும் ஆட்கொண்டு தோள்கொண்ட நீற்றனாய்ச்

ENTHARAMUM AATKONDU THOL KONDA NEETRA NAAI 

 And whatever formwe are and whatever status we are and you have descended in that sect and blessed us and you have adorned sacred ashes allover the body

நாங்கள் இருக்கும் நிலையில் வந்து ஆட்கொண்டு புஜங்களில் திருநீற்று ஒளியை உடையவனாய்
சிந்தனையை வந்துருக்குஞ் சீரார் பெருந்துறையான்

SINTHANAIYAI VANTHARKUKM SERAAR PERUNTHURAIYAAN

 In this way hehas entered in to our mind and stayed in Thiru perum thurai temple

எங்கள் மனத்தை உருக்குகின்ற புகழ் நிறைந்த திருபெருந்துறை இறைவன்
பந்தம் பறியப் பரிமேற்கொண்டான்தந்த 

PANTHAM PARIYA PARIMERKONDAAN THANTHA

 To eradicatedour lust and creed ascended on the back of horse as fighterform

எமது பந்த பாசங்கள் கழியக் குதிரை வீரனாக எழுந்தருளி வந்து
அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 177 
ANTHAMILA AANANTHAM PAADUTHUNGKAAN AMMANAAI

 We sing the infinitive glory of lard Siva and then praise him

எல்லை இல்லாத ஆனந்ததைப் பாடுவாயாக என்றவாறு
வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும் 

VAANVANTHA DEVARKALUKUM MAALAYANODI INDHIRANUM

 Deevaas thirumal  bharma Indra andallothers

விண்ணவர்களும் திருமால் பிரம்மன் இந்திரன் முதலியோர்களும்
கான்நின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய 

KAANNINDRU VATRIYUM PUTRU EALUNTHUNG KAANPARIYA

 Intheforest place seatedlong time in penance and body dried into bone form and sand mud covered him but lard Siva is rare form to see by them

காட்டில் நெடுங்காலம் நின்று உடல் முதலியன உலர்ந்தும் புற்று மூடப் பெற்றும் காண்டதற்கு அறிய பொருளாகிய
தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு

THAAN VANTHU NAAYENAI THAAIPOL THALAIYALITHTHITTU

 But you have force fully come intomy body and takenhold on me. I amjust like a dog but you have motherform of love showered on me

தான் வலிய வந்து நாயை ஒத்த இழிந்த என்னையும் தாயைப் போல் பேரன்பு செய்து  
ஊன்வந்துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து 

OONVANTHU ROMANGKAL YULLEA UYIRPEITHU

You have descendedin to my body through hair hole way and gaveholy life to me

ஊன் உடம்பினுள் எழுந்தருளி உரோமத் துளைகள் தோறும் உள்ளே உயிரை ஊட்டுகின்றன
தேன்வந்த முதின் தெளிவின் ஒளிவந்த 

THENVANTHA MUTHIN THELIVIN OLIVANTHA

 You have oozing into my body as honey form andnectar light form

தேனாக ஊறி தேவ அமுதத்தின் தெளிவாக ஒளி மிகுந்த
வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 178 
VAANVANTHA VAARKALALEA PAADUTHUNGKAAN AMMANAAI

 That greatness filled long feet we praisewith songs

பெருமையோடு கூடிய நீண்ட திருவடிகளைப் பாடுவோம் என்றவாறு
கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை 

KALLAA MANATHTHU KADAIPATTA NAYENAI

 Lord Sivas grace not learnedby me in that way I ameven lower cadreof below dog

சிவன் அருளைக் கல்லாத மனத்தினை உடைய நாயினும் கீழான என்னிடம்
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்

VALLAALAN THENAAN PERUNTHURAIYAAN PICHETRIK

 He ismother form tomeand he has mighty power and he is the king of Thiru perumthurai temple abode who gave me thefast attachment of lunatic one

அம்மானாய் வள்ளளானும் தென்னனும் பெருந்துரையுமாகிய சிவன் தன்னைப் பற்றிய பித்தை மிகுவித்து  
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை 

KALLAIP PISANTHU KANIYAAKKI THANKARUNAI

The mighty rock like form of my mind is grinded and converted in to honey form and then gavehis blessings

என் வலிய கல் மனத்தைப் பிசைந்து மெய்மையான கனியாகச் செய்து தனது கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்

VELLATH THALUTHTHI VINAIKADINTHA VEDHIYANAI

 You haveallowed meto dip in to the river water and then you have removed my karma impurities from me so that you have descended in this world as guru teacher form

வெள்ளத்திலே என்னை அழுந்தச் செய்து என வினைகளை ஒட்டிய அந்தணனும்  
தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும் 

THILLAI NAGARPUGUK SITRAM PALAM MANNUM

 You have taken teacher form and descended in chithambaram place and it is one of the punjaboothas(space) form and then seated permanently here

திருத்தில்லை கண் எழுந்தருளிய சிற்றம்பலமாகிய ஞானா ஆகாயத்திலே நிலைபெற்று விளங்குகின்ற
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 179 
OLLAI VIDAIYANNAIP PAADUTHUNGAAN AMMANAAI

 Lard Siva has taken bull as his vehicle and it will move fastly so we praise him with songs

விரைந்து செல்லும் தன்மை வாய்ந்த இடபத்தை உடையவன் ஆகிய சிவனைப் பாடுவோம் என்றவாறு
கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன்

KETTAAYO THOLI KIRISEITHA VAARORUVAN 

 Lard Siva has wonderful character who has mesmerized me and could you here it

தோழி ஒப்பற்றவன் என்னை மயக்கியத்தைக் கேட்டாயோ
தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்

TEETTAR MATHILPUDAISOOL THENNAN PERUNTHURAIYAAN

 In Perumthurai the city is covered with big castles which is made of lime paste and it cannot crossed by enemies easily

சுண்ணாம்பு சுதை தீட்டப்பட்டதும் பகைவர் கடப்பதற்கு அறியதுமாகிய மதில் உடைய தென்னன் பெருந்துறையான்  
காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் 

KATTA THANAVELLANG KAATI SIVANGKATTI

Lard Siva showed me rarest things in this world and then ultimately he has showed me his Siva soruba (body) to me

எனக்கு காட்டாதன எல்லாம் காட்டிச் சிவமாகிய தன்னையும் காட்டி
தாள்தா மரையும்காட்டித் தன்கருணைத் தேன் காட்டி

THAALTHAMARAI KAATI THANKARUNAI THEAAN KAATI 

 His blessing feet is showed to me and after wardsblessed me and then tastier honey is showed to me

திரு அருள் ஆகிய திருவடித் தாமரையையும் காட்டி தன் கருணையாகிய சுவைமிக்க தேனையும் காட்டி
நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த 

NATTAR NAGAISEITHA NAAM MELAI VEEDEITHA

In this world people laughed at as that he is lunatic person but god gave me mukthi heaven

உலகோர் இவன் ஒரு பித்தன் என்று நகைக்க நாம் மேலாகிய வீட்டு இன்பத்தை மேலே
ஆள்தான்கொண்டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய்.

AALTHAAN KONDU AANDAVAA PAADUTHUNGAAN AMMANAAI

 We have been accepted by lard Siva as human beings and then taken control on us so that we praise all the activities in singing form 
நம்மை ஆளாக ஏற்று ஆட்கொண்டவற்றைப் பாடுவது என்றவாறு
ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச் 

OYATHEA YULKUVAAR ULLIRUKKUM ULLAANAI

 Those who are continuously thinking lard Siva in their mind and then he will enter in their mind in real object form

இடைவிடாது எண்ணுபவர்கள் மனத்து உள் இருக்கும் உண்மைப் பொருள் ஆனவனே
சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்

SEYANAAI SEVAGANAI THENAAN PERUNTHURAIYIN

Those who do not thinking him he is far away fromthem .He is horse hero who is ruling In Thiruperunthurai

அப்படி நினையாதாருக்குத் தூரத்தில் இருப்பவனே குதிரைச்சேவகனாய் தென்னனாய் திருப்பெருந்துறையுள்  
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை

MEYAANAI VEDHIYANAI MAATHIRUKKUM PAADHIYANAI

He has descended us in the form of anantha and gave half part of his body to lardess Parvathi

எழுந்து அருளி உள்ளவனே அந்தணனே உமாதேவி இடம் பெற்ற பாதி திருமேனி உள்ளவனே 
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத் 

NAAYANA NAM THAMMAI AATKONDA NAAYAKANAI

 We are destitute dog in this world but whohas considered as a person and prevailed up on us

நாய் போன்ற இழிந்த நம்மையும் ஒரு பொருளாகக் கொண்டு ஆட்கொண்ட தலைவனை
தாயான தத்துவனைத் தானே உலகேழும் 

THAYANA THATHUVANAI THANEA YULAKELUM

 He is mother to me and he is real form and he is also mother of seven lands

எனக்குத் தாயைப் போலகிய உண்மை வடிவானவனே ஏழு உலகங்களுக்கும் தலைவனாய் இருக்கின்றவனை
ஆயானை ஆள்வானப் பாடுதுங்காண் அம்மானாய். 181 
AAYANAI AALVANAI PAADUTHUNGKAAN AMMANAAI

In the seven worlds where lard Siva ruled them so that we praise him with himes (songs)

அவற்றில் உள்ள அனைத்து உயிர்களையும் ஆள்கின்றவனைப் பாடுவோம் என்றவாறு
பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் 

PANSUMANTHA PAADAR PARISU PADAITHARULUM

Those who praise the god with music and melodies voice he gave gift to them

இசையோடு கூடிய பாடல் உரிய பரிசினை ஆக்கித் தருகின்ற
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்

PENSUMANTHA BAAKATHTHAAN POMMAAN PERUNTHURAIYAAN 

Lard Siva who gave his left part of his body to lardess yumadeevi. He has taken abode in Thiruperunthurai temple

உமாதேவியைச் சுமந்து ஒருபக்கத்தை உடையவனும் பெருமானும் திருபெருந்துறையில் எழுந்தருளி இருப்பவனும்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன் 

VINSUMANTHA KEERTHI VIYANMANDA LATH THEESAN

 In the vast space of all the worlds and glory spread over form

ஆகாயத்தில் தங்கப்பெற்ற புகழினை உடைய அகன்ற மண்டலங்களுக்குத் தலைவனும்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை 

KANSUMANTHA NETRIK KADAVUL KALIMATHURAI

LardSiva who has carried soil on his head and did not do his work in proper way so that he is given punishment by the king

நெற்றிக்கண்ணை உடைய கடவுளும் இறைவனுடைய புகழ் தழைக்கின்ற மதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு

MANSUMANTHU KUULIKONDU AKKOVAAL MOTHTHUNDU 

Because of beaten he has got wound on his body

வைகை நதி ஆற்றங்கரையில் கூலிஆளாகப் பிட்டைக் கூலியாக ஏற்று கொண்டு வைகையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட கரை உடைப்பைச் சரியாக அடைகாத காரணத்தினால் பாண்டிய மன்னால் பிரம்பால் அடிக்கப்பட்டு முதுகில் புண் சுமந்தவனும் 
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய். 182 
PUNN SUMANTHA PONMENI PAADUTHUNGKAAN AMMANAAI

புண்னைத் தாங்கிய பொன் போல் விளங்கும் திருமேனியைப் பாடுவோம் என்றவாறு
துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான் 

THUNDA PIRAIYAAN MARAIYAAN PERUNTHURAIYAAN

He has adorned on his hair tender moon he is always veetha chanter and dwelling in thiruperuthurai temple

திருமுடியில் பிறைத் துண்டத்தை உடையவனும் வேதவடிவினனும்
கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான் 

KONDA PURI NOOLAAN KOLAMAA OORTHIYAAN

 He has adorned scared thread in his bosom and ascended on the back of horse

திருமார்பில் இடம் கொண்ட முப்புரிநூலை உடையவனும் அழகிய குதிரையை ஊர்தியாக உடையவனும்
கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான்

KANDANG KARIYAAN SEMMENIYAAN VENNEERTRAAN

His neck is dark in color but his bodyis red in color and allover the body he has adorned sacred ashes

கருத்தகண்டத்தையும் சிவந்த உடம்பையும் திருநீற்றை உடையவனும்
அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம் 

ANDAMUTHA LAAYINAN ANTHAMILA AANATHAM

 He is the first person to create this universe and gives us infinitive happiness to all

அண்டங்களுக்கு எல்லாம் முதலாக விளங்குபவனும் எல்லையற்ற மகிழ்ச்சியைச் தருபவனும்
பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும் 

PANDAIP PARISEA PALAVADIYAAR KEENTHU ARULUM

 From good old days he gives infinitive happiness to his old disciples

சிவபெருமானின் பழமையான முறைமையைப்பாடி அடியார்களுக்கு எல்லை இல்லா ஆனந்தத்தைக் கொடுத்து அருள்வாயாக
அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய். 183 
ANDAM VIYAPURUMAA PAADUTHUNGAAN AMMANAAI

 God gave us gifts on seeing itall the peoples are astonished sopraise him with songs

எல்லா அண்டத்தில் உள்ளவாறு வியக்க அக்கொடைத் திரத்தை வியந்து யாம் பாடுவோம் என்றவாறு
விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை 

VINNALU DEVARKU MELAAYA VEDHIYANAI

He is supreme god who above all other deevass and descended in bharimin form

விண் உலகத்தை ஆளுகின்ற இந்திரன் முதலான தேவர்களுக்கு மேலாக விளங்குகின்ற ஞானவடினானவனே

மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்

MANNALUM MANNAVARKU MAANPAAKI NINDRANAITH 

 He is above all the kings, those who are ruling in this world. He is such a supreme person to them

மண் உலகத்தை ஆளுகின்ற மன்னவர்களுக்கும் மாட்சிமை உதவும் பொருளாக விளங்குபவனே
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்

THANNAAR THAMILALIKUM THANPAANDI NAATTANAIP 

He gave god’s languageto thisworld that is TAMIL in that cool nation of pandiya kingdom he ruled it himself

குளிர்ந்த தமிழைக் கொடுத்து உதவுகின்ற குளிர்ந்த பாண்டி நாட்டிற்கு உரியவனே
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்

PENNAALUM PAAKANAI PENU PERUNTHURAIYIL 

He is ruled half part of his body by lardess yumadevi and in thatperunthurai place all the ladiesare in protected form

உமாதேவியின் பாதி உடம்பைத் தன்னுடைய ஆளுமையின் கிழ் கொண்டு வந்தவனும் பெண்களுக்குப் பாதுகாவலாக இருப்பவனும்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட

KANNAR KALALKAATI NAYENAI AATKONDA

All are meditate under his feet and that feet is showed in that way. I am dog like person but who has prevailed up on me

யாரும் தியானித்து அறியத் திருவடியைக்காட்டி நாயான என்னை ஆட்கொண்ட  
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.

ANNA MALAIYANAI PAADUTHUNKAAN AMMANAAI

 We can pray and sing lard Siva who has seated in annamalai temple 
அண்ணா மலை யானைப் பாடுவோம் என்றவாறு
செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான்

SEPPAR MULAIPANGKAN THENNAN PERUNTHURAIYAAN 

 The Brest of lardessyumadevi is nice one and she has taken left part of lard Siva’s body who ruled thiru perunthurai temple

செப்பினை ஒத்த முலையினை உடைய உமாதேவியை ஒருபாகமாக உடையவனும் தென்னனும் திருபெருந்துறையை இடமாகக் கொண்டவனும்
தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்கும் தன்மையினான்

THAPPAMEA THAALADAINTHAAR NENJURUKKUM THANMAIYINAAN 

 Those disciples who are chanting and meditating under his feet that lard Siva seated into their heart

சிறிதும் தவறாமல் திருவடி அடைந்த அன்பர்கள் நெஞ்சத்தை உருக்கும் தன்மையனும்
அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த 

APPAANDI NATTAI SIVALOGAM AAKKUVITHA

 He has converted that pandiya kingdom as in this world heaven

அழகிய பாண்டிய நாட்டைச் சிவலோகம் ஆக்கு வித்த
அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே

APPAR SADAIYAPPAN AANATHAVAAR KALALEA 

Lard Siva who is bearing Ganges on his head. He is leader to all and prime god and his wonderful feet

கங்கை தாங்கிய சடையை உடைய தலைவனும் ஆகிய சிவபெருமானின் ஆனந்த மயமான திருவடிகளை
ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தா ருள்ளிருக்கும்

OPPAKA OPPUVITHA ULLATHTHAA RUILLIRUKKUM 

 Those who have pledged their body to lard Siva and he will descend in to their mind

தன்னை அடைமானமாகக் கொடுத்த மனத்தினை உடைய அடியவர்கள் உள்ளத்துள் எழுந்தருளி இருக்கும்
அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய். 185 
APPALAI KAPPALAAI PADUTHUNGKAAN AMMANAAI

He is above anything in this world so we praise and sing him

அப்பாற்பட்டவைகளுக்கு எல்லாம் அப்பால் பட்டவனைப் பாடுவோம் என்றவாறு
மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும்

MAIPOLIYUNG KANNIKEL MAALAYANNODU ENTHIRANUM

 Those who have decorated their eyeswith black paste further you may hear it and Thirumal Bharma and Indhara

கண்மை ஏந்தி விளங்குகின்ற கண்களை உடைய தோழியே கேள் திருமால் பிரம்மன் இந்திரன்  
எப்பிறவி யுந்தேட என்னையுந்தன் இன்னருளால்

EPPIRAVI YUN THEADA ENNAIYUNTHAN INNARULAAL

They have taken pig annabird peacock and somany birds form and theyare searching and searching but unable to see you butyou do not want any reciprocalbenefit from my part and blessed me

தாம் ஆன பிறவியிலும் பன்றியும் அன்னமும் மயிலும் ஆனவேறு பிறவிகளிலும் தேடி அலைய என்னைக்கைமாறு வேண்டாத தன்னுடைய கருணையினால்  
இப்பிறவி ஆட்கொண்டு இனிப்பிறவா மேகாத்து

IPPIRAVI AATKONDU INNIPIRAVAA MEA KAATHTHU

 You have bestowed your blessing on me and in this birth itself and did not allow me to take any other birth and prevailed up on me

இப்பிறவிலேயே ஆட்கொண்டு இனிப் பிறவாமலேயே காப்பாற்றி  
மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய்

MEIPORLKAN THOTRAMAAI MEIYEA NILAIPERAAI

 The true and nonperishable matter is soul where you haveappeared in true ganna knowledge form and thatgannaknowledge is considered as guiding stick like one and stand there ever permanent form

அழியாத மெய் பொருளாகிய ஆன்மாவின் இடத்து அறிவாக வெளிப்பட்டு அந்த அறிவையே பற்றுக் கோடாகக் கொண்டு நிலைபெற்று  
எப்பொருட்குந் தானேயாய் யாவைக்கும் வீடாகும்

 EPPORUL THANTHANEAA YAAI YAVAIKKUM VEEDAAGUM

God is the origin for anything in this world and all of them got heaven from him

எல்லா பொருட்களும் நிலைபெறுதற்குத் தாமே

ஆதாரமாய் எல்லாவற்றிற்கும் வீடு பேறாக விளங்குகின்ற  
அப்பொருளாம் நஞ்சிவனைப் பாடுதுங்கான் அம்மானாய். 186 
APPORULAAM NAM SIVANAI PAADUTHUNGAN AMMANAAI

 For any language Ais the origin first letter in that way god is the origin of all living beings so we praise lardand sing songs

“ஆ”கார வாக்கியனாகிய நம் சிவனைப் பாடுவோம் என்றவாறு
கையார் வளைசிலம்பக் காதர் குழையாட 

KAIYAAR VALAISELAMBAK KAADHAR KULAIYAADA

 The bangles in thehand raises sound andearornaments swayed here and there

கையிலே பொருந்திய வளையல்கள் ஒலிக்கக் காதுகளில் உள்ள காதணிகள் அசைந்து ஆட
மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்பச்

MAIYAAR KULALPURALATH THEENPAAYA VANDOLIPPA

 The long black hair untied and swayed all the direction so that flower adorned hair from it honey is spillover where the honey bees are raising humming sound todrink honey fromflowers

கருமையான கூந்தல் அவிழ்ந்து புரளக் கூந்தலில் இருக்கும் பூக்களில் உள்ள தேன் சொரிய வண்டுகள் ஒலிக்கப் பாடுவோம் என்றவாறு  
செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக்

SEIYANNAI VENNER ANINTHANNAI SERNTHARIYAAK

 In the red color body the white color ashes are adorned in the line form and allothers are standing before him with folded hand form but his hands are never folded before others and is only giving hand

சிவந்த திருமேனி உடையவனும் வெண்ணீற்றை அணிந்தவனும் குவிந்து அறியாத கைகளை எங்கும் சொறிந்தனை அன்பர்க்கு

கையானை எங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு 

KAIYANAI ENGUKUM SERINTHANAI ANBARKKU

 Such type of blessing hands he has possessed and he spreads everywhere. The true devotees

கைகளை உடையவனும் எவ்விடத்தும் சேர்ந்து இருப்பவனும் மெய் அன்பர்களுக்கு  
மெய்யானை அல்லாதார்க் கல்லாத வேதியனை

MEIYAANAI ALLATHAARAK KALLAATHA VEDHIYANAI 

 He is true object form. Those who are false person he is also fake person

உண்மைப் பொருளாய் விளங்குபவனும் மெய் அல்லாதவர்க்கு பொய்யார்க்குப் பொய்ப்பொருளாக விளங்குபவனும்
ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய். 187 
AIYAARU AMARNTHANAI PAADU THGKAAN AMMANAAI

 He has descended in Thiruvaiyaru temple place so wemay praise and pray him

திருவையாற்றில் எழுந்தருளி இருக்கும் இறைவனைப் பாடுவோம் என்றவாறு
ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய் 

AANAIYAAI KEEDAMAAI MAANUDARAAITH THEVARAAI

I have taken birth in the form of elephant insect’s man deevas

யானை புழு மனிதர் தேவர் முதலிய
ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த் தேனை 

ENAAIP PIRIVAAI PIRINTHU IRUNTHU EAITHENAI

 So that so many birth and death I have taken but I have weak one after another

மற்ற பல பிறவிகளும் பிறந்து இறந்து இளைத்த என்னை
ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஒட்டுகந்து

OONAIYUM NINURUKKI EN VINNAIYAI OTTUKANTHU

My flesh is melting and my miss deeds are driven away

 என்னுடைய சதையை உருக்கி என்னுடைய தீய வினைகளைத் தூரத் தூரத்தி விட்டு
தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய

THENAIYUM PALAAIYUM KANNALAIYUM OTHTHIYA

The wonderful honey milk sugarcane juice like form of god 

தேன் பால் கருப்பஞ்சாறு இவற்றைப் போல இனிமையான
கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும் 

KONAVANPOL VANTHENAI THANTHOLUMBUPIR KONDU ARULUM

 He has descended as king form and considered us as his disciple and blessed us

தலைவனாக எழுந்தருளி தன் அடியார் கூட்டத்து ஒருவனாக அடிமை கொண்டு அருளிய
வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 188 
VANAVAN POONGKALALEA PAADUTHUNKAAN AMMANAAI

 We praise his golden feet who is gods god and then singing happily

தேவதேவன் உடைய பொலிவாகிய திருவடிகளையே பாடுவோம் என்றவாறு
சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில்

SANTHIRANAI THEITHARULITH THAKKANTHAN VELVIYINIL

 In the Thaken yoga fire where Veerapathira with his feet,where the moon is stamped and erased it

தக்கனுடைய வேள்வியில் வீரபத்திரன் சந்திரனைக் காலால் தோய்த்தும்  

தக்கன் ஒரு சமயம் யாகவேள்வி செய்தான்.அதற்குச் வேண்டிய அவிர்பாகத்தையும் கொடுக்க மறுத்தான். எனவே பார்வதி சிவனிடம் யாகத்திற்குச் செல்ல அனுமதி கேட்டாள். சிவன் கொடுக்க மறுக்க மீறிக்கொண்டு யாகத்திற்குச் செனசிவபெருமானுக்கு அழைப்பு அனுப்பவில்லை. மேலும் கொடுக்க்றாள். தக்கன் தாட்சாயிணியை அவமதித்தான். எனவே யாகம் ஒழியட்டும் எனச்; சாபம் கொடுத்து மீண்டாள். சிவனிடம் மன்னிப்புக் கேட்டாள். சிவன் தாட்சாயிணியை ஏற்க மறுத்தார். இருவருக்கும் ஏற்பட்ட போரில் தாட்சாயிணி அழிய  இறைவன் ருத்ர தாண்டவம் ஆடினார். திருமாலும் பிரம்மனும் கோபத்தைச் சாந்தப்படுத்திப் பார்வதிக்கு உயிர் கொடுக்க வேண்டினர்.  பார்வதியை உயிர்ப்பித்துத்  தன் உடம்பில் சரிபாதியைத் தந்தார்.             தக்கனின் வேள்வியைத் தகர்க்க வீரபத்திரனை அனுப்பினார். தேவர்கள் அனைவரும் அவமானப் பட்டனர்.
இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்து

INDHIRANAI THOL NERINTHITTU EACHAN THALAIARINTHU

 And Inthira’s upper hands are squished and yoga head leader whose head is slashed

இந்திரன் தோளை நெரித்தும் ஒடித்தும் யாக புருஷனாகிய தக்கன் தலையை அரிந்தும் 
அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச் 

ANTHARAMEA SELLUM ALAR KATHIRON PALTHAKARTHU

 The sun that is moving in the space place and spread over light and his teeth are broken

வானத்திலே செல்கின்ற விரிந்த கதிர்களை உடைய சூரியனது பற்கள் உடைத்தும்
சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்து 

SINTHI THISAITHISAIYEA DEVARKALAI OOTUKANTHU

 In all the directions  deevass are cried and ran fast

திசைகள் தோறும் தேவர்களைக் கதறி ஓடச் செய்த
செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்

SENTHAARP POLILPUDAISOOL THENNAI PERUNTHURAIYAAN

 Lard Siva who has adorned red color garland iN that Thiruperuntharai place where lotus flower ponds are surrounded

சிவந்த மாலையை அணிந்த பொழில்கள் சூழ்ந்துள்ள தென்னன் பெருந்துறையான்  
மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய். 189 
MANTHARA MALAIYEA PAADUTHUNGKAN AMMANAAI

Lard Siva whohas adorned mantharai garland whose feet are praised with songs

மந்தாரமாலையைப் பாடுவோம் என்றவாறு
ஊனாய் உயிராய் உணர்வாய்என்னுட்கலந்து 

OONAAI YUIRAAI UNARVAAI ENNUT KALANTHU

உடலாயும் உயிராயும் உணர்வாயும் என்னுள் ஒன்றாகக் கலந்திருந்து
தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்

THENAAI AMUTHAMAAI THINGKARUMBIN KATTIYUMAAI 

 Lard Siva is in the form of honey nectar and sweet sugar Cristal form

தேனும் அமுதமும் வெல்லக்கட்டியாக இனித்து
வானோ ரறியா வழியெமக்குந் தந்தருளும் 

VANORARIYAA VALIEAMAKKUM THANTHARLUM

 The Siva ganna which is given to me which is not known by deevass

தேவர்களும் அறியப்படாத பேரின்ப வழியாகிய சிவஞானத்தை எமக்குக் கொடுத்து உதவுகின்ற
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்

THENAAR MALARKKONDRA SEVAGANAAR SEEROLISEAR

 Lard Siva Who is adorned the konrai flower garland and he ismy hero and his theges light is emanated and then entered into me

தேன் நிறைந்த கொன்றை மலர் மாலையை அணிந்த வீரனாகிய சிவபெருமான் அடியேனுக்குச் சிறப்பாக தேஜஸ் வழங்கும்   
ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும் 

AANA ARIVAAI ALAVIRANTHA PALLUYIRKKUM

 And not measure his ganna power and innumerable living beings

அளவில் அமையாத ஞானவடிவாய் கணக்கற்ற பல உயிகளுக்கும்
கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய். 190 
KONAAKI NINDRAVAA KUURUTHUNGKAAN AMMANAA

He is standing here in king form and he has taken this position that matter is to be informed to all

தலைவன் ஆகி நின்ற முறையைக் கூறுவோம் என்றவாறு
சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள்

SOODUVEN PUUNGKONDRAI SOODI SIVANTHIRALTHOL

 I willadorn Lard Siva with konrai flower garland and then entered in to lard Siva’s fold

கொன்றை மாலையை சூடுவோம் அதனைச் சூடிக்கொண்டு சிவபெருமான் திரண்ட தோள்களை  
கூடுவேன் கூடிமுயங்கி மயங்கிநின்று 

KUUDUVEN KUUDIMUYANGKI MAYANGKI NINDRU

 Then I will mingle with Lard Siva without any separation and then I lost my balance

கூடுவேன் அவ்வாறு கூடிப் புணர்ந்து புணர்ச்சியால் தன் அறிவு இழந்து நின்று
ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித்

OODUVEN SEIVAAIK GURUKUVEN ULL YURUKITH

 Then I will get mild differences with him because I did not get his red color mouth for that my mind melts and afterwards I will search for him

அவனோடு ஊடல் உறுவேன் அவனுடைய சிவந்த வாயைப் பெறுதற்கு மனம் உருகி நிற்பேன் மனம் உருகி அவனைத்  
தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்

TEDUVEN THEDI SIVANKALALEA SINTHIPPEN

 Once again I will continuously search him and then failed inmission and again I will think over his feet

தேடுவேன் தேடி அவனைப் பெற முடியாமையால் சிவன் திருவடிகளைச் சிந்திப்பேன்  
வாடுவேன் பேர்த்தும்மலர்வேன் அனலேந்தி

VAADUVEN PEARTHTHUM ALARVEN ANALEANTHI

From my mine he will be vanished because of his separation I will feel sorrow afterwards I willsit into meditation and seehimin light form in to my mind and afterwards my mind gets smile. The god takes fire in his hand

சிந்தனையை விட்டுத் திருவடி மறைய அப்பிரிவு தாங்காது வாடுவேன் மீண்டும் தியானிக்கப் பெற்று மனம் மலர்வேன் அதனால் திருக்கரத்தில் தீ ஏந்தி  
ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய். 191 
AADUVEN SEVADUYEA PAADUTHUNGKAN AMMANAAI

 That matter will be sung in my songs

ஆடுகின்றவனுடைய சிவந்த அடிகளை பாடுவோம் என்றவாறு
கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியானை

KILIVANTHA MENMOLIYAAL KELKILARUM PAADHIYANAI 

Lardess yumathevi voice is just parrot voice one who has taken left part of lard Siva’s which is green color one

கிளி மொழி போலும் மெல்லிய மொழியினை உடைய உமாதேவியாரின் நிறம் விளங்கத் தோன்றும் பாதி மேனியை உடையவனும்
வெளிவந்த மாலயனும் காண்பரிய வித்தகனைத் 

VELIVANTHA MALAYAANUM KAANPARIYA VITHTHAKANAI

In the outer world Bharama andThirumalsearched but unable to see him and heis such magic form of person

வெளியில் தேடுவதற்காக வந்த திருமாலும் பிரம்மனும் காணுதற்கு அறிய பித்தகனும்
தெளிவந்த தேறலைச் சீரார் பெருந்துறையில் 

THELIVANTHA THERALATH SEERAR PERUNTHURAIYIL

He is clear honey form and he is glorious person in Thiruperum thurai

தெளிந்த தேன் போல்வனும் புகழ் நிறைந்த திருப்பெருந்துறையில்
எளிவந் திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால் 

ELIVANTHURUTHIRANGKI ENNARIYA INNARULAL

You simple form descended in this world and then entered in to my mind and put your grace on me and with your limitless grace poured on me

எளிமையாக வந்து எழுந்து அருளி இருந்து எம்மீது இறங்கி எல்லை இல்லாத கருணையினால்
ஒளிவந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ

OLIVANTHEN ULLATHTHIN YULLEA OLI THIGALA

 Into my active mind your Siva gana is taking place and fire glow form it radiates

விளக்கம் பெற்ற என் உள்ளத்தில் உள்ளே சிவஞானம் நிலைபெற்று நின்று ஒளிவிட  
அளிவந்த அந்தணனனைப் பாடுதுங்காண் அம்மானாய். 192 
ALIVANTHA ANTHANAIP PAADUTHUNGAAN AMMANAAI

 The above bacon light is given by Lard SIVA so we got ever ending anantha happiness form and in that mind we sing lard Siva

முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும்

MUNNANAI MOOVARKUM MUTRUMAAI MUTRUKU

 HE is prime person to everybody who has created Thirumal Bharma and Ruthra and he is the end product to all

அயன் அரி உருத்திரன் என்ற மூவர்க்கும் முற்பட்ட முதல்வனும் யாவர்க்கும் முடிந்த பொருள் ஆனவனும்  
பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்

PINAANAI PINCHAGANAI PENU PERUNTHURAIYAAN

 He is behind all of us and on his hair so many things are dewling. Heis glorified as king in this world and in Thiruperumthurai

எல்லாவற்றிற்குப் பின் உள்ளவனும் தலைகோலம் உடையவனும் போற்றப்படுகின்ற திருபெருந்துறையில் உள்ள மன்னனும்  
மன்னானை வானவனை மாதியலும் பாதியனை

MANAANAI VANAVANAI MADHIYALUM PAADHIYANAI

 He is king. He is existing in gana space place and has given a part of his body to lades yumadevi

மன்னனும் ஞானா காயத்தில் விளங்குபவனும் உமையோடு பாதியும்  
தென்னானைக் காவானைத் தெண்பாண்டி நாட்டானை

THRNANAI KAAVANAAITH THENBANDI NATTANAI

 In the lovely Thiruvanai kaval temple place he is residing in water form andleader to south pandiya king

அழகிய திருவானைக்காவல் என்னும் தலத்தில் இருப்பவனும் தென்பாண்டி நாட்டானும் 
என்னானை என்னப்பன் என்பார்க்கட் கின்னமுதை

ENNANAI ENNAPPAN ENBAARKAL KINAAMUTHAI

 He is elephant to me and who called him as his father he is nectar form to that devotees

எனக்கு ஆணை ஒப்பவன் தந்தை என்னும் மெய் அடியார்களுக்கு இனிய அமுதத்தை ஒத்தவனும்  
அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய். 193 
ANNANAI AMMANAIP PAADUTHUNKAAN AMMANAAI

Just like qualities filled lard Siva we praise him with songs

அப்படிபட்ட அம்மானும் ஆகிய சிவனைப் பாடுவோம் என்றவாறு
பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் 

PETRI PIRARKARIYA PEMMAN PERUNTHURAIYAAN

 He has generaland special formof powers. He is not known by others who is god form in Perumthurai temple

பொதுவும் சிறப்புமாகிய தன் தன்மைகள் பிறரால் அறியப்படாத பெருமானும் பெருந்துறையான்
கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார்

KONTRAK KUTHIRAYINMEL VANTHARULI THANNADIYAAR

 He is riding on the back of winning force filled horse. He is descended to his true disciples

வெற்றி பொருந்திய குதிரையின்மேல் எழுந்தருளி வந்து தன் அடியாங்கள் செய்த  
குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் 

KUTRANGKAL NEEKKIK GUNANGKONDU KOTHAATI

 Lard Siva has removed misdeeds on the part of his disciples and he has praised good qualities with us and won’t allow falling in to lust feelings

பல கருமங்களைப் போக்கித் குணத்தை எடுத்துப் பாராட்டி அவர்களை இன்ப நெறியின் கண் செல்லவிடாது தடுத்து
சுற்றிய சுற்றத் தொடர் வறுப்பான் தொல்புகழே

SUTRIYA SUTRATHODAR VARUPPAN THOLPUGALEA

 The cluster of relationship with that relationships are terminated that lard Siva is glory filled person

சுற்றி உள்ள சுற்றங்களின் தொடர்பு அறுப்பவன் அவனுடைய பழமையான புகழையே  
பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான் 

PATRIYI PAASATHAI PATRANAAM PATRUVAAN

 All the relationships are binding one and to that binding Lard Siva helps us

இறுகப் பிடித்து உலகப் பாசமாகிய அதனின் பற்று நீங்கும்படி நாம் இறைவனைப் பற்றுவதற்காக
பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 194 
PATRIYEA PEAR AANATHAM PAADUTHUNGKAAN AMMANAAI

And ultimately we catch god so that ever ending happiness is attained by us in this way we sing his glory

நாம் பற்றி உள்ள பேரனாந்தத்தைப்பாடுவோம் என்றவாறு
திருச்சிற்றம்பலம்  OM THIRUCHITRAMBALAM


February 11, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: