POTRI THIRUAGAVAL
4. POTRI THIRUAGAVAL(This part is sung in THILLAI)
போற்றித்திருஅகவல்
OM PONNAMBALAM
உயிர்கள் உடம்போடு கூடித் தோன்றும் முறை ஜகத்தின் உற்பத்தி இறையன்பின் வளர்ச்சி இவற்றைக் கூறி இறைவனை வணங்குவது
In this fourth part of THIRUVASAGAM the word POTRI means praising the lard is coming in many places so the title is given as potri thiruagaval
In this first part the life (soul) goes and mingles in the body. This is the mode of creation of this universe
நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
1. NANMUGAN MUTHALAA VAANAVAR THOLUTHU EALA
பிரமன் முதலான தேவர்களும் வணங்கி எழும்ப
From Bhirama to Devasall are submitted before the god feet and then get back
ஈர் அடியாலேமுஉலகு அளந்து
2. EER ADI YAALA MUUYULAGU ALANTHU
திருமால் இரண்டு அடியாலே மூன்று உலகத்தை அளந்து
Thirumal with his two feet he measured there worlds
நால் திசை முனிவரும் ஐம்புலன் மலர
3. NAAL THESAI MUNIVARUM EYMPULAN MALARA
நன்கு திசைகளில் உள்ள முனிவர்களும் ஐந்து புலன்களும் களிப்பால் மலர
The saints those who are in four side of the earth and see the god with their five sense organs and their face because of seeing god get lotus flower like red in color form bloomed
போற்றி செய் கதிர் முடி திருமால் அன்று
4. POTRISEI KATHIR MUDI THIRUMAAL ANRU
கடவுளை வணங்கும் திருமாலின் கதிர்முடி அன்று
The thirumaal Diamond Head crown (KEREEDEM) shines and glitters who praised the lord Siva
அடி முடி அறியும் ஆதரவு அதனில்
5. ADI MUDI ARIYUM AATHARAYU ATHANIL
திருவடியின் முடிவை அறியும் ஆசையால்
To find out the end portion of his feet, so he has that desire
கடு முரண் ஏனம் ஆகிமுன் கலந்து
6.KADUM
MUREN EAANAM AAGI MUNN KALANTHU
மிக்க வலிமை உடைய பன்றியின் உருவம் ஆகிமுற்பட்டுக்
He has taken the form of mighty pig and tried to excavate the land
7. ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து
AALTHALAM YURUVA EDATHU PIN EAITHTHU
கீழ்ஏழு உலகங்களையும் உடு ஊருவத் தோண்டி பிறகு இளைத்தும்
He has excavated seven under world and unable to see his feet so he felt tired.
8.ஊழி முதல்வ சயசய என்று
ULI MUTHALVA SAYA SAYA YENDRU
பேரூழிக்காலத்தும் விளங்கும் முதல்வரே உமக்கு வெற்றி வெற்றி
You are the only survivor at the time of destruction of this world so I praise you by the word jaya jaya (you are the winner)
9.வழுத்தியும் காணா மலர்அடி இணைகள்
VALUTHTHIYUM KANAA MALARADI ENAIKAL
சொல்லி தோத்தரித்தும் காணமுடியாத தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டும்
By praising and mediation we can’t see your lotus feet
வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில்
10. VALUTHU THARKU EALITHAAI VAAR KADAL YULAGIL
நெடிய கடல் சூழ்ந்த நில உலகின் கண்யாங்கள் வணங்குதற்கு எளிதாக வந்து என்றவாறு
But in this sea surrounded world, we are pray and praise him in a simple form he has come as guru, teacher
யானை முதலா எறும்பு ஈறாய
11. YAANAI MUTHALAA ERUMBU EIRAAYA
யானை முதல் எறும்பு கடைசியாக
From the begging the big elephant to at the end the small ANT
ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்
12. YUNAM ILL YONEE YEN YULL VINAI PILAITHUM
கேடில்லாத யோனிகளில் பிறத்தலில் இருந்து தப்பியும்
Without any defect we have come out from the place of birth
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
13. MAANUDA PRAPPINUL MATHAA YUDARATHU
மனிதப் பிறவியில் தாயின் வயிற்றில்
As a human we take birth from the mother stomach
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
14. EENAM ILL KIRUMI SERUVINIL PILAITHUM
குன்றுதல் இல்லாத புழுக்கள் இடும் சண்டையில் தப்பியும்
There are small insects which try to destroy the new conception and from it protected
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
15.
ORU MATHI THAANTRINIL ERUMAIL PELAITHUM
கர்ப்பத்தின் முதல் மாதத்தில் கர்ப்பபையில் சிறிதாகத் தோன்றும் குழந்தை
First month of child development in womb UTERUS the nucleus in the form of small (FOETUS)
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
16. IRUMATHI VILAIVIN ORUMAIYIL PILAITHUM
இரண்டாம் மாதம் ஆண்கரு மற்றும் பெண்கரு ஒன்றுபட்ட தன்மையால் தோன்றும்
In the second month men sperm and women ovum are in the integrated form(AMORPHOUS STATE)
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
17. MUMMATHI THANNUL AMMATHAM PILAITHTHUM
முன்றாம் மாதம் தாயின் கொழுப்புநீர் கருப்பையில் சென்று நிறையும்
The third month fat water filled in the womb
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
18. EER IRU THINGALIL PEER IRVIL PILAITHTHUM
நான்காம் மாதம் கொழுப்பு நீர் நிரம்பியக் கருப்பை இருண்டு கிடக்கும்
At the fourth month the womb will filled by fatty acid and kept in darkness
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
19.ANCHU
THINUGALIL MUNJUTHAL PILAITHTHUM
ஐந்து மாதத்தில் மதநீர் பெருக்கும் மேலும் இருள் சூழ்ந்த தன்மை
In the fifth month the fatty acid is produced excessively and the nucleus is in the darkness (ESCAPE FROM ABARSON)
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும
20. AARUTHINGALIL VOOR ALAR PILAITHUM
ஆறாம் மாதம் வயிறு பெருக்க அயலார் பழித்து உரைப்பர் நகைப்பர்
In the sixth Month onwards the stomach grow bigger and others talk ill about it and they laugh at scandalousitching
எழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்
21. EALU THINGALIL THAALPUVI PILAITHUM
எழாம் மாதம் உருவம் பெற்ற கரு கீழே சரிய ஆரம்பிக்கும்
The seventh month the child fully developed all the parts and comes down in mother body and escape from pre mature birth
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
22. EATTU THINGALIL KATTAMUM PILAITHUM
எட்டாம் மாதம் கரு நன்கு வளர்ந்து மலக்குடலையும் கழிவாயினையும் நெருக்கும் தாய்க்கு மலம் கட்டிக் கொள்ளும்
At the eight month the nucleus form of child fully developed so it contracts the internal organs so night soil comes out with difficulty
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
23. ONPATHIL VARUTHARU THUNBAMUM PILAITHUM
கரு தாயின் வயிற்றில் புரண்டு கொண்டு இருக்கும்
The child will be tossing from side to sideat the ninth month
தக்க தசமதி தாயொடு தான்படும்
24. THAKKA THASAMATHI THAIYODU THAANPADUM
பத்தாம் மாதம் தாயும் சேயும்படும் துன்பம் அளவு இல்லாதது
At the ten month (lunar month here twenty eight days are one month)
துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும்
THUKKA SAAGARAM THUYUR EADAI PELATITHUM
இதனை துக்க சாகரம் என்றார்
The child and mother faces innumerable sorrow and it is called asSorrow Sea
ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
25. ANDUGAL THORUM ADAIYTHA AKKAALAI
ஆண்டுகள் தோறும் பருவ வளர்ச்சி அடைந்த பொழுது
Every year the child grows in chronological order
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
26. EENDIYUM IRUTHIYUM ENNAIPALA PILAITHUM
வினைகளைத் தொகுத்தலும் இருந்தியும் வைப்பதால் ஏற்படுகின்ற துன்பங்களைப் பிழைத்தும்
We are doing good and bad deeds in our everyday life they give us misery
காலை மலமொடு கடும்பகல் பசி நிசி
27. KAALAI MALAMMODU KADUM PAGAL PASINISI
காலை மலத்தாலும் பகலில் பசியாலும் இரவில் தூக்கத்தாலும்
In morning body secretion and mid-day hungry occursat night we are in sleepy mode
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
28. VEALAI NITHTHIRAI YATHIRAI PILAITHUM
இவை ஒழிந்த காலங்களில் பயணங்கள் போவதும் நேருகின்ற துன்பங்களுக்குத் தப்பியும் என்றவாறு
Above all we are always moving place to place we encounter so many risks and we are kept away from it
கருங்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில்
29. KARUM KULAL SEIVAAI VELNAGAI KAARMAYIL
கரிய கூந்தலையும் சிவந்த வாயினையும் வெண்மையான பற்களையும் கார்காலத்து ஆண் மயில் போன்ற ஒருங்கியச் சாயலையும்
There is dark hair, red mouth white teeth and there a shadow of male peacock in summer month(a leady appears)
ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக்
30. ORUNGIYA SAAYAL NERUNGI YULL MATHRTHTHU
ஒன்றோடு ஒன்று நெருங்கி உள்ளே களிப்பு கொண்டு
Come together and get satisfied the sexual appetite(external touching)
கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து
31.KACHCHARA
NIMIRNTHU KATHIRTHU MUNN PANAITHU
கச்சு என்னும் மார்புப் பட்டிகை அறும்படி இறுமாந்து நிமிர்ந்து
The breasts are tied with bra. They are so tight to the level of knot gives way and the ladies are showing their appearance to reveal their ego
எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து
32. EAITHU EDAI VARUNTHA ELANTHU PUDAI PARANTHU
ஒளி வீசி எதிரே பருத்த இடுப்பு இளைத்து வருந்த எழுந்து பக்கங்களில் அடி பருத்து
The buttocks are in flesh filled form and the above parts are in somewhat thinner. The collie is in such a tight form the flesh are pear sing out
ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்
33. EERKU EDAI POGA ILLAMULAI MATHER THAM
பெண்களின் உடைய மார்பகங்கள் இடையில் தென்னை மரத்தின் உடைய ஈர் குச்சிகள் கூட போக முடியாத அளவு
Between twobreasts there is no space they are so tight if you put a small palm leaf between it won’t go inside thevirgin girls havingtender breasts of attracting the youngsters and they are going round to attract them
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்
34. KURTHA NAYANA KOLGAIYEL PLAITHUM
கூறிய கண்களின் சூரை காற்றிற்குத் தப்பியும் என்றவாறு
Tender girls have sharp eyes it emanates emotions in our mind as tornado we shall be saved from this risk of submersion in this sexual water
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
36. PITTHA ULAGAR PERUM THURAI PARAPINUL
பித்துக் கொண்ட உலகத்தவர்களாகிய பெரிய நீர்த்துறையில் கிடந்து கலங்கும்
We are in the mad form and we are tossed by big sea of waves and we are in diluted mode
மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்
37. MATHTHA KALIRU EANNUM AVAAVIDAI PILAITHUM
மதச் செருகுடைய யானை போலும் அல்லலில் நின்று பிழைத்து
If there is sexual appetite to elephant it got mad so we are relived of this sexual apatite
கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்
38. KALVI ENNUM PAL KADAL PILAITHUM
கல்வி என்று உரைக்கப்படும் பலவாகிய கடல்களில் இருந்து தப்பியும்
There are so many Varieties of education to study and earn money we will be relied on so many books to know more and more gaining knowledge
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்
39. SELVAM EANNUM ALLALLIL PELAITHUM
செல்வம் என்னும் துன்பத்தில் இருந்து தப்பியும்
Earning of wealth while we put our efforts to earn money we gained also somany pains
நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும்
40. NALGURAVU EANNUM THOLVIDAM PILAITHUM
வறுமை என்னும் பழைய நஞ்சுக்குத் தப்பியும்
We are in poverty state which like a snake poison from time immoral it is covered us so we are bypassed it
புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்
41. PUL VARAM BAYAA PALTHURAI PILAITHUM
புல்லீராகப் பல பிறவி வேறுபாடுகளுக்குத் தப்பியும்
You are in upper caste and lower caste this pain of ego and distress always haunt us
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
42. THEAIVAM ENPATHOOR CITHTHAM YUNDAAKI
கடவுள் என்பது ஒரு கருத்து மனத்தில் விளைந்து
The concept of god will take root in our mind and after sometimes it bears fruits
முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்
43. MUNIYU ILLAATHTHATU OOR PORUL ATHU KARUTHALUM
வெறுப்பு இல்லாதகிய ஒப்பற்ற பொருளையே எண்ணத் தொடங்கிய அளவில்
The ONE which is god, without any hate we are thinking over
ஆறு கோடி மாயா சக்திகள்
44. AARU KODI MAYAA SAKTHGL
ஆறு கோடி மாயையின் சக்திகள்
There are six corers
of MAAYA powers
45.வேறுவேறுதம்மாயைகள்தொடங்கின
VERU VERU THAM MAYAIKAL THODANKINA
வேறு வேறு ஆகத் தம் வஞ்சனைகளைத் செய்யத் தொடங்கின
They acted in different illusory ways and catch us and surrounded by bad deeds.
46.ஆத்தம்ஆனார்அயலவர்கூடி
AATHTHAM AANAAR AYALAVAR KOODI
நம்பத்தகவர்களாக அயலவர்கள் பலர் கூடி
There are some person in reliable mode they formed a cluster
47.நாத்திகம்பேசிநாத்தழும்புஏறினர்
NATHTHIGAM PEASI NAATHTHALUMBU EAARINAR
கடவுள் இல்லை என்னும் நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்
They are ATHIEST and cried and cried until theirtongue in stiffed form
48.சுற்றம்என்னும்தொல்பசுக்குழாங்கள்
SUTRAM EANNUM THOLPASU KULANGAL
சுற்றத்தார் என்னும் தொன்று தொட்ட பசுக் கூட்டங்கள்
Those who are our relatives they are in status speaking persons
49.பற்றிஅழைத்துப்பதறினர்பெருகவும்
PATRI ALAITHTHU PATHARINAR PERUGAYUM
என்னை பற்றி அண்ணா தம்பி அப்பா என்றும் அழைத்துப் பதறினார்கள்
They garbed me and called me elder brother, younger brother father etc. and in that state of inconsolable tearing mode
50.விரதமேபரம்ஆகவேதியரும்
VIRATHAME PARAM AAGA VETHIYARUM
மிகுதியாகிய விரதங்களே வீடு பேற்றினைத் தரும் பரம்பொருள் என்று சொல்லி
If you are in fasting for god it will lead you to heaven (our five senses are in submissive mode)they preach like this
51.சரதம்ஆகவேசாத்திரம்காட்டினர்
SARATHAM AAGAVEA SAATHTHIRAM KAATTINAR
அதனை உண்மை என்று சாதிக்க நூல்களை ஆதாரமாகக் காட்டினர்
The above matter is true to say and those people show us the books and in its statement as a prime one
52.சமயவாதிகள்தம்தம்மதங்களே
SAMAYA VAATHIKAL THAMTHAM MATHANGALE
பல்வேறு சமயவாதிகள் அனைவரும் தங்கள் தங்கள் மதங்களில்
So many religious heads, all are trump that their religion alone is true
53.அமைவதுஆகஅரற்றிமலைந்தனர்
AMAIVATHU AAGA ARATRI MALAITHTHANAR
வந்து அமைதி பெறுக என்று அறற்றிச் சண்டையிட்டனர் என்றவாறு
There is a fight among religious heads that their religion only gives peace of mind and asked the people to come over their fold
54.மிண்டியமாயாவாதம்என்னும்
MINDIYA MAAYAA VAATHAM YENNUM
சரிந்த மாயாவாதம் என்னும்
Concentrated in MAAYA arguments
55.சண்டமாருதம்சுழிந்துஅடித்துத்தாஅர்த்து
SANDA MAARUTHAM SULITHTHU ADITHTHU THAA ARTHTHU
சூறைக்காற்று என்றும் அடித்து ஒலிக்க
TORNADO lashes in the sound form
56.உலோகாயதமெனும்ஒள்திறப்பாம்பின்
ULOGAAYA THAMENUM OLL THRAPPAAMPIN
உலோகாயதன் என்னும் ஒளி பொருந்திய பாம்பினது
The madness of accumulating the material things which is just like snake which kills others and eat away, such a way we are caring others property
57.கலாபேதத்தகடுவிடம்எய்தி
KALAA PETHATHTHA KADUVIDAM EAITHI
கலை வேறுபாடுகளை உடைய கொடிய நஞ்சுவந்து பொருந்த
The caste differences stay with us which is a poison
58.அதில்பெருமாயைஎனைப்பலசூழவும்
ATHIL PERUMAAYAI YENAIPPALA SUULAYUM
அதனால் எவ்வளவு பெரிய வஞ்சனைகள் பலவும் தம்மை வந்து சூழவும்
So many vengeances come and stay around me
59.தப்பாமேதாம்பிடித்ததுசலியாத்
THAPPAAME THAAM PDITHTHATHU SALIYAATH
தப்பாமல் தாம் பிடித்து பிடியை விடாது
Without failure what I hold and catch it continuously to do so
60.தழலதுகண்டமெழுகுஅதுபோலத்
THAZHALATHU KANDA MELUGU ATHU POLA
தீயைக் கண்ட மெழுகைப் போல மனம் உருகி
If wax goes near fire it automatically melts in that way mind melts.
61.தொழுதுஉளம்உருகிஅழுதுஉடல்கம்பித்து
THOLUTHU YULAM URUKI ALUTHU YUDAL KAMBITHTHU
தொழுது வணங்கி அழுது உடல் நடுங்கி என்றவாறு
With tears in our eye we pray god and while doing so the body is shivering
62.ஆடியும்அலறியும்பாடியும்பரவியும்
AAIYUM ALARIYUM PAADIYUM PARAVIYUM
ஆடியும் பாடியும் அலறியும் வணங்கியும்
By dancing chanting, crying and praying
63.கொடிறும்பேதையும்கொண்டதுவிடாதென
KODIRUM PETHAIYUM KONDATHU VIDAATHENA
குறடும் அறிவிலியும் தாம் பிடித்ததை விடாது என்ற பழமொழிப் படி
Instrument (KODIRU) to grab anything and don’t allow moving just like an idiot won’t re thing and change himself
64.படியேஆகிநல்இடைஅறாஅன்பின்
PADIYE AAGI NAL EDAIARAA ANBIN
இறைவனுடைய பக்தியானது ஒரு பாத்திரத்தில் இருந்து இனொரு பாத்திரத்திற்கு எண்ணையை ஊற்றும் பொது இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக விழுவதுபோல் இறைவனுடன் கூடிய அன்பு தொடர்ச்சியானது
The oil if you pore slowly into another vessel it will come out without any interruption just like our bond with god is continuously without any break
65.பசுமரத்துஆணிஅறைந்தால்போலக்
PASUMARATHTHU AANI ARAINTHAAL POLA
பச்சை மரத்தில் ஆணி அடித்தால் போல
If you hit nail in tender living tree it will go and can’t be retrieved back easily, the water from it guessing out
66.கசிவதுபெருகிக்கடல்எனமறுகி
KASIVATHU PERUKI KADAL YENA MARUGI
மனம்நெகிழ்ந்து பெருகிக் கடலைப் போன்று சுழன்று
This mind and soul melts and like sea water circling
67.அகம்குழைந்துஅனுகுலமாய்மெய்விதிர்த்துச்
AGAM KULAINTHU ANUKULAMAAI MEI VITHIRTHTHU
மனம் குலைந்து அதற்கு பொருத்தமாக உடம்பு நடுங்கி
Our mind is melting and the body is in shivering state
68.சகம்பேய்என்றுதம்மைச்சிரிப்ப
SAGAM PEEI YENRU THAMMAI SIRIPPA
உலகத்தவர் தம்மைப் பேய் என்று சொல்லி நகைக்க என்றவாறு
The world people laughed at me and described me as ghost
69.நான்அதுஒழிந்துநாடவர்பழித்துரை
NAAN ATHU OLINTHU NAADAVAR PALITHTHURAI
வெட்கத்தை விட்டு நாட்டில் உள்ளவர்கள் பழிப்பதை
The ego word I and I am thrown away the people in the world who arecursed me
70.பூண்அதுஆகக்கோணுதல்இன்றிச்
POON ATHU AAGA KOONUTHAL INRI
மனம் கோணாமல் அணிகலன்கள் போல் ஏற்று
I take this ill treatment as an ornament without any ill feeling
71.சதுர்இழந்துஅறிமால்கொண்டுசாரும்
SATHUR ELANTHU ARIMAAL KONDU SAARUM
யாம் எல்லாவற்றிலும் வல்லோம் என்ற திறமையை இழந்து
I am excelled in all the fields and got ego. That ego now went away
72.கதியதுபரமாஅதிசயம்ஆகக்
KATHIYATHU PARAMAA ATHISAYAM AAGA
தாம் அடைதற்கு உரிய பேரின்பமே பெரிய வியப்பாகத்தோன்ற என்றவாறு
I have got big pleasure and on seeing it I am in astonishment
73.கற்றாமனம்எனக்கதறியும்பதறியும்
KATRRAA MANAM YENA KATHARIYUM PATHARIYUM
கன்றை உடைய பசுவின் மனம்போலக் கதறியும் பிதறியும்
If we separate a calf with the cow and the cow will restless on thinking its calf
74.மற்றுஓர்தெய்வம்கனவிலும்நினையாது
MATRRU OOR THEIVAM KANAVILUM NINAIYAATHU
வேறு தெய்வத்தைக் கனவிலும் நினையாமல்
Even in dreams I won’t think other gods
75.அருபரத்துஒருவன்அவனியில்வந்து
ARUPARATHTHU ORUVAN AVANIYIL VANTHU
அறிதற்கு அறிய பரம்பொருளை, ஓர் ஒப்பற்ற தலைவன் இப்பூமியில் வந்து
The rarest rare of god, he is unique and our leader. He descended to this world
76.குருபரன்ஆகிஅருளியபெருமையைச்
KURPARAN AAGI ARULIYA PERUMAIYAI
எனக்கு குருநாதர் ஆக்கி அருள் வழங்கிய பெருமையும் என்றவாறு
He descended and took the form of GURU teacher and bestowed me with his blessings
77.சிறுமைஎன்றுஇகழாதேதிருவடிஇணையைப்
SIRUMAI YENRU EGALAATHEA THIRUVADI ENNAIYAI
எளிதில் கிடைத்தமையால் அதனை எளிமையாக எண்ணி இகழ்ந்து விடாமல் திருவடிகள் இரண்டையும்
God has easily available to me so I may not be thought it not worth and talk ill manner and his feetare glorious one
78.பிறிவினைஅறியாநிழல்அதுபோல
PIRIVINAI ARIYAA NILAL ATHU POLA
விடுப்பிரியாத நிழல்போல
The shadow of our body won’t be separated from us such life form
79.முன்பின்னாகிமுனியாதுஅத்திசை
MUN PINNAAGI MUNIYAATHU ATHTHISAI
முன்னும் பின்னும் ஆகி வெறுக்காமல் குருநாதர் எழுந்தருளிய அத்திசையை நோக்கி
Avoid before the guru good talk and behindI’ll talk and don’t forgo him the side which the guru shown to you that side you pray
80.என்புநைந்துஉருகிநெக்குநெக்குஏங்கி
EANBU NAINTHU URUGI NEKKU NEKKU EAANGI
எழும்பும் தன் வண்மை கெட்டு உருக மிகக் கனிந்து இறங்கி
Even the bone has melted and got ripe state you come down
81.அன்புஎனும்ஆறுகரைஅதுபுரள
ANBU YENUM AARU KARAI ATHU PURALA
அன்பு என்னும் காவிரி ஆறு கரை புரண்டு செல்ல
The blessing of love that touches the two banks ofriver at the beginning point and tossing there from one side to another
82.நன்புலன்ஒன்றிநாதஎன்றுஅரற்றி
NANPULAN ONRI NAATHA EANRU ARATRRI
நல்ல பொறி உணர்ச்சிகள் ஐந்தும் ஒன்றுபட்டு தலைவா தலைவா என்று புலம்பி
The five good senses areat least in one place in oneness and murmured my lord my lord
83.உரைதடுமாறிஉரோமம்சிலிர்ப்ப
URAI THADUMARI UROMAM SILIRPPA
சொல் குழறி மயிர்கால்கள் சிலிர்க்க
The words in our mouth come out with blessed way with difficulty our hair in body rise straight
84.கரமலர்மொட்டித்துஇருதயம்மலரக்
KARAMALAR MOTTITHU ERUTHAYAM MALARA
மலர் போன்ற கைகளால் குவித்து மனம் மலர்ச்சி அடைந்து
Our folded fingers just like bud, before blooming flower state our mind is in the lotus glowing form
85.கண்களிகூரநுண்துளிஅரும்ப
KANKALI KOORA NUN THULI ARUMBA
கண்கள் களிப்பு அடைவதால் நுண்ணிய நீர் திவலைகள் தோன்றச் செய்ய என்றவாறு
Our eyes are seeing the god, in self-actualization position we have achieved our goal of god searching and so the eye water down in outer side not in inner side.
If eye water came from inner side it is our distress revelation. If eye water came out from outer side it is gods realization pleasure water the inner side water is salty form but outer side water is juice taste form
86.சாயாஅன்பினைநாள்தொரும்தழைப்பவர்
SAAYAA ANBINAI NAALTHORUM THALAIPPAVAR
அழியா அன்பினால் நாள்தோறும் செழித்து ஓங்கிப்
Ourdivine love we daily progressing in the gods path and go upward and blooming form of mind
87.தாயேஆகிவளர்த்தனைபோற்றி
THAYEA AAGI VALARTHTHANAI POTRI
மெய் அன்பர்களைத் தாய்போல் நின்று வளர்த்தவனே உனக்கு போற்றி
You turned to me as a mother and you helped me to grow so I praise and prey you
88.மெய்தருவேதியன்ஆகிவினைகெடக்
MEI THARU VETHIYAN AAGI VINAIKEDA
உண்மையை உணர்த்தும் அந்தணன் ஆகி வந்து ஆகாமிய வினையினையும் சஞ்சித வினையினையையும் அழியும் வண்ணம்
You have descended before me as a Acharya (ANDANA) form and revealed the truth of this life and helped me to a get rid of past and present misdeeds so I praise you
89.கைதரவல்லகடவுள்போற்றி
KAITHRA VALLA KADAYUL POTRI
கை தந்து உதவ வல்ல கடவுளே போற்றி
At distress time you lend your helping hand so praise you
90.ஆடகமதுரைஅரசேபோற்றி
AADAGA MADURAI ARASE POTRI
பொன்னிறமாக விளங்கும் மதுரை மாநகரத்தில் அரசரே போற்றி
The golden form of Madurai, the capital city in it you have adorned as king so praise you
91.கூடல்இலங்குகுருமணிபோற்றி
KUUDAL ELANGU KURMANI POTRI
நான் மாடக் கூடலான நகரில் விளங்கும்
குருநாதனே
முன் ஒரு காலத்தில் வருணன் ஆலவாய்ச் சொக்கனின் ஆற்றல் அறியாதவனாகி மதுரையை அழிக்கக் கடலை ஏவினான். கடல் நாற்புரமும் கரைபுரண்டு அலைகள் மலைபோல் எழும்ப மதுரையை விழுங்க வந்தது. (சுனாமி உருவம் கொண்டு, அது கண்டு மன்னனும் மக்களும் சொக்கலிங்கப் பெருமானிடம் முறையிட்டனர்.
இறைவன் பொன்னும் மணியும் சொறியும் நான்கு மேகங்களை ஏவிக் கடல்நீரை வற்றச் செய்தான். அவமானம் பொறுக்க முடியாத வருணன் செருக்கு காரணமாக மழை அனைத்தையும் ஒருங்கழைத்து மதுரை மேல் பெய்க என்றான்.
மீண்டும் இறைவன் புயல்கள் நான்கினையும் அழைத்து நீங்கள் மாடங்கள் ஆகி மதுரையைக் காப்பாற்றுங்கள் என ஆணையிட்டான். புயல்கள் மாடங்கள் ஆகி மதுரையை மூடிக் கவிந்து நின்றன. ஒரு துளிகளும் உள்ளே விழாத வண்ணம் காத்தன.
வருணன் வெட்கித் தோற்று இறைவனை வழிபட்டு உய்ந்தான். நான்கு மேகங்களும் கூடிக் காத்தமையால் இத்தலம் நான்மாடக் கூடல் என வழங்கப் பெறுவது ஆயிற்று.
The four side there is big castle you are sitting there as a guru teacher form, so I praise you.
Once up on a time the rain god name varunan unable to know the power of chokka linga peruman (LORD SIVA) of Madurai he ordered the sea to rise in tsunamiform and then ordered to destroy the Madurai city. The sea of four sides come as mountain and tried to swallow the Madurai.
On seeing these waves the king and people praised the chokka linga peruman to save us from destruction.
On hearing this prayer god ordered the four clouds to download gold and diamond so that the sea water dried.
On seeing this varuna unable to tolerate this defeat he ordered the rain water to pour in to MADURAI again god ordered fourtornado to convert it selves into four castle and covered the Madurai so even a single drop of water get down in Madurai.
The rain god varuna cut a sorry figure and knelt before the Lord Siva and prayed that I have inadvertently do it please pardon me and get pardon from god.
So the four castles saved the Madurai so the other name of Madurai is naan mada kudal
92.தென்தில்லைமன்றினுள்ஆடிபோற்றி
THEN THILLAI MANRINUL AADI POTRI
அழகிய தில்லை அம்பலத்தில் ஐந்து தொழில் ஆன ஆனந்த நடனம் ஆடுபவனே
In the lovely Chidambaram the five works are done of jolly dance performing form by god
93.இன்றுஎனக்குஆர்அமுதுஆனாய்போற்றி
INDRU EANAKKU AAR AMUTHU AANAAI POTRI
இன்று அடியேனுக்குக் கிடைத்த அறிய அமுதம் ஆனவனே வணக்கம் என்றவாறு
Today I have got rare amutham (nectar)to drink he is in the form of amutham so I praise him
94.மூவாநான்மறைமுதல்வாபோற்றி
MUVAA NAANMARAI MUTHALVAA POTRI
மூப்பு அடையாத நான்கு வேதங்களுக்கு முதல்வனே
There is no old age to four vedas all are in virgin form the god is the leader before these Vedas so I praise him.
95.சேவார்வெல்கொடிச்சிவனேபோற்றி
SEVAAR VELKODI SIVANE POTRI
இடபம் எழுதப் பெற்ற வெல்லும் கொடியை உடைய சிவனே வணக்கம்
In the winning flag there is symbol of bullock which is studded into it so we praise him
96.மின்ஆர்உருவவிகிர்தாபோற்றி
MIN AAR YURUVA VIKIRTHAA POTRI
மின்னலை போல ஒளி செய்கின்ற திருமேனியில் வேறுபாடுகளை உடையவனே
Just like lightning rays his body is emanating somanyverities of rays.
97.கல்நார்உரித்தகனியேபோற்றி
KAL NAAR YURITHTHA KANIYEA POTRI
கல்லின் கண் நார் உரித்த கனியை ஒப்பவனே போற்றி
My mind just like a rock, you have converted it as rope from it and turned me into milder form like ripe mango so I praise you
98.காவாய்கனகக்குன்றேபோற்றி
KAAVAAI KANAGA KUNREA POTRI
காத்தல் தொழில் வாய்க்கப் பெற்ற மேருமலையை ஒப்பவனே
You are the praising god and sit in the abode of KAILAYAM.
99.ஆஆஎன்தனக்குஅருளாய்போற்றி
AA YEN THANAKKU ARULAAI POTRI
ஆஆ எனக்கு அருள் புரிவாயாக வணக்கம் என்றவாறு
O o you please bestowed your blessing to me so praise you
100.படைப்பாய்காப்பாய்துடைப்பாய்போற்றி
PADAIPPAAI KAAPPAAI THUDAIPPAAI POTRI
எல்லாவற்றையும் படைப்பவனே காப்பவனே அழிப்பவனே உனக்கு வணக்கம்
You are the creator preserver and destroyer of this body and other things so I praise you
101.இடரைக்களையும்எந்தாய்போற்றி
EDARAI KALAIYUM ENTHTHAAI POTRI
துன்பங்களை நீக்கும் எம் தந்தையே வணக்கம்
You remove my miseries and you are my father so I salute you
102.ஈசபோற்றிஇறைவாபோற்றி
EESA POTRI ERAIVA POTRI
எல்லாவற்றையும் உடைய ஈசனே இறைவா
You are the owner of all the thinks in this world you are the giver I am the receiver so praise you
103.தேசப்பளிங்கின்திரளேபோற்றி
THESA PALINKIN THIRALE POTRI
ஒளி உள்ள பளிங்கின் திரட்சியாக உள்ளவனே
You are the radiant marbles and its strength form so praise you
104.அரைசேபோற்றிஅமுதேபோற்றி
ARAISE POTRI AMUTHE POTRI
அரசனே அமுதமே மனம் பொருந்தியத் திருவடிகளை உடையவனே போற்றி
You are my king you are my Amutham your feet are showing the way for me you are above all so praise you
105.விரைசேர்சரணவிகிர்தாபோற்றி
VIRAI SER SARANA VIGIRTHAA POTRI
மனம் பொருந்திய திருவடிகளை உடைய விகிர்தனே வணக்கம் என்றவாறு
You have fragrance feet you are not in any form so we praise you
106.வேதிபோற்றிவிமலாபோற்றி
VETHI POTRI VIMALAA POTRI
வேதங்களை உடையவனே போற்றி குறைகள் அற்றவனே போற்றி
You have four Vedas and upanidathas you are in pure form so praise you
107.ஆதிபோற்றிஅறிவேபோற்றி
AATHI POTRI ARIVEA POTRI
முதன்மையானவனே அறிவு உருவானவனே வணக்கம்
You are the prime motive force you are knowledge force I praise you
108.கதியேபோற்றிகனியேபோற்றி
KATHIYE POTRI KANIYE POTRI
அடையத்தகும் இடமாக இருப்பவனே வணக்கம் கனியே வணக்கம்
You are final and ultimate dwelling place and permanent place you are in ripe fruit form so praise you
109.நதிசேர்செஞ்சடைநம்பாபோற்றி
NATHI SEAR SENJCHADAI NAMBAA POTRI
கங்கையாறு பொருந்திய சிவந்த சடையை உடைய நம்பனே வணக்கம்
You have put Ganga River in your head and your hair is in golden form, you are the only reliable person so praise you
110.உடையாய்போற்றிஉணர்வேபோற்றி
UDAIYAAI POTRI UNARVE POTRI
எப்பொருளையும் உடையவனே வணக்கம் மெய் உணர்வு உருவம் ஆனவனே வணக்கம்
All the articles in the word are in your position; you have taken human body figure (GURU) so praise you
111.கடையேன்அடிமைகண்டாய்போற்றி
KADAIYEN ADIMAI KANDAAI POTRI
கிழ்பட்ட என்னையும் ஒரு அடிமையாக ஏற்கக் கடை கனிந்த பெருமானே வணக்கம்
I am in the lowest strata in this world you have taken me as a slave and your love emanating like ripped fruit so praise you
112.ஐயாபோற்றிஅணுவேபோற்றி
AIYAA POTRI ANUVEA POTRI
ஐயனே அணுவாக உள்ளவனே போற்றி
You are my father you are in the form of nuclear (atom) so praise you
113.சைவாபோற்றிதலைவாபோற்றி
SAIVA POTRI THALAIVA POTRI
சைவனே தலைவனே வணக்கம்
You are in Saiva
(VEGITARIAN) the vegetarian type you are my father so praise you
114.குறியேபோற்றிகுணமேபோற்றி
KURIYE POTRI KUNAMEA POTRI
என்னுடைய அடைய வேண்டிய இலக்கே பொருளின் தன்மையே போற்றி
My ultimate objective of life is to achieve you and mingled with you, you have such a character tics
115.நெறியேபோற்றிநினைவேபோற்றி
NERIYE POTRI NINAIVE POTRI
செல்ல வேண்டிய வழியே போற்றி எனது நினைவாக விளங்குபவனே போற்றி
You have showed me to which way I should proceed you are always in my memory so praise you
116.வானோர்க்குஅரியமருந்தேபோற்றி
VAANORKKU ARIYA MARUNTHE POTRI
தேவர்களுக்குக் கிடைத்தற்கு அறிய அமுதமே போற்றி
You are in Amutham form which is a rare commodity to Devas they can’t get you
117.ஏனோர்க்குஎளியஇறைவாபோற்றி
YENORKKU EALIYA ERAIVAA POTRI
தேவர்கள் அல்லாத மற்றவர்களுக்கு எளிமையான தலைவனே போற்றி
The other person (except devas) you are simple head to lead so praise you
118.மூவேழ்சுற்றமும்முரண்உறுநரகுஇடை
MOOVEL SUTRAMUM MURAN URU NARAGU EDAI
தலைமுறையாக வரும் அடியார்கள் ஆகிய சுற்றத்தார் ஒன்றோடு ஒன்று மாறுபட்ட நரகத்தில்
In twenty one generation we have been following you as your disciple. He have saved us from hell and there are different verities of hell
119.ஆழாமேஅருள்அரசேபோற்றி
AALAME ARUL ARASE POTRI
விழுந்து அழுந்தாமல் கருணை புரியும் மன்னனேபோற்றி
In the hell we are not allowedto submerge and you gave us your blessing so praise you
120.தோழாபோற்றிதுணைவாபோற்றி
THOLA POTRI THUNAIVAA POTRI
தோழா வணக்கம் துணைவா வணக்கம்
You are my intimate friend praise you and you are my guide so praise you
121.வாழ்வேபோற்றிஎன்வைப்பேபோற்றி
VAALVE POTRI YEN VAIPPE POTRI
என் இன்ப வாழ்வே வணக்கம் என் சேமிப்பு நிதியே வணக்கம்
You are my glorious life salute you and my fixed deposit in bank you gave me regular income so praise you
122.முத்தாபோற்றிமுதல்வாபோற்றி
MUTHTHA POTRI MUTHALVAA POTRI
முத்தனே வணக்கம் முதல்வனே வணக்கம்
You are my fore father salute you. You are my principal salute you
123.அத்தாபோற்றிஅரனேபோற்றி
ATHTHA POTRI ARANE POTRI
எல்லா உயிர்களுக்கும் தந்தையே வணக்கம் அரனே வணக்கம்
Of all the living being in this world you are the father salute you, you are my saviorso praise you
124.உரைஉணர்வுஇறந்தஒருவபோற்றி
URAI UNARVU ERANTHA ORUVA POTRI
தெளிவு உறையும் உணர்வையும் கடந்து நிற்கும் ஒருவனே வணக்கம்
You are clear knowledge and practical experience; you are one in above all so praise you
125.விரிகடல்உலகின்விளைவேபோற்றி
VIRIKADAL ULAGIN VILAIVE POTRI
விரிந்த கடல்சூழ்ந்த உலகத்தின் பயனே வணக்கம்
You are the effect of this vast sea, without water we can’t live in this world so you give water in the cloud form so praise you
126.அருமையில்எளியஅழகேபோற்றி
ARUMAIYIL EALIYA ALAGEA POTRI
அருமையில் தோன்றிய எளிமையானவனே அழகானவனே வணக்கம்
You are the rare commodity but you have come to us a simple person, you are in charming form
127.கருமுகிலாகியகண்ணேபோற்றி
KARUMUGI LAGIYA KANNE POTRI
கண்களில் அருமையான மழை மேகங்கள் நீர்பொழியும் தன்மையனே போற்றி
Your eyes are just like dark clouds which give us abundant rain water just like your blessings
128.மன்னியதிருவருள்மலையேபோற்றி
MANNIYA THIRUVARUL MALAIYE POTRI
நிலைபெற்ற திருஅருளின் திரட்சியான மலையே வணக்கம்
You are in rock form and give us your blessing so praise you
129.என்னையும்ஒருவனாக்கிஇருங்கழல்
YENNAIYUM ORUV NAAKKI ERUNG KALAL
ஒன்றுக்கும் பயன் இல்லாத என்னையும் அடியார்களுள் ஒருவன் ஆக்கி
I am stupid person and no use but consider me and put me in your follower group
130.சென்னியில்வைத்தசேவகபோற்றி
SENNIYIL VAITHTHA SEVAGA POTRI
திருவடிகளை எம் தலையில் சூட்டிய வீரனே
You have put your feet on my head as a KEREEDAM crown so you are my worrier so praise you
131.தொழுதகைதுன்பந்துடைப்பாய்போற்றி
THOLUTHAGAI THUNPAM THUDAIPPAI POTRI
நின்னைத் தொழுதக் கையினை உடையவர்களுக்கு வருகின்ற துன்பம் துடைப்பவனே
Those who are praising you with folded hand you remove their tears and distress.
132.அழிவிலாஆனந்தவாரிபோற்றி
ALIVILAA AANANTHA VAARI POTRI
கேடு அற்ற இன்பக்கடலே போற்றி
There is no defect in your happy sea of blessings so praise you
133.அழிவதும்ஆவதும்கடந்தாய்போற்றி
ALIVATHUM AAVATHUM KADANTHAAI POTRI
பிறப்பு இறப்பு கடந்தவனே போற்றி
You have neither birth nor death so praise you
134.முழுவதும்இறந்தமுதல்வாபோற்றி
MULUVATHUM ERANTHA MUTHALVA POTRI
எல்லாவற்றையும் கடந்தவனே போற்றி
You have crossed all the BERIER in this world so praise you
135.மான்நேர்நோக்கிமணாளாபோற்றி
MAAN NER NOKKI MANAALAA POTRI
மானை ஒத்த கண்களை உடைய உமாதேவியின் கணவனே வணக்கம்
Uma Devi is the wife of Siva and her eyes are in the form of deer resemblance
136.வான்அகத்துஅமரர்தாயேபோற்றி
VAAN AGATHTHU AMARAR THAYEA POTRI
சுவர்கத்தில் உள்ளவர்களுக்கு தாயானவனே போற்றி
Those who are in heaven he is like a mother to them
137.பார்இடைஐந்தாய்ப்பரந்தாய்போற்றி
PAAREDAI AINTHAAI PARANTHAAI POTRI
பூமியிடத்தில் ஐந்து தன்மைகளில் விரித்தவனே வணக்கம் (சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்)
There is five character tics of land in that way pervades there so praise him
Five charactertics are taste light movement sound and smell
138.நீரிடைநான்காய்நிகழ்ந்தாய்போற்றி
NEERIDAI NAANGAAI NIGALNTHAAI POTRI
நீரின் இடத்து நான்கு தன்மைகளை உடையவனே போற்றி (சுவை ஒளி ஊறு ஓசை)
There are four charactertics of water so praise him
139.தீயிடைமூன்றாய்த்திகழ்ந்தாய்போற்றி
THIEDAI MUUNRAAI THIGALNTHAAI POTRI
நெருப்பின் இடது மூன்று தன்மைகளை உடையவனே போற்றி (ஒளி ஊறு ஓசை)
There are three character tics of fire so I praise you
140.வளியிடைஇரண்டாய்மகிழ்ந்தாய்போற்றி
VALIYIDAI EARANDAI MAGILNTHAAI POTRI
காற்றின் இடத்து இரண்டு தன்மைகளாக மகிழ்ந்தவனே போற்றி (ஒலி ஊறு)
There are two character tics of wind so praise him (MOVEMENT AND SOUND)
141.வெளியிடைஒன்றாய்விளைந்தாய்போற்றி
VELIEDAI ONRAAI VILAINTHAAI POTRI
ஆகாயத்தின் இடது ஒரு தன்மையை உடையவனே வணக்கம் (ஓசை)
There is one charactertics in the space so salute you (sound)
142.அளிபவர்உள்ளத்துஅமுதேபோற்றி
ALIPPAVAR YULLATHATHU AMUTHE POTRI
அன்பால் உருகுவாரது உள்ளத்தின்கண் ஊருகின்ற அமுதமே
He is just like amutham to those who melting before you by their love (without any expectation)
143.கனவிலும்தேவர்க்குஅரியாய்போற்றி
KANAVILUM THEVARKKU ARIYAAI POTRI
தேவர்களுக்கு கனவிலும் அரியவனே வணக்கம்
He can’t be found out in even dream to those Devas
144.நனவிலும்நாயேற்குஅருளினைபோற்றி
NANAVILUM NAAYERKKU ARULINAI POTRI
நாயை ஒத்த அடியார்களுக்கு விழிப்பு நிலையிலும் அருள் விளக்கம் செய்பவனே
He gives blessings to me, even though I am a dog like in the awaken form
145.இடைமருதுஉறையும்எந்தாய்போற்றி
EDAIMARUTHU YURAIYUM ENTHTHAAI POTRI
திருவிடை மருதூரில் எழுந்தருளி இருக்கும் எம் தந்தையே போற்றி
Thiruvidai maruthur you are residing as my father so salute you
146.சடைஇடைக்கங்கைதரித்தாய்போற்றி
SADAIEDAI GANGAI THARITHTHAAI POTRI
சடையில் கங்கையை தரித்தவனே போற்றி
God has taken Ganga River in his head so praise him
147.ஆரூர்அமர்ந்தஅரசேபோற்றி
AARUR AMARNTHA ARASE POTRI
திருவாரூர் எழுந்தருளி இருக்கும் கொடை அரசே போற்றி
God has taken abode in the temple of thiruvarur so praise him
148.சீர்ஆர்திருவையாறாபோற்றி
SEER AAR THIRUVAIYARA POTRI
சிறப்பு மிகுந்த திருவையாற்றை ஊராக உடையவனே போற்றி
Thiruvaiyaru is blessed place which he has taken his abode so praise him. It is a place surround by five rivers and has fertile land
149.அண்ணாமலைஎம்அண்ணாபோற்றி
ANNAMALAI YEM ANNAA POTRI
திருவண்ணாமலையின்கண் உள்ள எம் அண்ணலே போற்றி
In thiruvannamalai he has taken in the shape of hill form he is my benefactor form so praise him
150.கண்ஆர்அமுதக்கடலேபோற்றி
KAN AAR AMUTHA KADALE POTRI
கண் ஆர் அமுதக் கடலே போற்றி
You have filled my eyes in the form of Amutham so praise you
151.ஏகம்பத்துஉறைஎந்தாய்போற்றி
EGAMPATHTHU URAI ENTHAAI POTRI
திரு ஏகம்பத்து உறைகின்ற என் தந்தையே வணக்கம்
You are living in the abode of thirueagambaram you are my mother so praise you
152.பாகம்பெண்உருஆனாய்போற்றி
PAGAM PEN YURU AANAAI POTRI
இடதுபாகம் உமதேவியராகிய பெண் ரூபன் உருவம் ஆனவனே போற்றி
In the left side he has taken the half part body of UMADEVI, he has given half body to UMADEVI so he is beingpraised
153.பராய்த்துறைமேவியபரனேபோற்றி
PARAAI THURAI MEVIYA PARANE POTRI
திருப்பராய்த்துரையில் விரும்பி எழுந்தருளி உள்ள பரம் பொருளே போற்றி
Thiruperunthurai is an abode in the Cauvery river bank he has taken this above with pleasure, he is Devas god so praise him
154.சிராப்பள்ளிமேவியசிவனேபோற்றி
SIRAPPALLI MEVIYA SIVANEA POTRI
திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளி உள்ள சிவனே போற்றி
திருச்சிராப்பள்ளியில் செட்டிப்பெண் ஒருத்தி நெசவுத் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்து வாழ்ந்து வந்தாள். அவளுக்குச் சிவபக்தி அதிகம். தினமும் சிவபெருமானைத் தொழாமல் உணவு அருந்துவது இல்லை. அவளுக்குத் திருமணம் ஆகி அருகில் இருந்த ஸ்ரீரங்கத்திற்குக் கணவன் வீட்டிற்குச் சென்றாள். தான் சிவபெருமானை விட்டுப் பிரிவதை எண்ணி ஏங்கினாள். சிவன் கனவில் தோன்றி நீ வீட்டில் இருந்து பார்த்தால் நான தெரிவேன், எனவே பயப்படாமல் புகுந்தவீடு செல் என்று கனவில் காட்சி கொடுத்து அருளினார்.
அவ்வாறே புகுந்த வீட்டிற்குச் சென்றாள். அவள் வீட்டு மாடியில் இருந்து பார்த்த பொழுது மலைக்கோட்டையின் முழு அழகும் அவள் பார்வையைக் கவர்ந்தது. தினமும் சிவனைப் பார்த்துத் தரிசித்துவிட்டு உணவு அருந்தி வந்தாள்.
சில நாட்களில் அவள் கர்ப்பவதி ஆனாள். மாதங்கள் கடந்தன. பிரசவநாள் நெருங்கியது.
அவள் தாய் திருச்சியில் இருந்து புறப்பட்டு மகள் வீடு செல்;ல ஆற்றங்கரையை அடைந்தாள். அப்பொழுது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எனவே பரிசலில் பயணிப்பது தடைபட்டது. அவள் இறைவனை வேண்டினாள்.
மகளும் பிரசவ வேதனையால் வருந்தி, சிவபெருமானை அழைத்து விண்ணப்பித்தாள். சிவபெருமான் அவள் நிலை கண்டு வருந்தி, அவள் தாய் வேடத்தில் சென்று பிரசவிக்க உதவினார். சில நாட்கள் ஆனது. ஆற்றில் நீர் குறைந்து பரிசல் பயணம் தொடங்கப் பட்டது. தாய் மகள் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். அவள் மகளிடம் ஆற்றுப் பெருக்கால் வரமுடியவில்லை, யார் பிரசவம் பார்த்தது என்று கேட்டாள். அதற்கு மகள் நீங்கள்தானே எனக்குப் பிரசவம் பார்த்தீர்கள் என்று கூற, அதற்கு நான் இப்போழுது தானே வருகின்றேன் என்று தாய் கூறினாள்.
அதுவரை அங்கு இருந்து உதவிய சிவபெருமான் அந்த இடத்தை விட்டு மறைந்தார். அவர்கள் இருவரும் இறைவன் கருணையை வியந்து சிவபெருமானை வழிபட்டனர். எனவே சிவபெருமானுக்கு இத்தலத்தில் தாயுமானவர் என்று பெயர்.
He has taken abode in the hillock of Thiruchirappalli so praise him.
In majority of people see the lord Siva and Ganapathy daily form from their homes because it is in the top of a hillock.
Long ago one chetti women (a caste) daily prayed lord Siva. She got conceived before delivery the river Cauvery flooded. She got labor pain and prayed god to help her.
Her mother in the other side of the river bank because of flood in somany days she is unable to cross the river by parisal(a kind of vehicle float in water) the chetty woman praised god. God turned to her request and got the form of her mother and help her to deliver a body and god served her day to day basis
After sometimes the river reduce, the original mother arrived and how she got child birth daughter says you have helped me. But the mother says now only I am arriving howI could have helped you after wards they realized that god alone came in the form of mother and they prayed for his service to humanity in whatever form we require.
So god’s name in this abode is THAAYUMAANAVER (turned as a mother)
155.மற்றுஓர்பற்றுஇங்குஅறியோன்போற்றி
MATRU OOR PATRU INKGU ARIYEEN POTRI
வேறு ஒரு பற்றுக் கொம்பை இங்கு அறியேன் போற்றி
Generally tender saplings require support stick to progress and alive, just like god is the only support stick for me I have no other support except god so praise him
156.குற்றாலத்துஎம்கூத்தாபோற்றி
KUTRAALATHTHU YEM KUTHTHAA POTRI
குற்றாலத்தில் உள்ள எமது அழகிய கூத்தனே போற்றி
Lord Siva taken the abode of KUTRALAM. He is in lovely and dancing form here.
157.கோகழிமேவியகோவேபோற்றி
KOGALI MEVIYA KOOVEA POTRI
திருவாடுதுறையில் விரும்பி அமர்ந்த அரசே வணக்கம்
In thiruvaadu thurai he has taken abode with liking so praise him
158.ஈங்கோய்மலைஎந்தாய்போற்றி
ENGOOI MALAI ENTHAAI POTRI
திரு ஈங்கோய் மலையின் கண் உள்ள தலைவா வணக்கம்
You have seated at the top of Thiruengoi hills which in the northernside of river Cauvery now near Musiri
159.பாங்குஆர்பழனத்துஅழகாபோற்றி
PAANGU AA PALANATHTHU ALAGA POTRI
அழகுமிக்க திருப்பழனத்துள் இருக்கும் அழகா போற்றி
Thirupalanam is a lovely place he seated there in the lovely face so I praise him.
160.கடம்பூர்மேவியவிடங்காபோற்றி
KADAMPOOR MEVIYA VIDANGAA POTRI
திருக்கடம்பூரில் எழுந்தருளி உள்ள சுயம்புவே போற்றி
In some places god deity is not installed it will automatically come there it is called(SUYAMBU) in this place god is in suyambu form.
161.அடைந்தவர்க்குஅருளும்அப்பாபோற்றி
ADAINTHAVARKKU ARULUM APPA POTRI
நீயே அடைக்கலம் என்று அடைந்தவர்களுக்கு அருள் செய்யும் அப்பனே போற்றி
Those who surrounded completely under your feet, you are without fail give you blessings and well-being.
162.இத்திதன்னின்கீழ்இருமூவர்க்கு
ITHTHI THANNIN KEEL ERUMUUVARKKU
இத்தி மரத்தின் நிழலில் இருந்து இயக்கிமார்கள் அறு வருக்கும்
In the shadow tree (name ITHI) GOD seated there as a GURU and preached his Vedas
163.அத்திக்குஅருளியஅரசேபோற்றி
ATHTHIKKU ARULIYA ARASE POTRI
யானைக்கும் அருள் வழங்கிய அரசனே போற்றி
முன்னொரு காலத்தில் தேவேந்திரன் ஐராவதத்தின் மீது (வெள்ளையானை) ஊர்ந்து வந்தான். அப்பொழுது அவனைக் காண வந்த துர்வாச முனிவர் ஒரு வெள்ளைத் தாமரையையும் துளவந்தாமரையையும் ஆசி கூறிக் கையுறையாகக் கொடுத்தார். இந்திரன் செல்வக் களிப்பால் மதி மயங்கி, அவற்றை வாங்கி வெள்ளை யானையின் தலை மீது வைத்து விட்டான். அந்த யானை அதை எடுத்துக் காலின் கீழ் இட்டு மிதித்தது. அதனைக் கண்ட துர்வாச முனிவர் சினந்து வெள்ளை யானையை நீ காட்டு யானை ஆகுக எனச் சபித்தார்.
இந்திரனை நோக்கி – நின்தலை பாண்டியன் ஒருவனால் பிளக்கப் படுவதாக எனவும் சபித்தார். இருவரும் முனிவரிடம் மன்றாடினர். முனிவர் சினம் தணிந்து இந்திரனே உன் தலை பிளவு படினும் மீண்டும் நீ இந்திர பதவியில் இருந்து அரசு ஆள்வாய் என்றும்,
வேழமே, நீ கடம்ப வனமான மதுரையில் பிறந்து சொக்கலிங்கப் பெருமானை வழிபட்டு இன்று போல் வெள்ளை யானை ஆகுக என்று சாபவிடை அளித்தார்.
அவ்வாறே யானை காட்டில் பிறந்து சொக்கலிங்கப் பெருமானைப் பூசித்து அருள் பெற்றது. இது வெள்ளை யானைக்குச் சாபம் தீர்த்த திருவிளையாடல் புராணம் ஆகும்.
He has given salvation to the elephant he is as a ruler here so praises him.
Once upon a time DEVENDRA the head of DEVERS came in procession on white elephant named IRAVATHAM and a saint named THURVASAMUNIVER came there and gave Devendran a white lotus and THULUVANTHALAI with blessings.
INDIRAN with his power and position he got it and placed it on the head of the elephant called (MATHAM) after sometime the elephant caught hold of the two offerings with its long hand and place before it and stamped with it feet. On seeing this Thurvasa saint got angry and cursed the elephant to go as a dark elephant and made to go to forest.
He cursed the Indira that his head will be cut by a Pandya king and two are prayed for his clemency after Thurvasa came to calm mood he gave solution that the elephant will get birth at KADAMBA VANAM near muthurai and daily pray chokkalinga peruman at Madurai after so many years god appeared before it and gave sinalleviation and got back its original white color and iravatham position.
Indiran also after somany years of penance he got back his indira position and get back kingdomof devas.
164.தென்னாடுடையசிவனேபோற்றி
THENNAADU YUDAIYA SIVANEA POTRI
தென் தமிழ்நாட்டை உடைமையாக உடைய சிவபெருமானே
He has taken southern Tamilnadu as his position to live here.
165.என்நாட்டவர்க்கும்இறைவாபோற்றி
EN NAATTAVARKKUM ERAIYA POTRI
எல்லா நாட்டவர்களுக்கும் தலைவனே வணக்கம்
He is the lord of whole world
166.ஏனக்குருளைக்குஅருளினைபோற்றி
ENA KURULAIKKU ARULINAI POTRI
பன்றிக் குட்டிக்குப் பால் ஊட்டியவனே வணக்கம்
ஒரு காட்டில் முனிவன் ஒருவம் தவம் செய்து கொண்டு இருந்தார். பன்னிரண்டு பேர் இளம் காளைகள் அவர் பெருமையை உணராது சினமூட்டினர். அவர் அச்சிறுவர்களைப் பார்த்து நீங்கள் பன்றி வயிற்றில் பிறந்து வருந்துக எனச் சாபம் இட்டார். சிறுவர்கள் பயந்து தம் பிழையை உணர்ந்து அருளுமாறு வேண்டினர்.
முனிவர் இறைவன் அருளால் சாபம் தீரம் என மொழிந்தார். சிறுவர்கள் அவ்வண்ணமே காட்டுப் பன்றி ஒன்றின் வயிற்றில் பிறந்தனர். பிறந்த உடனே வேட்டைக்கு வந்த பாண்டியன் காட்டுப் பன்றியைக் கொன்று விட்டான். பன்றிக் குட்டிகள் தாய் வராமையால் பசியால் தவித்தன. சிவன் தாய்ப் பன்றி வடிவில் சென்று பாலூட்டி அருள் புரிந்தார். இது பன்றிக்குட்டிக்கு முலையூட்டிய திருவிளையாடல்.
He fed milk by taking the form of mother pig and gave milk to new born ones
Once upon a time a saint sat in penance in the forest. Two persons they are king sons go to forest on seeing the saint they unable to comprehend his power. They teased him. After sometime he got angry and cursed them to go and take birth at pig womb. Those young lads got frightened and try to get pardon from him
After cool down the saint said with the help of lord Siva you will get salvation from the sin
After their demise in the next birth they take birth in forest pig stomach. The Pandya king at that time came there and killed the mother pig the young pigs wait to return its mother. It is not happened. They got hungry and cried for milk.
God has descended are taken the form of mother pig and allowed to drink milk from it breast in this way god saved the young pigs
167.மானக்கயிலைமலையாய்போற்றி
MAANA KAYILAI MALAIYAAI POTRI
பெருமை உடைய கயிலை மலையை உடையவனே போற்றி
The glorious KAILAYAM has under his position
168.அருளிடவேண்டும்அம்மான்போற்றி
ARULIDA VENDUM AMMAAN POTRI
அருள் புரிய வேண்டும் அம்மானே போற்றி
You must gave blessing to us as a mother position
169.இருள்கெடஅருளும்இறைவாபோற்றி
ERUL KEDA ARULUM ERAIVAA POTRI
ஆணவமலம் காரியமாகிய அறியாமை இருள் கெடும்படி அருள் புரிந்த அரசே வணக்கம்
I am in darkness because of ego you have destroyed my ego and show the light and blessed me so praise you
170.தளர்ந்தேன்அடியேன்தமியேன்போற்றி
THALARNTHEN ADIYEN THAMIYEN POTRI
துணை இல்லாத அடியேன் தளர்ந்தேன்
I have got tired and got old age because of no support to me except you so I praise you
171.களம்கொளக்கருதஅருளாய்போற்றி
KALAM KOLAK KARUTHA ARULAAI POTRI
ஒரு நிலையாகச் சுவர்க்க இடத்தைப் பெறவும் இடைவிடாது சிந்திக்கவும் அருள் செய்பவனே
To get a permanent place in heaven and continuously think over about you, you helped me so I praise you
172.அஞ்சேல்என்றுஇங்குஅருளாய்போற்றி
ANGEALEANRU INGU ARULAAI POTRI
அஞ்சாதே என்று இந்த உலக வாழ்வில் அருள் செய்பவனே போற்றி
In this world life you support me and don’t get fear I will support you. And in this wayyou blessed me so I praise you
173.நஞ்சேஅமுதாநயந்தாய்போற்றி
NANJEA AMUTHAA NAYANTHAAI POTRI
நஞ்சையே அமுதாக விரும்பியவனே போற்றி
You have consumed poison as your food willingly
174.அத்தாபோற்றிஐயாபோற்றி
ATHTHA POTRI AIYAA POTRI
அப்பா போற்றி ஐயா போற்றி
You are my father I praise you, you are my leader so praise you
175.நித்தாபோற்றிநிமலாபோற்றி
NITHTHA POTRI NIMALAA POTRI
நித்தியனே போற்றி மலம் இல்லாதவனே போற்றி
You have perpetual existence and have no impurities so I praise you
176.பத்தாபோற்றிபவனேபோற்றி
PATHTHA POTRI PAVANEA POTRI
அன்பனே போற்றி அனைத்திற்கும் பிறப்பு இடம் ஆனவனே போற்றி
You are my well-wisher you the originator of all form of life I praise you.
177.பெரியாய்போற்றிபிரானேபோற்றி
PERIYAAI POTRI PIRANEA POTRI
பெரியோனே போற்றி வல்லமைமிக்கோனே போற்றி
You are god father and above all in superior position you have potent power to do by mere thinking power itself you need not have any material to create anything in this world
178.அரியாய்போற்றிஅமலாபோற்றி
ARIYAAI POTRI AMALAA POTRI
எல்லார்க்கும் அரியவனே போற்றி மலம் அற்றவனே போற்றி
You are a rare person to all and have no impurities in your thought
179.மறையோர்கோலநெறியேபோற்றி
MARAIYOR KOLA NERIYE POTRI
அந்தண வேடத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டே போற்றி
You are the example of Anthana figure (GURU) so praise you
180.முறையோதரியேன்முதல்வாபோற்றி
MURAIYO THARIYEN MUTHALVAA POTRI
அடியேனை இவ்வாறு தனிமையில் விட்டது முறையோ இனியான் ஒருபோதும் இருக்க மாட்டேன்
You have left me alone is it right. So I do not want live her no longer so praise you
181.உறவேபோற்றிஉயிரேபோற்றி
URAVEA POTRI UYIREA POTRI
எனக்கு எல்லா உறவும் ஆனவனே போற்றி என் உயிரே போற்றி
You are my relative you are my life so I praise you
182.சிறவேபோற்றிசிவமேபோற்றி
SIRAVEA POTRI SIVAMEA POTRI
சிறப்பே போற்றி சிவனே போற்றி
You have all the qualities you are my Siva so I praise you
183.மஞ்சாபோற்றிமணாளாபோற்றி
MANJSA POTRI MANAALAA POTRI
கருணை மழையே போற்றி மணவாளா போற்றி
You are cloud showers in the form of rain water and you are in marriage attire form so praise you.
184.பஞ்சுஏர்அடியாள்பங்காபோற்றி
PANJSU EAR ADIYAAL PANGA POTRI
செம்பஞ்சு குழம்பு ஊட்டிய திருவடிகளை உடைய உமாதேவியை ஒருபாகம் உடையவனே போற்றி
UMADEVI’S feet are such a soft from of cotton she is also a part of lord Siva body
185.அலந்தேன்நாயேன்அடியேன்போற்றி
ALANTHEN NAYEEN ADIYEEN POTRI
அடியேன் ஆகிய நாயேன் வருந்தினேன் போற்றி
I am dog like person so I am always in distress mode so I praise you
186.இலங்குசுடர்எம்ஈசாபோற்றி
ELANGU SUDAR YEM EESAA POTRI
விளங்குகின்ற ஒளி வடிவம் ஆனவனே எம் ஈசா வணக்கம்
You are in light form and in always being light you are my EESSA so I praise you
187.கவைத்தலைமேவியகண்ணேபோற்றி
KAVAITHALAI MEVIYA KANNEA POTRI
சூலத்தை விரும்பிய முக்கண் போன்றவனே போற்றி
You are like the soolam (a fighting instrument always in right hand) it has three parts at the beginning just like you have three eyes.
188.குவைப்பதிமலிந்தகோவேபோற்றி
KUVAIPPATHI MALINTHA KOVEA POTRI
கூட்டமாகிய தலங்களில் நிறைந்து விளங்கும் தலைவனே போற்றி
Wherever your followers are in abundant in number you will be there so you are my head I praise you
189.மலைநாடுஉடையமன்னேபோற்றி
MALAI NAADU YUDAIYA MANNEA POTRI
மலை நாட்டை உடைய அரசே போற்றி
You are in the KAILAYAA hills. You are the king for it so I praise you
190.கலைஆர்அரிகேசரியாய்போற்றி
KALAI AAR ARIKESARYAAI POTRI
ஆடையாகப் பொருந்திய திருமாலகிய சிங்கத் தோலை உடையவனே போற்றி
You have tied the lion skin as dress and in your body once Thirumal has taken lion avathar
191.திருக்கழுக்குன்றில்செல்வாபோற்றி
THIRUKKALUK KUNRIL SELVA POTRI
திருக்கழுக்குன்றத்தில் எழுந்தருளி உள்ள செல்வனே போற்றி
You have descended in Thirukalukundram as a resource person and praise you
192.பொருப்புஅமர்பூவணத்துஅரனேபோற்றி
PORUPPU AMAR POOVANATHU ARANE POTRI
மலைகள் பொருந்திய திருப்பூவணம் என்னும் தலத்தில் விரும்பி உறைகின்ற அரசே போற்றி
In thiru puvanam abode there are somany hills you liked to stay there
193.அருவமும்உருவமும்ஆனாய்போற்றி
ARUVAMUM YURUVAMUM AANAAI POTRI
அருவமும் உருவமும் ஆனவனே போற்றி
You are in abstract and concrete form so we praise you
194.மருவியகருணைமலையேபோற்றி
MARUVIYA KARUNAI MALAIYE POTRI
உயிர்களை மருவிய கருணைக் கடலே போற்றி
You have absolved all the living beings and gave your blessing to them
195.துரியமும்இறந்தசுடரேபோற்றி
THURIYAMUM ERANTHA SUDARE POTRI
துரியா நிலை கடந்த ஒளிப்பிழம்பே போற்றி
Without any end you have shown like a light form
196.தெரிவுஅரிதுஆகியதெளிவேபோற்றி
THERIVU ARITHU AAGIYA THELIVE POTRI
ஆராய்ந்து அறியத் தெளிந்த பொருளே போற்றி என்றவாறு
By research you have rarely showed you real identity so praise you
197.தோளாமுத்தச்சுடரேபோற்றி
THOLA MUTHA SUDAREA POTRI
துளைக்கப்படாத முத்தின் ஒளியே போற்றி
You are a pearl without hole so you emanate your full light
198.ஆள்ஆனவர்களுக்குஅன்பாபோற்றி
AAL AANAVARKALUKKU ANBAA POTRI
ஆளாக அடிமை பூண்டவர்களுக்கு அப்பனே போற்றி
Those who are your bonded labor you are their father so I praise you
199.ஆராஅமுதேஅருளேபோற்றி
AARA AMUTHE ARULEA POTRI
உண்டு தெவிட்டாத அமுதமே அருளே போற்றி
If I eat Amutham there is no satisfaction point so I praise you
200.பேர்ஆயிரம்உடைப்பெம்மான்போற்றி
PEER AAYIRAM UDAI PEMMAAN POTRI
பல திருநாமங்களை உடைய பெருமானே போற்றி
You have thousands and thousands of names so I praise you
201.தாளிஅறுகின்தாராய்போற்றி
THAALI ARUKIN THARAAI POTRI
தாளி அருகம் புல்லால் ஆன மாலை அணிந்தவனே
You are adorned by grass garland so I praise you
202.நீள்ஒளிஆகியநிருத்தாபோற்றி
NEEL OLI AAGIYA NIRUTHTHA POTRI
நீண்ட ஒளிபிழம்பாகிய நிருத்தனே போற்றி
You are light glow form so I praise you
203.சந்தனச்சாந்தின்சுந்தரபோற்றி
SANTHANA SANTHIN SUNDARA POTRI
சந்தனக் கலவை பூசிய அடிகளே போற்றி
You are pasted with sandal wood paste so you are handsome looking so I praise you
204.சிந்தனைக்குஅரியசிவமேபோற்றி
SINTHANAIKKU ARIYA SIVAME POTRI
சிந்திப்பதற்கு அறிய சிவமே போற்றி
By thinking you are a rare person to find out and you are Siva so I praise you
205.மந்திரமாமலைமேயாய்போற்றி
MANTHIRA MAAMALAI MEYAAI POTRI
மகேந்திரம் ஆகிய பெரிய மலையின்கண் எழுந்தருளி இருபவனே போற்றி
You have descended in Mahendra hills and stay there so I praise you
206.எந்தமைஉய்யக்கொள்வாய்போற்றி
ENTHAMAI YUIYYA KOLVAAI POTRI
உய்வதற்காக எம்மை அடிமை கொள்வனே போற்றி
You want to uplift me so you have taken me as your slave so I praise you
207.புலிமுலைபுல்வாய்க்குஅருளினைபோற்றி
PULIMULAI PUL VAAIKKU ARULINAI POTRI
புலிதன் முலையை மான் கன்றுக்கு ஊட்டுமாறு அருள் புரிந்தவனே போற்றி
முன்னொரு காலத்தில் மதுரையைச் சுற்றிக் கடம்பங்காடு அடர்ந்து இருந்தது. புலிகள் அங்கு மிகுதியாக வாழ்ந்து வந்தன. இதனால் மான்கூட்டம் சிறுத்தது. அந்த நிலையில் மான் ஒன்று கன்றை ஈந்தது. அதனைத் தூறில் மறைத்து வைத்துவிட்டுக் குளக்கரைக்குச் சென்றபோது வேடன் ஒருவன் அந்தத் தாய் மானைக் கொன்று விட்டான். அதனால் அந்தமான் மிகவும் நொந்து செத்தது. இதனைத் திருஉள்ளம் பற்றிய இறைவன் அந்தக் காட்டில் வேறு பெண்மான் ஒன்றும் இல்லாததால் அருகில் உலாவிய ஒரு பெண் புலியைப் பார்ததுச் சிவபெருமான் இதற்குப் பால் ஊட்டுவாயாக என ஆணை இட்டார். புலிப்பாலைக் குடித்து மான் குட்டியும் வளர்ந்தது. இதுவே புலிமுலை புல்வாய்க்கு அருளினை போற்றி என்ற திருவிளையாடல்.
The tiger gives milk to deer cub by the order of Lard Siva so Ipraise you
Once upon a time in Mathurai and around it there is thick (kadamba vanam) forest, there somany tigers were living so deer population had gone thinner and thinner and left out one only. That deer is a pregnant and gave birth a calf. It placed it in secluded place and went for water to drink. On seeing it a hunter killed it so on dying it thought of its young calf.
On seeing this seen god searched is there any other deer lift over. There is no deer there is only one female tiger. Lard Siva ordered that tiger to give milk to the calf and it obeyed. So it reared the deer calf. This is gods THIRU VILAI AADAL.
208.அலைகடல்மீமிசைநடந்தாய்போற்றி
ALAIKADAL MI MISAI NADANTHAAI POTRI
அலைகடல் உடைய கடல் மீது நடந்தவனே போற்றி
God walked on the sea with full of waves
209.கரும்குருவிக்குஅன்றுஅருளினைபோற்றி
KARUM KURUVIKKU ANRU ARULINAI POTRI
கருங்குருவிக்கு அன்று அருளினை போற்றி
காக்கைகளால் துன்புறுத்தப் பட்ட கரிக்குருவிகளில் ஒன்று பண்டைக் காலத்து நல்ல தவத்தால் பரமனைப் போற்றிப் பக்தி செய்து வந்தது. இறைவன் இரங்கிப் பகைவரை வெல்லும் மூன்று எழுத்து மந்திரத்தைச் சொல்ல அதற்கு உபதேசித்தார். மந்திரம் நசிய (நமச்சிவாய என்பதன் சுருக்கம்) அதனை ஓதி அப்பறவை பகை வெல்லும் ஆற்றலைப் பெற்றது. (தன் முட்டைகளைக்) காக்கைகள் தின்றமையால், இனம் அழிந்து கொண்டிருந்தது. எனவே தன்னுடைய முட்டைகளைக் காக்கைக் கூட்டிலேயே இட்டுத் தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டது.
நசிய – நசியாது இருக்க. அதனால் அது வலியான் எனவும் வழங்கப் பட்டது. காக்கைகளால் தன் முட்டைக்கும் கருங்குருவி முட்டைக்கும் பேதம் காண முடியாமல் இரண்டையும் அடைகாத்து உயிர் பெறச் செய்தது.
You have given mothsha (heaven) to karung kurivi a kind of bird in block color (coco bird)
Once upon a time the crows are giving trouble to co co birds one of the co-co birds sits in meditation and prayed god. God discerned before it and asked what you wanted. It prayed my speciesis slowly reducing in strength because of crow so please save our lives this is the request.
God pronounced MATHRA word nasia the abridged form of (NAMASIVAYA)
By repeatedly saying it, it will win over the opponent the eggs of co-co bird are eaten away by crows. So it laid eggs in the crow nest so it is unable to distinguish the eggs and hatched the co-co eggs also after the bird comes out from the eggs the co-co birds fly over thus its generation is saved.
210.இரும்புலன்புலரஇசைந்தனைபோற்றி
ERUM PULAN PULARA ESAITHANAI POTRI
பெரிய ஐந்து புலன்களும் புலரும் வண்ணம் பொருந்தியவனே போற்றி
The five sense organs are relieved of its effectiveness so it got oneness with god so I praise you
211.படிஉறப்பயின்றபாவகபோற்றி
PADI URAP PYINRA PAAVAGA POTRI
இப்பூமியில் பொருந்த பலகாலும் காட்டிய திருமேனித் தோற்றங்களை உடையவனே போற்றி என்றவாறு
He has shown his human body to his devotees in variety of ways according to their status so I praise you
212.அடியொடுநடுஈறுஆனாய்போற்றி
ADIYODU NADU EERU AANAI POTRI
முதலும் நடுவும் இறுதியும் ஆனாய் போற்றி
You are the creator preserver and destroyer of this body and taken back this soul with you so I praise you
213.நரகொடுசுவர்க்கநானிலம்புகாமல்
NARAKODU SUVARKKA NAANILAM PUGAMAL
நரகம் சுவர்க்கம் நால்வகையான இந்த நில உலகம் இவற்றில் மீண்டும் புகாமல்
You have saved me from hell and rebirth in these four types of lands so I praise you
214.பரகதிபாண்டியற்குஅருளினைபோற்றி
PARAKATHI PANDIYARKU ARULINAI POTRI
பரகதி பாண்டியற்கு அருள் செய்த பெருமானே
மலையத்துவச பாண்டியன் மகளாகத் தாடகைப் பிராட்டியார் பிறந்து வாழ்ந்து வளர்ந்து வந்தாள். குறிப்பிட்ட காலத்தில் இறைவன் தோன்றி தாடகைப் பிராட்டியாரை மணம் செய்து கொண்டார். அவள் தாயின் விருப்பத்திற்காக ஏழு கடல்களை வருவித்து அதில் மூழ்கச் செய்து வீடு பேறு அருள்pனார் சிவபெருமான்.
You have showed your blessing and given place in heaven to Paragathi Pandean
Once there ruled Pandya kingdom by MALAITHUVASA PANDIYAN his daughter THADAGAI PERATIYAR slowly grow and got puberty level
On a particular day god descended to the earth and married Thadagai peratiyar
His father want to go heaven so request god Siva to help him
He ordered the seven seas to go here and he has taken bath and his sins are relived and then go to heaven
215.ஒழிவறநிறைந்தஒருவபோற்றி
OLIVARA NIRAINTHA ORUVA POTRI
எங்கும் நீக்கமற நிறைந்திருகின்ற ஒப்பற்றவனே போற்றி
You have pervades everywhere you are unique so I praise you
216.செழுமலர்ச்சிவபுரத்துஅரசேபோற்றி
SELU MALAR SIVAPURATHTHU ARASEA POTRI
செழுமையான பூக்கள் நிறைந்த சிவபுரத்து அரசே போற்றி
There are ample flowers in the Siva puram so I praise you
217.கழுநீர்மாலைக்கடவுள்போற்றி
KALU NEER MAALAI KADAVUL POTRI
செங்கழுநீர் மாலையை அணிந்த கடவுளே போற்றி
You are adorned by a sengaluneer garland so I praise you
218.தொழுவார்மையல்துணிப்பாய்போற்றி
THOLUVAAR MAIYAL THUNIPPAAI POTRI
வணங்குவாருடைய மயக்கத்தை அறுப்பவனே
Those who lower their head before god he removes their ambiguity from them
219.பிழைப்புவாய்ப்புஒன்றுஅறியாநாயேன்
PILAIPPU VAAIPPU ONDRU ARIYAA NAAYEN
குற்றம்குற்றமின்மை இவை ஒன்றையும் அறியாத நாயினேன்
I don’t know what is right and what is wrong I am in dog position whoever calls me I will go there so I praise you
220.குழைத்தசொல்மாலைகொண்டருள்போற்றி
KULAITHA SOLMAALAI KONDARUL POTRI
குழைத்து ஆக்கிய சொல் மாலையை ஏற்று அருள் செய்பவனே போற்றி என்று
By soft words we have developed a poem just like a garland. You have accepted
it and showered your blessings.
221.புரம்பலஎரித்தபுராணபோற்றி
PURAMPAL ERITHA PURAANA POTRI
முப்புரங்களையும் சாம்பல் ஆக்கிய பழமையானவனே போற்றி
You have destroyed four castles into ashes and you are the senior most citizen of this world so I praise you
222.பரம்பரம்சோதிப்பரனேபோற்றி
PARAM PARAM JOTHI PARANEA POTRI
மேலானவற்றிற்கு எல்லாம் மேலாகிய ஒளிப்பிழம்பாகிய பரனே போற்றி
You are at the superior position you are in the light glow form you are the only god so I praise you
223.போற்றிபோற்றிபுயங்கப்பெருமான்
POTRI POTRI PUYANGA PERUMAAN
பாம்பை ஆபரணமாக உடைய பெருமானே போற்றி
You have worn snake as an ornament so I praise you
224.போற்றிபோற்றிபுராணகாரண
POTRI POTRI PURAANA KAARANA
பழமைக்குக்காரணமானவனே போற்றி
You are the oldest person in this world. You are prime cause for this creation.
225.போற்றிபோற்றிசயசயபோற்றி
POTRI POTRI SAYA SAYA POTRI
வணக்கம் வணக்கம் உமக்கே வெற்றி வெற்றி என்றவாறு
I salute you again and again you have own all the things in this universe so I praise you.Omchitrambalam
February 5, 2019